கேது பாகவன்
ஜோதிட வாழ்வியல் விஞ்ஞானம்
கேது பகவான்
விருப்பு வெறுப்பு என்ற இரண்டுவித குணங்கள் மனிதர்களின் மனதில் நிறைந்திருக்கும் விஷயமாகும் . விருப்பத்தை உண்டுபண்ணும் கிரகமாக ராகுவும் , வெறுப்பை உண்டுபண்ணும் கிரகமாக கேதுவும் எழு கிரகங்களுக்கும் இடையில் இரண்டு நிழல்களாக விளங்குகின்றன வானமண்டலத்தில் பூமிக்கும் . இதர கிரகங்களுக்கும் இடையில் உள்ள நிழல்களாகவும் மனிதர்களுக்கு உடல் முழுவதிலும் ராகு சக்தியும் , சிரசில் கேது சக்தியும் அங்கம் வகிக்கின்றன என்பது தத்துவமாகும் இதனால்தான் கேதுவை ஞானகாரகன் என்று முன்னோர்கள் அழைத்தார்கள்.
கொடுப்பதிலும் , கெடுப்பதிலும் இரண்டு நிழல் கிரகங்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல மற்ற கிரகங்களால் ஏற்படும் நன்மை தீமை ஆகியவற்றை கெடுக்கவோ அல்லது தடுக்கவோ இந்த இரண்டு நிழல் கிரகங்களால்தான் முடியும் என்பது அனுபவ சித்தாந்தமாக விளங்குகின்றன .
உலக வாழ்வை வெறுத்து ' உலகே மாயம் ' என்று சொல்லும் மெய்ஞ்ஞான சித்தர்களாவதற்கும் கேதுதான் காரண கர்த்தாவாகும் மற்றும் மந்திர சாஸ்திரங்கள் , யோகநிஷ்டை ஆகியவைகளில் மனிதன் பூரணத்துவம் அடைவதற்கும் , காடு மலை போன்ற இடங்களில் திரிந்து ஜீவன் முக்தி ஜீவ பக்குவம் போன்ற நிலைகளை அடையும் பாக்கியத்தையும் , நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் பேராற்றலையும் , எந்த விஷயத்தையும் லட்சியம் செய்யாத மனநிலை ஆகியவற்றை மனிதர்களுக்கு வழங்குவதாலும் ஜோதிடம் வேத புராண இதிகாசங்களிலே கேதுவுக்கு ஒரு தனி மரியாதையும் கிடைக்கின்றன
ஜனன காலத்தில் விருச்சிக லக்னம் அமைந்து பத்தாமிடமான சிம்ம ராசியில் கேது அமர்ந்திருந்து கேது திசையை அனுபவிக்கும் மனிதன் வியக்கும் செல்வ சுகத்தையும் லட்சுமிகடாட்சத்தையும் அடைகின்றான் .
லக்னம் முதல் நான்கு கேந்திரங்களிலே கேது அமர்ந்து கேது திசையில் பெரும் யோகத்தை அடைந்துள்ளவர்களின் அனுபவத்தால் கேது கெடுப்பான் என்ற மொழி பொய்யாக்கப்பட்டுள்ளதையும் காண முடிகின்றது நவக்கிரகங்களில் யார் கெடுப்பார்கள் யார் கொடுப்பார்கள் என்பதுதான் பெரிய புதிராகும்.
ஒருவருடைய ஜாதகத்தில் சுபகிரக திசையில் லக்ஷாதிபதியாகின்றான் வேறு ஒருவன் அதே சுபகிரக திசையில் ஓட்டாண்டியாகி செல்ல சுகத்தை எல்லாம் இழந்து வீதிக்கு வந்து விடுகின்றான். ஆகையால் நவக்கிரகங்கள் உலகம் ஒன்பது கோளும் ஜென்மானு ஜென்ம திரிஜென்ம விதிப்பயனை வழங்குவதற்காக ராசிகளிலே அங்கம் வகிக்கின்றனர் என்பதுதான் உமையாகும்
நிழல் கிரகத்தின் காரணமாக எந்த ராசியும் ஒதுக்கப்படவில்லை தெய்வம்: தேவி சரஸ்வதி கேதுவின் காரகங்கள் ஆக்கிரமிப்பு, வேகமான, அதிவேக எதிர்வினை மற்றும் ஆய்வு மூலம் ஊடுருவுகின்றன. மிதமான உயரம் மற்றும் அரசியலமைப்பு, உயரமான, ஆர்வமுள்ள மற்றும் வேகமான வளர்சிதை மாற்றத்தைக் கொண்டுள்ளன, இரத்தத்தில் உள்ள நச்சுகளுடன் தோல் நோய்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
பலம் குறைந்த கேதுவின் காரகங்கள் தனியாகவும், உள்நோக்கி, தனித்துவமானதாகவும், தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அதிக உணர்ச்சி மற்றும் ஆவேசத்தின் காரணமாக அமைதியற்றதாகவும் உணர்கின்றன. சமுதாயத்தின் விதிமுறை, சடங்குகள், பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரியத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்யும் போக்கை வளர்த்துக் கொள்ளும் அவர்களின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் கீழ் இனமக்களின் தொடர்பை கொண்டிருக்கிறார்கள். ஆராய்ச்சி, தொல்பொருள், கணினி வேலை, கருத்து, கணக்கீடு, புவியியல், வரலாறு,அறிவியல், குத்துதல், பாகுபாடு மற்றும் உளவுத்துறை. பல சந்தர்ப்பங்களில், கேது தனிப்பட்ட ஆழ்ந்த சிந்தனையாளராக்குகிறார் என்பது கவனிக்கப்படுகிறது. இரகசிய அறிவியல் பற்றிய ஆழமான அறிவு, மத, ஆன்மீகம் மற்றும் எந்தவொரு விஷயத்தின் மையப்பகுதியும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றன, அவை மன அழுத்த சூழ்நிலையிலிருந்து கூட எதையாவது வரையக்கூடிய நபர். அவர்கள் தவறுகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், மேலும் தங்கள் குறைகளை தெளிவாக அறிந்த பிறகும் அவர்கள் விமர்சனங்களை வாதமாகக் கேட்க மாட்டார்கள், சுயமாக பாதிக்கிறது. கடந்த கால நிலைமை மற்றும் வளர்ப்பிலிருந்து அவர்கள் பெற்ற சித்தாந்தத்தின் காரணமாக அவர்கள் தங்கள் கருத்தில் கடுமையாக இருக்கிறார்கள், ஒவ்வொரு முறையும் தங்கள் உரிமையை நிரூபிக்க முயற்சிக்கிறார்கள் அல்லது மற்றவர்களை தோற்கடிப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
கேது தொடர்புடைய தனிநபர் நல்ல ஜோதிடர், மறைநூல் அறிஞர், தியானிப்பவர், துறவி, மத ஆசிரியர் மற்றும் உளவியலாளர் அல்லது யோகிகள் ஓரளவிற்கு அல்லது உலக விவகாரங்களிலிருந்து பிரிந்து இருக்க முடியும். அவர்களின் ஆன்மீக பயணத்தின் பாதையில், அவர்கள் வாழும் சூழலைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை, முழு அர்ப்பணிப்புடன் தங்கள் இலக்கை மையமாகக் கொண்டு, அதில் அவர்கள் வெற்றியைப் பெறுகிறார்கள். அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் அவர்கள் படிப்பது, ஆராய்ச்சி செய்வது, கண்டுபிடிப்பது, தேடல்கள் மற்றும் அனுபவங்களை நம்ப விரும்புகிறார்கள். அறிகுறிகள்: வேட்டைக்காரன், நாய், ஆன்மீகம், அமானுஷ்யம், மந்திரம், மர்மம், இரட்சிப்பு, தத்துவ சூனியம், ஆழமான அறிவு, ஹோமியோபதி மருத்துவர், குணப்படுத்துபவர், ஜோதிடர், துறவி, மத ஆசிரியர் அல்லது மாய, பாம்பின் வால், எதிரிகள், காய்ச்சல் மற்றும் தந்தைவழி தாத்தா போன்றவை. உளவியல்: இரகசிய, ஆன்மீகம், மர்மமான, மறைநூல், ஜோதிடர், மந்திரவாதி,
நோய்கள் ;- காயம், பூச்சிகள், விஷம், கால்கள், பூனைகள் கண், வெப்பம், சிறுநீரகம், சிறுநீர், போர்வை, பல வண்ணங்கள், அவமானங்கள்,
தாழ்வு மனப்பான்மை, சகிப்புத்தன்மை, குறைவான உண்பவர், மனநலம், தத்துவ , நச்சு உட்கொள்ளல், வீக்கம், மற்றும் குணப்படுத்த முடியாத நோய்கள் போன்றவை நோய்: கேது புற்றுநோய், பக்கவாதம், தற்கொலை போக்குகள், பாதிக்கப்பட்ட மனநிலை, மூளைக் கட்டிகள்,பாதங்கள், பெரியம்மை, வலி காய்ச்சல், புண்கள், காற்று புகார், வயிறு தொடர்பான நோய்கள், பாம்பு கடித்தல் மற்றும் இதய நோய்கள் அல்லது நோய்களைக் கண்டறிவது கடினம். பிரச்சினை தொடர்பான நோய்களைத் தருகிறது
தொழில்: உணவு தொழில்நுட்பம், ஆராய்ச்சி, மனநல மருத்துவமனைகள், விஷ விற்பனையாளர், பைலட், வானியல் பொறியியல், வானொலி. டிவி, தொலைபேசி, மின் மற்றும் மின்னணு பொருட்கள், துப்பறியும் நபர்கள், உளவியல், விமான பணயக்கைதிகள், மல்யுத்த வீரர்கள், வழக்கறிஞர்கள், குற்றவாளிகள், கடத்தல்காரர்கள், தோல் தொடர்பான, விமான வேலைகள், சுதட்டம், துப்புரவாளர்கள், நிகழ்வு மேலாளர்கள் மற்றும் மந்திரவாதிகள் போன்றவர்கள்.
கேதுவின் பலம் & பலவீன் & சேர்க்கை பெறும் கிரகங்களுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.
லக்னத்தில் கேது : சதாகாலமும் லட்சுமிகடாட்சம் பொருந்திய வாழ்க்கை அமையும் எவ்வளவு கஷ்டமான திசாபுக்திகள் நடைபெறும் காலத்திலும் எப்படியோ எல்லா காரியத்தையும் சமாளிக்கும் ஒரு தெய்வபலம் அமையும் ஆண் பெண் ஆகிய இருபாலரையும் வசீகரிக்கக்கூடிய தோற்றம் , இனிய சொல் ஆகியவற்றால் வாழ்க்கையில் தெளிவான ஞானமுள்ளவர்களாக விளங்குவார்கள் குடும்ப வாழ்க்கையிலும் கணவன் மனைவி உறவுமுறையும் அன்பு கொண்டதாக அமையும்.
இரண்டாமிடத்தில் கேது வாழ்க்கையில் பற்றற்ற மனநிலை அடிக்கடி உண்டாகும் . இவர்களுக்கு திருமணம் காலாகாலத்தில் நடைபெறுவதில்லை திருமணம் அந்நிய வகையில் நடைபெறும் .வாழ்க்கையில் எவ்வளவு சம்பாதித்த போதிலும் கையில் காசு பணம் தங்குவதில்லை .வீண் செலவுகள் செய்பவரில்லை என்ற போதிலும் கையிலுள்ள பணம் எப்படியோ மாயமாகி கையை விட்டுப் போய்க் கொண்டிருக்கும் . வாக்கு பலித்து விடும் இவரால் சபிக்கப்பட்டவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது .
மூன்றாமிடத்தில் கேது : சகோதர தோஷம் உள்ளவர்கள், ஒரு காதில் நோய் உண்டாகும் எடுத்தக் காரியத்தை கண்ணும் கருத்துமாக முடிப்பதில் வைராக்கியசாலி. ஜோதிடம் - புராணம் - இதிகாசம் ஆகிய புராதன விஷயங்களில் நடைமுறை காலத்துக்கு ஏற்ற வகையிலும் தெளிவான ஞானமும் , இவரிடம் விரோதம் கொண்டவர்களால் இவரை வெல்ல முடியாத சூழ்நிலையும் பக்கபலமாக அமையும் . குடும்பத்தில் பற்று - பாசம் உள்ளவராக விளங்குவார் . சுருக்கமாகச் சொன்னால் நல்லவனுக்கு நல்லவன் என்ற பழமொழி கச்சிதமாகப் பொருந்தும்.
நான்காமிடத்தில் கேது : ஏதாவது ஒரு நோய் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கும் ஒருமுறை விபத்து போன்றவையோ அல்லது அறுவை சிகிச்சையோ ஏற்படும் மந்திர தந்திரங்களில் ஈடுபாடு கொள்ளும் மனநிலையும் , தெய்வீக ரகசியங்களை விரும்பி அறிந்து கொள்ளும் ஆர்வமும் உடைய மனமும் வாழ்க்கையில் சுகம் என்பது அமையாது . எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு அலுப்பு சலிப்பு அடைந்துவிடும் மனநிலையும் , முக்கியமான காரியத்தை சோம்பல் காரணமாக நழுவ விட்டு பிறகு வருந்தும் இயல்பும் அமையும்.
ஐந்தாமிடத்தில் கேது : புத்திரதோஷம் கருச்சிதைவு , புத்திரசேதம் அல்லது புத்திரர்களால் பிற்காலத்தில் பெரும் கவலைகளை அடையும் நிலைமை முதலியன உண்டாகும் தெய்வபக்தி தெய்வீக சிந்தனை , அடிக்கடி யாத்திரை தெரிசனம் முதலியவைகள். அனுபவப்பூர்வமாக அமையும் . சிலருக்கு ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கின்றன . மருத்துவத்திற்கு கட்டுப்படாத நோய் நொடிகள் ஏற்படுவதால் வாழ்க்கையில் சுகசௌகரியங்கள் என்ற விஷயத்திற்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் அமையவில்லை .
ஆறாமிடத்தில் கேது : மறைமுக - நேர்முக எதிரிகள் , எதிர்ப்புகள் அடிக்கடி ஏற்படும் . ஆனால் எவராலும் வெல்ல முடியாது . தர்க்கவாதம் புரிவதும் இவருக்கு நிகர் இவரேயாகும் . பெண்கள் வெகுவாக மதிப்பார்கள். வாழ்க்யிைல் எவ்வளவு பெரிய சிக்கலான விஷயங்களிலும் மனந்தளராமல் உறுதியோடும் , தன்னம்பிக்கையோடும் எதிர்ப்பதும் மற்றவர்களுக்கு உதாரணபுருஷர்களாக விளங்குவதிலும் வாழ்க்கையில் சேவலைப் போல் நிமிர்ந்து நட என்று ஒரு பழமொழி உண்டு . இது இவருக்கே பொருந்தும்.
ஏழாமிடத்தில் கேது : திருமணம் பலமுறை தடைப்பட்டு பிறகு நடைபெறும் மனைவியிடம் உள்ள பிரியத்தை மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டு லட்சியப்புருஷராக வாழ்வார் . உறவினர்கள் நல்ல சமயத்தில் கைவிட்டு வேடிக்கைப் பார்ப்பார்கள் . சாதாரண நிலையிலும் மற்றவர்களுக்கு கோபக்காரராக காட்சியளிப்பார் . இதனால் சில சமயங்களில் வாழ்க்கையை வெறுத்து ஒரு துறவி போல மனநிலையை மாற்றிக் கொள்ள முயலுவார் . ஆனால் உண்மையான துறவியாக முடிவதில்லை . தெய்வபக்தியில் சிறந்து விளங்குவார் .
எட்டாமிடத்தில் கேது : இவருடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு புதிராகவே இருக்கும் .பொருளாதார விஷயத்தில் நித்திய கெண்டம் , பூரண ஆயுள் என்ற பழமொழிப்படி விளங்குவார் . இவருடைய வார்த்தையில் பல நல்ல விஷயங்கள் வெளிப்பட்டபோதிலும் மற்றவர்களுக்கு இனிமையாக இருப்பதில்லை . மந்திர தந்திரம் , மூலிகை ஜாலம் போன்ற விஷயங்களை கவனமுடன் அறிந்து கொள்வார் . ஆனால் அவை ஒன்றும் உதவுவதில்லை காரணம் எந்த விசயத்திலும் பிடிவாத குணமுள்ளவராக இருப்பதால் எண்ணியதை அடைந்தே தீருவார் .
ஒன்பதாமிடத்தில் கேது : பூர்வீக சொத்து சுகங்களை அடையும் பாக்கியம் இவருக்கு இருப்பதில்லை நண்பர்கள் முதல் உறவினர்கள் வரையில் விரோதிகள் ஏற்படுவார்கள் ஆனால் அவற்றையெல்லாம் இவர் லட்சியம் செய்யமாட்டார் இல்லற வாழ்க்கையை வெறுத்து துறவறத்தை மேற்கொள்ளும் போது பல சௌகரியங்கள் இவரை வந்தடையும் யோக மார்க்கத்தில் முயன்றால் குறுகிய காலத்திலேயே பெரும் சித்திகளை அடைய முடியும்.
பத்தாமிடத்தில் கேது : பசி தாகம் போன்றவை பலமுறை ஏற்பட்டு இவரைப் பக்குவப்படுத்தும் கடமை - கண்ணியம் என்ற கட்டுப்பாடுகளில் வைராக்யசாலியாக விளங்குவார் . சத்தியம் தவறாதவராக இருப்பார் . வாழ்க்கையில் தோல்வி ஏற்படுவதில்லை . மூலதனம் இல்லாத தொழில்களில் ஈடுபட்டு பெரும் சொத்துக்களுக்கு அதிபதியாகி விடுவார் . மருத்துவத் துறையில் கைராசிக்காரராக விளங்குவார் . எல்லா விஷயங்களிலும் தெளிவான ஞானமும் , எல்லோரிடமும் மரியாதையை செலுத்துவதற்கு கண்ணுங்கருத்துமாக இருக்கும் இவருக்கு தெய்வபலமும் லட்சுமிகடாட்சமும் நிலைத்திருக்கும்.
பதினோராமிடத்தில் கேது : வாழ்க்கையில் எதிர்பாராத தனலாபத்தை அடையும் பாக்கியமும் , ஒரு காதில் நோயும் , மூத்த சகோதரருக்கு தோஷம் , எந்த நேரமும் எவ்வளவு சிக்கலான விஷயத்திலும் தைரியம் குன்றாத மனநிலையும் உடையவராகவும் , செய்தொழிலை மேன்மையுடன் லட்சுமிகடாட்சம் பொருந்திய வாழ்க்கையில் நாளுக்குநாள் பொருள் சேர்க்கும் எண்ணமுடனும் இருப்பார் . தெய்வபக்தி , குரு பக்தி மிக்கவராக இருக்கும் இவருக்கு பெண் தெய்வத்தின் மீது பற்றுதலும் , பெண் சந்ததிகளும் அதிகம் உண்டாகும் .
பனிரெண்டில் கேது : மனிதப் பிறவியின் கடைசி ஜென்மமாக வெளியூர் அல்லது வெளிநாடு போன்றவற்றில் நன்கு வாழ்க்கை அமையும் கண்ணில் நோய் உண்டாகும் . பூர்வீக மற்றும் சுயசம்பாத்திய பொருள்களை பின் சந்ததிக்கு வைக்க மாட்டார் . குடும்ப பற்று பாசம் இவருடைய மனதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டு தத்துவ விசாரம் , தனிமை ஆகியவற்றின் பற்றுதல் ஏற்படும் . அதிகமாக உறவினர்கள் நண்பர்கள் வகையில் இவர் ஒரு சர்வாதிகாரி என்றே சொல்ல வேண்டும் .
பொதுவாக எந்த ஜாதகத்திலும் பாவிகள் கேந்திரத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்பது யோக லக்ஷணமாகும் .ஆனால் சூரியன் , செவ்வாய் , சனி ஆகியோர்களுக்கும் , ராகு - கேதுக்களுக்கும் ஒரு பெரும் வேறுபாடு காணப்படுகின்றது . லக்னம் முதல் ஒன்று நான்கு ஒழு பத்து ஆகிய கேந்திரங்களிலே கேது அமர்ந்திருந்து கேதுவுக்கு கேந்திரம் அல்லது திரிகோண ராசிகளிலே சனியும் செவ்வாயும் அமர்ந்திருக்க வேண்டும் அல்லது கேது நின்ற வீட்டிற்கு அதிபதியாக சனி- செவ்வாயும் கேந்திரம் அல்லது திரிகோணமாக அமர்ந்திருந்தாலும் கேது மகாதிசை யோக திசையாக அமையும் . இப்படி அமைந்த ஜாதகத்திற்குதான் எந்த வீட்டில் கேது அமர்ந்திருந்தாலும் அந்த வீட்டின் அதிபதி கொடுக்க வேண்டிய பலன்களை ஜாதகர் அனுபவிக்க முடியும்
மேஷம் , கடகம் ஆகிய ராசிகளில் தான் கேது நல்ல பலன்கள் கொடுக்க முடியாத ராசிகள் என்று ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டுள்ளன . ஆனால் மேற்கண்ட விதிப்படி இந்த ராசிகளிலும் கேது அமர்ந்திருந்தால் கேது திசை காலம் பொற்காலமாக அமையும் என்பது அனுபவம் கண்ட உண்மையாக விளங்குகின்றன .
லக்னத்திற்கு இரண்டு , பனிரெண்டு ஆறு - எட்டாக ராகு - கேதுக்கள் இருப்பது நல்லதல்ல . கேது அமர்ந்து கேது திசை ஏற்பட்டால் இந்த திசையின் காலத்தில் பல வழிகளில் பொருள் விரையமும் , ஜாதகரை சுற்றிலும் ஏமாற்றுபவர்கள் சூழ்ந்திருக்கும் சூழ்நிலையும் அமையும் . எவ்வளவு பொருள் சேர்ந்தபோதிலும் பல வழிகளில் உடனுக்குடன் பொருள் விரையமாகி விடும் சூழ்நிலையோடு கேது திசை அமையும் என்பதை மனதில் கொள்ள வேண்டும் .
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment