வெளிக் கோள்கள் ( Outer Planets )

வெளிக் கோள்கள் ( Outer Planets )   


   புளூட்டோ ( PLUTO )  சூரியனிலிருந்து 591 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும் , தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 6.3 நாட்களும் சூரியனைச்சுற்ற 248 வருடங்களும் ஆகிறது . புளூட்டோவிற்கு சந்திரன் இருப்பதாக இன்று வரை கண்டு உறுதிச் செய்யப்படவில்லை .அதிக தொலைவில் உள்ளதால் வளிமண்டலம் பற்றி ஆராயப்படவில்லை . இதன் விட்டம் 2000 மைல்கள் ; வெகு தொலைவிலுள்ள புளூட்டோவிற்கு கிடைக்கும் சூரிய வெளிச்சம் நாம் நினைப்பது போல் அவ்வளவு மங்கலானதல்ல . நாம் பெறும் நமது பவுர்ணமி சந்திரவெளிச்சம் , நாம் பெறும் சூரிய வெளிச்சத்தில் 4,40,000 மடங்குக்குறைவானது , மங்கலானது எனலாம் . புளுட்டோவில் , நமக்குத் தரும் சூரிய ஒளிப் பிரகாசம் அங்கு 1600 பங்கு மங்கலாக ( குறைவாக ) பெறுகிறது . ஆதலால் , புளுட்டோவின் வானத்தில் சூரியப் பிரகாசம் பூமிக்கு கிடைக்கும் பவுர்ணமி பிரகாசத்தைப் போல் சுமார் 4,40,000 / 1600 = 275 மடங்கு அங்கு அதிகமாக உள்ளது

    ஆக்குதல் , அழித்தல் , அதிகார வெறி ( Loust for power ) கடுமையான கட்டுக் கோப்பு போன்றவற்றை பரிபாலனம் செய்யும் ஆற்றல் புளூட்டோ கிரகத்திற்கு உண்டு . அறிவியலார் புளூட்டோ கிரகத்தை சூரிய மண்டலத்தின் ஒத்தைக் கைகாட்டி மரம் என்று வர்ணிக்கிறார்கள் . இந்தக் கோளின் துணைக் கொண்டு ஒரு ஜாதகத்தின் சில இறுதியான விஷயங்களை அறிய இடமளிக்கின்றனவாம் . வாழ்க்கையின் முக்கியமான சிறந்த நிகழ்ச்சிகளைக் குறிப்பது , எந்தவிதமான பிரதிபலனுமில்லாமல் செயல்படுகின்ற சில நிகழ்ச்சிகளையும் இது குறிக்கும் . முடிவான மனிதவாழ்வின் இறுதியான ; நீக்கங்கள் , முடிவுகள் , வெளியேற்றங்கள் அஅனைத்திற்கும் காரணமாகும் . இக்கோள் தன்னிச்சையாக இயங்குவதைக் காட்டிலும் மற்ற கோள்களின் இயக்கங்களில் பெரும் சக்தி வாய்ந்த வினையூக்கியாக ; ( Fowerful catalyst ) யாராலும் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் ( நேரத்தில் ) செயல்படுவது . உலகியல் மாற்றங்கள் அனைத்தினும் இதன் பங்குண்டு . ஆக்கம் ( Creats ) அழித்தல் ( Destroys ) திரும்பி உருவாக்குதல் ( Recreates ) ஆகிய முத்தொழிலுக்கு காரணமாகிறது . சில சமயங்களில் மிக அற்பமான நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கிவிட்டு மற்றவர்களால் கவனிக்கப்படாமல் செய்து மெதுவாக ; நிச்சயமாக ; கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தையும் மாற்றி வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு முழுமையான பெரும் மாறுதலை உருவாக்கும் ஆற்றல் கொண்டது . புளூட்டோ எனும் கோள் பெரும் கூட்டத்தின் சிந்தனைகளுக்கு ( Mass thinking ) காரணமாகிறது . குழுச் சிந்தனைக் காரகன் என்ற பட்டத்தைக் கூட இந்தக் கிரகம் பெறுகிறது . நல்ல சமூகம் ( Society ) ஒதுக்கக் கூடிய விஷயங்களை அன்போடு சேர்த்து அணைத்து அதை வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் கோளாகும் . இறப்பு - கீழ் உலகம் ஆகியவற்றை இக்கோள் நிரூபிக்கிறது . மொதுவாக சிருஷ்டி , சம்ஹாரம் ஆகிய இரண்டும்.கீழே மேலே நம்மைச் சுற்றி நடை பெறுவதற்கான , சக்தி வாய்ந்த விசைகளுக்குக் காரணமாகிறது . மனத்தை வெகுவாகக் கட்டுப்படுத்தி ; அதனால் பெறக் கூடிய சக்தியின் மீது அளவற்ற ஆசையை உருவாக்கக் கூடியது .கொள்கை ; குறிக்கோள் , யாகம் இவற்றில் முனைந்து வெற்றிபெறத் தூண்டுவது . ஒரு மனிதனுடைய வாழ்க்கை முறையை ; எண்ணங்களை நடத்தைகளை முழுவதுமாக மாற்றும் ஆற்றல் கொண்டது . ஆனால் இந்த மாற்றம் திடீரென ஒன்றிலிருந்து ஒன்றிற்கு தாவுவது அல்ல . அதற்குப் பதிலாக மாற்றங்கள் பரிணாம வளர்ச்சியில் ( Metta morphoses ) ( வளர் உருசிதை மாற்றம் ஒரு உயர்ந்த நிறைவான முழுமை பெற்ற ( Perfect ) நிலையை உருவாக்கும் ஆற்றல் பெற்றதாகும் . இதுவரை யுரானஸ் , நெருப்டியூன் , புளூட்டோ ஆகிய கோள்களின் சக்தியை அறிந்தோம் . உண்மையில் இந்தக் கோள்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதற்கு நாட்டில் ஏற்படும் மாறுதல்களும் , தனி மனிதனிடம் ஏற்படும் விபரீத மாற்றங்களும் ஆதாரங்களாகின்றன . 

      இவ்வளவு சக்தி பெற்ற கிரகங்கள் ஒருவருடைய ஜாத கத்தில் எந்த இடத்தில் எப்படிப்பட்ட நிலையில் சஞ்சரித்தால் மேலே கூறிய குணங்களைப் பெற்றிருப்பார் என்பதை அறிவதற்கு ஜோதிட சாஸ்திரத்தில் ஆதாரம் இல்லை என்பது குறையாகத்தான் உள்ளது . ஆனால் காலத்தால் இதற்கு தகுந்ததோர் விதிமுறைகளை ஆராய்ந்து மேலை நாட்டினர் ஜோதிடத்தில் உறுவாக்கி உள்ளார்கள் .

யுரேனஸ்

    லக்கினத்தில் யுரேனஸ் இருப்பின் : அகங்காரம் பிடித்தவராக இருப்பார் . குடும்பத்தாரிடமும் , மற்றவர்களிடமும் சண்டைகளை வளர்த்துக் கொள்வார் .

     இரண்டில் யுரேனஸ் நிற்பின் : - செய்யக்கூடிய தொழிலில் இன்று ஆயிரம் லாபம் வந்தால் மறுநாள் ஆயிரம் நஷ்டம் ஏற்படும் .

       மூன்றில் யுரேனஸ் நிற்பின் : யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது கருத்து சிந்தனைகளைக் கொண்டிருப்பார் . குடும்பத்தில் தகராறுகளை வளர்த்துக்கொள்வார் . கடிதப் போக்குவரத்து ஒப்பந்தம் முதலான விவகாரங்களால் தொல்லை ஏற்படும் . பிராயாணங்களின் போது எதிர்பாரா தொல்லைகளை அனுபவிக்க நேரிடும் .

      நான்கில் யுரேனஸ் இருப்பின் : பெற்றோர்களிடம் சச்சரவு வளரும் . சொந்த ஊரில் இருப்பின் துரதிர்ஷ்டந் தான் ஏற்படும் . கடைசிக் காலத்தில் கடும் நோய் வாய்ப் பட்டு , கஷ்டப்பட்டு இறக்க நேரிடும் .

      ஐந்தில்  யுரேனஸ் இருப்பின் : காதல் விவகாரங்களில் உறுதி யாக இருக்கமாட்டார் . அதோடு காதல் விவகாரங்களில் ஈடுபட்டால் பல தொல்லைகள் ஏற்படும் . முதல் குழந்தை பிறந்து இறக்கும் அபாயம் உண்டு .

       ஆறில் யுரேனஸ் இருப்பின் : வேலைக்காரர்களால் தொல்லைகள் ஏற்படும் . நரம்பு சம்பந்தமான வியாதிகள் தோன்றும் .

     ஏழில் யுரேனஸ் இருப்பின் : அவசரப்பட்டு திருமணம் செய்து , அதனால் பல தொல்லைகள் அனுபவிப்பார் . எதிரிகளால் பலவிதமான தொல்லைகளுக்கும் ஆளாவார் .

     எட்டில் யுரெனஸ் இருப்பின் : திருமணத்திற்குப் பின்பு பணக் கஷ்டம் ஏற்படும் . மனைவியால் வீண் செலவுகள் ஏற்படும் . சாதகருக்கு மரணம் திடீரென்று எதிர்பாராத விதமாக ஏற்படும் .

      ஒன்பதில் யுரேனஸ் இருப்பின் : மந்திரம் , தந்திரம் , மனோவசியம் போன்ற மர்மக்கலைகளில் ஆர்வம் ஏற்படும் . எதிர்காலம் மனதில் விளங்கும் . அயல் பிரதேசங்களில் பல சிக்கல்கள் ஏற்படும் .

      பத்தில் யுரேனஸ் இருப்பின் : வாழ்க்கையே பெரிய போராட்ட மாக அமையும் . தொழில் , உத்யோகங்களில் பல சிக்கல்கள் ஏற்படும் ; ஒரு தொழிலிலும் நிலையாக இருக்கமாட்டார் 

     பதினொன்றில்.யுரேனஸ் இருப்பின் : நண்பர்கள் நல்லவர்களாய் அமைய மாட்டார்கள் ; நண்பர்களால் தொல்லைகள் அதிகமாகும் . மனைவியின் நடவடிக்கைகளால் மன நிம்மதி குலையும் .

     பன்னிரண்டில் யுரேனஸ் இருப்பின் : எதிரிகளின் ரகசிய தொல்லை களால் வாழ்க்கை பாதிக்கப்படும் ; குடும்பத்தைப் பிரிந்து அயல் பிரதேசங்களில் வாழ நேரிடும் .


                 நெப்டியூன்

    லக்கினத்தில்  நெப்டியூன் இருப்பின் : எதிர்களினால் தீராத தொல்லைகளுக்கு ஆளாவார் . இதனால் மனம் அடிக்கடி பீதியும் கலக்கமும் அடையும் . நீரில் பயணம் செய்வதில் ஆர்வமாயிருப்பார் . எந்த இடத்திலும் , எந்தத்தொழிலிலும் நிலையாக இருக்கமாட்டார் .

      இரண்டில் நெப்டியூன் நிற்பின் : - கொடுத்த கடனைக் கேட்டால் பணம் வராது சண்டைதான் வரும் . திருட்டு , மோசடிகளில் பணத்தைப் பறிகொடுப்பார்

     மூன்றில் நெப்டியூன் நிற்பின் : சோதிடம் , கைரேகை , ஹிப்னா டிசம் , போன்ற மர்மக்கலைகளில் நாட்டம் கொள்வர் . கற்பனை வளம் கொண்டிருப்பர் . உறவினர்களால் தொல்லைகள் விளையும் .

      நான்னைகில் நெப்டியூன் இருப்பின் : குடும்பத்தில் பலவிதமான தொல்லைகள் ஏற்படும் . பெற்றோர்களே பெரிய எதிரியா யிருப்பர் . வீட்டை விட்டே ஓட நேரிடும்.

     ஐந்தில் நெப்டியூன் இருப்பின் : காதல் விவகாரங்களில் விபரீத மாக நடந்து கொள்வார் . உடலின் பத்துறையில் சில துர்ப் பழக்கங்கள் கொண்டிருப்பார் . ரேசு , சூதாட்டங்களில் நஷ்டப்படுவார் அல்லது மோசடி செய்யப்படுவார் . ஆறாம் பாவகத்தில்

           ஆறில் நெப்டியூன் இருப்பின் : வேலைக்காரர்களால் தொல்லை யும் ஆபத்தும் ஏற்படும் . நரம்பு சம்பந்தமான வியாதிகள் ஏற்படும்.

      ஏழில் நெப்டியூன் இருப்பின் : மனைவியை மதிக்காமல் , மற்ற பெண்களையே இச்சிப்பார் . இதனால் அவப் பெயர் ஏற்படுத்திக் கொள்வதுடன் , வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்வார் . மணவாழ்க்கையில் பல சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்வார் .

      எட்டில் நெப்டியூன் இருப்பின் : திருமணத்திற்குப் பின்பு பணக் கஷ் ம் ஏற்படும் . மனைவி வீண் செலவுகள் செய்வாள் நீரினால் கண்டம் உண்டு . சிலருக்கு விசித்திரமான முறையில் மரணம் ஏற்படும் .

      ஒன்பதில் நெப்டியூன் இருப்பின் : விசித்திரமான மதக் கருத்துக் கள் கொண்டிருப்பார் . முக்காலமும் உணரக்கூடிய மகானாக இருப்பார் . பெரிய மனிதர்கள் என்ற போர் வைக்குள் இருக்கும் சிலரால் மோசடி செய்யப்படுவார்கள்

      பத்தில் நெப்டியூன் இருப்பின் : தொழில் அல்லது உத்யோ கத்தில் தனிச் சிறப்புப் பெற்றுத் திகழ்வார் . நூதனமான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவார்

      பதினொன்றில்  நெப்டியூன் இருப்பின் : நண்பர்கள் மோசடிப் பேர் வழிகளாக இருப்பார்கள் ; நண்பர்களால் நஷ்டமும் தொல்லைகளுமே ஏற்படும் ; மனைவியின் நடவடிக்கைகளால் மன நிம்மதி குலையும் ; மனைவி காமவெறி கொண்டவளாக அமைவாள்

      பன்னிரண்டில் நெப்டியூன் இருப்பின் : ரகசிய எதிரிகளின் சதிகளா லும் , மோசடிகளாலும் பலவிதமான தொல்லைகளுக்கும் -ஆளாவார் .

சூரியஜெயவேல்  9600607603





Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்