நள்ளிரவில் சூரியன் எப்படி சில நாடுகளில் உதிக்கின்றது? இது எப்படி நிகழ்கின்றது?

 நள்ளிரவில் சூரியன் எப்படி சில நாடுகளில் உதிக்கின்றது? இது எப்படி நிகழ்கின்றது?

வணக்கம்.

எளிதான கேள்வியாக தெரிந்தாலும் சிறந்த கேள்வி.

இங்கே முதலில் இருக்கும் மூன்று படங்களை பார்க்கலாம்.

ஒரு பெப்சி கேன் இருக்கிறது. இதில் அதன் பக்கவாட்டில் உடம்பு மட்டும் தெரிகிறது. மற்றபடி மேலே மூடியும் தெரியவில்லை. அடிப்பாகமும் தெரியவில்லை.

அடுத்ததாக ஒருவர் ஒரு பெரிய அறையில் வலது புறந்திருந்து இடது புறமாக எண்ணெய் நிரப்பப்பட்டுள்ள பேரல் ஒன்றை உருட்டி செல்கின்றார்.

இதில் உருட்டிச்செல்லும் சமயம் பேரலின் அடிப்பாகம் தெரியவில்லை. ஆனால் பேரலின் மேல் பாகம் தெரிகிறது.

அதேபோல மேற்காணும் இந்த படத்தில் ஒருவர் பேரலை உருட்டி செல்லும் சமயம் பேரலின் மேல் பாகம் தெரியவில்லை. ஆனால் அதன் அடிப்பாகம் மட்டும் தெரிகிறது.

அவ்வளவுதான் கேள்விக்கு பதில்! இப்போது விரிவாக பார்க்கலாம்.

பூமி இங்கே சுழலுவதைப்போல நாம் நினைப்பது போல 90 டிகிரி செங்குத்தாக சுழலவில்லை.

23.5 டிகிரி சாய்வாக சுழலுகின்றது என்பதை நாம் அறிவோம்.

அப்படி சாய்வாக சுழன்று கொண்டே சூரியனையும் சுற்றி வருகிறது.

இதில் சூரியனைச் சுற்றி வரும் 360 டிகிரி நீள்வட்டப்பாதையில் ஒரு 180 டிகிரி அளவில் பூமியின் வட துருவமானது சூரியனை நோக்கியும் , அடுத்த 180 டிகிரியில் சுற்றி வரும் சமயம் பூமியின் தென் துருவமானது சூரியனை பார்த்து இருக்கும்.

எனவே குறிப்பிட்ட அந்த சமயங்களில் வட துருவத்தில் எந்நேரமும் சூரிய ஒளி இருந்து கொண்டே இருக்கும். மீதி ஆறு மாத காலங்கள் தென் துருவத்தில் சூரிய ஒளி இருந்து கொண்டே இருக்கும்.

அப்படியாக வட துருவத்தில் சூரிய ஒளி விழுந்து கொண்டிருக்கும் பகுதிகளில் எந்நேரமும் பகலாகவும் தென் துருவம் இருளாகவும் இருக்கும்.

இதுவே முறை மாறி தென் துருவத்தில் வெளிச்சம் இருக்கும் சமயம் வட துருவத்தில் ஒளியில்லாமல் இருண்டு விடும். எனவே தென்துருவத்தில் பகலாகவும் வட துருவத்தில் இருக்கும் பகுதியில் இரவாகவும் இருக்கும்.

பூமியை டிகிரி அளவில் பிரிக்கும் சமயம் செங்குத்தாக 90 டிகிரியில் இருந்து 23.5 டிகிரி கழித்தால் 66.5 டிகிரியில் இருந்து வடதுருவ மேல்பகுதி பகுதி முழுவதும் பகலாகவும், மீதி 66.5 டிகிரிக்கு கீழாக இருக்கும் தென்துருவப்பகுதி இரவாகவும் இருக்கும்.

இப்படியாக வருடத்தில் ஆறுமாதங்கள் வடதுருவத்தில் சூரியன் மறையாமலும் ,மீதி ஆறுமாதங்கள் தென்துருவதில் சூரியன் மறையாமலும் இருக்கும்.

இதில் நார்வே போன்ற நாடுகள் அடங்குகிறது. நார்வேயில் இருக்கும் சொந்தம் ஒருவரும் இவ்வாறான சூழ்நிலையை எவ்வாறு சமாளிக்கின்றார்கள் என்று ஒரு முறை விளக்கிக் கூறியிருந்தார்.

அவர் திரு. Karunanithy Vairavan அவர்கள்.

வேனில் காலம் ,வசந்த காலம்,இலையுதிர் காலம் ,குளிர்காலம் வருவதும் இதே சுழற்சியினால் தான்.

வருடத்தில் சிலகாலம் நாம் கிழக்கு நோக்கி நிற்கும் சமயம் நமது நிழல் இடதுபுறமும் ,சிலகாலம் வலதுபுறமும் விழுவதற்கு காரணமும் இதே சுழற்சி தான்.

மே மற்றும் ஜூன் மாதங்களில் பூமியில் சில பகுதிகளில் சூரியக்கதிர்கள் நேரடியாக படும் சமயம் உஷ்னம் அதிகமாகி அக்னி நட்சத்திரம் எனப்படும் காலம் உண்டாவதும் இதே காரணம் தான்.

மேலும் விரிவாக கடைசில படங்களை இணைத்து இருக்கிறேன். முடிந்தவரை விளக்கி இருக்கிறேன்.

இப்படியான பகுதிகளில் வந்தா ஒரே பகல்.இல்லேன்னா ஒரே இரவு!அவ்ளோதான்.

அந்த ஆறு மாதங்களில் அங்கிருப்போருக்கு திருமணம் நடந்தால் முதலிரவு கிடையாது.முதல் பகல் தான்!!!

நன்றி

வணக்கம்

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்