ஜோதிடத்தில் தொழில்
ஜோதிடத்தில் தொழில் தொழில்கள் மற்றும் உத்தியோகம் ஆய்வுகள் செய்வது ஜோதிடர்களுக்கு சவாலான நிலையாகும். இன்றைய நவீன யுகத்திற்கு ஏற்ப பல்வேறு கிளை தொழில்களும். பல்வேறு வேலை அமைப்புகளும். பல்வேறு வியாபார நிலைகளும். இவைகள் அனைத்தையும் ஒன்பது கிரகங்கள் 12 ராசிகளில் உள்ளடங்கி உள்ளது. ஒருவரின் ஜாதகத்தில் அமைந்திருக்கும் கிரக நிலைகள் மற்றும் வீடுகளின் தன்மைகளையும் ராசிகளின் தன்மையும் ஆராய்ந்து அவர்களுக்குரிய தொழில் முறைகளை கூறுவதற்கு முற்படுவோம். வீடுகள் 1 ஆம் வீடு வீடுகளுக்கேற்ப தொழில்கள் சுயதொழில், தன்னைத்தானே ஆளுகிறது. 2 ஆம் வீடு எழுதி வெளியிடுதல். பத்திரங்கள், வங்கி, முதலீடு, நிதி, கற்பித்தல், பேரம் பேசக்கூடிய சொத்துக்கள் போன்றவை. பேசும் திறன், உணவு போன்றவற்றிலிருந்து சம்பாதித்தல். 3 ஆம் வீடு தொழிலில் வழியில் நாட்டம், தைரியம், குறுகிய பயணம், காதுகள், அண்டை, வலது காது, எழுத்து, விற்பனை வல்லுநர்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், அச்சிடுதல், எடிட்டிங் போன்றவை, கைகள் மற்றும் தோள்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது. உளவியல் மற்றும் மனநல மருத்துவர்கள், மல்யுத்த வீரர்கள், விளையாட்டு வீரர்கள். 4 ஆம் வீ...