வாழ்க்கை ஒரு வட்டம்
வாழ்க்கை ஒரு வட்டம்
‘நீர்’தேங்க நீர்வாய்ப்பு அளித்தால்தான், உம்வாழ்வு
வேர்ஊன்ற வாய்ப்பளிக்கும் ‘நீர்’
தனைநம்பி வந்தவரை வீழ்த்த நினைப்பவரின்
வாழ்வுதனை வீழ்த்தும் வினை
புழுஉண்டு மீனாகும்; மீன்உண்டு நாமாவோம்;
நாமாவோம் மீண்டும் புழு
எறும்பைப் புசிக்கும் எதுவும் இறந்தால்
அதனைப் புசிக்கும் எறும்பு
இலையை உணவாகக் கொள்ளும்ஆடு ஓர்நாள்
இலையில் உணவாகும் ஆம்
ஆடால் அழியும் செடி;மரமாய் மாறியபின்
ஓடியதன் கீழொதுங்கும் ஆடு
………
வட்டம் :
வட்டம் வரைந்து விதிக்குள் அடங்கி
முடியும் கணிதமில்லை வாழ்வு
வட்டத்துள் வாழ்ந்தாலும் விட்டத்தைத் திட்டமிட்டுக்
கட்டமைக்க வேண்டியது நீ
சிறுவட்டம் போட்டதற்குள் வாழும் குறுந்திட்டம்
தானின்று இளையோர்க்கு இலக்கு
வாழ்க்கைஓர் வட்டமென்போர், தான்வாழும் வாழ்வின்
விட்டம் அரியாதோர் தான்
==> துரைகுறள்
.
How does Karma affect a person?
See in the following GIF pic Karma affecting a person.
Comments
Post a Comment