யார் ஜோதிடர்

 யார் ஜோதிடர் 


   ஜோதிடம் என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கணிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை பல்லாயிரம் ஆண்டுகளாக உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் இதனை நம்புகின்றார்கள்.

    கோள்களும் வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே சோதிட நூலின் அடிப்படையாகும். இதை கற்றுணர்ந்தவர்கள் ஜோதிடர்கள். 

      ஜோதிடம் என்ற வார்த்தையானது ἀστρολογία என்ற கிரேக்கப் பெயர்ச் சொல்லிருந்து பிறந்ததாகும். இதற்குக் கிரேக்க மொழியில் நட்சத்திரங்களின் கணக்கு என்று பொருளாகும். இச்சொல்லானது நட்சத்திரக் கணிப்பு என்று மாற்றமடைந்தது. இந்த கணித முறையை அறிந்தவர்கள் ஜோதிடர்கள். 


பேசி வரும் நாலாதி பாவனாகிப்   

  பின்னுமொரு திரிகோணம் பாவியேற

 நேசமதா யிரண்டாதி மிதுனத் தோனும் 

நிகழ்த்தெட்டுப் பனிரண்டோன் தானுங்கூடில் 

 வாசமுறக் குருவுடனே சேர்ந்திட்டாலும் 

 மகாவித்தை தனவானாய் மகிழ்ந் தென்னாளும் 

 பேசலாம் சோதிட நூல் கற்றுவாழ்வான் 

   பெருமையதாய் வீமகவி பேசுங்காலே .

    (இ - ள்) நாலாமிடத்ததிபதி , பாவ கிரகமாகி திரிகோணத்தில் இருக்க  இடண்டாமிடத்ததிபதியும் மிதுனத்தோனாகிய புதனும் , எட்டுக்குடையோன் , பனிரண்டுக் குடையோன் சேர்ந்திட்டாலும் , குருவுடன் சேர்ந்திட்டாலும் ஜாதகன் மகாவித்தை தனவானாய் மகிழ்ந்து என்னாளும் , பேசிடுவன் , சோதிட நூல் கற்றுவாழ்வான் என்று வீமகவி பெருமையாய் கூறினார்.

இவர் பிரபலமான ஜோதிடர் பல்வேறு ஜோதிட இதழ்களில் கட்டுரைகளும் பல்வேறு ஜோதிட ஆராய்ச்சிகள் செய்துள்ளார். 

சூரியஜெயவேல் 9600607603



Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்