நவகிரக வரலாறு புதன்

 புத பகவானின் வாழ்கை வரலாறு


புதன் ஜோதிடக் கலையில் புதனுடைய பங்கு பிரமிக்கத் தக்க தாகும் . புத பகவானை " மாலவன் ' ' என்றும் , ' புந்தி " என்றும் பெயர் சூட்டி அழைக்கின்றனர் . 


புதனுடைய பிறப்பு வரலாற்றை ஆராய்வேம்.  புராணத்தில் புதனுடைய வரலாறு படைப்புக் கடவுளான நான்முகனால் உருவாக்கபட்ட பிரம்ம ரிஷிகள் சிலரில் அத்திரி மகரிஷி ஒருவர் ஆவார் . அவர் வழியில் தோன்றிய சோமன் என்ற சந்திரன் வழி வந்த சந்திரகுல தோன்றல் தான் ' ' புதன் " என்று பெயர் சூட்டப்பட்ட வித்தியாக்காரகராவார் . புதன் , குருவின்றி தாமே அனைத்து சாஸ்திரங்களையும் கற்றறிந்தார் . ஆகவே தான் , புதனை வித்தியாக்காரகன் என்று பெயர் சூட்டி அழைக்கின்றனர் . இப்படிப்பட்ட புதனுடைய வாழ்க்கை வரலாற்றை அறிய முற்படுவோம் . சந்திரன் ஸ்ரீமன் நாராயணனுடைய அனுக்கிரகத்தைப் பெறுவதற்கு , இராஜ சுய யாகம் நடத்தினார் . அந்த யாகத் திற்கு வருகை தரும் பொருட்டு , தேவர்களுக்கும் , ரிஷிகளுக்கும் , ரிஷி புத்திரர்களுக்கும் அழைப்புகள் அனுப்பினார் . அவ்விதம் அழைப்புகள் அனுப்பியவர்களில் , தேவாதி தேவர் களுக்கெல்லாம் குருவாக விளங்கிய பிரகஸ்பதி வியாழ பகவான் ஒருவராவார் . சந்திரன் பிரகஸ்பதி வியாழ பகவானிடம் ஒரு காலத்தில் , சீடனாக அமர்ந்து முறைப்படி , சகல கலைகளையும் கற்றுத் தேர்ந் தான் . அத்தகைய சீடனான சந்திரன் நடத்தும் இராஜசுய யாகத்திற்கு விஜயம் செய்து , யாகத்தை நடத்தி வைக்குமாறு குரு பகவானுக்கு சந்திரன் முறைப்படி அழைப்பு அனுப்பி இருந்தான் . அச்சமயம் , குரு பகவானுக்கு சில காரணம் கருதி , இராஜ சுய யாகத்திற்குச் சென்று அதில் கலந்து கொள்ள முடியாத படி , ஓர் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது . ஆகவே , அவர் தமது சார்பாக , தம்முடைய தர்மபத்தினி தாராவை அனுப்பி வைத்தார் . தாரையும் தமது சீடனான சந்திரனுக்கு அனுக்கிரகம் வழங்கக் கூடிய நல்லெண்ணத்தில் , சந்திரனுடைய இருப் பிடத்திற்கு வந்து சேர்ந்தாள் . யாகம் நடத்துவதற்கான காலக்கட்டம் குறுக்கிட்டு யாகத்தை துவக்கக் கூடிய காலகட்டம் வந்து விட்டது . பல்லாயிரக் கணக்கான தேவர்கள் , ரிஷிகள் , முன்னிலையில் ராஜசுய யாகம் இனிது நடைபெற்றது . யாகத்தின் முடிவில் ஸ்ரீமன் நாராயணன் அனுக்கிரகத்தினால் , சந்திரனுக்கு சகல விதமான பாக்கியங்களும் அளிக்கப்பட்டன . இறுதியில் , யாகத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் , சந்திரன் கிரமப்படி தாம்பூலம் கொடுத்து வழி அனுப்பி வைத்தான் . ஆனால் , பிரகஸ்பதி வியாழ குருவின் சார்பாக வந்த அவருடைய தர்ம பத்தினி தாரை மட்டும் , சந்திரனை விட்டுப் பிரிந்து தமது இருப்பிடத்தை நோக்கித் திரும்பிச் செல்லாமல் நப்பாசையுடன் , சில காலம் சந்திரன் இருப்பிடத்திலேயே தங்கி விட்டாள் . முதலில் , சந்திரன் தமது குரு பத்தினி தாராவிடம் பய பக்தியுடன் நடந்து கொண்டு , அதற்கேற்ப உபசரித்து வந்தான் என்றாலும் , காலக் கிரமத்தில் , தாரையின் விபரீத செயல்களால் , சந்திரன் தாரையினுடைய காதல் வலைக்குள் விழுந்து , தமது கண்ணியத்தையும் , கட்டுப்பாட்டையும் மறந்தான் . இதன் காரணமாக , தாரைக்கும் , சந்திரனுக்கும் பல வழிகளில் கனிவாக இணக்கம் தோன்ற ஆரம்பித்து விட்டன . அதன் விளைவாக , தாரை கர்ப்பமுற்றாள் . இது சந்திரனுக்குப் பீதியை அளிக்கக்கூடிய அசாதாரண நிகழ்ச்சியாக இருந்தா லும் , அதைப் பற்றிச் சந்திரன் இலட்சியம் செய்யாமல் , எப்போதும் போல் இருந்து வந்தான் . குரு பத்தினி தாரையும் , தமது பதி குருவின் நினைவை மறந்து , சந்திரனுடன் கூடிச் சுகித்து , இன்பமாகக் காலம் கழித்து வந்தாள் . தமது பத்தினி தாரை சென்று நீண்ட காலமாகியும் திரும்பி வராததைக் கண்ட பிரகஸ்பதி குரு தேவர் , தமது சீடர்கலை அனுப்பித் தாரையைச் சந்திரனுடைய கிரகத்தி லிருந்து அழைத்து வரும்படி ஆக்ஞாபித்தார் . சீடர்களும் குருவின் கட்டளையைச் சிரமேற்கொண்டு , சந்திரனுடைய இருப்பிடத்திற்கு வந்து தாரையை திரும்பி வரும்படி அழைத்தனர் . அப்போது தாரை கர்ப்பமுற்றிருந்த நிலையையும் அச்சீடர்கள் கண்டு , விபரீத எண்ணத்தில் மூழ்கினர் . இப்படியும் ஒரு அவல நிலைக்குத் தமது குருபத்தினி ஆளாகலாமா ? என்று மனதிற்குள் எண்ணி , குரு பத்தினி தாரையின் மீதுள்ள நல்லெண்ணத்தைக் களைய ஆரம்பித்தனர் . ஒருவேளை இது சந்திரனுடைய வேலையாக இருக்குமோ ? அல்லது வேறு ஏதாவது சூழ் நிலையாக அமைந்து விட்டதோ ? என்று பல்வேறு சிந்தனைகளில் மூழ்கினர் . எது எப்படி இருப்பினும் , சந்திரனாக முன் வந்து , தாரை யைத் திரும்பிப் போகும்படி சொல்லுவானா ? என்று சீடர்கள் எதிர்பார்த்தனர் . ஆனால் , சந்திரன் , எதிலும் தலையிடாமல் , தாரையைத் திரும்பிப் போகும் விஷயத்தில் , அவளுடைய இஷ்டப்படி விட்டு விட்டான் . தம்மை அழைத்துச் செல்ல வருகை தந்த சீடர்களிடம் கண்டிப்பாகப் பிரகஸ்பதியின் ஆஸ்ரமத்திற்கு வரமுடியாது என்று திட்ட வட்டமாக சொல்லி விட்டாள் சீடர்களுடைய தாழ்மையான வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டன . அவர்களுடைய முறையீட்டிற்குச் சந்திரனும் தலை யிடவில்லை . ' ' தாரை இஷ்டம் எப்படியோ அப்படியே நடந்து கொள்ளுங்கள் . நான் ஒன்றும் தாரையைத் திரும்பிப்போக வேண்டாம் என்று தடுக்கவில்லை . அவள் இஷ்டப்பட்டுத் திரும்பி வந்தால் , அவளை அழைத்துச் செல்லுங்கள் ' ' என்று சந்திரன் திட்டவட்டமாகத் தமது முடிவை எடுத்துச் சொல்லி விட்டான் . இது சீடர்களுக்கு வெறுப்பையும் , வேதனையையும் ஏற்படுத்தியது . இறுதியில் , குருபகவானுடைய சீடர்கள் , வந்த சுவடு தெரியாமல் , திரும்பிச் சென்று , விட்டனர் . குருவின் ஆஸ்ரமம் சென்றடைந்த அச்சீடர்கள் , தாரைக்கு ஏற்பட்டிருந்த அவல நிலையை விரிவாக எடுத்துச் சொல்லி , தாரை திரும்பி வருவதற்குச் சிறிதேனும் சம்மதப்படவில்லை என்பதையும் தெரிவித்து விட்டனர் . சீடர்கள் சொல்லிய செய்திகளைக் கேட்ட குரு தேவர் சீற்றம் கொண்டார் . பதட்ட நிலையும் பெற்றார் . தமது சீடனான சந்திரன் மீது ஆத்திரமும் அடைந்தார் . இறுதியில் , ' எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ' ' என்ற பாடலின் படி , தாரை புத்திகெட்டத்தனமாக நடந்து கொண்டதால் , சந்திரன் என்ன செய்வான் ? என்ற வினாவை எழுப்பி மனதில் அமைதி கொண்டார் . இந்த விஷயம் , படைப்புக் கடவுளான பிரமதேவனுக்குத் தெரிந்ததும் , அவர் பல்வேறு முயற்சிக்குப்பிறகு , கர்ப்பமுற்று இருந்த தாரையைச் சந்திரன் அழைத்துக் கொண்டு வந்து , குரு தேவரிடம் விட்டு விட்டு மன்னிப்பு கேட்டுச்செல்லுமாறு ஏற்பாடு செய்தார் . சந்திரனும் , பல்வேறு போராட்டத்திற் குப்பிறகு இந்த பணியைச் செய்து முடித்தான் . சில மாதங்கள் கழிந்ததும் , தாரை ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் . குழந்தை பிறந்த உடன் , பிரம தேவர் மூலம் சந்திரனை வரவழைத்து , சந்திரனுக்குப் பிறந்த அந்த குழந்தையைச் சந்திரனிடமே ஒப்படைத்து விட்டார் . அக்குழந்தை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்ததால் அதற்குப் புதன் ' ' என்று பிரமதேவன் பெயர் சூட்டி குழந்தையைச் சந்திரனிடம் சேர்ப்பித்து விட்டார் . தமக்கு 27 பேர் தேவிமார்கள் இருந்தும் , அவர்களில் ஒருவருக்குக் கூட , குழந்தைப்பேறு உண்டாகவில்லை . ஆகவே , தாரையின் மூலம் பெற்றெடுத்த புதனைத் தமது தேவிமார்களிடம் ஒப்படைத்து அக்குழந்தையை வளர்த்து வருமாறு சந்திரன் கேட்டுக்கொண்டார் . அவர்களில் ஒருவர்கூட குழந்தையை வரவேற்று உபசரிக்க முன்வரவில்லை . 27 மனைவிமார்களில் , சந்திரனுக்குப் பிடித்தமான கிருத்திகை - ரோகினி ஆகிய இருவர் மட்டும் , மனமிரங்கி , புதனை வளர்க்கும் பணியில் ஈடுபட்டனர் . புதன் பால பருவம் அடைந்ததும் , தமது பிறப்பு பற்றிய விஷயத்தைக் கேள்விப்பட்டார் . அது முதல் , தமது தந்தை சந்திரனுடைய பாதுகாப்பில் இருந்து வந்ததை விட்டு விட்டு , மேரு மலைச் சாரலில் இருந்த " இலாவிருதம் " என்ற சரவணவனத்தை அடைந்து , அங்கு தமக்கொரு ஆஸ்ரமத்தை அமைத்துக் கொண்டு , குருவின்றி தாமே சகல கலைகளையும் , வேத புராண ஆகம சாஸ்த்திரங்களையும் கற்று வந்தார் . அப்போது முதல் , அவருக்கு மாலவனான ஸ்ரீமந்நாராயண னுடைய அனுக்கிரகம் சிறிது சிறிதாக ஏற்பட்டு வந்தது . புதனுடைய நிலை இவ்வாறு இருக்க , சூரியனுடைய புத்திரன் வைவசுத மனுவிற்கு நீண்டகாலம் புத்திரப் பேறு இல்லாமல் இருந்தது . அப்போது , வசிஷ்டருடைய அனுக் கிரகத்தினால் , புத்திர காமேஷ்டியாகம் செய்து , பத்து புத்திரர்களைப் பெற்றெடுத்தார் . அவர்களில் , இளன் என்பான் மூர்த்த புத்திரனாக இருந்தான் . சில காலம் கழிந்ததும் , வைவசு தமனு சூரிய குலத்து அரச பதவியைத் தமது மகன் இளனுக்கு அளித்து விட்டுக் கானகம் சென்று தவமியற்றச் சென்று விட்டார் . . இளன் தந்தைக்குப்பிறகு அரச பதவியை ஏற்றதும் , திக் கெட்டிலும் சென்று மக்கள் குறைகளை நேரில் கண்டறிய ஓர் நீண்ட கால திக்விஜயத்தை மேற்கொண்டான் . இவ்விதம் , தமது திக் விஜயத்தை நீண்டகாலம் செய்து வரும் வேளையில் , ஒருநாள் நல்ல வெய்யில் வேளையில் , மேரு பருவதச் சாரலில் வந்து சேர்ந்தான் . வெய்யிலின் கடுமை தாங்காமல் அங்குள்ள இலாவிருதம் என்னும் சரவண வனத்தில் உள்ள கௌரி தடாகத்தைக்கண்டு அதன் தெளிந்த நீரில் இறங்கி , மகிழ்ச்சியுடன் நீராடினான் . நீராடுவதற்கு முன்பு தாம் ஏறி சவாரி செய்துகொண்டு வந்த குதிரைக்கும் அக்குளத்து நீரைக் காட்டிச் சிரம பரிகாரம் பெறச்செய்தான் . குளிர்ச்சியான நீரில் நீண்ட நேரம் நீராடி விட்டு , கரை யேறி வரும்பொழுது இளனுக்கு ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது . காரணம் ஆனாக இருந்த இளன் , பெண் உருவம் அடைந்திருந் தான் . அத்துடன் அவன் ஏறி ஆரோகனித்து வந்த ஆண் குதிரையும் பெண் குதிரையாக மாறி இருந்தது . தமது உருவமாற்றத்திற்குக் காரணம் என்ன ? என்று தெரிந்து கொள்வதற்கு அக்கம் பக்கத்தில் விசாரித்து அறிய முயற்சி செய்தான் . அது ஜன நடமாட்டமற்ற காடாக இருந்ததால் , அவனுடைய கண்ணுக்கு யாரும் தென்படவில்லை . தமது குதிரையை ஒட்டிக்கொண்டே யாராவது கண்ணுக்குத் தென்படுவார்களா ? என்று நீண்ட தூரம் கால் கடுக்க நடந்து சென்றான் . கௌரி தடாகத்திற்கு நீண்ட தூரத்தில் இருந்த புதனுடைய ஆசிரமம் இளனுடைய கண்ணுக்குத் தெரிந்தது . பெண் உருவில் இளன் , அங்குச் சென்று , அங்கு தவம் செய்து கொண்டிருந்த புதனைச் சந்திந்து , நடந்த விருத்தாந்தங்களை எடுத்துச் சொன்னான் . இறுதியில் , ஆணாக இருந்த உருவம் புதனைக் கேட்டுக் கொண்டான் . பெண்ணாக மாறியதற்குக் காரணம் என்ன ? என்றும் இளன் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளிப்பதற்கு முன்பு , களைப்பாக பசியுடன் வந்திருக்கும் இளனுக்கும் இளன் குதிரைக்கும் ஆகாராதிகளை புதன் அளித்து பசியாறச் செய்தார் . அதன் பிறகு , புதன் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகளை விரிவாக எடுத்துச் சொன்னார் . சரவண வனத்தில் உள்ள கௌரி தடாகத்தில் பரமேஸ்வரனும் , பார்வதி தேவியும் சென்று , ஜலக்கிரீடை ஆடுவது வழக்கம் . ஒரு சமயம் , கைலாயம் சென்று பரம சிவத்தை தரிசனம் செய்ய மகரிஷிகள் கூட்டம் ஒன்று சென்றது . அப்பொழுது பரமேஸ்வரர் கௌரி தடாகத்திற்கு நீராடச் சென்றிருக்கிறார் என்று தகவல் சொன்னார்கள் . மகரிஷிகளுக்குள்ள ஆர்வத்தினால் , பரமசிவத்தை உடனே சென்று தரிசித்து ஆசி பெறவேண்டுமென்ற நோக்கத்தில் அம்மகரிஷிகளின் கூட்டம் , கௌரி தடாகத்தை அடைந்து , அங்குள்ள பரமசிவத்தை தரிசனம் செய்ய ஈடுபாடும் கொண்டார்கள் . அப்போது பரமசிவனும் , பார்வதி தேவியும் நிர்வாண நிலையில் நீராடிக்கொண்டிருந்ததைக் கவனித்து , தாம் வந்த வேளை சரியில்லை என்பதை உணர்ந்த மகரிஷிகள் , வந்த சுவடு தெரியாமல் திரும்பிச்சென்று விட்டார்கள் . இவர்களுடைய திடீர் வருகையை எதிர்பாராதிருந்த பார்வதிதேவி கண்டு , கோபமடைந்து அன்று முதல் கௌரி தடாகத்தைச்சுற்றி , 10 யோசனை தூரத்திற்குள் எந்த ஆண் ஜீவன் நுழைந்தாலும் , அது உடனடியாகப் பெண்ணாக மாறி விடும் என்று சாபம் அளித்து விட்டார் . அத்தகைய சாபம் காரணமாக , ஆணாக இருந்த நீயும் , ஆண் குதிரையாக இருந்த உமது குதிரையும் , கௌரி தடாகத்தை அடைந்த சிலமணி நேரத்திற்குள் , பெண்ணாக மாறி வீட்டீர்கள் . இது பார்வதா தேவி அளித்த சாபத்திற்கு இணங்க ஏற்பட்ட நிலையாகும் . ஆகவே , நீங்கள் இறுதி வரையில் நிரந்தரமாகப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் ஒருக்காலும் மீண்டும் ஆனாக மாறிவிட முடியாது என்று திட்ட வட்டமாகப் புதன் எடுத்துச் சொல்லிவிட்டார் . இதற்கிடையில் , பெண் உருவமடைந்த இளன் புதனுடைய அழகைக் கண்டு நாணத்தால் வெட்கித் தலை குனிந்தான் , புதனும் அழகே உருவான இளன் என்ற பெண் உருவைக்கண்டு மோகம் கொண்டார் . தமது உருமாற்றத்திற்கு வேறு வழி இல்லை என்பதை உணர்ந்த இளன் இளை என்ற பெயரில் புதனுடனேயே தங்கி புதனுடன் சதிபதிகளாக வாழ்க்கை நடத்த முற்பட்டு விட்டாள் .

  நீண்ட காலமாக இளன் திரும்பி வராததைக் கண்டு இளனுடைய குடும்பத்தினர்கள் வசிஷ்டமகா முனிவருடன் கூடி நாடு முழுவதும் தேடிக் கொண்டு வந்தனர் . அப்போது புதனுடைய ஆசிரமத்துக்கு அருகாமையில் கட்டப்பட்டிருந்த இளனுடைய குதிரையை அடையாளம் கண்டு கொண்டு , அங்குள்ள புதனை அணுகி , இளனைப் பற்றிய தகவலை விசாரிததார்கள் . புதனும் வசிஷ்டரை வரவேற்று உபசரித்து இளனுக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலையை எடுத்துச் சொன்னார் . இறுதியில் சிவபெருமானை நோக்கி இளன் தவம் செய்தால் இளனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கி முன் போல ஆனாக மாறக் கூடிய பாக்கியம் உண்டாகும் என்று வசிஷ்டமகா முனி எடுத்துச் சொன்னார் . வசிஷ்டமகா முனிவருடைய ஆசிபடி , பெண் உருவாக இருந்த இளை சிவபெருமானை நோக்கி நீண்ட காலம் தவம் செய்தாள் . அப்போது சிவபெருமான் தவத்தை ஆட் கொண்டு இளை என்ற இளன் முன்தோன்றி , இளனுக்கு சாப விமோசனம் அளிக்கும் வகையில் , இளன் ஓராண்டு காலம் வரையில் , பெண் உருவாக இருந்து , அதன் பிறகு , ஓராண்டு - காலம் வரையில் ஆணாக மாறும் வகையில் , அனுக்கிரகம் செய்தார் . சக்தியை மீறி , சிவன் முழுமையாக சாபம் விமோ சனம் தருவதற்கு விருப்பமில்லாத கரணத்தால் , ஆணாக ஒரு வருஷமும் , பெண்ணாக ஒரு வருஷமும் உருமாறி வாழ்க்கை நடத்தும்படி அனுக்கிரகம் செய்தார் . இந்த விதத்தில் இளன் பெண்ணாக மாறி " இளை ' ' என்ற பெயரைத் தாங்கி , புதன் மூலம் “ புரூரவன் " என்ற அழகிய புத்திரனைப்பெற்றும் , ஆணாக இருக்கும் பொழுது , இளன் தனது மனைவியின் மூலம் உட்கலன் , ஹரிதாஸ் சுவன் , வினதாசுவன் என்ற மூன்று புத்திரர்களைப் பெற்றான் . இவ்விதம் , புதனுக்குப் புத்திரனாகப் பிறந்த " புரூரவன் " சந்திர குலத்து அரசை ஆளும் பாக்யம் பெற்று , நூற்றுக்கு சமமன அந்தஸ்தைப் பெற்றான் . மேற்பட்ட அசுவமேத யாகங்களைச் செய்து இந்திரனுக்குச் சமமான அந்தஸ்தை பெற்றான்.

   புதன் தமது ஆசிரம வாசகத்தை விட்டு சகலகலா வல்ல மையுடன் நவக்கிரக பரி பாலனத்தில் இடம் பெற்று , வித்தியாக்காரகன் என்ற தாரகப் பலனை ஏற்று , நவக்கிரக பரிபாலனத்தை நடத்த முற்பட்டார் . புதன் வழியில் வந்த சந்ததிகள் , சந்திர குல அரசை ஆள தலைப்பட்டு விட்டனர் . யயாதி , கார்த்த வீரியார்ச்சுனன் , கௌரவர்கள் , பாண்டவர்கள் ஆகியவர்கள் சந்திர குலத்து அரச பரம் பரையைச் சேர்ந்தவர்களாவார் . இந்த கையில் , புதன் தமது வாழ்க்கையில் எந்தவிதத் திலும் , குடும்ப சுகம் என்பதையே அறியாதவராக வாழ்ந்து விட்டார் -

சூரியஜெயவேல் 9600607603




Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்