குழந்தை பாக்கியம்

 குழந்தை    பாக்கியம்


குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்

மழலைச் சொல் கேளாதவர்

  குழந்தைகளின் சொல் அவ்வளவு இனிமையானது  அனைவருக்கும் ஜாதகத்தில் புத்திர பாக்கியம் அமைப்பைப் பார்ப்போம்.

             குரு பகவான் புத்திர பாக்யம் அருளும் புத்திரக்காரராக செயல்படுகிறார்.

         ஐய்தாம் அதிபதி மற்றும் குரு ஆகியோரைக் கொண்டு குழந்தைகளை பற்றி அறிய வேண்டும்.

            பலமுள்ள குரு ஐய்தாம் ஆதிபத்தியம் பெற்று லக்கினாதிபதியால் பார்க்கப்பெற குழந்தை உண்டு

                  சாதகமான நலம் செய்யும் கிரகங்களுடன் ஐய்தாம் அதிபதி அமர்ந்திட மக்கட் செல்வம் உண்டு.

        குரு ஐய்ந்தில் இருக்க லக்கினாதிபதி குருவைப் பார்த்தாலும், லக்கினாதிபதியும் நான்காம் அதிபதியும் ஒம்பதாம் அதிபதியும் பலம் பெற்றுக் கேந்திர, கோணங்களில் இருக்க பலம் பெற்ற ஏழாம் அதிபதி பார்த்தால் அதிக குழந்தைகள் பிறக்கும்.

         லக்கினாதிபதியும் ஏழாம் அதிபதியும் பலம் பெறுவது புத்திர விருத்திக்கு உதவியாகும்.

      ஒருவர் ஜாதகத்தில் புத்திரஸ்தானாதிபதி நீச்சம் பெற்று பகை வீட்டில் அமையப்பெற்று வக்கிரம் அடைந்திருந்தால் புத்த்திர பாக்கியம் அமைவதில்லை. 

       புத்திரஸ்தானாதிபதி சூரியனுடன் இணைவு பெற்று அஸ்தங்கம் ஆனாலும் புத்திர தோஷம் ஏற்படுகிறது புத்திர இழப்பு உண்டாகிறது.

      புத்திர ஸ்தானத்தில் ராகு, கேது, செவ்வாய், சனி, சூரியன் இருந்தாலும்  புத்திர தோஷங்கள் தரும்.

       ஐய்தாம் அதிபதியும், ஐய்தாம் வீடும் பாபகர்த்தி யோகத்தில் இருக்க, குரு பாவிகளுடன் தொடர்பிருந்தல் புத்திர இழப்பு ஏற்படும்.

                  சனி அல்லது புதன் வீடு ஐய்தாம் வீடாகி அவ்வீட்டதிபதி சனியுடன் இணைவிருந்தால் தத்துப் புத்திர யோகம் உள்ளவர்.

       குரு புத்த்திரஸ்தானத்தில் இருந்தாலும் புத்திரதோஷம். குரு ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் அதிக கெடுதி ஏற்ப்படுவதில்லை.

  ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகிய ராசிகள்  ஐய்ந்தாம் வீடகியிருந்தால் தடங்கல்கள் ஏற்படும்.

    கடகம் ஐய்தாம் வீடகி சனியிருந்தால் நிறைய புதத்திர பாக்கியம் அமையும்.

             ஐய்ந்தாம் அதிபதி ஆண்கிரகமாகி பெண் ராசியில் இருந்து, நவாம்சத்திலும் பெண் ராசியில் இருந்தால் பெண் குழந்தைகள் பிறக்கும்.

     புதன் ஐய்ந்தில் இருந்தால் பெண் குழந்தை பிறகக்கும்.புத்திர பாக்கியம் குறைவாக அமையும்.

    சூரியன், புதன், சனி இணைந்து 11-ல் இருந்தால் குழந்தை பாக்கியம் அமையும்.

    புத்திர ஸ்தானதிபதி, புத்திரகாரகன் நவாம்சத்தில் நின்ற ராசியாதிபதி  இவர்களின் திசா புத்தி  காலங்களில் குழந்தை பாக்கியம் அமையும்.

   கோச்சார குரு 2-5-7-9-11-ல் சஞ்சரிக்கும் போதும் குழந்தை பாக்கியம் அமையும்.

    புத்திரஸ்தானாதிபதியுடன் ராகு, செவ்வாய் இணைந்தால், பார்த்தால் கருச்சிதைவு ஏற்படும்.

    புத்திரஸ்தானம், புத்திரஸ்தானாதிபதி, புத்திர காரகன் இவர்களை சனி பார்த்தாலும், இணைந்தாலும் கருச்சிதைவு ஏற்படும்.

   சூரியன், செவ்வாய், குரு பெண் ராசியில் இருந்து,  சந்திரன், சுக்கிரன் பெண் ராசியில் இருதால் பெண் குழந்தைகள் அமையும்.

     அனைத்து கிரகங்கள் சனியின் தொடர்பில் இருந்தால் குழந்தை பாக்கியம் அமைவதில்லை. 

   கீழ் காண்ட ஜாதகத்தில் அனைத்து கிரகங்கள் சனியின் கடுப்பாட்டில் உள்ளது.

     சனி செவ்வாய் இணைந்து, செவ்வாய் சந்திரனை நான்காம் பார்வையும், குருவை எட்டாம் பார்வையும் பார்க்கிறர். சுக்கிரன் செவ்வாயின் வீட்டில், சூரியன் வக்கிரம் பெற்ற புதனுடன் குரு வீட்டில் இவருக்கு திருமணம் ஆகி பத்தாண்டுகள் குழந்தை பாக்கியம் அமைய வில்லை.

   மனைவி பிறிந்து வேறு திருமணம் செய்த பின் இரண்டு குழந்தை பிறந்துள்ளது.







Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்