செவ்வாய் & சுக்கிரன்
செவ்வாயின் வீட்டில் சுக்கிரன்
பன்னிய சேயின் வீட்டில் பார்க்கவ னிருந்தானாகில்
பின்னிய இடமேரெண்டு பிள்ளைகள் விரையமாகும் கன்னியர் மூலந்தன்னில் கைப்பொருள் விரையமாகும் இன்னிலைதனிலே இவ்வா றிதன்பலன் அற்பமாமே .
(இ-ள்) செவ்வாயின் வீடுகளில் ஒன்றில் மேஷம் & விருச்சிகம் சுக்கிரன் இருந்தால் இரண்டு குழந்தைகள் பாதிப்படையும். பெண்களினால் செல்வம்,பணம் விரையமாகும். இந்த நிலையில் இருந்தால் நல்லபலன் ஏற்படது.
துண்டெனும் பொருளும் பொன்னும் தோகைமூலஞ்சேதமாகும் பிண்டிய வெள்ளிதன்னை வெய்யவன் சேர்ந்தாராகில் கொண்டதோர் பொருள்கேடாகும் கூடிய தொழிலுமாறும்
அண்டிய தோஷம்வேந்தர் அலைச்சலும் மிகவுண்டாமே .
(இ-ள்) பொன் & பொருட்களும் பெண்கள் மூலமாக சேதமாகும்.
சுக்கிரனுடன் சூரியன் சேர்ந்தால் பொருள் நஷ்டம், தொழிலும் அடிக்கடி மாறும். உடன் இருப்பவர்களால் பாதிப்பும், அரசு வகையில் நுண்பம். அதிக அலைச்சல் ஏற்படுத்தும்.
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment