ராசிமண்டலத்தில் சிவசக்தி !
ராசிமண்டலத்தில் சிவசக்தி !
பகல் - இரவு என்ற காலநிலை அற்ற இடமாகிய திருக்கயிலாயத்தில் பூதகணங்கள் வாழ்த்தி வரவேற்க , நந்திதேவர் புன்னகையோடு நல்வரவு கூற அடக்கமே உருவாக வந்த அகத்திய முனிவர் சிவபெருமானை வணங்கி , ஐயனே ! முத்தமிழ் வித்தகனான எந்தை கந்தவேள் அருளிய மெய்ஞான சித்தாந்தமாகிய சோதிடம் உலக மக்களுக்கு பயனுறும் வகையில் நூல் ஒன்று இயற்றியுள்ளேன் நல்லாசியருள வேண்டும் என்று விண்ணப்பித்தார் .
இதைக்கேட்ட சிவபெருமான் அகத்தியனே முத்தமிழுக்கு முதல் நூல் படைத்து பெருமை கொண்ட உன் வார்த்தைகள் எல்லாம் என் வார்த்தை என்றுதானே பொருள் நீ வழங்கப்போகும் சோதிட நூலும் உலக மக்களால் என்றென்றும் போற்றிக் கொண்டாடும் களஞ்சியமாகத் திகழட்டும் . எங்கே உன் படைப்பைக் கூறு ? என்றார் .
வான வீதியில் நவக்கிரகங்களுக்கு நாயகனான சூரிய பகவானாக விளங்கும் தாங்கள் சிங்க ராசிக்கு அதிபதியாகி வீற்றிருக்க , தனம் , வாக்கு , குடும்பம் , வித்தை , பொன் பொருள் ஆகிய இரண்டாமிடத்துக்கு ஸ்ரீமந் நாராயணன் அதிபதியாகி திகழுகின்றார் . திருமாலின் நாயகியான ஸ்ரீதேவியின் அம்சமாகிய சுக்கிரன் கன்னிக்கு அருகில் மூன்றாமிடத்தில் ஆட்சிபெற்று மங்களம் , ரத்னாலங்கார பூஷணம் , உயர்வான வாகன யோகம் , வீரியம் , போகம் , புகழ் வைபவங்கள் விளங்க ஆட்சி பெற்றிருக்க எந்தை முருகனான கந்தப்பெருமான் நான்காமிடத்தில் அமர்ந்து சுகம் , பூமி , யோக பாக்கியங்களுக்கு அதிபதியாகத் திகழ் உயிரினங்களை படைத்து அவரவரின் விதியை நிர்ணயிக்கும் நான்முகன் தன் தேவியோடு ஐந்தாமிடத்தில் ஆட்சி பெற்று புண்ணியம் , தவம் , தாமபரிபாலனம் , புத்திர பெருமைகளுக்கு அதிபதியாக விளங்க , கலிபுருஷனாகிய சனி ஆறாமிடத்தில் ஆட்சி பெற்று எதிர்ப்புக்கு பகையும் , பணிவுக்கு ஈகையும் ஜன்மானு ஜன்ம வினைகளுக்கு தக்கபடி , பிணி , விஷம் முதல் விஷம் முதலிய படைகளுடன் கார்த்திருக்க என்று கூறும்போது , அவ்விடம் வந்த உமையவள் அகத்தியனே ! ' ' இதுநாள் வரையில் என்னையும் ஈசனையும் சமமாகப் போற்றிய நீ இந்த விஷயத்தில் மாறிவிட்டாய் போலிருக்கிறதே ' என்று கூறினாள் . தாயோ உருவில் சமபாதியாகத் திகழும் இந்தக் கிரக வரிசையில் சமபலத்தோடு தான் விளங்குகின்றீர்கள் என்று அகத்தியர் கூறினார் . எப்படி என்றாள் தேவி ! சிங்கத்திற்கு வியமாகிய கடகம் தங்களுக்கு ஆட்சி வீடு . அதர்க்கு இரண்டாமிடமாகிய மிதுனம் ஸ்ரீமந் நாராயணனுடைய வீடு - ரிஷபம் ஆகிய மூன்றில் திருமகள் நான்காமிடமாகிய மேஷம் கந்தவேளின் இல்லம் . ஐந்தாமிடமாகிய மீனம் நான்முகன் வாணியுடன் காட்சிதரும் வீடு , ஆறாமிடம் கலிபுருஷருடைய கும்பம் . இதை தவிர மானிடர்களின் நல்வினைகளுக்கு எழில்கோல ரூபமாகவும் , தீவினைகளுக்கு சோதனைகளை வழங்கும் கோர ரூபமாக விளங்கும் ராகுவும் நீங்களே அந்த ராகுவுக்கு ஏழில் ஞானத்திற்கு அதிபதியாகிய தங்கள் மூத்தப்பிள்ளை கணபதி . - மேலும் சிம்மம் முதல் மகரம் வரையில் பகல் பொழுதாகிய சிவபரம்பொருளின் காலமாகவும் , கடகம் முதல் கும்பம் வரையில் இரவு பொழுதாகிய சிவசக்தியின் காலமாகவும் இந்தக் கலை குறிப்பிடுவதால் ஐயனை விட்டு தாங்கள் எந்த விஷயத்திலும் விலகாமல் விளங்குவதைத் தான் உலகம் அனுபவிக்கிறது . இப்படியாக நவக்கிரக மண்டலத்திலும் ஈசனுக்கு பெருமை தரும் சக்தியாகத்தானே விளங்குகின்றீர்கள் என்று கூறினார் ராசி மண்டலங்களில் சிம்மம் முதல் மகரம் வரை சிவனுடைய அம்சமாகவும் , மேல் பக்கம் கடகம் முதல் கும்பம் வரை சக்தியின் அம்சமாகவும் அமைந்துள்ளது . சிம்மம் , கடகம் ஆகிய வீடுகளுக்கு அதிபதிகளாகிய சூரியன் . சொந்த வீடு ஒவ்வொன்றாகவும் இவர்களுக்கு பலம் சேர்க்கும் புதன் , சுக்கிரன் , செவவாய் , குரு , சனி ஆகியவர் குரு சனி ஆகியவர்களுக்கு சொந்த வீடுகள் இரண்டு பக்கத்தலும் அமைந்திருப்பது தெய்வீகம் !
தொகுப்பு சூரியஜெயவேல்
Comments
Post a Comment