சூரியனைச் சுற்றி வரும் அனைத்து கோள்களும்
சூரியனைச் சுற்றி வரும் அனைத்து கோள்களும் என்றாவது ஒருநாள் ஒரே நேர்கோட்டில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் சூரிய குடும்பத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்று கூற முடியுமா?
இருக்கிறது .
அனைத்து கோள்களும் 1543 ஆண்டுகளுக்கு ஒருமுறை , ஒரே நேர்கோட்டில் வந்துகொண்டுதான் இருக்கின்றன . இந்நிகழ்வுக்கு syzygy என்று பெயர் . இது ஏற்கனவே கி.பி. 949 -இல் நிகழ்ந்திருக்கிறது , இனி கி.பி. 2492 இல் நிகழும் என்று கணிக்கப் பட்டிருக்கிறது .
[ rotation not to count ]
- இராசராச சோழன் ஆட்சிப்பொறுப்பு ஏற்பதற்கு 36 ஆண்டுகளுக்கு முன் கி.பி .949 -இல் இந்த கோள்களின் நேர்க்கோட்டு அமைப்பான syzygy நிகழ்ந்திருக்கிறது
( கூடுதல் இணைப்பாக ., கி.பி 800 முதல் 1200 வரையிலும் ஒரு கழுகுப்பார்வை :
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப் பட்டதுடன் பல்லவராட்சி முடிவுக்கு வந்து, சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராசராச சோழன் (கி.பி 985ல் அட்சித்தலைமை- கி.பி 1014 மறைவு) , அவனது மகனான இராசேந்திர சோழன் ( கி.பி 1012ல் அட்சித்தலைமை) காலத்தில் சோழர்கள், தென்னிந்தியாவில் பலம் மிக்க சக்தியாக உருவெடுத்தனர். )
அந்தக் காலக்காட்டத்தில் இந்நிகழ்வு பற்றிய எந்தக் குறிப்பும் வரலாற்றில் இல்லை .. கல்வெட்டிலும் இருந்ததாக அறியவில்லை .. பெரிய பாதிப்புகள், விளைவுகள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் கண்டிப்பாக ஏதேனும் குறிப்புகள் எங்கேயேனும் கிடைத்திருக்கும் .
.=====================================================
- இதேக் கணக்கீட்டிபடி கி.மு .594 -இலும் syzygy நிகழ்ந்திருக்கிறது
கி. மு. 563 முதல் கி.மு.483 வரை கெளதம புத்தர் (பெளத்தம்) வாழ்ந்த காலம் ஆகும் .அவரது பிறப்புக்கு 31 ஆண்டுகளுக்கு முன் இது நிகழ்ந்திருக்கிறது .
கி.மு. 599 முதல் : கி. மு. 527 வரை மகாவீரர் (சமணம்) வாழ்ந்த காலமாகும் . அவரது பிறப்புக்கு 5 ஆண்டுகளுக்குப் பின் இது நிகழ்ந்திருக்கிறது .
அந்தக் காலக்காட்டத்தில் இந்நிகழ்வு பற்றிய எந்தக் குறிப்பும் வரலாற்றில் இல்லை .. சார்ந்த இலக்கியங்களிலும் இருந்ததாக அறியவில்லை .. பெரிய பாதிப்புகள், விளைவுகள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் கண்டிப்பாக ஏதேனும் குறிப்புகள் எங்கேயேனும் கிடைத்திருக்கும் .
.===================================================
தீர்வு :
சூரியனைச் சுற்றி வரும் அனைத்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் syzygy நிகழ்வின்போது சூரிய குடும்பத்தில் பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை .
.=================================================
ஒருவிளக்கம் : நேர்க்கோடு என்பது (மேல் படத்தில் இருப்பதுபோல்) மேலிருந்து பார்க்கும் பார்வையின் படியே ..
பக்கவாட்டில் , எல்லா கோள்களும் ஒரே மட்டத்தில் இருப்பதில்லை . . அதன் சாய் கோணத்திற்குத் தகுந்தாற்போல கிடைமட்டத்தில் இருந்து உயர்ந்தும் , தாழ்ந்தும் இருக்கும் .
இன்னும் தெளிவாக கீழுள்ள இணைப்பில் பார்க்கலாம்
அறிவியல் அறி-இல் துரை.ந.உ' பாண்டியன் / தூத்துக்குடி (Durai .N. U' PANDIAN)-இன் பதிவு
.==================================================
கூடுதல் செய்தி :
1543 - ஒரு பகா எண் (PRIME NUMBER) ஆகும் .. இதை எந்த எண்ணாலும் வகுக்க முடியாது ..
1543 - ANGEL NUMBER என்னும் சிறப்புத் தகுதியும் உண்டு .
.========================================================
- அவ்வளவே !
Comments
Post a Comment