பஞ்ச பூதத்தின் இயக்கம்

 பஞ்ச பூதத்தின் இயக்கம் 

    ஓங்காரத்தை ( சக்தியின் பிராவகம் விநாயகர் என்றும் , ஒங்காரத்தின் உட்பொருளாக பிராணன் ( விஷ்ணு , உயிர் , காற்று உள்ளது . மலர்ந்து ) " ஓங்காரம் " ( அ , உ , ம் ) இரு மேல் , கீழ் நிலைகளுக்கு இடையில் பிரம்மத்தில் தொடங்கி , பிராணனை தன்னுள் ஈர்த்து , பிரணவநாதனாகவும் , ( உயிராக பிரம்மத்துகளுடன் இணைந்து பிரணவப் பொருளாகவும் உலகை வலம் வருகிறது . ஓங்காரம் ஆகாயம் வரை செல்லும் பொழுது , பஞ்ச பூதங்கள் இணைக்கப்படுகிறது . காலம் ( ஆகாயம் ) என்பது வெற்றுத்தாள் . அதில் பிரம்மம் என்பது நிறைபொருள் . அக்னி என்பது நிறையை மாற்றும் பொருள் . பிராணனால் பிரம்மம் பிரம்ம துகளாகி , பிரம்மத்துகள் அக்னியுடன் இணையும் பொழுது நெருப்பாகிறது . நெருப்பு எல்லா காரணமாகிறது . ஆற்றல்களுக்கும் மாறுதல்களுக்கும் பிரம்மம் அமைதியாக இருந்தாலும் , எல்லா விளையாட்டு களுக்கும் , வினைகளுக்கும் மூலப்பொருளாகவும் மூலமாகவும் உள்ளது . பிரம்மம் விஷ்ணுவுடன் இணைந்து வியாபிக்கிறது , விஸ்வரூபம் எடுக்கிறது . ரஜோ குணமாக பிரம்மம் சிவனுடன் இணைந்து சாத்வீக குணமாகிறது . பிரம்மம் சக்தியுடன் இணைந்து முரட்டுதனமாகவும் மாறுகிறது . தமோ குணமாகவும் இயங்கும்.

      உணர்வினுருவாய் நிலமும் , உணர்வினுருவாய் , மயக்கமாய் நீரும் , உணர்வினுருவாய் ஸ்பரிசமாய் காற்றும் , உணர்வினுருவின் தூண்டுதலாய் நெருப்பும் , உணர்வினுருவில் சுழலும் சக்கரத்திற்கு காரணமாய் ஆகாயமும் என பஞ்ச பூதங்களும் , உணர்வாய் இருப்பது ஜீவன் . உணர்வின் தாயாய் , தாகமாய் இருப்பது சிகப்பு வட்ட சந்திரன் ( சிவசக்தி ) , உணர்வுக்கு அதிபதியாய் இருப்பது சந்திரன் ( சிவன் ) , உணர்வின் தொகுப்பாய் இருப்பது பௌர்ணமிசந்திரன் ( சதாசிவம் ) , உணர்வின் விளையாட்டாய் , சுழற்சியாய் இருப்பவர் சூரியன் ( ஆதிபராசக்தி ) உணர்வை சுமப்பவரும் எங்கும் கொண்டு செல்பவர் வாயு பகவான் ( விஷ்ணு ) , உணர்வின் அறிவாய் , உயிராய் , இருப்பவர் பிராணன் ( மஹா விஷ்ணு , ) உணர்வற்று காந்தமாக இருப்பவர் பிரம்மா உணர்வை உடலுக்குள் ஊடுருவச் செய்பவர் பிரம்மம் , உணர்வற்று அதிர்வாக , அகிலமாக இருப்பவர் பரப்பிரம்மம் மனம் என்ற ஒன்று இல்லையெனில் உணர்வு என்ற நிகழ்வை , உணர்வு என்ற ஊறுதலை நிர்வாகம் செய்ய முடியாது

    உயிரில் காற்று , நீர் , நெருப்பு பிரிக்க முடியாததாக உள்ளது . உயிர் தன்னில் குறைவு ஏற்படும் பொழுது குறையை நிலாத்தி செய்ய சுவாசத்தின் மூலம் காற்றையும் பசியின் ( உணவின ) மூலம் நெருப்பையும் , தாகத்தின் ( நீரின் ) மூலம் நீரையும் எடுத்து சுழிமுனையில் ( ஆகாயத்தில் ) நெற்றி பொட்டில் உயிராக இயங்குகிறது . உடம்பானது உயிரால் இயங்குகிறது . உயிரானது அ , உ , ம் என்ற ஒலியால் இயங்குகிறது , " அ " என்பது பசியாகவும் ஆ என்பது உணவாகவும் , உ என்பது ஆகாயமாகவும் , ஊ என்பது காற்றாகவும் , " ம் " என்பது நெருப்பாகவும் மமம் என்பது நீராகவும் , " அ , உ , ம் " என்ற ஒலியில் உயிரும் , உயிரின் ஓசையில் பஞ்ச பூதங்களும் இயங்குகிறது , இந்த மூன்று விதமான சப்தத்தையே திரிசங்கு என்கிறார்கள் . முதல் சங்கு உடல் உருவாவதற்கும் ( பிறப்பு ) , இரண்டாவது சங்கு இருநிலையான உடல்கள் இதயங்களில் இணைவதற்கும் ( வாழ்க்கை ) , மூன்றாவது சங்கு ஓர் நிலைப்படுதலுக்கும் , முடிவு , வாழ்க்கையின் அனுபவ முடிவிற்கும்  உரியது ,


தொகுப்பு சூரியஜெயவேல் 9600607603 







Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்