ஷட்பலம் (கிரக பலம்)

 ஜோதிடத்தில் 

ஷட்பலம் (கிரக பலம்)

ஜோதிட சாஸ்திரத்தில் நவக்கிரகங்களில் நற் பலன்களைத் தரக்கூடிய நிலையில் உள்ள கிரகங்கள் எவை , கெடுபலன்களைத் தரக்கூடிய நிலையில் உள்ள கிரகங்கள் எவை என்பதை அறிவதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன என்பதை நாம் அறிவோம் . ஷட்பலம் என்பதும் ஒரு கிரகத்தின் பலம் கணும் விதிமுறை ஆகும் ஷட்பலம் என்பவை ஸ்தான பலம் , திக்பலம் , த்ரிக் பலம் , நைசர்க்கிக பலம் , காலபலம் , சேஷ்டாபலம் என்பவையாகும் . ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல் உண்டு . நம்முடைய முன்னோர்கள் இந்த ஆறுவிதமான பலங்களைக் கிரகங்களுக்கு வகுத்திருக் கிறார்கள் .


 அந்த ஆறு விதமான பலன்கள் என்ன என்பதை கீழ்வருமாறு ஆராய்வேம்


1)  ஸ்தானபலம் ;- (Positional Strength)  இந்தபலம் எவ்வகையில் ஏற்படும் என்பதை ஆராய்வேம் . 

ஷட்பல கணிதத்தில் முதல் பலமான ஸ்தான பலத்தில் மொத்தம் ஐந்து வகை

அந்த ஐந்து வகை என்ன என்பதனை நாம் கீழே காண்போம் 

உச்ச பலம்

சப்த வர்க்கச பலம்

யுக்மா யுக்ம பலம்

கேந்திராதி பலம்

திரேகாதி பலம் 


1. உச்ச நிலையில் இருக்கும் கிரகம் ஸ்தானபலம் பெற்றிருக்கும் . 

2. மூலத் திரிகோண ராசியில் இருக்கும் கிரகத்திற்கு ஸ்தானபலம் உண்டு . 

3. ஆட்சி பெற்றிருக்கும் கிரகத்திற்கு நல்ல வலிமை ஏற்படும் . 

4. நட்பு வீடுகளில் இருக்கும் கிரகங்கள் வலிமை பெற்று இருக்கும் ,

 6. நவாம்சத்திலும் மேற்சொன்ன நிலைகளில் இருப்பதன் மூலம் கிரகத் திற்கு வலிமை ஏற்படும். 


  ராசியிலும் , நவாம்சத்தில் ஒரே இடத்தில் இருக்கும் கிராத்திற்கு வர்கோத்தமாம் பலம் ஏற்படும் .


  ஒரு கிரகம் ஸ்தான பலம் பெற்றிருந்து ,

வர்க்கோத்தமும் பெற்றிருக்குமானால் விசேடபலம் பெற வாய்பு உண்டு . 

  ராசிச் சக்கரத்தில் நீசம் அடைற் திருக்கும் கிரகத்திற்கு ஸ்தானபலம் இருக்காது . ஆகையால் வர்க்கோத்தம் நிலையால் சிறப்பில்லை. மேலும் பகை வீடுகளில் இருக்கும் கிரகங்கள் ஸ்தான பலம் இழக்கின்றவர்கள் ஆவார்கள் .

   ஒரு கிரகம் நவாம்சத்தில் நீசம் பெற்றிருந்தாலும் ஸ்தான பலத்தை இழக்கும் . 


2. திக்பலம் ;-  ( Directional Strength)    


சூரிய உதய காலத்தில் அதாவது கிழக்கில்(லக்னம்) குரு புதன் பலம், 


அஸ்தமனத்தில் அதாவது மேற்கில் 7-ல்  (ஏழு) சனி பலம், 


உச்சி வேளையில் அதாவது தெற்கில் 10-ல் (பத்து) சூரியன் , செவ்வாய் பலம், 


நடு இரவில் வடக்கில் 4-ல் (நான்கு)  சந்திரன் , சுக்கிரன் பலம்,


 3. திருக்பலம் ;-(Aspectual Strength) எந்தக் கிரகமானலும் சுக்கிரன் , குரு , சந்திரன் , புதன் ஆகியோரால் பார்க்கப்படும்பட்சத்தில் விசேடமான வலிமையைப் பெறுவார்கள் . 

  பாபக் கிரகங்களால் பார்க்கப்படுகிற எந்தக் கிரகமும் பலவீனம் அடையும் . பாபக்கிரகம் என்பவை சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது ஆவார்கள் .


4. நைசர்க்கிய பலம் :- (Natural Strength)

இது இயற்கையாகக் கிரகங்களுக் குரிய வலிமையைக் குறிக்கிற பலம் ஆகும் . இந்த பலம் ராகு , கேது ஆகிய கிரகங்களுக்கு அதிக உண்டு என சில நூல்களில் கூறப்பட்டுள்ளன . ஏனைய சப்த கிரகங்களை எடுத்துக் கொண்டு பார்க்கும்போது சூரியனுக்கு முழுமையான நைசர்க்கிக பலம் உண்டு . அடுத்துச் சந்திரன் , சுக்கி ரன் , குரு , புதன் , செவ்வாய் , சனி ஆகியோர் இந்த வரிசையில் பலம் பெறுவார்கள் . சூரியனுக்கு 1.000 நபம் பலம் என்றும் , சந்திரனுக்கு 0.857 ரூபமென்றும் , சுக்கிரனுக்கு 0.714 ரூபமென்றும் , குருவுக்கு 0.571 ரூபமென்றும் , புதனுக்கு 0.429 ரூப மென்றும் , செவ்வாய்க்கு 0.286 மென்றும் , சனிக்கு 0.143 ரூபமென்றும் சொல்வார்கள் . 


 5) காலபலம் - (Temporal Strength ) அடுத்ததாக ஷட்பலத்தில் மூன்றாவது பலமான கால பலத்தில் உள்ள வகைகளைப் பற்றி ஆராய்வேம் .

கால பலத்தில் மொத்தம் ஆறு வகைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றகீழே காண்போம் 

• நதோன்னத பலம் 

• பக்ஷ பலம் .

• திரிபாக பலம்.

• வருஷ, மாத, தின , ஹோர பலம்.

•  அயன பலம்.

•  யுத்த பலம்

 இரவில் பிறந்தவர்களுக்கு சந்திரன் , செவ்வாய் , சனி ஆகியோர் வலிமை பெற்றவர்கள் ஆவார்கள் .

   பகலில் பிறந்தவர்களுக்கு சூரியன் , குரு , சுக்கிரன் ஆகியோர் வலிமை பெற்றவர்கள் ஆவார்கள் .


 பகலில் பிறந்தாலும் , இரவில் பிறந்தாலும் புதனுக்குப் பலம் அதிகமாகும் . சுக்கில பட்சத்தில் பிறந்தவர்களுக்கு சுபக்கிரக பலம் அதிகமாகும் . அமர பட்சத்தில் பிறந்தவர்களுக் குப் பாபக்கிரக பலம் அதிகமாகும் . 


6. சேஷ்டாபலம் ;- 

 ( Motional Strength)  உத்தராயணத்தில் சூரியனும் , சந்திரனும் பலம் பெறுவார்கள் . மற்ற கிரகங்கள் வக்கிர கதியில் இருந்தாலும் , சமாகம நிலையில் ( அதாவது சந்திரனுடன் சேர்ந்து) இருந்தாலும் சேஷ்டா பலம் உண்டாகும்.


   தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரையிலும் உத்தராயண காலமாகும் . அதாவது மகரத்திலிருந்து மிதுனம் வரையிலும் உள்ள ராசிகளில் சூரியன் உலவும் நேரமாகும் . 

  இந்த ஆறு மாத காலங்களில் சுப கருமங்கள் செய்யலாம் என்பது கிரந்தங்களின் கருத்தாகும் . 

  இந்த ஆறு பலங்களையும் பற்றி நாம் பொதுவிதிமுறைகளை இங்கே தெரிந்து கொண்டோம் . இன்னும் சில நிலைகளையும் நாம் இந்த ஷட்பலத்தின் தொடர்ச்சியாகத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உண்டு .


 சூரியனுடன் எந்தக் கிரகம் சேர்ந்தாலும் அஸ்தங்கதம் ஆகிவிடும் . சந்திரனுடன் சேரும் கிரகங்கள் சமாகமம் என்கிற நிலையைப் பெறும் . மற்ற கிரகங்கள் ஒரே பாகையில் ஒன்று கூடுமானால் கிரக யுத்தம் ஏற்படும் . 

  கிரக யுத்தம் சூரியன் , சந்திரன் , இராகு , கேது ஆகியோருக்கிடையே ஏற்படாது . 


  ஒரு ராசியில் ஒரு பாகைக்குள் இரண்டு கிரகங்கள் இருக்குமானால் கிரக யுத்தம் என்று சொல்லப்பட்டது . இந்த ஒரு பாகைக்குள் முன்னோக்கி யுள்ள கிரகம் தோற்கும் . பின்னிருக்கும் கிரகம் வெற்றி பெறும் என்றும் சொல்வார்கள் . இதையும் நாம் தெரிந்து கொள்வது நல்லது . 


பொதுவாகச் சூரியனிலிருந்து 8 பாகைகளுக்குள் உள்ள கிரகங்கள் அஸ்தங்கத தோஷம் அடையும் என்பது விதிமுறை . இதற்கு விரிவான மாற்று விளக்கங்களும் உண்டு . 12 பாகைகளுக்குள் சந்திரன் இருந்தால் அஸ்தங்கதம் என்றும் , 17 பாகைக்குள் செவ்வாய் இருந்தால் அஸ்தங்கதம் என்றும் , 14 பாகைக்குள் புதன் இருந்தால் அஸ்தங்கம் என்றும் , இந்தப் புதன் வக்கிர மாயிருந்தால் 12 பாகை வரையிலுமே அஸ்தங்கம் ஏற்படும் என்றும் சொல்வார்கள் . மேலும் 11 பாகைகளுக்குள் இருந்தால் குருவுக்கு அஸ்தங்கம்  என்றும் , 10 பாகைகளுக்குள் சுக்கிரன் இருந்தால் அஸ்தங்கம் பெறுவார் என்றும் , இதே சுக்கிரன் வக்கிரமா பிருந்தால் 8 பாகைகளுக்குள் இருந் தால்தான் அஸ்தங்கம் ஏற்படும் என்றும் சொல்லுவார்கள் . 15 பாகைக்குள் இருந்தால் சனி அஸ்தங்கம் பெறுவார் . 

  இந்த விரிவு விளக்கங்களுக்கு விதி விலக்குகளும் உண்டு . நீண்ட தொலை வழியில் அட்ச ரேகை நீளுமானால் இந்த அஸ்தங்கம் நிலையின் தோஷ பலம் குறையக்கூடும் . அஸ்தங்கதம் ஆகாமல் இருக்குமானால் மிகவும் பலம் உள்ள கிரகம் எனச் சொல்லப்படுவதுண்டு . எங்கே இருந்தாலும் வக்கிர கதியில் உள்ள கிரகங்களுக்கு ஒரு தனி மகத்துவம் உண்டு . உச்ச ராசியில் இருக்கும் வக்கிர கிரகளுக்கு உச்ச பலம் சிதைத்து போகும் .   

  பொதுவாக ஜாதகத்தைப் பார்க்கும்போது ஏனைய விசேட விதி முறைகளைக் கவனிப்பது எவ்வளவு அவசியமோ , அவ்வளவு அவசியம் இங்கே சொல்லப்பட்ட அஸ்தங்கம் , கிரக யுத்தம் , வக்கிரம் ஆகிய நிலைகளைக் கவனிக்கவேண்டியதும் முக்கியமாகும் .

சூரியஜெயவேல் 9600607603




Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்