மணமாகும் முன்னே காம சுகம் ?

 மணமாகும் முன்னே காம சுகம் ? 



   ஜோதிடத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு உணர்வுகள் அதிகம் என்பது ஜோதிடர்களுக்கு தெரியும். ஜாதகத்தில்  கிரகங்களின் அமர்வுகளைப் பொருத்து ஆண் பெண் ஜாதகங்களை இணைப்பது அவசியம். சில ராசிக்காரர்கள் சில ராசிக்காரர்களுடன் சேரவே கூடாது. அதே போலத்தான் சில ஜாதகர் அந்த மாதிரி விசயத்தில் கூடுதல் ஆர்வத்துடன் இருப்பார்கள். எந்த ஜாதகர்கள் அந்த விசயத்தில் எப்படி என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். கணவன் மனைவி உறவு நலமுடன் அமைய கவனமாக ஆராய்வேம். 

   பாலுறவு தொடர்பான ஆர்வம் அதிகம் ஏற்பட, ஒரு நபரின் ராசி, நட்சத்திரங்களை ஆளக்கூடிய அதிபதிகளும், அவரின் ஜனன கால ஜாதகமும் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஜோதிட ரீதியாக யாருக்கு பாலியல் தொடர்பான எண்ணங்கள், ஆர்வம் அதிகம் ஏற்படும் என்பதையும். யாருக்கு குறைவான பாலியல் ஆர்வம் முதல் அதிக பாலியல் ஆர்வம் கொண்ட ராசியினரை வரிசைப்படுத்தப்பட்டுள்ளது

   பாலுறவு தொடர்பான ஆர்வம் அதிகம் ஏற்பட, ஒருவரின் ராசி, நட்சத்திரங்களை ஆளக்கூடிய அதிபதிகளும், ஒருவரின் ஜனன கால ஜாதகமும் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

  இந்த உலகில் அதிக விவாகரத்துகள் ஏற்பட காரணமாக இருப்பது பாலியல் தொடர்பான காரணங்களுக்காகத் தான். சில தம்பதிகள் பாலியல் தொடர்பான தொல்லை அதிகம் தருவதாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியோ அல்லது தாம்பத்தியத்தில் ஈடுபட விருப்பமில்லாமல் இருக்கின்றார் என்ற குற்றச்சாட்டுகள் அதிகம் தற்காலத்தில் எழுந்து அதனாலும் விவாகரத்து வரை அந்த தம்பதிகள் செல்கிறர்கள்.

 1 ) உணர்ச்சிகளின் அழுத்தமும் தைரியமும் கற்பு நெறி தவறுவதற்கு காரணமாகிறது .

 2 ) உணர்வழுத்தம் தரும் 5 ஆம் இடம் , 5 ஆம் அதிபதி , சந்திரன் ஆகிய இவர்களின் சம்பந்தம் 1 , 5 , 7 ஆம் வீடுகளுக்கு ஏற்படுவதால் உணர்வழுத்தமாகிறது . 

3 ) மூன்றாமிடப் பலமும் , செவ்வாயின் துணையும் தைரியம் வழங்குகிறது .

 4 ) விருச்சிக ராசியும் செவ்வாயும் சிற்றின்ப வயமாக்குகிறது 

. 5 ) 1,7 , 8 ஆம் வீடுகளுடனும் , சுக்கிர , சந்திரனுடனும் ராகு நெருங்கிய சம்பந்தம் பெற சிற்றின்ப வயமாக்குகிறது .

 6 ) மேற்கூறிய உணர்ச்சி அழுத்தம் , தைரியம் தரும் கிரக அமைப்புகளுடன் அஷ்டமாதிபதி , சுக்கிரன் , ராகு சம்பந்தம் காமத்திற்கு கண்ணில்லை என்பது போல ஜாதி , மதம் , வயது , பால் வேற்றுமை இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது அவர்களுடைய திசாபுத்தி காலங்களில் சிற்றின்ப வயமாக்குகிறது .

 7 ) ஒன்பதாமிடமும் , குருவும் பலவீனமாவது எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவது போல மேற்படி பலவீனத்திற்குத் துணை செய்கின்றது .

 8 ) ராகுவின் பாதிப்புகளால் நிகழுகின்ற தவறுகள் திருமண நிகழ்ச்சியாவதில்லை . 

9 ) 5 , 7 , 8 ஆம் அதிபதிகள் தங்களுக்குள்ளேயே பரிவர்த்தனம் பெறுவது சிற்றின்ப வயமாக்குகிறது . 

10 ) 7 ஆம் வீடு பலவீனம் , பாதிப்புகளால் , திருமணம் தாமதம் ஏற்படும் நிலைகளால் சிற்றின்ப வயப்படு வதற்கு இந்த நிலையும் துணையாகின்றது . 

11 )ஒருவருக்கு 8 ல் சனி இருப்பதும் அதே போல் இவர் மணக்கும் துணைக்கும் 8 ல் சுப கிரகம் இருந்தால் இவர்களுக்கு பல பிரச்னைகளுடனே தாம்பத்தியம் மேற்கொள்ள முடியும்.

12) இதேபோல மனதுக்காரகன் சந்திரபகவானோடு சுக்கிரபகவான் இணைந்திருந்தால் தன்னைவிட வயதில் முதிர்ந்தவரை திருமணம் செய்துகொண்டு தனது காமபசியை போக்க மற்றவரது மஞ்சத்தில் மயங்கி கிடப்பாள்.இந்த அமைப்பினை சுபர் பார்க்க அல்லது சேர்ந்திருக்கும் வீட்டின் அதிபதி பலப்பட பலனில் மாறுபடலாம். இந்த இணைவு 3,4,5,7,8,12 ல் ஏற்பட்டால்  மேலே கண்ட பலன்கள் நடக்கும்.

  13) ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன், சனி, செவ்வாய் மற்றும் ராகுபகவான் இணைந்து சுபர் பார்வை பெறாமல் 3,4,7,8,12 ஆம் வீடுகளில் இருந்தால் தன்னிலும் தரம் கெட்டவனிடம் செக்ஸ் தொடர்பும் ,ஏற்றுக்கொள்ள முடியாத உறவுகளிடம் செக்ஸ் உறவும் வைத்துக்கொள்வார். காமபிசாசாக இருப்பாள். இவளின் உணர்விற்கு மற்றவர்களால் தீனிபோட இயலாது.

 14).ஒருவரது ஜாதகத்தில் சுபர் பார்வைபடாத சுக்கிரன் - சனி சேர்க்கை மற்றும் சுக்கிரன் - சனி - ராகு சேர்க்கையும் மேற்கண்ட வீடுகளில் ஏற்பட்டால் வெட்கம் கெட்ட காம உணர்வினை தர வாய்ப்பு உள்ளது.

15) ஒருவரது ஜாதகத்தில் மூன்றாமிடம் மற்றும் ஏழாமிட தொடர்பும் காமம் உணர்வு மேலோங்கி இருக்கும்.

இதேபோலவே 3 , 5 மற்றும் 7 ஆம் வீடு தொடர்பு மற்றும பரிவர்தனை போன்ற சம்பந்தம் பெற்றிருந்தால் ஒருவரது காம உணர் அதிகமாகி தடம் புரள வைக்கலாம்.

 16)  ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன், ராகு, செவ்வாய் மற்றும் சந்திரன் போன்ற கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் இயற்கை சுபரின் சேர்க்கையையோ அல்லது பார்வையையோ பெற்றிருந்தால்  ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரிய கொள்கையோடு வாழ்வார்கள். இவர்களது ஜாதகத்தில் 3,4,5,7,8,12 ஆகிய ஆறு வீடுகளில் மேற்கண்ட கிரகங்களின் தொடர்பற்ற நிலையில் காணப்படும்.


சூரியஜெயவேல் 9600607603



Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்