கதிர் வெள்ளி யோகம்

 கதிர் வெள்ளி யோகம்

( சூரியன் – சுக்கிரன் சேர்க்கை ஓர் சிறப்பாய்வு)

 சூரியனும் சுக்கிரனும் சேர்க்கை பெற்று 1 -2 -3 – 4 – 6 – 7 – 9 – 11 -12 – ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தால் கதிர்வெள்ளி யோகம் ஏற்படும். ஜாதகர் & ஜாதகியர் வாழ்வில் ஏழ்மை,  மகிழ்ச்சி குறைபாடும் , கணவன் & மனைவி அன்னியோன்னியம் குறையும். சம்பாத்தியம் குறையும். 

சுக்கிரன் :- ஆடம்பரம், பெண் ஆசைகள், கர்வம், கவர்ச்சியானவர் .

ஆசைகள் இல்லாத ஆத்ம காரகனான சூரியனுக்கு  ஆர்வமின்மையால் சுக்கிரன் சூரியன் பகைவர்கள் 

சூரியன் நெருப்பு, சுக்கிரன் நீர். நீரும் நெருப்பு வெவ்வேறு குண இயல்பை கொண்டவர்கள், அடிக்கடி உணர்ச்சி வசப்படுவர்கள். சுர்ரென்று கோபம் வரும்.

           சூரியன்-சுக்கிரன் கிரக சேர்க்கை உடையவர்களுக்கு ஆடம்பரப்  பொருட்கள் விற்பனை, சூதாட்டம், விளையாட்டு, வேடிக்கை, வினோதம் தொடர்புடையவைகளில் ஈடுபாடு ஏற்படும். தாமத திருமணம், திருமண வாழ்க்கையில் சஞ்சலம் ஏற்படுகிறது. காரணம் என்னவென்றால், களத்திரக்காரகன் சுக்கிரன்திருமணம் தாமதம் (அ) வீண் சஞ்சலம் உண்டாக்கும். 

கதிரோடு வெள்ளியும் சேர்ந்து – மாதே 

கூட்டாக ஒரில்லா கலந்திருந்தாலும் 

பதியாவள் வசியமுஞ்செய்து – சென்மன் 

பந்து ஜனங்களை பகைகொள்வன் – தோழி

   (இ-ள்) சூரியன் சுக்கிரன் சேர்க்கை பெற்றிருந்தால் மனைவியின் கட்டளைக்கு கட்டுப்பட்டு உறவினர்களை பகைத்துக்கொள்வர்கள்.

செங்கதிர் பளிங்கைக்கூடித்திர முடனே ழினிற்க 

தங்குமிப்புயுதித்த சாதகன்தனக்குப் பெண்டீர் 

அங்கமேவூனமாக வனுக்குவுண்டா மென்று 

பங்கையத் தேவன் முன்னாள் படைத்திட்டோன் பாரின்மீதே

   (இ-ள்) சூரியன் சுக்கிரன் சேர்க்கை பெற்று ஏழாம் வீட்டில் இருந்தால் ஜாதகனுக்கு அமையும் மனைவிக்கு உடலில் அங்கம் உனமாகும்.


கோணத்திலிரவி வெள்ளி கூடி யேழிருக்கும் போது

காணுமிப்புவியுதித்த காளைக்கி யோத்தானும்

ஊணவே வங்கவீனத்தனுறு மனையாள் தாமும்

பூணகே கிடைக்குமென்று புகலுவாய்புவியுளோர்க்கே

  (இ-ள்)   திரிகோணங்களில் 1- 5 – 9 –ஆம் வீடுகளில் ஒன்றில் சூரியன் சுக்கிரன் சேர்க்கை பெற்ற ஜாதகருக்கு மாற்றுத்திறனாளியாக உள்ள பெண் மனைவியாக அமைவாள்.

      சூரியனும் சுக்கிரனும் இணைந்துள்ள  ஜாதகர்களின் திருமணம், தொழில், உத்தியோகம் எல்லாமே எதிர்பாராமல் நடக்கும். இவர்கள் சற்று நிதானமாக சமயோசிதமாக எதையும் செய்ய வேண்டும். வரவு எட்டணா – செலவு பத்தணா என்ற கதை ஆகிவிடும். ஆகவே வரவு-செலவுகளில் கவனமாக இருப்பது நல்லது. இவர்கள் எதையும் நம்பக்கூடியவர்கள். அசட்டுத்தனமாக  செய்துவிட்டு நஷ்டபட்டாலும் வெளியே காட்டிக்கொள்ளமாட்டார்கள்

வெள்ளிதன்னை வெய்யவன் சேர்ந்தாராகில் 

கொண்டதோர் பொருகேடாகும் கூடிய தொழிமாறும் 

அண்டிய தோஷம் வேந்தர் அலைச்சலும் மிகவுண்டாமே 

     (இ-ள்)  சுக்கிரன் சூரியன் சேர்க்கை பெற்றிருந்தால் பொருள்கள் நஷ்டமாகும் .தொழில் அடிக்கடி மாற்றம் ஏற்படுத்தும். அரசு வகையில் பாதிப்பும். அலைச்சல் அதிகமாகும்.(சுக்கிரன் ஆட்சி -உச்சம் பொற்றிருந்தால் பாதிப்பில்லை நன்மை தருவர்கள்) 

    லக்கினத்தில் சூரியன்-சுக்கிரன் இருந்தால், உடல்நலனில் சற்று பாதிப்பை உண்டாக்குகிறது. கௌரவம் பாதிக்கும்படியான காரியங்களில் செயல்படுவர்கள் . 

      லக்கினத்திற்கு இரண்டில் சூரியன்-சுக்கிரன் இருந்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவு. கண் பார்வையில் குறைபாடு தரும். தேவை இல்லாமல் விரையத்தை ஏற்படுத்தும். கோபம் அதிகரிப்பதால் வார்த்தைகள் தாறுமாறாக வர்த்தைகள்  வந்து, மற்றவர்களின் மனம் புண்படும்படி பேசுவார்கள். 

      லக்கினத்திற்கு மூன்றில் சூரியன்-சுக்கிரன் இருந்தால், சகோதரர்களின் ஒற்றுமை குறையும். அதிக அலைச்சலை ஏற்படுத்தும் அதிகமாக  பயணம் செய்வர்கள். தற்பெருமை பேசுவர்கள். அசட்டுத் தைரியசாலிகள்.

     லக்கினத்திற்கு நான்கில்  சூரியன்-சுக்கிரன் இருந்தால், வாகனம் விஷயத்தில் கவனம் தேவை. வீடு-மனை தமதாமாக அமையும். கல்வியில் தடை ஏற்பட வாய்ப்புண்டு. வயிற்று தொடர்பன தொல்லை ஏற்படுத்தும். தாயாருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படுத்தும்.

    லக்கினத்திற்கு ஐந்தில் சூரியன்-சுக்கிரன் இருந்தால், புத்திரபேறு  காலங்கடந்து அமையும். மனஉலைச்சலை தரும். வீன்கற்பனை . தண்ணீரில் கரைந்த உப்புபோல கையில் உள்ள பணம் கரையும். 

       லக்கினத்திற்கு ஆறில்  சூரியன்-சுக்கிரன் இருந்தால், வீண் விவாதம் உண்டாக்கும். தேவை இல்லா கடன் பெருக செய்யும். ஜாமீன் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அடிக்கடி உடலில் நோய் உபாதை உண்டாக்கும். எதிரிகளால் தொல்லை  ஏற்டும். .

     லக்கினத்திற்கு ஏழில்  சூரியன்-சுக்கிரன் இருந்தால், திருமணம் வாழ்க்கை சிரமபட்டு நடக்கும். கல்யாணம், காலங்கடந்து நடக்கும். நண்பர்களால் விரையங்கள் . அரசாங்க விஷயத்தில் கவனம் தேவை. கூட்டுதொழில் நஷ்டத்தை கொடுக்கும்.   

         லக்கினத்திற்கு எட்டில்  சூரியன்-சுக்கிரன் இருந்தால், கண்டங்கள் போல் நோய் நொடியைத் தரும். ஆனால் ஆயுளுக்கு பயமில்லை. வீண் வாழக்கு விவாதங்கள் உண்டாக்கும். எச்சரிக்கை தேவை. மறைமுக தொல்லைகள் வரும்.

      லக்கினத்திற்கு ஒன்பதில் சூரியன்-சுக்கிரன் இருந்தால், சொத்து வகையில் பிரச்சினை உருவாக்கும். சொத்து வாங்கும் வகையில்  வில்லங்கம் உண்டாக்கும். மேல் படிப்பு சற்று தடைசெய்யும். தந்தைக்கு உடல்நலம் பாதிக்கச் செய்யும். 

      லக்கினத்திற்கு பத்தில் சூரியன்-சுக்கிரன் இருந்தால், தொழில் உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினை உண்டாக்கும். முன்னேற்றத்தை சற்று தாமதப்படுத்தும். வாக்கு பலிதம் கொடுக்கும்.

      லக்கினத்திற்கு பதினொன்றில் சூரியன்-சுக்கிரன் இருந்தால், ஆடம்பர செலவு செய்வார்கள். முயற்சிக்கான பலனை மற்றவர்கள் அனுபவிப்பர்கள். சதா சிற்றின்ப சிந்தனையை தூண்டும். தேவை இல்லா நண்பர்களால் விரையம் உண்டாக்கும். அயல்நாடு விஷயத்தால் செலவு ஏற்படும் . 

       லக்கினத்திற்கு பன்னிரண்டில் சூரியன்-சுக்கிரன் இருந்தால், துறவி போல் வாழ்க்கை அமையும். செலவுகள், விஷம் போல ஏறும். பக்தி அதிகரிக்க செய்யும். நன்மைகள் செய்தாலும், தீமைகள் வந்தடையும். மனச்சஞ்சலம் உண்டாகும்.

சூரியஜெயவேல்      9600607603



Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்