லோம சம்ஹிதை
லோமச சம்ஹிதை
லக்கினாதிபதி பன்னிருபாவங்களில் இருக்கும் பலன்கள்
லக்கினாதிபதி ஆண்கிரமாகி லக்கினத்தில் இருந்தால் சிறப்பன உடல் அமைப்பு உள்ளவர்கள். நன்மைகளை செய்வர்கள்., தனக்கென தனி கொள்கையும், புத்திசாகள்,சஞ்சலத் தன்மை உள்ளவர்கள், இருமனைவி அல்லது பிறமனைச் சேர்க்கை உள்ளவர்கள்.
2) லக்கினாதிபதி தன & லாப ஸ்தானத்தில் இருந்தால் பொருச்செல்வம் உள்ளவர்கள் சாஸ்திர ஞானம் உள்ளவர்கள், நல்ல தன்மை உள்ளவர்கள், தரும சிந்தனை உள்ளவர்கள், கோபம் உள்ளவர்கள், நல்ல உணவு உண்ணுவர்கள்.
3) லக்கினாதிபதி மூன்று அல்லது ஆறில் இருந்தால் சிங்கத்தைப் போல் வீரம் உள்ளவர்கள், பொருளும், நல்ல சுகமும்,நற்சிந்தனை, இருமனைவியும் உள்ளவர்கள். (குறிப்பு ;- லக்கினாதிபதி ஆறில் இருப்பது நலம்மில்லை ஆனால் ஆண் கிரகங்கள் இருப்பது பாதிப்பில்லை என்கிறர் ஆசிரியர்)
4) லக்கினாதிபதி நான்கு அல்லது பத்தில் இருந்தால் தாய்&தந்தையின் சுகமும், பல சகோதரர்களும்,காமம்,நற்குணம்,அழகும் உள்ளவர்கள்.
5) லக்கினாதிபதி பஞ்சமம் ஸ்தானத்தில் இருந்தால் கௌரவமும் மக்கட்செல்வம், சௌக்கியம், சுகமும் உள்ளவர்கள் , முதல் குழந்தை பாதிக்கும்,கோபம் உள்ளவர்கள், அரசாங்கத்தில் உத்தியோகம் அமையும்.
6) லக்கினாதிபதி சப்தம ஸ்தானத்தில் இருந்தால் திருமண வாழ்கை பாதிக்கும், வெறுப்பு உள்ளவர்கள், அல்லது பல ஊர்கள் சுற்றித் திரிவர்கள்,எதுவும் இல்லதவனாக இருப்பர்கள் அல்லது அரசனாக இருப்பர்கள்.(குறிப்பு ;- சுப கிரகங்கள் பார்த்தால் சுப பலனும், பாவ கிரகங்கள் பார்த்தால் தீய பலனும்)
7) லக்கினாதிபதி எட்டில் அல்லது பன்னிரண்டுடாம் ஸ்தானங்களில் இருந்தால் சிற்ப தொழிலில் சிறந்தவன்,தூது சொல்லுவர்கள்,கோள் சொல்வர்கள் ,அதிக கோபம் உள்ளவர்கள், பிறபெண்களைப் புணர்வர்கள்.
8) லக்கினாதிபதி ஒன்பதில் இருந்தால் பாக்யமும்,அதிகாரமும்,இறை பக்தியும், சொல்வளமையும்,மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள்.
தனஸ்தானதிபதி பன்னிரு பாவங்களில் இருக்கும் பலன்கள்
9) இரண்டாம் அதிபதி லக்கினத்தில் இருந்தால் பொருள் வளமை உள்ளவர்கள், கர்வம் உள்ளவர்கள், இரண்டு அல்லது மூன்று மனைவிகள் உள்ளவர்கள், புத்திரசம்பத்து இல்லாதவர்கள்.
10) இரண்டாம் அதிபதி மூன்று அல்லது நான்கில் இருந்தால் பராக்கிரமம் உள்ளவர்கள், அறிவாளியாகவும்,லோபியும்,தெய்வ பக்தி இல்லாதவர்கள் அதீத காம உணர்ச்சி உள்ளவர்கள்.
11) இரண்டாம் அதிபதி ஆறில் இருந்தால் எதிரிகளால் ஆதாயம் உள்ளவர்கள், எதிரிகளால் பொருள் நஷ்டம் ஏற்படும், ஆசான வாயிலில் ,மார்பில் நோய் ஏற்படும்.
12)இரண்டாம் அதிபதி ஏழில் இருந்தால் வைத்திய் சாஸ்திரம் அறிந்தவன், பிற மனைப் பிரியம்,விபச்சாரி மனைவி, தாயரும் விபச்சாரி அவர்கள்.
13)இரண்டாம் அதிபதி எட்டில் இருந்தால் பூமி,செல்வம் உள்ளவர்கள், மனைவியால் சிறிது இன்பம் கிட்டும், மூத்த சகோதரர் இருக்காது.
14) இரண்டாம் அதிபதி ஒன்பது அல்லது பதினொன்றில் இருந்தால் தனவந்தன், தர்மவான்,அழகிய உருவம் உள்ளவர்கள், இளம் வயதில் நோய் ஏற்படும், பிறகு ஆயுள் முழுவது சுகமுடையவர்கள்.
15) இரண்டாம் அதிபதி பத்தில் இருந்தால் அதிக காமம்,இரக்க குணமுள்ளவர். சாஸ்திர ஞானம் உள்ளவர்கள், பல மனைவிகள் அமையும், பொருள் உள்ளவர்கள், மக்கட்பேறில்லாதவர்கள்.
16) இரண்டாம் அதிபதி பன்னிரண்டில் இருந்தால் அன்பும் இனியதன்மையும் வறுமையும் அரசாங்கத்தால் தொழில் உள்ளவர்கள், தத்து புத்திரர் சுகம் இல்லாதவர்கள். தனதுகொள்கையை நிலை நிறுத்துவர்கள்.
17) இரண்டாம் அதிபதி லக்கினம் &ஐந்தில் இருந்தால் குடும்பத்தை பாதுகாப்பார்கள், பொருட்களால் பாதிப்படைவர்கள்,பிறருக்கு உதவிகள் செய்வர்கள்.
மூன்றாம் அதிபதி பன்னிரு காலங்களில் இருக்கும் பலன்கள்
18) மூன்றாம் அதிபதி மூன்றில் இருந்தால் அதிக பராக்கிரமம் உள்ளவர்கள், உற்றார், உறவினர்களுடன் வாழ்வர்கள், செல்வ வளமையும், சுகபோக வாழ்வும் வாழ்வர்கள்.
19) மூன்றாம் அதிபதி நான்கில் & ஐந்தில் இருந்தால் சிறந்த திறமைசாலி, அறிவாளியாக இருப்பர்கள், செல்வ வளமையும் கிட்டும்.மனைவியினால் துன்பம் அடைவர்கள்.
20) மூன்றாம் அதிபதி ஆறில் இருந்தால் சகோதரர்களுடன் பகைமையுண்டாகும்,செல்வ வளமையும் கிட்டும், மாமானுக்கு சுகவாழ்வு அமையாது,மாமான் மனைவியுடன் தொடர்பு கொள்வர்கள்.
21) மூன்றாம் அதிபதி ஒன்பதில் அல்லது பன்னிரண்டில் இருந்தால் மனைவியால் பாக்யம் உண்டாகும். தந்தையிடம் திருட்டுத்தனம் இருக்கும் இன்பமும் துன்பமும் ஏற்படும்.
22) மூன்றிற்குடையோன் ஏழில் அல்லது எட்டில் இருந்தால் அரசாங்கத்தினால் தண்டனை ஏற்படும். திருட்டுத்தனம் இருப்பர்கள். அல்லது பிறரின் மனைவியுடன் கூடி வாழ்வர்கள். இளமைக் காலங்களில் துன்பங்களை அனுபவிப்பர்கள்.
23) மூன்றாம் அதிபதி லக்கினத்தில் அல்லது பதினொன்றில் இருந்தால் சுயமாக சம்பாத்தியம் உள்ளவர்கள். மெலிந்த உடல் அமைப்புள்ளவர்கள். மூர்க்கத்தனம் , பிடிவாதம் உடையவர்கள். நோய் பாதிப்பு ஏற்படுத்தும்.
24) மூன்றாம் அதிபதி இரண்டில் இருந்தால் ஆசானவாயில் நோய் உண்டாகும்,உடல் பருமன் உள்ளவர்கள், பிற பெண்கள் மீதும் ,பிறரின் பொருட்கள் மீது விருப்பம் உள்ளவர்கள். முயற்ச்சி ஏதுவும் செய்யாதவர்கள்.
நான்கம் அதிபதி பன்னிரு பாவங்காலங்களில் இருக்கும் பலன்கள்
25) சுகாதிபதியான நான்கம் அதிபதி நான்கில் இருந்தால் ஆராய்ந்து அறியும் தன்மையுள்ளவர்கள். சாதுர்யம் உள்ளவர்கள், மக்களுக்குத் தலைமை தங்குவர்கள்,தனிமனித ஒழுக்கம் ,அன்பும் ,பெண்களிடத்தில் ஆசையுள்ளவர்கள், சுகபோக வாழ்க்கை அமையும்.
26) சுகாதிபதியான நான்கம் அதிபதி ஐந்தில் அல்லது ஒன்பதில் சுகவாழ்வும்,அனைவரிடமும் அன்புள்ளவர்கள்.ஆன்மீகத்தில் இடுபாடுள்ளவர்கள்,அபிமானம் உள்ளவர்கள், சுய சம்பாத்தியம் செல்வ வளமையும் பொருளும் உள்ளவர்கள்,
27) சுகாதிபதியான நான்கம் அதிபதி ஆறில் இருந்தால் பலதாயார்கள் உள்ளவர்கள், கோபம் உள்ளவர்கள், தீய காரியங்கள் பல செய்வர்கள், திருட்டுத்தனம் செய்வர்கள்.
28) சுகாதிபதியான நான்கம் அதிபதி லக்கினத்தில் அல்லது ஏழில் இருந்தால் பல உயர் கல்வி கற்பர்கள்,தந்தை வழி சொத்து பாதிக்கப்படும்.சபையில் ஊமையாக இருப்பர்கள்.
29) சுகாதிபதியான நான்கம் அதிபதி இருந்தால் எட்டில் அல்லது பன்னிரண்டில் இருந்தால் இன்பம் எனும் சுகவாழ்கை இல்லாதவர்கள். தந்தையால் சிறிது நலம் கிடைக்கும், தாயருக்கு அவமானம் ஏற்படும்.
30) சுகாதிபதியான நான்கம் அதிபதி பத்தில் இருந்தால் தாயருக்கு சுகமும்,அரசு வகையில் ஆதாயம், பொருள் /செல்வாக்கு அமையும், தன தர்மங்கள் செய்வர்கள்.
31) சதுர்த்தாதிபதி எனும் நான்கம் அதிபதி மூன்றில் அல்லது லாபத்தில் இருந்தால் எப்போதும் நோய் உள்ளவர்கள். பொருட்செல்வம் கிடைக்கும், கருணை அன்புடையவர்கள், சுயசம்பாத்தியம் செல்வம் /பொருள் உள்ளவர்கள்.
32) சுகாதிபதியான நான்கம் அதிபதி இரண்டில் இருந்தால் பூகழ் அடைவர்கள், அனைவரின் மீதும் அன்புடையவர்கள்,பிடிவாதம் உள்ளவர்கள். சுக வாழ்வில்லை, குடும்பபம் அமையும், போகியாகவும் இருப்பர்கள்.
பஞ்சமாதிபதி அதிபதி பன்னிரு பாவங்காலங்களில் இருக்கும் பலன்கள்
33) ஐந்தாம் அதிபதி ஐந்தில் இருந்தால் ஜாதகருடைய குழந்தைகள் ஆயுள் குறையும், மனதில் சஞ்சலம் ஏற்படும், தர்மங்கள் செய்வர்கள், அறிவாளியாக இருப்பர்கள்.
34) ஐந்தாம் அதிபதி ஆறாம் அல்லது பன்னிரண்டாம் பாவத்தில் இருந்தால் குழந்தைகளால் பகைமையுண்டாகும்.மரணகாலத்தில் செல்வ வவளமை கிட்டும். வெளியூரில் வாழ்வர்கள்.
35) ஐந்தாம் அதிபதி ஏழில் இருந்தால் நல்லொழுக்கம், நீதிதவறமை,உயரமன அழகன உடல் அமைப்புள்ளவர்கள், சுந்தரபுருஷன்,ஆண்மீக இடுபாடு உள்ளவர்கள்.
36) பஞ்சமாதிபதி அதிபதி ஆறில் அல்லது எட்டில் இருந்தால் குழந்தைகளுக்கு பாதிப்பும்,சுகவாழ்வுக்கு பாதிப்பும் ஏற்படும், கோபம் உள்ளவர்கள், செல்வ வவளமையுள்ளவர்கள்.
37) ஐந்தாம் அதிபதி ஒன்பதில் அல்லது பத்தாம் பாவத்தில் இருந்தால் அரசர்களுக்கு இணையான வாழ்க்கை அமையும். புகழ் பெற்ற குழந்தைகள் அமைவர்கள்.பல நூல்களை இயற்றுவர்கள்.புகழுரை கிடைக்கும். குலவிளக்காக இருப்பர்கள்.
38) பஞ்சாமாதிபதி லாபத்தில் இருந்தால் பண்டித்தியம் உள்ளவர்கள், அதிகாரமுள்ளவர்கள் நூலாசிரியர்கள்,வல்லமையுள்ளவர்கள்,பல புத்திரர்கள் அமையும். தனச் சேர்க்கை உள்ளவர்கள்.
39) ஐந்தாம் அதிபதி லக்கினத்தில் அல்லது மூன்றில் இருந்தால் சிறப்புடன் செயல் திறமைசாலி, லோபியாகவும் இருப்பர்கள்,
(அறுத்தகைக்கு கண்ணாம்புரியா அயலனெனில், சொல்வது வேறுனவே)
40) பஞ்சாமாதிபதி மாதுர்ஸ்தானத்தில் இருந்தால் வெகுநாட்களுக்கு தாயின் சுகம் பெறுவான்,தாய்வெகுநாள் வாழ்வர்கள்,திருமகளின் அருளாற்றவர்கள் நல்லறிவும், ஆயுந்திறனும் வல்லமையும் உள்ளவர்கள்,
ஆறாம் அதிபதி பன்னிரு பாவங்காலங்களில் இருக்கும் பலன்கள்
41) ஆறாம் அதிபதி ஆறில் இருந்தால் உற்றர் உறவினர் பகைமை ஏற்படும். வெளியாட்களுடன் நட்புறவு உள்ளவர்கள். வரட்டுகௌரவம் உள்ளவர்கள்.
42) ஆறாம் அதிபதி லக்கினத்தில் அல்லது ஏழில் அல்லது லாபத்தில் அல்லது இருந்தால் புகழுரையும்,பொன்&பொருள் தனகொன்று சுயமாக சம்பாத்தியம் உள்ளவர்கள். துன்பங்களை வெறுப்பர்கள்.
43) ஆறாம் அதிபதி எட்டில் அல்லது பன்னிரண்டில் இருந்தால் நோய் பாதிப்பு ஏற்படும், உயிர்களை துன்புறுத்துவர்கள்,பிறர் மனைவியை விரும்புவர்கள், ஞானிகளுக்கு துன்பம் தருவர்கள்.
44) ஆறாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் மரம் &விறகு, கல் & மண் தொடர்புடைய தொழிகள் செய்வர்கள், சண்டையினால் பாதிப்பும்,துன்பமும் ஏற்படும்.
45) ஆறாம் அதிபதி இரண்டில் அல்லது பத்தில் இருந்தால் சிவந்த கண்கள், பிடிவாதம் உள்ளவர்கள், குலத்தில் முக்கியமனவர்கள், வெளியூர் &வெளிநாட்டில் வசிப்பர்கள்,சுகபோக வாழ்க்கை அமையும்,தனது காரியங்களை திறமையுடன் விடமுயற்சியுடன் செயல்புரிவர்கள்.
46) ஆறாம் அதிபதி மூன்றில் அல்லது நான்கில் இருந்தால் முன்கோபம் உள்ளவர்கள். லோபித்தனமும்,பிறரை வெறுக்கும் தன்மையும்,நிலையாற்ற மனமும், செல்வம் உடையவர்கள்.
47) ஆறாம் அதிபதி ஐந்தில் இருந்தால் நிலையாற்ற மனநிலையுடையவர்கள், தனம், இறக்க குணம் உள்ளவர்கள், சுகம் உள்ளவர்கள், இனிய குணம் உள்ளவர்கள், தனது காரியங்களில் வல்லமை கொண்வர்கள்.
ஏழாம் அதிபதி பன்னிரு பாவங்காலங்களில் இருக்கும் பலன்கள்
48)ஏழாம் அதிபதி லக்கினத்தில் அல்லது ஏழில் இருந்தால் பிற பலர்பால் தொடர்பிருக்கும்,அவமானமும் ,துஷ்டத்தனமும் ஏற்படும், சமர்த்தியசலி, வீரம், வாதநோய் பாதிக்கும்.
49) ஏழாம் அதிபதி ஆறில் அல்லது எட்டில் இருந்தல் கணவன் & மனைவி பிரிவினையைத் தரும்.முன்கோபி, என்றைக்கும் சுக வாவில்லை.
50) ஏழாம் அதிபதி இரண்டில் அல்லது ஒன்பதில் இருந்தால் பல பெண்களைப் புணர்வர்கள்.முயற்றிசியுடையவர்கள், அரசுக்கு ஆலோசனை கூறுவர்கள், எப்போது சிறின்ப சிந்தனையாளர்கள்.
.51) ஏழாம் அதிபதி நான்கில் அல்லது பத்தில் இருந்தால் மனைவி தர்மபத்தினியாக இருப்பர்கள், இறக்க குணமும், நியாயமான முறையில் செயல்படுத்துவர்கள். பல்லில் நோய் பாதிப்பு ஏற்படுத்தும்.அல்லது வாயு தோடர்புடை நோய் ஏற்படும்.
52) சப்தமாதிபதி மூன்றில் அல்லது பதினொன்றில் இருந்தால் அதிக குழந்தைகள் கிட்டும் ,குழந்தைகளுக்கு ஆயுள் குறையும், நலமுடன் இருப்பபது பெண்குழந்தை, பின் ஆண்குழந்தை பிறந்தால் நலமுடன் இருக்கும்.
53) ஏழாம் அதிபதி பன்னிரண்டில் இருந்தால் தரித்திரம், லோபியாக இருப்பர்கள், மனைவிக்கு சோரபுத்திரம் உண்டாகும்,(கிரகங்களின் பலம் பலவீனம் அறிந்து கூறவும்) உணவு&ஆடைகளினால் தொழில் அமையும்,தீய செய்கை &எண்ணம் உள்ளவர்கள்.
54) சப்தமாதிபதி பஞ்சமத்தில் இருந்தால் பல கற்பனைகள் செய்வர்கள், அனைவரிடமும் அன்புடையவர்கள்,அதிக செல்வ வளமை உடையவர்கள்.
எட்டாம் அதிபதி பன்னிரு பாவங்காலங்களில் இருக்கும் பலன்கள்
55) அஷ்டமாதிபதி அஷ்டமஸ்தானத்தில் இருந்தால் திருட்டுத்தன்மை இருக்கும், எதிர்வாதம் செய்வர்கள், குரு& வயதில் முத்தவர்களுக்கு துன்பம் தருவர்கள். பிறரின் மனைவிகளிடம் சுகம் கண்பர்கள்.
56) எட்டாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் தீயவர்கள்,இறைவன் &இறைவி, குரு ஆகியோரை துன்புறுத்துவர்கள்,பிறரின் பொருட்கள்&மனைவிகளின் மீது ஆசைகொள்வர்கள்,பல மனைவி & மக்கள் உள்ளவர்கள், அல்லது குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மேலும் நாஸ்திகனாக இருப்பர்கள்.
57)எட்டாம் அதிபதி நான்கில் அல்லது பத்தில் இருந்தால் லோபியும்,உற்றார் & உறவினர்களை வெறுப்பர்கள்,தாய் & தந்தைக்கு ஆயுள் குறைவு, மனதில் குழப்பம் உள்ளவர்கள்.
58) எட்டாம் அதிபதி ஐந்தில் அல்லது லாபத்தில் இருந்தால் வம்ச விருத்தி இருக்காது, வீட்டில் பொருட்கள் ஏதுவும் இருக்காது, மனதில் சஞ்சலம் உள்ளவர்கள்.
59) எட்டாம் அதிபதி ஆறில் அல்லது பன்னிரண்டில் இருந்தால் தினமும் நோய் பாதிப்பு இருக்கும், நீர்நிலைகள் அல்லது விஷம் உள்ள உயிருள்ளவைகளால் பாதிப்பு ஏற்படுத்தும்.
60) எட்டாம் அதிபதி லக்கினத்தில் அல்லது ஏழில் இருந்தால் இரு மனைவிகள் அமையும், விஷ்ணுவுக்கு துரோகம் செய்வர்கள், அல்லது உடலில் புண்கள் (ரணம்) ஏற்படுத்தும்.
61) எட்டாம் அதிபதி இரண்டில் அல்லது மூன்றில் இருந்தால் செல்வ வளமை குறையும், பொருட்கள் தொலைந்து போகும்.துன்பம் அனுபவிப்பர்கள்.
ஒன்பதாம் அதிபதி பன்னிரு பாவங்காலங்களில் இருக்கும் பலன்கள்
62) பாக்கியாதிபதி பாக்கியஸ்தானத்தில் இருந்தால் பொன்னும் & பொருளும் &தானியம் முதலியவைகள் சிறப்புடன் கிடைக்கும். நல்ல சிந்தனையுடையவர்கள், அழகுடையவர்கள் பலசகோதரமும் சுகமும் உள்ளவர்கள்.
63) ஒன்பதாம் அதிபதி நான்கில் அல்லது பத்தில் இருந்தால் சிறந்த ஆலோசகர்கள், தலைமை தங்குவர்கள், தர்ம காரியங்கள் செய்வர்கள், புகழுடையவர்கள், சொல்வளம் உள்ளவர்கள், தனது கொள்கையை செயல்படுத்துவர்கள், கோபம் இல்லதவர்கள்.
64) நவமாதிபதி பஞ்சமத்தில் அல்லது லாபத்தில் இருந்தால் சிறந்த பாக்கியவன்கள், மக்கள் தலைவர்கள்,குரு & பெரியோர்களிடம் மரியாதை உள்ளவர்கள், தைரியம் & அன்பு & இறக்க குணம் உள்ளவர்கள்.
65) ஒன்பதாம் அதிபதி ஆறில் அல்லது எட்டில் அல்லது பன்னிரண்டில் இருந்தால் சௌபாக்கியாம் இல்லதவர்கள்,தாய்மாமன் உறவு இல்லாதவர்கள், வளர்பு சகோதரம் இல்லதவர்கள்.
66) பாக்கியாதிபதி லக்கினத்தில் அல்லது சப்தமஸ்தானத்தில் இருந்தால் நல்ல குணமுடையவர்கள்,புகழுடையவர்கள்,நிணைத்த காரியங்களை அடைய தடை ஏற்படும்.
67) பாக்கியதிபதி மூன்றில் அல்லது ஆறில் இருந்தால் எப்போதும் பொருட்களைப் பற்றியே கவலைகள் இருக்கும்,செவமும் ,நற்குணமும், உற்றர் உறவினர் உள்ளவர்கள்,அதீத காம உணர்ச்சி உள்ளவர்கள்.
பத்தாம் அதிபதி பன்னிரு பாவங்காலங்களில் இருக்கும் பலன்கள்
68) தசமாதிபதி நான்கில் அல்லது பத்தில் இருந்தால் ஞானம் /சுகம்/பாக்கியம் உள்ளவர்கள், குரு / தொய்வங்களை வணங்குவர்கள் அனைவரிடமும் அன்புடையவர்கள் தர்மத்தின் படி செயல்புரிவர்கள்.
69) பத்தாம் அதிபதி ஒன்பதில் அல்லது பதினொன்றில் பொருள் சேர்க்கையும், மக்கள், எப்பொழுதும் சந்தோஷம் சுகமும் உள்ளவர்கள், தர்மவனாக இருப்பர்கள்.
70)பத்தாம் அதிபதி எட்டில் இருந்தால் எப்பொழுதும் கவலை உள்ளவர்கள், பொருள், சுகவாழ்கையில் பாதிப்பு ஏற்படும், உடலில் நோய் பாதிப்பு ஏற்படும்.
71) பத்தாம் அதிபதி ஆறில் அல்லது பன்னிரண்டில் இருந்தால் பகைவர்களால் துன்பத்தை அனுபவிப்பர்கள், அறிவாளியாக இருப்பர்கள், எப்பொழுதும் சுகம் இல்லாதவர்கள்
72) பத்தாம் அதிபதி லக்கினத்தில் இருந்தால் காவிதை ஞானம் உள்ளவர்கள், நல்ல குணமும் அன்புடையவர்கள்,இளமையில் நோய் ஏற்படுத்தும்,பிறகு நலம் கிட்டும், பொன் பொருள் சுய. சம்பாத்தியம் உள்ளவர்கள்.
73) பத்தாம் அதிபதி இரண்டில் அல்லது மூன்றில் அல்லது ஏழில் இருந்தால் அழகனவர்கள்,நல்ல குணமுடைவர்கள்,வாக்கு வன்மை உடையவர்கள், நேர்மையாக அன்புடன் இருப்பர்கள்.
74) பத்தாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் தர்ம காரியங்கள் பல செய்வார்கள், ஞானவன்களுக் மரியாதை செய்வர்கள், இறைபக்தியும், பல தீர்த்த யாத்திரைகள் செய்வர்கள்.
பதினொன்றாம் அதிபதி பன்னிரு பாவங்காலங்களில் இருக்கும் பலன்கள்
75) லாபதிபதி லாபத்தில் இருந்தால் வாக்கு வன்மை பண்டித்தியம் உள்ளவர்கள், காவியம், கதைகள், கவிதை பல இயற்றுவர்கள். செல்வ வவளம் கிட்டும்.
76) லாபதிபதி ஆறில் அல்லது பன்னிரன்டில் இருந்தால் தீயவர்களின் நட்புறவு, அதீத காம உணர்ச்சி, பலர்பால் தொடர்பிருக்கும்,மனதில் தடுமாற்றம் ஏற்படும்.
77) லாபதிபதி லக்கினத்தில் இருந்தால் பொருளாதாரம் முன்னேற்றம், சாத்வீக குணமுள்ளவர்கள்,எதிர்காலத்தை அறிந்து திட்டம் இடுவர்கள்,நீதிமானாக இருப்பர்கள்.
78) லாபதிபதி நான்கில் அல்லது ஐந்தில் இருந்தால் சுகபோக வாழ்கை அமையும், மக்கட்செல்வம் சிறப்புடன் அமையும், சிறந்த சாதனையாளர்கள் காரியங்களில் வெற்றிபெறுவர்.
79)லாபதிபதி இரண்டில் அல்லது மூன்றில் தீர்த்த யாத்திகள் செல்வர்கள்,எல்லா காரியங்களில் வெற்றி கண்பர்கள், இளகிய மனம் உள்ளவர்கள் ,உஷ்ண நோய் பாதிக்கும்.
80) லாபதிபதி ஆறில் இருந்தால் அதிக சோகம் ஏற்படும், பிறரிடம் சண்டையிடுவர்கள், வெளியூரில் வாழ்வர்கள். பிறருக்கு தீங்கிழைப்பர்கள்
81) லாபதிபதி ஏழில் அல்லது எட்டில் இருந்தால் முன்கோபி,மூர்க்ககதண உள்ளவர்கள், அஅன்னியாரின் மனைவியிடே, அதிக காமம் உள்ளவர்கள்,
82)லாபதிபதி ஒன்பதில் அல்லது பத்தில் இருந்தால் அரசு வகையில் நன்மைகள் கிடைக்கும்.தனம்,சாதுர்யம், சம்பத்து தனது காரியங்களில் விருப்பம் உள்ளவர்கள். புகழ் பாராட்டும் கிடைக்கும்.
பன்னிரண்டாம் அதிபதி பன்னிரு பாவங்காலங்களில் இருக்கும் பலன்கள்
83) விரையாதிபதி ஆறில் அல்லது பன்னிரண்டில் இருந்தால் தாயரின் மரணத்தைக் குறித்து கவலை ஏற்படும், மூன்கோபம் உள்ளவர்கள், மக்கட்பேற்றினால் துன்பத்தை அனுபவிப்பர்கள்,பிறரின் மனைவியிடம் சிற்றின்பம் அனுபவிப்பர்கள்.
84) விரையாதிபதி லக்கினத்தில் அல்லது சப்தமத்தில் இருந்தால் கணவன் & மனைவி அன்னியோன்னியம் குறையும், உடல் பலவீனம், கபநோய் உள்ளவர்கள், சிறந்த கல்வியறிவு உள்ளவர்கள்.
85) விரையாதிபதி துவிதீயத்தில் அல்லது அஷ்டமத்தில் இருந்தால் விஷ்ணு பக்தி உள்ளவர்கள், இறக்க குணமுள்ளவர்கள்,இனிய சொல்வளம் உள்ளவர்கள், நற்குணம், நற்செயல் உடையவர்கள்.
86) விரையாதிபதி திருதீயத்தில் அல்லது நவமஸ்தனத்தில் இருந்தால் சுயநலவாதிகள்,மனைவி /மக்கள் / உறவினர் / குரு இவர்களிடம் பகைமை உள்ளவர்கள்.
87) விரையாதிபதி சதுர்த்தஸ்தானத்தில் அல்லது பஞ்சமத்தில் இருந்தால் செல்வ வளமையுள்ளவர்கள்,குழந்தைகள் தாயரிடம் விரோதமுள்ளவர்கள், லோபியும்,உறவினர் பகைமையுள்ளவர்கள்.
88) விரையாதிபதி தசமத்தில் அல்லது இலாபஸ்தானத்தில் இருந்தால் புத்திர பாக்கியத் தடைகள் ஏற்பத்தும்.பொன்/பொருள் /பாக்கியம் சிறிது கிடைக்கும்.
குறிப்பு ; இந்த நூலில் உள்ள பாவங்களின் பலனை ஆராய்து பார்க்கவும். திருக்கணிதப்படி கிரக ஸ்புடங்கள் / லக்கினம் முதல் பன்னிருபாவங்களின் ஸ்புடங்களை செய்து ஜாதகத்தின் ராசிசக்கரம் போலவே பாவசக்கிரமும் அமைத்து அதன் வழியில் பாவபலன்களை ஆராயிந்து தகுதியுள்ள பலன்களை கூறங்கள்.
தொகுப்பு
Comments
Post a Comment