வசுமதி யோகம்
வசுமதி யோகம்
உபசெயம் மூன்று ஆறு பத்து பதினோராம் இடங்கள் உபசெயமென்பதற்கு ஒன்றை பல மடங்கில் பெருக்கும் என்று பொருள் . உபசயத்தில் கிரகங்கள் பலமுடன் இருந்தால் சிறப்பான வசுமதி யோகம் அமையும் .
" அரசே மூன்றிலிரைந்திலாறிலிருக்கச் சென்மாதி
குரசாய் நல்லோர் தனைப்பார்க்க செகத்துக் கதிபனாகுமின் "
(இ-ள்) ஜெனன லக்கினாதிபதி 3,6,10 ல் சுபக்கிரகங்களுடன் இருந்தாலும் லக்கினாதிபதியை பக்கிரகங்கள் பார்த்தாலும் பூவுலகிற்கே அதிபதியாக விளங்குவான் .
"பத்ருதிய சக்ஷடலாயே ஷிஸ்கிதாச்சேத் க்ருஏகேசரோ
ஜாதஸ்ய யோகோ பாக்யஸ்ய வக்தவ் யஸ்ஸுரிஸ்ததா "
(இ-ள்) தீய கிரகங்கள் 3,6,10,11 ல் 3,6 , ம் இடங்கள் மறைவு ஸ்தானங்கள் ஆகும் .
10 ஆம் இடம் கேந்திரம் 11 ஆம் இடம் பணபரம் எனப்படும் . 3 ஆம் இடம் தைரிய பாவமாகையால் தைரிய வீரியம் வெற்றி புகழ் கிட்டும் . 6 ஆம் இடம் எதிரி , கடன் , நோய்கள் பிரச்சனைகளைக் குறிக்கும் . 10 ஆம் இடம் தொழில் , கௌரவம் அந்தஸ்து புகழ் தரும் . 11 ஆம் இடம் லாபஸ்தானாம் . அனைத்து வகையிலும் வரும் லாபத்தை குறிக்கும் .
உபசெய ஸ்தானம் ஸ்தானாதிபதிகள் வலுத்தால் ஜாதகர் தைரிய வீர்யத்துடன் தம்முடைய சுய பார்க்கிரமத்தால் புகழ் பெறுவர்கள் செல்வளம் கூடும் .
உபசெயஸ்தானம் ஸ்தானாதிபதி பலமிழந்தால் ஜாதகர் சயமாய் செயல் பட முடியாதவராய் பிறரின் கீழ் அடிமை வாழ்வு வாழ நேரும் , லக்னாதிபதி பலம் இல்லாமல் 3,6,10,11 ல் இருந்தால் எந்தவித நன்மையும் இல்லை . தொல்லை தான் கூடும் .
"ஜென்மலக்கின மதற்கு செப்பிடுமும் செயத்தில்
பொன் புகர் பாவோனிற்க புகழ்திதனவானவான்
தன்னவர்க்கு செயத்தில் தங்கிட தன்வானென்போம்
மன்னிய விருகோள் தங்க மத்திய தனவானோமே "
(இ-ள்) லக்கினத்திற்கு 3 ,6,10,11 என்னும் உபசய் ஸ்தானத்தில் குரு சுக்கிரன் புதனிருக்க தனவன் இரண்டு பேரிருக்க மத்திம தனவன் -
பாவர்உப சயத்திருக்கச் சாமி உயிர் நோக்கில் மன்னவார் சமானன்
(இ-ள்) பாவ கிரகங்கள் உபசெய ஸ்தானத்தில் இருக்க அவர்களை லக்கினாதிபதி பார்த்தால் அரசனுக்கு இணையன வாழ்கை அமையும்.
உபசயத்தில் சுபர்கள் .
இயற்கை சுபர்களான குரு , புதன் , சுக்கிரன் மூவரும் 3,6,10,11 ல் ஆட்சி உச்ச நிலையில் பலம் பெறும்போது வலிமையான வசுமதி யோகம் ஏற்படும் . சாதாரணமாய் 3.6.10,11 ல் சுபர் நின்றால் யோகம் கட்டும் என்றாலும் ஆட்சி உச்ச நிலையில் யோகத்தில் வலிமை கூடி விடுகிறது .
சந்திரனுக்கு 10 ல் குரு ,சுக்கிரன், புதன் பலம் பெற்று நின்றால் பிரபலமான அமலா யோகம் ஏற்படும் . ஜாதகருக்கு செல்வமும் புகழும் கூடும் .
10 ல் குரு ஆட்சி உச்சம் பெற்றால் ஹம்ஸயோகம் & புதனால் பத்ரயோகம் & சுக்கிரனால் மாளவிகா யோகமும் செயல்படும் . மொத்தத்தில் 3,6,10,11 ல் நிற்கும் சுபர்கள் ஜாதகத்தில் உள்ள மற்ற குறைகளை அகற்றி எல்லா நிலையிலும் தன்னிறைவை தரும் .
உபசெயத்தில் பாவிகள்
தீரமுள்ள உதயத்தில் சாமிநிற்கப் பாவர்
நீடுஉப செயமுறினும் பிரதாப மாவன்
(இ-ள்) லக்கினத்தில் லக்கினாதிபதி இருக்க உபசெய ஸ்தானங்களில் பாவர்கள் இருந்தால் ஜாதகர் புகழ் அடைவான்.
இயற்கை பாவ கிரகங்களான சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது பலம் பெற்று இருந்தால் நல்ல பலனைத்தருவார்கள் ,
இயற்கை பாவிகளான இவர்கள் 3,6,10 , 11 ல் ஆதிபத்யம் பெற்றாலும் 3,6,10,11 ல் பாவத்தில் நின்றாலும் அடிப்படையில் அதிகாரமிக்க வாழ்க்கைக்கு வித்திடுறார்கள் . எவரிடமும் அடிபணியாத தன்மையுள்ளவர்கள்
கோச்சாரத்திலும் இவர்கள் 3,6,10 , 11 ஆம் இடங்களில் வரும் போது நன்மையான பலன்களே நடக்கும் . பிரச்சனைகள் தீர்வது . எதிரிகள் அடங்கிபோதல் , திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிட்டும் .
உபசய ஸ்தானாதிபதிகள் 3,6,10,11 ஆம் அதிபதிகள் 3,6,10,11 ல் ஆட்சி பெற்றாலும் தங்களின் வீடுகளை தாங்களே பார்த்தாலும் லக்னயோகாபதிகளின் சாரம் பெற்றாலும் 3 ஆம் அதிபதி 9.11 ல் இருந்தாலும் 10 ஆம் அதிபதி 6,11 ல் இருந்தாலும் 11 ஆம் அதிபதி 3,10 ல் இருந்தாலும் யோகம் தருவார்கள் . "
"தோற்றத்துக்குப் சயத்தில் சுபக்கோகனெவகனகும்
சாற்றிய பரியதானே சகிக்குமாமிரு கோளகின்
ஆற்றிய சமனாமொன்றே வற்பமாமிவர்களின்மேல்
ஏற்றுமிலம் பாடேனே யோகங்களுமினு மெய்தும் . "
லக்கினத்திற்கு உவஸ்தானத்தில் சுக்கிரகங்கள் இருப்பின் ஜாதகர் தனவான் சந்திரனுக்கு இருபாரம் கிரகங்கள் இருப்பின் பத்தியம் , ஒரு கார் சுதாரன தனவான் . உபயசத்தில் கிரகங்கள் இல்லாவிட்டால் தரித்திரன் யோகம் இல்லை ,
பலன்கள்
ஜாதகர் எந்தக் காலத்திலும் செல்கள் சகல சௌபாக்கியங்களும் நிறைந்தவராக இருப்பார்கள் . வீடு , நிலம் , வாகனம் , பணியாட்கள் சூழ எப்பொழுதும் மகிழ்வாக வாழ்வார்கள் , செல்வம் செல்வாக்கும் குடும் பெருமையும் உடையவர்களாக இருப்பார்கள் ,
மேச லக்கினத்திற்கு :
உயர் தானமாக பிதுனம் , கன்னி , மகரம் , கும்பம் வருகின்றது . சனியும் , பதனும் உசெய அதிபதிகளாய் வருகிறார்கள் . இவர்களுக்கு ஆதிபத்திய சிறப்பு இல்லை . சனி 10 ல் அதிபதியானலும் பாதகாதிபதி சனி , புதன் 3,6,10,11 ல் ஆட்சி பெற்றால் யோகம் கிடைக்கும் . அதை முழுமையாய் அனுபவிக்கத் தடை ஏற்படும் . 10 ல் செவ்வாய் உச்சம் பெற்றால் போகம் தரும்
ரிசய லக்கினத்திற்கு
உபசெய ஸ்தானமாக கடகம் , துனம் , கும்பம் , மீனம் 3 ம் அதிபதி சந்திரன் 6- ஆம் அதிபதி சுக்கிரன் 10 ஆம் அதிபதி சனி , 11 ம் அதிபதி குரு
மிதுன லக்கினத்திற்கு , உபசயஸ்தானமாக சிம்மம் , விருச்சிகம் , மீனம் , மேசம் , 3 ஆம் அதிபதி சூரியன் 6,11 ஆம் அதிபதி செவ்வ் 10 ஆம் அதிபதிகுரு , குரு , செல்வாய் இருவரின் ஆதிபத்யம் முழுமையான ஆதிபத்ய சிறப்பு இல்லை . 3,6,10,11 ஆம் அதிபதிகள் ஆட்சி பெறுவது யோகம் தரும் . சூரியன் 3,6,10,11 ல் இருந்தால் சுபயோகம் தரும் .
கடகம் லக்கினத்திற்கு உபசெய ஸ்தானமாக கன்னி , தனுசு , மேசம் , ரிசபம் - 3 க்குடைய புதன் உச்சம் பெறுவது யோகம் செய்யும் . 6 க்குடைய குரு யோகாதிபதி 3,6,10 ல் இருப்பின் யோகம் தரும் . 11 ஆம் இடம் பாதகமாவதால் சுக்கிரன் 11 ல் ஆட்சி பெற்றாலும் சில முரண்பாடான பலன் ஏற்படும் . 10 க்குடைய செவ்வாய் எங்கிருந்தாலும் யோகம் தரும் .
சிம்மலக்கினத்திற்கு
துலாம் , மகரம் , ரிசபம் , மிதுனம் 3,10 க்குடைய சுக்கிரன் 10,11 ல் இருப்பின் யோகம் கிட்டும் . 6 ஆம் அதிபதி சனி 6 ல் ஆட்சி , 3 ல் உச்சம் பெற்றாலும் சிறப்பான யோகம் கிட்டும் . புதன் 11 ல் இருந்தால் யோகம் தரும் .
கன்னி லக்கினத்திற்கு
விருச்சிகம் , கும்பம் , மிதுனம் , கடகம் , 3,8 க்கு உடைய செவ்வாய் 3,6,10 ல் நின்றால் சில ஆதிபத்ய தீய பலன் குறையும் . 11 ல் நீச பங்கம் பெற்றால் யோகம் தரும். 6 ஆம் அதிபதி சனி 3,6,10,11 ல் இருப்பின் யோகம் தரும் . 10 ஆம் அதிபதி புதன் 3,6 ல் இருந்தால் யோகம் குறைவாக தரும் . 10,11 ல் இருப்பின் யோகம் தரும் . சந்திரன் 10,11 ல் இருப்பின் யோகம் தரும் .
துலா லக்கினத்திற்கு
தனுசு , மீனம் , கடகம் , சிம்மம் , 3,6 க்குடைய குரு 3,6 ல் ஆட்சி பெற்றாலும் 10 ல் உச்சம் பெற்றாலும் சிறப்பான நல்ல யோகங்கள் தரும் , 11 ல் இருப்பின் கெடு பலன் குறையும் . 10 ஆம் அதிபதி சந்திரன் 10 ல் ஆட்சி பெறுவது யோகம் , 3,6,11 ல் இருப்பின் தொழில் வகையில் சில குறைபாடு ஏற்படும் . 11 க்குடைய சூரியன் , 3,6,10 ல் நின்றால் சில கெடு பலன் குறையும் .
விருச்சிக லக்கினத்திற்கு
மகரம் , மேசம் , சிம்மம் , கன்னி , 3 க்குடைய சனி , 3,11 ல் நின்றால் யோகம் , 10 ல் இருப்பின் தீய பலன் . 6 ல் நீச பங்கம் பெற்றால் யோகம் தரும் . 6 ஆம் அதிபதி செவ்வாய் 6 ல் ஆட்சிபெற்றாலும் 3 ல் உச்சம் பெற்றாலும் யோகம் தரும் . 10 ல் இருந்தால் யோகம் தரும் . 10 ஆம் அதிபதி சூரியன் 10 ல் இருந்தாலும் 6 ல் உச்சம் பெற்றாலும் சிறப்பான யோகம் தரும் .
தனுசு லக்கினத்திற்கு
கும்பம் , ரிசபம் , கன்னி , துலாம் 3 ஆம் அதிபதி சனி 3 ல் இருந்தாலும் 11 ல் உச்சம் பெற்றாலும் யோகம் தரும் . 6,10 ல் இருந்தாலும் சுப பலன் கிட்டும் . 6,11 க்குடைய சுக்கிரன் 3,6,11 ல் இருந்தால் சுப பலனைத்தரும் , 10 ல் நீச பங்கம் பெற்றால் யோகம் தரும் . 10 க்குடைய புதன் 3,6,10,11 ல் எதில் இருந்தாலும் யோகம் தரும் .
மகர லக்கினத்திற்கு
மீனம் , மிதுனம் , துலாம் , விருச்சிகம்.
3 ஆம் அதிபதி குரு 3 ல் ஆட்சி பெற்று இருந்தால் யோகம் தரும் . 6,10,11 ல் நின்றால் சமபலன். 6 க்குடைய புதன் 6,10 ல் இருந்தால் யோகம் தரும் , 3 ல் நீச்சம் பெற்றால் சிறப்பான யோகம் தரும்.10 ஆம் அதிபதி சுக்கிரன் 3 ல் உச்சம் பெற்றால் யோகம் . 10 ல் ஆட்சி பெற்றாலும் சிறப்பான யோகம் தரும் . 11 க்குடைய செவ்வாய் 3,6,10,11 ல் இருந்தால் சில முரண்பாட்டை உருவாக்குவார் .
கும்ப லக்கினத்திற்கு மேசம் , கடகம் , விருச்சிகம் , தனுசு 3,10 ஆம் அதிபதி செவ்வாய் 3,10 ல் ஆட்சி பெற்றால் , 11 ல் இருந்தாலும் யோகம் தருவார் . 6 ல் நீச்ச பங்கம் பெற்றால் யோகம் தரும் , 6 ஆம் அதிபதி சந்திரன் 6 ல் இருந்தாலும் 3,11 ல் இருந்தாலும் சுப பலன்கள் ஏற்படும் . 10 ல் நீச பங்கம் பெற்றால் யோகம் தரும் . 11 ஆம் அதிபதி குரு 11 ல் ஆட்சி பெற்றாலும் 6 ல் உச்சம் பெற்றாலும் யோகம் தருவார் . 3,10 ல் நின்றால் சுப்பலன் தருவார் .
மீனம் லக்கினத்திற்கு
ரிசபம் , சிம்மம் , தனுசு , மகரம் 3 ஆம் அதிபதி சுக்கிரன் 3,6,10,11 ல் இருப்பின் தீய பலன் குறையும் 6 ஆம் அதிபதி சூரியன் 3,6,10,11 யோகம் தருவார் . 10 ஆம் அதிபதி குரு 3,6,10 ல் இருந்தால் யோக பலன் தருவார் . 11.ஆம் அதிபதி சனி 3,6,10,11 ல் இருந்தால் யோக பலன் தருவார் .
" பத்து பதினொன்று மூன்று அன்றும்
பகரு மோராறில் பகலவன் நிற்க
எத்திப் பணம் பரிப்பானாம் சென்மன்
இதமாக வாழுவன் விதி தீர்க்கம் தோழி
(இ-ள்) சூரியன் 3,6,10,11 ல் இருந்தால் அடுத்தவர்களின் பொருளை பரித்துக் கொண்டு சுகமாக வாழ்வான் . ஆயுள் தீர்க்கம்
திரு விஜயகாந்த் அவர்கள் ஜாதகம்
3 ல் குரு , 6 ல் புதன் 10 ல் செவ்வாய் ஆட்சியுடன் சகல சௌபாக்கியங்களும் புகழும் பணியாட்கள் குழு எப்போதும் உயர்வான வாழ்வு அமைப்பையும் புகழையும் தந்தது .
அரசியல் யோகம்
" சரியுத யத்தில் சாமியும் நான்ற்றலை வோனும்
தெரிவுற நோக்கக் கூட வெந்நாடுந்திரை கொள்வான்
புரியுத யத்திற் குருவுற நான்கிற் புகராகப்
பரிவொடு பத்தில் சேயும் இருக்கில் பார்வேந்தன் ”
(இ-ள்). ஜென்ம லக்கினத்தில் லக்கினாதிபதியும் 4 ஆம் அதிபதியும் ஒருவரை ஒருவர் பார்க்க அல்லது ஒன்று கூடி இருக்க எந்த நாட்டிலும் வரி வருமானம் பெறுபவனாகவும் பார்வேந்தனாகவும் ஜாதகர் சிறப்புடன் வாழ்வான் .
லக்கினத்தில் குரு இருக்க பத்தில் செவ்வாய் இருக்க 4 ல் சுக்கிரன் இருக்க ஜாதகர் உலகையாளும் மன்னாக விளங்குவான் .
Comments
Post a Comment