கிரக ஆதிபத்யங்கள்

 கிரக ஆதிபத்யங்கள் : 

 ஸ்தானப் பிரிவுகள்

   லக்னத்திற்கு 1 , 5 , 9 , -ஆம் இடங்கள் - திரிகோண ஸ்தானங்கள் 

   1 , 4, 7 , 10 , -ஆம் இடங்கள் - கேந்திர ஸ்தானங்கள் 

     2 , 5 , 8 , 11 - ஆம் இடங்கள் - பணபர ஸ்தானங்கள் 

     3 , 6 , 9 , 12 , -ஆம் இடங்கள் - ஆபோக்லீம ஸ்தானங்கள் ஸ்தானங்கள் 

    3 , 6 , 10 , 11 , -ஆமிடங்கள் - உபஜெய ஸ்தானங்கள்.

     3 , 6 , 8 , 12 , -ஆமிடங்கள் மறைவு ஸ்தானங்கள்

கிரகபலம் 

     நட்பு , ஆட்சி , உச்சம் பெற்ற கிரகங்கள் நன்மை செய்வதிலும் சரி , தீமை செய்வதிலும் சரி பலமுடையவர்களாவார்கள் . பகை , நீச்சம் பெற்றவர்கள் பலங்குன்றியவர்களாவார்கள் . 

       நீச்சம்பெற்ற கிரகம் வக்ரம் பெறின் அதிக பலம் பெறும் ; உச்சம் பெற்ற கிரகம் வக்ரம் பெறின் பலமிழந்து விடும் .

    5 , 9 - ஆம் அதிபதிகள் சுபராயினும் , பாபராயினும் விசேஷ நற்பலன்களையே அளிப்பார்கள் . அதிலும் ஐந்தாம் கோணாதிபதியைவிட , ஒன்பதாம் கோணாதிபதி நற்பலன்களை அளிப்பதில் வலியவராவார் . ஆயினும் மேற்படி கோணாதிபத்யம் பெற்றவர் , கூடவே துர் ஆதிபத்யமும் பெற்றிருந்தால் மத்திம பலன்களையே கொடுப்பார் .     

   அஸ்தமனம் பெற்ற கிரகங்கள் பலமற்றவர்களாவார்கள் . 

    1 , 4 , 5 , 7 , 9 , 10 - ஆமிடங்கள் சுபஸ்தானங்கள் எனப்படும் . 2 , 3 , 11 - ஆம் இடங்கள் மத்திம ஸ்தானங்கள் எனப்படும் . 6 , 8 , 12 - ஆம் இடங்கள் துர்ஸ்தானங்கள் எனப்படும் . 

    நன்மை செய்யக் கூடிய கிரகம் துர் ஸ்தானங்கள் நீங்கலாக எங்கு நிற்பினும் நற்பலன்களையே கொடுக்கும் . துர்ஸ்தானங்களில் நிற்பின் மத்திம பலன்களைக் கொடுக்கும் . 

    கெடுதல் செய்யக்கூடிய கிரகம் துர்ஸ்தானங்கள் நீங்கலாக எங்கு நிற்பினும் மத்திம பலன்களைக் கொடுக்கும் . துர்ஸ்தானங்களில் நிற்பின் மிகக் கெடுதல்களையே செய்யும் .

    சுபாவ சுபர்கள் சுபஸ்தானங்களில் நிற்பின் சிறப்பான பலன்களைக் கொடுக்கும் . துர்ஸ்தானங்களில் நிற்பின் மத்திம பலன்களையே கொடுக்கும் . 

     சுமாவ பாவிகள் உபஜெய ஸ்தானங்களில் நிற்பின் நன்மை செய்வார்கள் . 

    கிரகங்கள் ஆதிபத்யத்தால் சுப , பாபத் தன்மை நிற்குமிடத்தால் சுப , பாபத்தன்  யடைவது வேறு என்பதை நன்கு ஆராயவேண்டும் . 

    கேந்திராதிபத்யம் சுபர்கள் பெற்றிருந்தால், கேந்திராதி பத்ய தோஷம் பெற்றுவிடுவார்களாதலால் கெடுதலான பலன்களையே கொடுப்பார்கள் . சுபசந்திரனை விட , புதனும் , சுப புதனை விட சுக்கிரனும் , சுக்கிரனைவிட குருவும் . கேந்திராதிபத்ய தோஷத்தில் அதிக கெடுதல்களைச் செய்ய வல்லவர்களாவார்கள் . அதோடு லக்ன கேந்திராதிபத்யம் பெற்ற சுபரைவிட , நான்காம் கேந்திராதிபத்யம் பெற்ற சுபரும்  நான்காம் கேந்திராதிபத்யம் பெற்ற சுபரும் ஏழாம் கேந்திராதிபத்யம் பெற்ற சுபரை விட ' பத்தாம் கேந்திராதி பத்யம் பெற்ற சுபரும் கெடுதல்களைச் செய்வதில் வலியவர்களாவார்கள் . 

    பாபர்கள் கேந்திராதிபத்யம் பெறின் சுபபலன்களைக் கொடுப்பவர்களாகி விடுவார்கள் அதிலும் லக்ன கேந்தி ராதிபத்யம் பெற்ற பாபரைவிட நான்காம் கேந்திராதி பத்யம் பெற்ற பாபரும் , நான்காம் கேந்திராதிபத்யம் பெற்ற பாபரைவிட , ஏழாம் கேந்திராதிபத்யம் பெற்ற பாபரும் , ஏழாம் கேந்திராதிபத்ய பாபரைவிட , பத்தாம் கேந்திராதிபத்ய பாபரும் சுப பலன்களைக் கொடுப்பதில் வலியவர்களாவார்கள் .

     3 , 6 , 11 - ஆம் அதிபதிகள் சுபராயினும் பாபரயினும் கொடிய பலன்களையே அளிப்பார்கள் . 

    எட்டாமாதிபத்யம் பெற்ற கிரகம் தீய பலன் களையே கொடுக்கும் . ஆனால் இந்த அஷ்டமாதி பத்யதோஷம் சூரியனுக்கும் , சந்திரனுக்கும் கிடையாது 

   லக்னாதிபதியும் , எட்டாமாதிபதியும் ஒருவரேயாயின் , அக்கிரகம் கெட்ட பலன்களைக் கொடுக்காது . 

    2 , 12 - ஆம் அதிபதிகள் சுபஸ்தானமேறின் , சுப சேர்க்கை பெறின் நன்மைகளைச் செய்வார்கள் . 

    சர ராசிகளுக்கு பதினோராமிடமும் , ஸ்திர ராசிகளுக்கு - ஒன்பதாமிடமும் , (ஸ்திர லக்கினங்களுக்கு பாதக பலன்களை தருவதில்லை) உபய ராசிகளுக்கு ஏழாமிடமும் பாதக ஸ்தானமாகும் . இதன் அதிபதியும் , இதில் நிற்பவர்களும் கெடுதல் பலன்களையே அளிப்பார்கள் 

    2 , 7 - ஆம் அதிபதிகள் மாரகஸ்தானாதிபதிகள் என்று அழைக்கப்படுவர் . அதிலும் ஏழாம் மாரகஸ்தானாதி பதியைவிட , இரண்டாம் மாரகஸ்தானாதிபதி மாரகத்தைக் கொடுப்பதில் வலியவராவார் .

     கேந்திர , கோணாதிபதிகள் எவ்விதத்திலேனும் சம்பந்தம் பொற்றால் சிறப்பான நற்பலன்களையே அளிப்பார்கள்.

      கேந்திராதிபத்யம் பெற்ற பாபர் , கோணாதிபத்யமும் பெறின் மிக மிக சிறப்பான பலன்களையே கொடுப்பார் . ( உதாரணம் : சிம்ம லக்கினத்திற்கு செவ்வாய் 4 , 9 - ஆம் ஆதிபத்யங்கள் பெறுவது ) 

    கேந்திர அல்லது கோணாதிபத்யத்தால் நன்மை செய்யக் கூடிய கிரகம் , பாபாதிபத்யமும் பெறின் மத்திம பலன்களையே கொடுக்கும் . 

    கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற சுபர் , துர்ஸ்தானங்கள ஏறின் -மிகக் கொடிய பலன்களைக் கொடுக்கும் . 

     ஆதிபத்யத்தால் முழுவதும் கெட்ட கிரகம் ( உ - ம் : மேஷ லக்னத்திற்கு 3,6- ஆம் ஆதிபத்யங்கள் பெற்ற புதன் ) துர்ஸ்தானம் ஏறின் , மிக மிகக் கொடிய பலன்களையே கொடுக்கும் . 

     ராகு , கேதுக்கள் , தானிருந்த வீட்டதிபர்கள் , கூடியவர்கள் , மற்றும் பார்த்தவர்கள் ஆகியவர்களின் தன்மைக்கேற்ப கலப்பும் பலன்களாகவே கொடுப்பார்கள் .

சூரியஜெயவேல் 

9600607603



Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்