ஜோதிடத்தில் சுக்கிரன்
ஜோதிடத்தில் சுக்கிரன்
சுக்கிரனின் சமஸ்கிருத பெயர் "சுக்ரா", என்றால் "விந்து" என்று பொருள்படும் .!
சுக்கிரன் இயற்கை சுபர் நன்மை தரும் கிரகம் மற்றும் குருவாகவும் கருதப்படுகிறது.சுக்கிரன் ஆளும் கிரகம்.சிற்றின்பம் மற்றும் அன்பின் உருவகம், காதல், அழகு, சிற்றின்பம், பாலியல் இன்பங்கள் மற்றும் பேரார்வம் சுக்கினின் ஆளுமையில் உள்ளது.
செல்வம் மற்றும் இணை உறவுகளை நிர்ணயிப்பதில் சுக்கிரன் மிகவும் முக்கியமானவர். திருமணத்தையும் குறிக்கிறது. நல்ல மனைவியைப் பெறும் திறன். ஒரு வசதியான வீடு, ஆடம்பரங்கள், தரமான கார்கள், தளபாடங்கள் மற்றும்.சாதனங்களும் சுக்கிரனின் கட்டுப்பாட்டில் உள்ளன. வியாழனைப் போலவே, சுக்கிரனும் செல்வத்தையும் பொருள் செழிப்பையும் தருகிறது,
சுக்கிரன் பெரும்பாலும் ஆன்மீக பண்புகளை விட பொருளில் கவனம் செலுத்துகிறார், பொருள் திறனைக் கொண்டிருக்கிறது.
கலைஞர்கள், நடிகர்கள், இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் கவிஞர்கள். கிடைக்கக்கூடிய சிற்றின்ப விஷயங்களில் ஒரு வாழ்க்கையை கையாளுபவர்கள்
உடல் உடலில், இது இனப்பெருக்க அமைப்பு, சிறுநீரகங்கள், கண்கள், கன்னங்கள், கன்னம் மற்றும் தொண்டை ஆகியவற்றை ஆளுகிறது. இயற்கையில் அது குறிப்பாக பூக்கள், நகைகள் மற்றும் வெப்பமண்டல இடங்கள் மீது .
ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருக்கும்போது, அழகனவர்களாகவும் , அன்பானவையாகவும், கவர்ச்சியாகவும் இருக்கலாம், மற்றவர்களை ஒரு உணர்வோடு ஊக்குவிக்க முடியும்.
மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வு. செல்வத்தையும், நீடித்த மற்றும் அழகான முகத்தையும் உடலையும் தருகிறது. இது பரஸ்பர ஈர்ப்பை ஏற்படுத்துகிறது
எதிர் பாலினங்களுக்கு இடையில். சுக்கிரன் மற்றவர்களிடம் மிகுந்த அக்கறையுடன், மென்மையான மற்றும் மென்மையான தன்மையை அனுகுமுறையை தருகிறது. இவர்களைச் சுற்றி. சிறந்த நகைகள்,
அழகான உடைகள்,ஆபரணங்கள் மற்றும் வாசனை திரவியங்களுக்கு
முக்கியத்துவம் கொடுப்பார்கள். முக்கிய முக்கியமாக பணக்கார மற்றும் சுவையான உணவுகளை அனுபவிப்பார், மேலும் நுண்கலைகளில் ஆசையுடையவார். இருப்பார்கள்.கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் அல்லது கவிஞர்களாக மாற உத்வேகத்துடன் செயல்புரிவர்கள். உண்மையைத் தேடுவோராகவும் இருப்பார்கள். தெளிவற்ற, அல்லது ரகசிய அறிவியலின் அறிவு. வெளிப்பாடு, பாராட்டு மற்றும் பாசத்தின் குணங்கள் வெளிப்படையானவர்கள் நன்கு பலம்கொண்ட சுக்கிரன் உள்ளவர்களுக்கு அமையும்.
ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாகவோ அல்லது நீச்சமாகவோ. சுக்கிரன் பகை நீச்ச வீட்டில் இருந்தால் : வாய்க்கும் கணவன் ( அ ) மனைவி கருத்து ஒத்துப் போகாமல் தர்க்கம் செய்து கொண்டே , காலத்தை ஏற்றத் தாழ்வு பாதையில் கொண்டு செல்லுவார்கள் .
திருமணத்தில் பிரச்சினைகள் பெரும்பாலும் ஏற்படுகின்றன. உடலில் குறைபாடு இருக்கலாம்.
ஒரு ஜாதகத்தில் , லக்னம் எதுவானாலும் அதில் சுக்கிரன் " அஸ்தங்கம் பெற்றோ " அஸ்தமனமாகியோ வக்ர கதியிலோ , இருந்தால் ஜாதகருடைய திருமணம் தடை பட்டுக் கொண்டே 35 வயது வரை எட்டிவிடும் . அதன் பிறகு வெகு பிரயாசைப்பட்டு திருமணம் நடைபெறும் ' விகம் கெட்டு இருக்கும் சுக்கிரனின் தசாபுத்திகள் நடந்தால் பாதிப்பை தரும் ,
உடல் அழகு, அத்துடன் கருணை மற்றும் கவர்ச்சி. அன்பு மற்றும் பாசமின்மை ஆகியவற்றுடன் உணர்வற்ற தன்மையைக் காணலாம்.
பலவீனமான சுக்கிரன் கரடுமுரடான மற்றும் மோசமான நடத்தைக்கு வழிவகுக்கும். காதல் விவகாரங்கள் கொந்தளிப்பானதாகவும் குறுகியதாகவும் காணப்படும்.உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமம் இருப்பதாகத் தெரிகிறது.ஆண்களில், பெண்களுடனான உறவில் பாதிப்பும் மற்றும் பெண்களில், பெண்பால் குணங்கள் இல்லாததைக் காணலாம்.உடல் ரீதியாக பலவீனம், பலவீனமான சிறுநீரகங்கள் மற்றும் இனப்பெருக்க அமைப்பு அல்லது மலட்டுத்தன்மையை கூட ஏற்படுத்தக்கூடும். ஆற்றல் குறைவாக இருக்கலாம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலமும் பலவீனமாக இருக்கலாம். நாள்பட்ட சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் வெளிப்படும். உடல் இயலாமை. கட்டுக்கதையாக செயல்புரிவர்கள்.
சுக்கிரன் வலிமையாக இருந்தாலும், விரும்பத்தகாத செயல்களைத் தரும் , உடலுறவில் அதிகப்படியான உணர்வை ஏற்படுத்தக்கூடும், சாப்பிடுவது அல்லது குடிப்பது, அதிகமாகும்
சுக்கிரனின் காரகமே ஒவ்வொருவருக்கும் , பெண்ணக்கும் இன்றியமையாததாக அமைகிறது . எனவே ஒருவருக்கு மனைவி கணவன் நல்ல விதத்தில் அமைவதற்கு , அவருடைய ஜாதகத்தில் " கக்கிரன் " நல்ல விதத்தில் அமைய வேண்டும் . ஆனால் 6 , 8 , 12 – ல்
மறையக்கூடாது . 4 , 7 , 10 ஆகிய கேந்திரத்தில் நின்று கேந்திர தோஷம் பெறக்கூடாது . பகை நீச்சமும் பெறக்கூடாது .
சுக்கிரனும் ஏழாம் அதிபதியும் தங்களுக்குள் 6 – 8 – 12 – வீடுகளில் இருந்தலும், சஷ்டஷ்டாமாக இருந்தால் திருமணவாழ்கை பாதிக்கும்.
ஆணிகளின் ஜாதகத்தில் சுக்கிரனும் ஏழுக்குடையவரும் ஆறாம் வீட்டில் சேர்ந்திருந்தால் சிறப்பன பெண்களை திருமண செய்துவைத்தாலும் வாழ்கையை வாழத் தொரியாதவர்கள்.
லக்கினத்திற்கு 2 – 11 – ஆம் வீடுகளில் ஒன்றில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக்கு லட்சுமி கடாச்சம் கிடைக்கும்.பல தெய்வ காரியங்களில் இடுபாடுவர்கள். சுபகாரியங்களுக்கு உதவிகள் செய்வார்கள் பூர்வீகத்தால் வாழ்கை வளமுடன் அமையும். இவர்களுக்கு முற்கால வாழ்க்கையைவிட பிற்கால வாழ்கையே பி பல யோகத்தை அனுபவிப்பர்கள்.
“கண்டசன்மங்கேந்திரற்காணுமைந்தெட்டொன்பதனில்
பண்டே சோமன் புகரிருக்கப்பாரி தனக்குமறுபுருடன்
கொண்டே விடுத்துச் சீவனமாய்க் கொள்வன் கூறும்புவி யோர்க்குக் கெண்டை விழியின் பார்வையினாற்கிட்டியணை யுந்தனதானே “
(இ-ள்) ஆண் ஜாதகத்தில் 1-5-7-8-9-ஆம் வீடுகளில் ஒன்றில் புகர் எனும் சுக்கிரனும் சோமன் எனும் சந்திரனும் சேர்ந்திருந்தால் ஜாதகர் மனைவியை வேறு ஆண்களுடன் சேர்த்துவிட்டு அதனால் வரும் வருமானத்தை பெற்று ஜீவனம் செய்வார்கள்.
“ கண்ணுடையத் தானும் கற்புடைய கவியத்தானும்
பெண்ணுடையத் தானும் பெரும் பலமாய் நிற்கில்
எண்ணிய ஜாதகருக்கு ஏக பெண்ஜாதியாமே
(இ-ள்) இரண்டாம் அதிபதியும், ஏழாம் அதிபதியும் பலம் பெற்றிருக்கக களத்திர காரகன் எனும் சுக்கிரனும் பலம் பெற்றிருந்தால் ஜாதகருக்கு ஏக தாரம் ஒரே மனைவி மட்டுமே அமையும்.
சுக்கிரளிள் நட்சத்திரங்கள் பரணி, பூரம் , பூராடம் ஆகும்.
நண்பர்கள் புதன் மற்றும் சனி; சூரியனும் சந்திரனும் எதிரிகள் மற்றும் செவ்வாய் மற்றும் வியாழன் நடுநிலை,
சுக்கிரன் வியாழனை நோக்கி விரோதமாக இருந்தாலும் நன்மைகளைத் தருவர்கள்.
சுக்கிரன் , சூரியனைத் தன் ஆட்சி வீடான துலாத்தில் நீச் சம் பெறச் செய்கிறது . அதே சமயத்தில் , தன் நட்பு கிரகமான சனிக்கு அவ்வீட்டில் உச்சத்தைத் தருகிறது .
கேதுவைத் தன் ஆட்சி வீடான ரிஷபத்தில் நீசம் பெறச் செய்கிறது . சந்திரனை அவ்வீட்டில் உச்சம் பெறச் செய்கிறது . ( ராகுவிற்கு , ரிஷப வீடு நீச்ச வீடான போதிலும் , அவ்வீட்டதிபதி சுக்கிரன் ராகுவிற்கு நட்பு கிரகம் என்பதால் அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை அனைவரின் அனுபவ மூலமாகக் கண்ட உண்மையாகும்
, சுக்கிரன் , தானும் , தன்னுடைய நட்பு கிரகமான புதனுடைய உச்ச வீடான கன்னியில் நீசம் பெற்று , அதற்குப் பிரதிபலனாகத் தனது உச்ச வீடான மீனத்தில் புதனை நீச்சம் பெறச் செய்கிறது .
சுக்கிரன் சூரியனுடன் இணைந்திருந்தால் விபரம் விவாகம் பாதிக்கும் லக்கினத்தில் இரண்டில் ஏற்பட்டால் ருத்திர வியாதி ஏற்படும் சூதாட்டத்தில் பொருவீட்டுபவராக இருப்பார் .
ஜாதகத்தில் சூரியனும் புதனும் கூடி இருக்கும் ராசி வீட்டில் , அக்கிரகங்களுடன் சுக்கிரன் சம்பந்தப்பட்டால் , கல்வி இடையில் தடைபட்டு மீண்டும் தொடரும் வாய்ப்பினை கக்கிரன் ஏற்படுத்தும் .
தேய்பிறைச் சந்திரனைச் சுக்கிரன் நட்பாகக் கொள்ளுகின்றார். சந்திரனைச் சுக்கிரன் பார்க்கலாமே தவிர ,சுக்கிரனைச் சந்திரன் பார்க்கக் கூடாது . அவ்விதம் தேய்பிறைச் சந்திரனின் பார்வை சுக்கிரனுக்கு ஏற்பட்டால் அவருடைய களத்திரம் தெறி தவரும் பாதையில் இருப்பார் என்றும் தேய்பிறைச் சந்திரலைவராக - இருந்தால் ,ஜாதகரும் அவருடைய களத்திரமும் தனித்தனியோ (அல்லது ) இருவரும் இணைந்தோ சின்றின் சுகத்தில் மூழ்கி எழுவர்கள் . வாழ்வில் பாதிப்பை தரும்.
சந்திரனுக்கு 4 , 7 , 10 ஆகிய கேந்திரத்தில் , சுக்கிரனும் , புதனும் , இருந்தால் அந்த ஜாதகர் , நிச்சயமாக ஒரு பட்டதாரியாக இருப்பார்கள்.
, சுக்கிரன் , புதன் இணைந்திருந்தாலும் ஒருபட்டதாரியே ( அ ) அதற்குச் சமமான அந்தஸ்து பெற்றவார்கள் .
“ மாலுடன் வெள்ளி சேர்ந்தால் " மதிநுட்பம் பெருகுமன்றே “
ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் இணைந்திருந்தால் பிருகு மங்கள யோகம் எனப்படும் . இதன் பலன் கணவன் - மனைவியின் உறவு . அன்பு கலந்ததாகி , வளமான வாழ்வு அமையும் . மனைவி ( அ ) கணவருடைய உறவினர்களால் பாராட்டப்படுவார்கள் . ஆனால் இந்த சேர்க்கை லக்கினத்திற்கு ஏழில் பன்னிரண்டில் இருந்தால் , நேர் எதிரிடையான பலன்களே ஏற்படும் .
சுக்கிரன் - மற்ற இரு சுபர்களான குரு புதன் ஆகியவர்களு டன் கூடி 1 , 5 , 9 ஆகிய திரிகோணங்களில் இடம் பெற்றால் ஜாதகர் பிரபல ராஜயோகம் உடையவர்கள்.
.' ' விரவு திரிகோணங்களாம் ஐந்தொன்பானில்
வெள்ளி புதன் குருவிருக்கில் வெருபலன் உண்டாம்
சுக்கிரன் ஆட்சி பெற்றால் ஜாதகர் நிச்சயம் கவிஞனாவான் என்பது சோதிட சாஸ்திர உண்மையாகும் . சந்திரனுக்கு 12ல் சுக்கிரன் இருந்தால் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளனாக , எழுத்துத் துறையில் பேரும் புகாழும் ஏற்படும் . இது " அனபா யோகம் எனப்படும்.
குருவுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால் ஜாதகரின் மனைவிக்கு பலவிதமான கஷ்ட நஷ்டங்கள் ஏற்படுத்தும். மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இறுதி வரையில் வாழும் சூழ்நிலை ஏற்படுத்தும். அனைத்து வசதிகள் இருந்தாலும் காலா காலத்தில் அனுபவிக்க முடியாது.திருமணமும் தடைபடும்.
ராகுவுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால் ஜாதகர் ஏதாவது ஒரு துறையில் உலகப் புகழும் பேறும் அடைவர்கள். அரசியல் யோகம் கிட்டும். திருமண வாழ்வில் சச்சரவு ஏற்படுத்தும்.
பெண்களின் ஜாதகத்தில் குரு சுக்கிரன் சேர்க்கை யோகத்தை தரும்
சனியுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால் ஜாதகருக்கு பெண்களால் கௌரவம் பாதிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும்.
சுக்கிரன் ஆண் ராசிகளில் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம்,தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் இருந்தால் பெறும் புகழுடன் வாழக்கை அமையும். மனைவிக்கு தேவையானவைகளை வாங்கித்தருவார்கள்.
கன்னி ராசியில் சுக்கிரன் இருக்க பிறந்த ஆண்களுக்கு மேலே கண்ட பலன்களை அமையும்.
சுக்கிரன் பெண் ராசிகளில் ரிஷபம், கடகம்,விருச்சிகம், மகரம், மீனம் ராசிகளில் இருக்க ஆண் ஜாதகர்க சாதாரண வாழ்கை அல்லது போகம் நிறைந்த வாழ்கை அமையும்.
பெண்களின் ஜாதகத்தில் பெண்ராசிகளில் சுக்கிரன் இருந்தால் சிறப்பான வாழ்கை அமையும் ஆண்ராசிகளில் சுக்கிரன் இருந்தால் பாதிப்பைத் தரும் .
Comments
Post a Comment