பரிகாரங்கள் ஒரு பார்வை

 பரிகாரங்கள் ஒரு பார்வை

கையொன்று செய்ய விழி யொன்று நடை

கருத்தொன்று எண்ண பொய்யொன்று வஞ்சக

நாவொன்று பேசப் புலால் கமழும்

மெய்யொன்று சார செவியொன்று கேட்க

விரும்பும் யான் செய்கின்ற பூஜை

எவ்வாறு கொள்வாய் வினைதீர்த்தவனே !

பட்டினத்தார்

சூரியன் : கேதுமை வாங்கி ஏழை எளியோருக்கு தராவும். வயதான தந்தைக்கு ஒப்பானவர்களுக்கு தேவையான உதவிகள் செய்தால் வாழ்வு அமையும் சூரிய ஒரையில் குதிரைக்கு கேதுமை உணவு தருவது வழ்வில் நலம் தரும்.

சந்திரன் : நெல் அல்லது அரிசி,மாவு உணவு வாங்கி ஏழை எளியோருக்கு தாரவும். தாயுக்கும்.வயதான பெண்களுக்கு தேவையான உதவிகள் செய்யவும்.

சந்திர ஒரையில் வெள்ளை வாஸ்திரம், தயிர்சாதம் இவற்றை தானம் செய்தால் வாழ்வில் நலம் தரும்.

செவ்வாய் : துவரை பருப்பு வாங்கி ஏழை எளியோ ருக்கு தாரவும்.சகோதரர்க்கும். தன் கீழ் பணியாற்று பவர்களுக்கும் உதவுதல் வாழ்வு நலமுடன் அமையும் பறவைகளுக்கு உணவிடவும். செவ்வாய் ஒரையில் ஆடுகளுக்கு பழம்,புல்,கீரை உணவு தந்தால் வாழ்வில் நலம் கிட்டும்.

புதன் : பாசிப்பயிறு வாங்கி ஏழை எளியோருக்கு தாரவும். புதன் ஒரையில் ஏழை மாணவ/மாணவிகளுக்கு கல்விக்கு தேவையானவை தானம் செய்யவும். குரங்கு,கருடன் இவர்களுக்கு உணவிட் டால் வாழ்வில் நலம் நரும்.

குரு : கொண்டைக்கடலை வாங்கி ஏழை எளியோ ருக்கு குரு ஒரையில் தானம் செய்யவும். யானைக்கு தேவையான உணவு தரவும். ஆசன், குரு,ஆசிரியர்க ளுக்கு தேவையான உதவிகள் செய்தால் வாழ்வில் பல நன்மைகள் கிட்டும்.

சுக்கிரன் : சுக்கிர ஒரையில் வெள்ளை மொச்சை வாங்கி ஏழை/எளியோருக்கு தானமிடவும். வெள்ளை வாஸ்திரம் தானமிடவும். பார்வையிழந்தோர்க்கும், மணம் ஆகாத பெண்களுக்கு,துயரப்படும் பெண்களுக்கும் தாவரங்களுக்கும் உதவிகள் செய்வது வாழ்வில் அனைத்து நலங்களும் கிட்டும்.

சனி : சனி ஒரையில் உளுந்து வாங்கி ஏழை/எளியோர்களுக்கு தானமிடவும். உப்பு கலந்த உணவு மாற்றுதிரனாளிகளுக்கும். பறவைகளுக்கு உணவிடவும். வேலைக்கரர்களுக்கு உதவி செய்யவும்.

ராகு : ராசயனம் கலந்த உணவும். வயதாவர்கள் பெண்கள், விதவைகள் தொழு நோயாளிக்கும், மற்றவர்களுக்கும், உதவுங்கள் வாழ்வில் நலம் கிட்டும்.

கேது : மொச்சை வாங்கி தானம் தரவும். தேரு நாய்கள் தொண்டு நிறுவனங்களுக்கு உதவி சமுதாய நிறுவனம் உதவியாளார்களுக்கு உதவி செய்தால் வாழ்வில் நலம் கிட்டும்.

சூரியஜெயவேல்

9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்