கர்ம வினைப்பயன்
கர்ம வினைப்பயன்
(செயல்களும் , மறுபிறப்பும்)
இறப்பும் பிறப்பும்
நீ இறந்து போகிறாயா
கவலைப்படாதே
ஏனெனில் நீ,
மரத்திலிருந்து விழுகின்றபழத்தபழம் நீ
நீயும் ஒரு நாள் மரமாவாய் என்பதை
மறந்துவிடாதே
எந்த மண்ணில் விழ வேண்டும்
என்பதை மட்டும் உன் அறிவால்
முடிவு செய் !
இந்து சமயத்தில் கர்மம் அல்லது
வினைப்பயன் என்ற சொல்லுக்கு செயல் என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே, இந்து சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு 'கர்மா' சென்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை தமிழில் ”வினைப்பயன்” என்றும் கூறுவர்
ஒருவன் எப்படி நடந்துகொள்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்
யசூர் பிரகதாரண்யக உபநிடதம் 4.4.5
செயல்களும் மறுபிறப்பும் மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் உண்டான பிரபஞ்சம் சேகரிப்பதின் நோக்கம் , அவனது பலனை முழுவதுமாக அனுபவித்து தீர்க்க வேண்டும் என்பதால் மட்டுமே . மேலும் , அந்த பலன்களை அனுபவிக்க , அவருக்கு உடல் தேவைப்படுகின்றது என்பதினால் , அவனுக்கு கொடுக்கப்படுகின்ற அந்த உடல் , அவன் செய்த செயற்பலன்களின் அடிப்படையில் பிரபஞ்சத்தினால் பஞ்ச பூதங்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது . இதிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மை வெளிட்படுகின்றது . அதாவது , பல்வேறு உடற்கூறுகளுடன் , பலதரப்பட்ட உயிரினங்கள் இந்த பிரபஞ்சத்தில் காமுடிகின்றது . பிரபஞ்சத்தின் படைப்பில் இந்த ஏற்றத்தாழ்வுகளை அறியும் பொழுது , ஓரறிவுபடைத்த உயிரினம் ஆறுறிவு படைத்த மனிதன் வரை பலன்களை அனுபவிக்கும் பயன்களும் மாறுபடுகின்றது அவனை
அனைத்து வகைகளிலும் சிறப்பாகச் செயல்படும் மனிதனை படைத்த அதே பிரபஞ்சம் , கீழான மற்ற உயிரிங்களை படைக்க வேண்டிய அவசியமும் , அல்லது மனிதனிலேயே மிகவும் சந்தோஷ சூழலில் வாழும் ஒருவனையும் , அதிகத்துயரத்தை கொண்ட உஉடல் ஊணமுற்ற ஒருவனையும் படைக்கவேண்டிய அவசிபமும் இப்பொழுது புரிகின்றது .இந்த வேற்றுமைக்கு காராம் என் ? இந்த வேற்றுமைகளுக்கு உன்டன உண்மைக் காரணத்தை பிரபதசம் வெளிப்படுத்துகின்றது . அதுதான் , அவனவன் செய்த செயல்களின் பலனுக்கு ஏற்ப , அந்த பலன்களை அலுபவிக்க , அவனுக்கு உடல் கொடுக்கப்படுகின்றது .அந்த உடல் இந்தப் பிறவியில் , அவன் எந்த வகைப்பலன்களை ( வேண்டும் என்பதைப் பொருத்து , உடல் தேர்ந்தெடுக்கப் படுகின்றது . இந்தப் பிறவியில் அவன் மனிதனாகப் பிறந்து .
அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுதே இந்தப் பிறவியில் அவன் செய்கின்ற புதிய செயல்களுக்கு உண்டான பயன்களை , அவன் மீண்டும் அபவிக்க வேண்டி , அடுத்தப் பிறவி என்று ஒன்றை பலன்களின் அடிப்படையில் அதற்கேற்ற உடலைக் கொடுத்தால் தான் , அவள் அனுபவித்து கழிக்க முடியும் , இதில் அவாது கீழான பலன்களை அனுபவித்து தீர்க்க , கீழான மிருகங்கள் போன்ற பிறவி எடுத்து அவன் தீர்க்க முயளவேன்டும் . ஆனால் , அந்த மிருகப் பிறவியில் அவன் செய்யும் செயல்களில் பலன்களுக்கு பாவ புண்யங்கள் கிடையாது என்பதினால் , அவன் முற்பிறவியில் செய்த பாவத்னத மட்டுமே கழிக்க , அந்த மிருகத்தின் உடலை பயன்படுத்தி முடித்துவிட்டு , மீண்டும் அவன் சேமிப்பில் மீதி வைத்துள்ள பாவ புன்னியங்களின் அடிப்படையில் அவன் மற்றொரு உடல் எடுக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது . இவ்வாறு பிறவிச் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு மனிதன் பிறப்பதும் , இறப்பதுமாக சிக்கித்தாபிப்பதை தவிற்க வேண்டும். என்று தன்னைப்பற்றி முழுமையாக ஞானத்தை அறிந்த ஞானிகள் உபதோசிக்கின்றார்கள்.
கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினை தீர்மானிக்கின்றது. நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுதியே வினைப்பயன். இந்த வினைப்பயன், சஞ்சித கர்மம் (சேமித்த வினைப்பயன்), பிராரப்த் கர்மம் (செயல்படுகின்ற வினைப்ப்யன்) மற்றும் ஆகாமிய கர்மம் (வர இருக்கின்ற வினைப்பயன்) என மூன்று விதமாக பிரிக்கப்படுகிறது.
மூன்று செயல் பிரிவுகள் ஆசைகளின் உந்துதலினால் , மனம் போனபடி செயல்படுகின்ற மனிதன் , அந்த செயலின் நன்மை , தீமைகளை ஆராயாமல் செய்யும் , ஒவ்வொரு செயலுக்கும் , பலன் அளிப்பதற்காக , இந்த பிரபஞ்சம் அந்த செயல்களை மூன்று பிரிவுகளாக தன்னுள் பதியவைத்துக் கொள்கின்றது . மனிதனின் செயல்களை ( 1 ) சேமித்த செயல்பலன் , ( 2 ) செயல்படுகின்ற செயல்பலன் , மற்றும் ( 3 ) இனி வர இருக்கின்ற செயல் பலன் என மூன்று வகைகளில் இந்தப் பிரபஞ்சம் தன்னுள் சேமித்து வைத்துக்கொண்டு , அவனவன் செய்த செயல்களின் பலன்களை காலம் வரும் பொழுது , பலன்களுக்குத் தக்கபடி , அவனுக்கு தேவையான உடலைத் தேர்ந்தெடுத்து , அந்த பலன்களை அல்லது அவனை அனுபவிக்க வைக்கின்றது . இதில் இந்த மூன்று செயல் பிரிவுகளும் மனிதர்களுக்கு எப்படி பலன் அளிக்கின்றது என்பதை பார்க்கலாம் .
(1) சஞ்சித கர்மம் அல்லது சேமித்த வினைப்பயன் (சேமித்த செயல்பலன்)
இது நல்வினை மற்றும் தீவினை அனைத்தின் தொகுதி. வரும் பிறவிகளில் செயல்படப் போவது இவ்வினைப்பயனே. இந்தப் பிறவியில் இவ்வினைப்பயன் செயல்படாத நிலையில் உள்ளது. இதிலிருந்து ஒரு பகுதிதான் பிராரப்த கர்மமாக ஒரு குறிப்பிட்ட பிறவியில் செயல்படுகிறது
சேமித்த செயல்பலன் ஒருவன் தன்னுடைய முற்பிறவிகளில் செய்த செயல்களின் அடிப்படையில் , அந்த செயல்களுக்கு உண்டான பாவ , புண்ணியப் பலன்களை அவன் அந்தப் பிறவியில் அனுபவித்து கழித்ததுக் கொண்டிருக்கும் போது , அந்த உடலின் ஆயுட்காலம் முடிவடைந்து விட்டால் , அவன் மீதி வைத்துள்ள பலன்களையும் , அந்தப் பிறவியில் அவன் செயல் செய்து புதியதாக சேர்த்த பலன்களையும் அவன் அனுபவிக்க வேண்டும் என்பதால் , இந்தப் பிரபஞ்சம் அவைகளை தன்னுள் சேகரித்து வைத்துக்கொண்டு , அடுத்து வரும் அவனுக்கு அதை அனுபவிக் கொடுக்கும் .மேலும் , இந்தப் பிரபஞ்சமானது அவனது பலன்களுக்கு ஏற்ப உடலைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து , அவனை மீண்டும் பிறக்கவைத்து , அவனிடம் , தான் சேகரித்த பலன்களில் சிறிது மட்டுமே , இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுத்துவிட்டு , மீதமுள்ள பலன்களை அடுத்த அவன் எடுப்பதற்காக தன்வசம் வைத்துக்கொள்கின்றது . காரணம் , ஒரே பிறவியில் அந்த பலன்களை அவன் முழுவதுமாக அனுபவித்து தீர்க்க முடியாத அளவிற்கு செயல் பலன்கள் சேகரிக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை . இவ்வாறு , இவனது பலன்களை இந்தப் பிரபஞ்சம் தன்வசம் சேமித்து வைத்துள்ள செயல் பலன்களையே “ சேமித்த செயல்பலன் ” அல்லது “ சஞ்சித கர்மா ” என்று அழைக்கிறோம் .
(2) பிராரப்த கர்மம் அல்லது செயல்படுகின்ற வினைப்பயன் (செயல்படுகின்ற செயல்பலன்)
ஒரு குறிப்பிட்ட பிறவியில், அந்தப் பிறவிக்கு ஏற்ற வினைப்பயன்கள் மட்டும் செயல்படுகின்றன். அவ்வாறு ஒரு பிறவியில் செயல்படத் தொடங்கியுள்ள வினைப்பயனே இது.
செயல்படுகின்ற செயல்பலன் ஒருவன் தன்னுடைய பல்வேறு முற்பிறவிகளில் சேகரித்த பலன்களிலிருந்து , அவைகளை முழுவதுமாக அனுபவித்து தீர்க்க முடியாமல் , பல உடல்களில் , பல பிறவிகள் எடுத்தும் தீராத , சேமித்த செயல்பலன்களிலிருந்து , இப்பொழுது பிறந்துள்ள இந்தப் பிறவியில் அவைகளில் சிலவற்றை அனுபவித்து தீர்ப்பதற்காக , கொண்டுவருகின்ற அந்த செயல்பலன்களை “ செயல்படுகின்ற செயல்பலன் " அல்லது " பிராரப்த கர்மா ” என்று அழைக்கிறோம் . இந்த செயல்படுகின்ற செயல்பலனை அனுபவிக்க எத்தகைய பாவ , புண்ணிய பலன்களை அனைத்து உயிரினங்களும் , மனிதனும் இந்தப் பிறவியில் அனுபவித்து தீர்க்க கொண்டு வருகின்றதோ , அதற்கேற்பவே அவைகளின் வாழ்க்கை முறை இருக்கும் . உதாரணமாக , அதிகப் பாவப் பலன்களையும் , குறைவான புண்ணியப் பலன்களையும் , பலன்களாக ஒருவன் இந்தப் பிறவியில் கொண்டு வந்தால் , அவனது வாழ்க்கை , மிகுந்த துயரத்துடனும் , அதிகமான போராட்டத்துடனும் காணப்படும் . அவன் இந்தப் பிறவியில் என்ன நல்லது செய்தாலும் , அவைகள் , இனி வர இருக்கின்ற செயல்பலன்களில் சேர்ந்துக்கொண்டு , அவன் கொண்டுவந்த செயல்படுகின்ற செயல்பலன்கள் நடைமுறைப் படுத்தும் . அதனால்தான் அவன் இந்தப் பிறவியில் நல்லவனாக இருந்தும் துயரப்படுகின்றான் . படியே இதுபோல , அதிகப் புண்ணியப் பலன்களையும் , குறைவான பாவப் பலன்களையும் , பலன்களாக ஒருவன் இந்தப் பிறவியில் கொண்டு வந்தால் , அவனது வாழ்க்கை , மிகுந்த சந்தோஷத்துடனும் , அதிகமான உற்சாகத்துடனும் காணப்படும் . அவன் இந்தப் பிறவியில் என்ன கெட்டது செய்தாலும் , அவைகள் , இனி வர இருக்கின்ற செயல்பலன்களில் சேர்ந்துக்கொண்டு , அவன் கொண்டு வந்த செயல்படுகின்ற செயல்பலன்கள் படியே நடைமுறை படுத்தும் . அதனால்தான் அவன் இந்தப் பிறவியில் கெட்டவனாக இருந்தும் சந்தோஷமாக இருக்கிறான்
(3) ஆகாமிய கர்மம் அல்லது வர இருக்கின்ற வினைப்பயன் (வர இருக்கின்ற செயல்பலன்)
வினைப்பயனின் விளைவாக இப்பிறவி அமைந்தாலும், வினைப்பயன் அனுபவிக்கின்ற வேளையிலே புதிய வினைப்பயன்கள் சேர்கின்றன. இவ்வாறு ஒரு பிறவியில் சம்பாதிக்கின்ற வினைப்பயன் ஆகாமிய கர்மம் எனப்படுகிறது. இது செயலின் தன்மைக்கு ஏற்ப இந்தப் பிறவியில் பலன் தந்தாலும் தரலாம்: அல்லது, சஞ்சித கர்மத்துடன் சேர்க்கப்பவும் செய்யலாம்.
வர இருக்கின்ற செயல்பலன் இவ்வாறு , இந்தப் பிறவியில் , அவன் இந்த பூமிக்கு செயல்படுகின்ற செயல்பலனோடு வந்து அதை , அனுபவித்துக் கழித்துக் கொண்டிருந்தாலும் , இனி புதியதாக அவன் செய்யும் இந்தப் பிறவிச் செயல்களுக்கு வர இருக்கின்ற செயல்பலன் " அல்லது " ஆகாமிய கர்மா ” என்று அழைக்கிறோம் . இந்த ஆகாமிய கர்மா பகுத்தறிவு அற்ற உயிரினங்களுக்கு கிடையாது . அவைகள் பூமிக்கு வருவதே தன் வசம் மீதம் உள்ள பாவ , புண்ணிய பலன்களை கழிப்பதற்காக மட்டுமே . மீண்டும் அவைகள் சேமித்த செயல்பலன்களிலிருந்து மீதியையும் கழிக்க ன்னொரு உடல் எடுக்க வேண்டியது வரும் . இப்படி , ஏற்கனவே எடுத்த மனித உடல்களின் வாயிலாக , சேகரிக்கப்பட்ட சேமித்த செயல்பலன்கள் கையிருப்பு இருந்தும் , புதியதாக இந்தப் பிறவியில் சேகரித்த , இருக்கின்ற செயல்பலன்களையும் வர 25 சேர்த்துக் கொண்டால் , சேமித்த செயல்பலன்களின் அளவு கூடிக் கொண்டே போகும் .
கர்மங்களின் பலன்
வேதாந்த தத்துவத்தின்படி தீவினைகள் செய்தவர்கள், மறுபிறவியில் கீழ் உலகங்களில் உழன்று மீண்டும் பூமியில் இழி பிறப்பாளர்களாகவும், நல்வினைகள் செய்தவர்கள் சொர்க்கலோகம், பித்ரு லோகம் போன்ற மேலுலகங்களுக்குச் சென்று, நல்வினைப்பயன்கள் முடிந்தவுடன் மீண்டும் புவியில் உயர்பிறப்பாளர்களாகவும் பிறப்பர். தீவினைகள் மற்றும் நல்வினைகள் செய்தவர்களானாலும் பிறவிச்சுழற்சியில் இருந்து தப்பி, பிறப்பிலா பெருவாழ்வு அடைய இயலாது. பிறப்பிலா பெருநிலை என்பது, வாழ்வின் ஒரு குறிப்பிட்ட நிலையில் அனைத்து தீவினை மற்றும் நல்வினைப்பயன்களிலிருந்து விடுபட்டு, மனவடக்கம், புலனடக்கம்,தியாகம், தவம் போன்ற நற்குணங்களுடன் குரு மற்றும் மெய்யியல் சாத்திரங்களின் துணையுடன் ஆத்மாவை அறிந்து மன அமைதி பெறுதலே மரணமிலாப் பெருவாழ்வு நிலையாகும்.
தமிழ் இலக்கியத்தில் ஊழ்வினை அல்லது வினைப்பயன் செயல்
ஊழ் அல்லது ஊழ்வினை என்று தமிழ் இலக்கியம் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. திருவள்ளுவர் 'ஊழ்' (ஊழிற் பெரு வலி யாவுள?) என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். இளங்கோவடிகள் ஊழ்வினை என்ற சொல்லை கையாள்கிறார்.
அறிவியல் நோக்கு வினைச் செயல்
ஒன்றின் காரணமாக (வினை) இன்னொரு நேரடி நிகழ்வு (விளைவு) நிகழும் என்பதை வினை விளைவுக் கோட்பாடு குறிக்கின்றது. இது கர்ம கருத்துவுடன் ஒப்பிடப்படுவதுண்டு. ஆனால் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. உயிருக்கு ஒரு வாழ்க்கையில் கணிக்கப்படும் கர்ம வினைகள் அடுத்த வாழ்க்கையின் தரத்தை தீர்மானிக்கின்றன போன்ற கூறுகளுக்கு அறிவியல் நோக்கில் எந்த ஆதாரமும் இல்லை.
தொகுப்பு ;- சூரியஜெயவேல் 9600607603
மிகவும் அருமையான பதிவு -நன்றி ஐயா!
ReplyDelete