இல்வாழ்வில் கிரக ஜாலங்கள்

 இல்வாழ்வில் கிரக ஜாலங்கள்


பிறந்த தேதி 8-12-1968  

இவருக்கு லக்னத்திற்கும், ராசிக்கும் சனி ஒருவரே களத்திரதிபதியாக வருகின்றார்.

லக்னத்திற்கும் 6-இடம் ஆதிபத்தியம், ராசிக்கு 8-இடம்  ஆதிபத்தியம் வந்துவிட்டது.

களத்திர காரகன் சுக்கிரன் 6-ல் மறைந்தார்.சந்திரனுக்கு நேர் 7-ல் அமர்ந்து லக்கினத்திற்கும் ராசிக்கும் பாவியாகிய சுக்கிரன் தனது காரகத் தன்மையால் பல பெண்கள் புக இடமளித்து விட்டார்.

லக்னத்திற்கு 8-ல் 7-ஆம் அதிபதி சனி அமர்ந்து ராகு சேர்க்கைப் பெற்றார். செவ்வாயின் பார்வையும் பெற்று விட்டார். இதனால் பெண்ணால் பகை ஏற்பட இடமளித்து விட்டது.

சிம்ம லக்னத்திற்கும், கடக ராசிக்கும் ஏழாம் அதிபதியாக வரும் சனிக்கு அடிப்படையில் துர்ஸ்தானம் அமைந்துள்ளாது.

களத்திர ஸ்தானாதிபதி சனி அன்னி கிரகம் ராகுவோடு எட்டாமிடத்தில் உள்ளார்கள்.

சந்திரனுக்கு 7-ல் சுக்கிரன் காரகோபாவ நாஸ்தி ஏற்படுத்தி விட்டார்.

சிம்ம லக்னத்திற்கு 2-ல் இருப்பது இவர் பொய்த் தோற்றங்களால் ஏமாந்து போவார் .ஆசையே துன்பத்திற்கு காரணம். செயல்களிளும், சிந்தனைகளிளும், உணர்வுகளிளும் பலவீனம் வெளிப்படும்.

சுக்கிரன் 6-ல் இருப்பது எதிரிகளின் வாலாட்டம் அதிகம். சூல்ச்சி எல்லாம் இவர் கண் முன்னே தாண்டவமாடும், அதைத் தடுக்க இவருக்கு சக்தி இருக்காது. 


ஊன்றா தேழில் இரண்டினில் பாவர்கள் உறவேதான்

கூன்றான் இரண்டே ழுக்கிறைவ ரும்புகரும் குலமாதே 

தோன்றாப் பாவிகள் வர்க்கம் தடையிற் றுடராக

மூன்றாம் களத்திரம் உண்டாம் எனவே மொழிவீரே

  2-7-ஆம் வீடுகளில் பாவர்கள் அமர்ந்திருக்க, 2-7-ஆம் அதிபதியும், சுக்கிரனும் சேர்ந்து பாவர்களின் வீட்டில் இருந்தாலும் ஜாதகருக்கு மூன்று மனைவிகள் அமைவர்கள். 

இவருக்கு 18-வயதில் 25-வயதுள்ள பெண்ணின் வீட்டார் இவரை கடத்திச்சென்று கட்டாயப் படுத்தி திருமணம் செய்துவிட்டார்கள்.நான்கு மாதத்திற்குள் தப்பித்து வந்து கோர்ட் மூலமாக விவாகரத்து பெற்று பின் இவருடை ஸ்தாபனத்தில் சம்பளம் பெறுபவள் சில இட்களை வைத்து இவரை கடத்திச் சென்று அவள் தந்தை, தாய், தம்பி மூவரும் கையெழுத்திட்டு ரிஜிஸ்டர் திருமணம் செய்துள்ளர்கள்.

முறைபடி கோர்ட் மூலமாக விவாகரத்து பெற்று பின்

நான்கு  வருடம் கலித்து முறைப்படி திருமணம் நடந்தது. நிம்மதியுடன் வாழ்ததார்.

தொகுப்பு 

சூரியஜெயவேல் 9600607603 

நன்றி ஜோதிட தாமரை



Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்