வெளிக் கோள்கள் ( Outer Planets )
வெளிக் கோள்கள் ( Outer Planets )
( 1 ) யுரேனஸ் ( 2 ) நெப்டியூன் ( 3 ) புளூட்டோ ஆகிய மூன்று கிரகங்களையும் வெளிக் கோள்கள் என்றும் நவகோள்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் கிரகங்கள் என்றும் குறிப்பிடலாம் .
இந்தக் கோள்கள் மேலை நாட்டு அறிவியலாரால் சில நூற்றாண்டுகளுக்கு முன் கண்டு பிடிக்கப்பட்டவையாகும் . இந்தக் கோள்களிலிருந்து வெளிப்படும் சக்தி இன்றைய நாகரீகச் சிந்தனைக்கும் விபரீதமான செயல்களுக்கும் , புரியாத புரட்சிக்கும் , மறைமுகத் தாக்குதலுக்கும் , எழுச்சிக் கும் , வீழ்ச்சிக்கும் இடமளிக்கின்றன என அறிவியலார் கண் டறிந்து உள்ளனர் .
ஒரு கிரகத்தின் கதிர்வீச்சும் , அதனின்று வெளிப்படும் ரசாயன மாற்றங்களும் மற்ற கிரகங்களில் மாறுபாடுகளை ஏற்படுத்தி புதிய விளைவுகளை உண்டாக்குவது போல் , இந்த மூன்று கிரகங்களிலிருந்து வெளிப்படும் காந்த சக்தியும் ரசாயன மாற்றங்களும் நவகோள் களிடம் புதிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன இந்த விளைவுகளின் தன்மை ஒரே நிலையானதா ? அல்லது வேறுபடத்தக்க பிரிவுகளா ? என்று இதுவரை முழுமையான ஆய்வுக்குக் கொண்டுவர முடியவில்லை .
ஆரம்பகாலத்தில் சூரியன் முதல் சனி வரை ஏழு கிரகங்களின் தன்மையை மட்டுமே ஜோதிட மகரிஷிகளால் உணர முடிந்தது . பின்னர் தூமாதி பஞ்ச கிரகங்களுடன் குளிகன் மாந்தி போன்ற கிரகங்கள் சப்தகிரகங்களின் இனமான உப பிரிவுகள் என்றும் அனுமானிக்கப்பட்டது . அதற்குப்பின் இராகு , கேது போன்ற நிழல் கிரகங்களின் சக்தி அறிந்து பிரதான கிரகங்களாக சூரியன் , சந்திரன் செவ்வாய் , புதன் , குரு , சுக்கிரன் , சனி , ராகு , கேது ஆகிய ஒன்பது கிரகங்கள் வழக்கில் கொண்டு வரப்பட்டு ஜோதிஷ மகரிஷிகளால் பலன் ஏற்படுத்தப்பட்டன . ஜோதிட மகரிஷிகள் இதுவரை நிறுத்திக் கொண் டிருக்கும் போது , அறிவியலார் யுரானஸ் , நெப்டியூன் புளுட்டோ போன்ற கிரகங்களை ஆய்வு செய்வது வியப்பாக இருக்கலாம் . ஆனால் , அந்த வியப்பில் சிந்தனைக்குரிய விவேகமும் , தத்துவமும் , அறிவியல் உண்மைகளும் நிறைந் திருக்கின்றன . இந்த மூன்று கிரகங்களின் பொதுவான தன்மைகளைக் காண்போம் .
( 1 ) கலாச்சாரக் கட்டுக் கோப்பிலிருந்து விடுவிக்கின்றன்.
( 2 ) சட்டம் என்னை என்ன செய்யும் , என்ற கேள்வியை சிந்தனையில் உருவாக்குகின்றன ( Law breakers )
( 3 ) மனித வரலாறு , புரட்சிகள் , தொழில் நுட்பங்கள் ஆகியவற்றில் இந்த மூன்று கோள்களே புதிய ஆதிக்கத்தினை மேற்கொண்டுள்ளன .
யுரேனஸ் ( URANUS )
யுரேனசு சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். விட்டத்தின் அடிப்படையில் இது மூன்றாவது பெரிய கோளாகும். இக்கோள் கிரேக்கக் கடவுள் யுரேனசின் நினைவாக பெயரிடப்பட்டது. கண்ணுக்குப் புலப்படும் கோளாயினும், அதன் மிகுந்த மெதுவான கோளப்பாதையாலும் மங்கலான தோற்றத்தாலும் பண்டைய கால மக்கள் அதனை ஒரு கோளாக கருதவில்லை.
இக்கோள் சூரியனிலிருந்து 289 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும் , தன்னைத்தானே சுற்றிக் .கொள்ள 10 மணி 45 நிமிடமும் , சூரியனைச் சுற்ற 84 வருடங்களும் ஆகிறது . இதற்கு ஐந்து ( 5 ) சந்திரன்கள் உண்டு . இதன் தட்ப வெப்ப நிலை -185 ° C. இவற்றில் ஓரளவுத்தான்ஹைட்ரஜன் , அமோனியா , மீத்தேன் வாயுக்கள் உண்டு . இக்கோள்தான் மற்ற கோள்களைப் போல் அல்லாமல் எதிர்திசையில் சுற்றுவதே இதனின் சிறப்பு . இதற்கு அடுத்துள்ளது நெப்டி யூன் . பொதுவாக யுரேனஸை பொதுக் கருத்துக்கு எப்பொழுதும் மாற்று கருத்துடையவன் ' எனலாம் .
மூளை , நரம்பு மண்டலம் ஆகிய பகுதிகளைக் குறிக்கும் . எனவே யுரேனஸ் , மனோவியாதி , நரம்பு சம்பந்தமான வியாதிகள் ஆகியவைகளைக் கொடுக்கும் . யுரேனஸ் , புதுமையாக ஏதாவது சிந்தித்தல் . விஞ்ஞானியாதல் . ஆராய்ச்சிகளில் ஈடுபடுதல் , புரொபஸராதல் , சோதிடம் , ஹிப்னாடிசம் போன்ற மக்கலைகளில் நாட்டம் , புதுமையாகவும் , புரட்சிகரமாகவும் பேசுதல் , அர்த்தமற்ற தகராறுகளில் ஈடுபடுதல் பிரச்சனை களையுண்டாக்குபவராக இருத்தல் , திடீர் செய்கைகள் பல செய்தல் ( திடீரென்று யாரிடமும் சொல் க் கொள்ளாமலே ஒரு ஊருக்குக் கிளம்பி விடுவார்-- திடீரென்று தான் வகித்து வரும் பதவியை ராஜினாமா செய்து விடுவார்- திடீரென்று ஒரு பெண்ணை இழுத்துக் கொண்டு வந்து , வளைத் திருமணம் செய்து கொண்டு விட்டேன் என்பார் ) காதல் விவகாரங் களில் சிக்கல் ஏற்பகித்திக் கொள்ளுதல் , திருமண விவகாரங்களில் சிக்கலை ஏற்படுத்திக் கொள்ளுதல் திடீரென்று திருமண உறவை முறித்துக் கொள்ளுதல் , தபால் , தந்தி , ரேடியோ , டெலிவிஷன் , கப்யூட்டர் , மற்றும் ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை செய்தல் , என்ஜினீயராதல் , சிவில் என்ஜினீயராதல் , எலக்ட்ரிக்கல் மின் சாரத்தில் அடிபட்டு சாதல் அணு வியல்துறை , ராக்கெட் விடுதல் ஆகியவற்றைக் குறிக்கும் . எலக்ட் மின்சாரத்தில் அடிபட்டு சாதல் அனு வியற்துறை , யுரானஸ் ( நாகரீகம் ) மின்சாரம் , புரட்சி , திடீர் மாறுதல்கள் , நவீன விஞ்ஞானம் போன்றவை யுரானஸ் கிரகத்தின் ஆதிக்கத்தில் உள்ளது . இந்த கிரகம் எதிர்பாராத மாற்றங்களுக்கும் ,
முன்னேற்றங்களுக்கும் , புரட்சிகளுக்கும் வித்திடுகிறது .
மிக உயர்ந்த சுதந்தரத்தின் சின்னமாக இந்த கிரகத்தின் சின்னம் கருதப்படுகிறது .
தனி நபரின் மீது ஆதிக்கம் செலுத்தும் எல்லா வகையான கட்டுப்பாடுகள் சட்டதிட்டங்கள் ஆகியவற்றிலிருந்து ஒருவருக்கு சுதந்திரத்தை அளிக்கும் சக்தி உண்டு .
திறமை , பிறப்பினால் பொதிந்துள்ள விவேகம் , ஞானம் புத்திக் கூர்மை ஆகியவைகளை உறுதி செய்வது . எந்தச சூழ்நிலையையும் உடைத்தெறிந்து முன்னேறும் ஆற்றலைத் தருவது .
கடைசி நிமிட பின் வாங்குதல் , திட்டங்களில் மாறுதல்களை உருவாக்குதல் , வேண்டாத பிரிவுகள் , விபத்துக்கள் , இயற்கை ஆபத்துக்கள் , புரிந்து கொள்ள முடியாத பைத்தியக்காரத்தனமான நடத்தைகளுக்கு யுரானஸ் காரணமாகிறது .
ஞாயமற்ற எதிர்ப்புகளை உருவாக்குதல் , அதிகாரத்திமிரை ஒருவனிடம் உருவாக்குவது போன்ற குண இயல்புக்குக் காரணமாகிறது .
கலை , அறிவியல் , ஆகியவற்றில் ஒப்புமை கூற முடியாத , தனித்தன்மை வாய்ந்த ; உன்னதமான அறிவு மேம்பாட்டைத் தருவது .
தொழில் நுட்பங்கள் , விண்வெளிப் பயணம் , மின்னியல் முன்னேற்றங்கள் ஆகியவற்றை இக்கோள் தன் அதிகாரத்தில் வைத்துள்ளது .
திடீர் முன்னேற்றங்கள் அல்லது மேலானதை கீழானதாகத் தள்ளுதல் . எப்பொழுதும் சுற்றி உள்ள பொருள்களில் கடைசி நிமிடத்தில் தலைகீழாக மாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகளை உருவாக்குகிறது . தீர்மானங்களையும் , நிகழ்ச்சிகளையும் மின்னலெனும் ஆற்றல் உடையது
நெப்டியூன் சூரியக்குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிகத் தொலைவில் உள்ள ஒரு கோளாகும். நெப்டியூன் (Neptune) என்பதன் கருத்து கடல்களின் ரோமானியக் கடவுள் என்பதாகும். சூரியக்குடும்பத்தில் விட்டத்தின் அடிப்படையில் இது நான்காவது மற்றும் நிறை அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகும். நெப்டியூன் பூமியைப்போல 17 மடங்கு நிறை கொண்டது. மற்றும் பூமியைவிட 15 மடங்கு பெரிய (ஆனால் அடர்த்தி குறைந்த) யுரேனஸ்-ஐ விட சற்று பெரியது. சராசரியாக நெப்டியூன் சூரியனை 30.1 வாது தூரத்தில் சுற்றுகிறது. நெப்டியூன் ஒரு வாயுக்கோளாகும். இது சூரிய குடும்பத்தில் விண்கள் பட்டைக்கு வெளியே உள்ளது. இதனைச் சுற்றி வாயுவினால் ஆன ஒரு வளையம் உள்ளது.
நெப்டியூன் ( NEPTUNE ) சூரியனிலிருந்து 450 கோடி கிலோ மீட்டர் தொவிலும் , தன்னைத்தானேச் சுற்ற பதினாறு மணி நேரமும் , சூரியனைச் சுற்ற 165 வருடங்களும் ஆகிறது .யுரேனசும் , நெப்டியூனும் ஆவிக்கோளக் கோள்கள் ( GAS - GIANTS ) என்பர் . இதற்கு இரண்டு சந்திரன்கள் உண்டு . இது அதிக தொலைவுள்ளதால் வளிமண்டலம் பற்றி இன்னும் அறியப்படவில்லை.நெப்டியூன் கணிதச் சமன்பாட்டின் மூலம் முன்கூட்டியே அங்கு இக்கோள் இருக்க வேண்டுமென கண்டு பிடிக்கப்பட்டு இன்று நிரூபிக்கப்பட்டுவிட்டது . பொதுவாக நெப்டியூனை ' மாற்று கருத்துக்களுக்கு எப்பொழுதும் பொதுக் கருத்தாய் ( அமைக்க ) உடையவன் ' எனலாம் !
நெப்டியூன் புலன் உணர்வுகளில் ஈடுபாடு , பெருங்கூட்டத்தின் உணர்வறிதல் , அடியோடு வேரறுத்தல் போன்ற குணத்திற்குக் காரணமாக அமைகிறது . கடற்கரையிலுள்ள குன்றை கடல் , தன் அலைகளால் அரிப்பதுபோல் ; உலகில் நிலவும் , நிரூபிக்கப்பட்ட சாதிக்கப்பட்ட உண்மைகளை மெதுமெதுவாக இக்கோள் கலைக்கும் உணர்வினை ஒரு மனிதனிடம் ஏற்படுத்துகிறது . தனி மனிதனிடம் புரட்சிகரமான உத்வேகத்தை தூண்டக் கூடியது . அதிக அளவு முன்னெச்சரிக்கையைத் தரக்கூடிய கோள் . எவ்வாறு எனில் பனிப்புகை சூழ்ந்த கடலில் மிதக்கும் மணி ஒலியெழுப்பிக் கொண்டிருப்பதைப் போல எச்சரிக்கை கொடுக்கக் கூடியவை , மாயையைத் தரும் மகத்தான கோள் என்றும் வர்ணிக்கலாம் . கண்ணிற்குப் புலப்படாத மனதிற்கு அப்பாற்பட்ட , நம் திறன்களின் உண்மைகளை ஈடுபடும் செயலில் வெற்றிகர மாகச் சிந்திக்கச் செய்யத் தூண்டுவது . கொடூரத்தன்மை , ஏமாற்றுதல் , ஏமாற்றப்படுதல் , மர்ம மானவற்றை நியாயப்படுத்துதல் , போன்றவைகளை இக்கோள் ஏற்படுத்துகிறது . கண்டிட முடியாத பேருண்மைகளை ( Vague reality ) என்றும் நிலைத்துள்ள ( Eternty ) தெய்வீகங்கள் ( Divine ) ஆகியவற்றை அற்புதமாக விளக்குவதும் இக்கோள் தான் . ஆனால் ; இந்த விளக்கங்களை ( ஒரே சிக்கல் மயம் ) அவ்வளவு எளிதில் யாரும் புரிந்து தெளிந்துவிட முடியாத உணர்வையும் தருவதும் இதன் பங்காக உள்ளது . மிகக் போதையை கொண்டது . குறைந்த விலையில் அதி அற்புதமான மனதிற்கு ( கற்பனையில் ) தரும் ஆற்றல் கவிதை , இசை , ஆன்மீகம் , அன்பின் உயர் நிலை , ஆகியவற்றை வெளிப்படுத்தும் பங்கு இந்தக் கோளிடம் உள்ளது . இக்கோள் திரைப்படங்கள் ( புகைப்படங்கள் ) இத் துறையைச் சார்ந்த மற்ற கலைகள் இவற்றை ஆதிக்கம் ) செலுத்துகிறது .
தொடரும் ------------
Comments
Post a Comment