ஸ்திர ராசியில் சந்திரன்
இன்று ஒரு ஜோதிடத் தகவல்
ஸ்திர ராசியில் சந்திரன் நின்ற பலன் !
திர மென்னும் ராசிதனில் தேய்மதியே நிற்கச்
சனித்த ஜாதகனுடைய திறமையது கேளாய் உரம் பாக்கியம் சேரும் உண்மையது எண்பால்
உற்ற துணையால் பாக்கியம் என்ப அறிது கண்டாய் விரய மந்திரி அரசர் மகிழ்ச்சி உளதாங்கே
மேதினியில் யோகமுளன் அன்றி இச்செல்வன்
பரவிய சஞ்சலம் உடையன் கோபி எனலாகும்
பலர் பெண்ணை பரவிஅனுபவிப்பன் எனக்கூறே!!
ஸ்திர ராசி் ♉ரிசபம், ♌சிம்மம், ♏விருச்சிகம், ♒கும்பம் தேய்பிறை சந்திரன் இருந்தால் செல்வம் பாக்கியங்களும் கிட்டும். துணைவர்களால் பாக்கியம் கிட்டும்.உயர் பதவி, மகிழ்சியான வாழ்வு அமையும். உலகப் பூகழ் அடைவர்கள். மனசஞ்சலம் அடைவர்கள்.கோபப்படுவர்கள். பிறர் தொடர்பு ஏற்படும்.
திர ராசிதனில் வளர் மதியே நிற்க
ஜனித்தோன் தன்திறமையது செப்பக்கேளாய்
விரவிய (வா) தீனமது வேறாய் செல்வ
மிகுந்திடுமே சுயார்ஜிதகன் நிலையாம் அன்றி
பரவிய மன்னர் நேயன் யோகி நாட்பாம்
பலவித்தை மேலோரால் பெருகிநிற்கும்
திரவியமும் விரையமதாம் சகோதிரங்கள்
சிறந்திருப்பார் அன்னித்தில் என்று சொல்ளே
ஸ்திர ராசியில் வளர்பிறை சந்திரன் இருந்தால் சிந்தனைகள் வேறாய் இருக்கும், செல்வ வளம் கிட்டும்.சுய சம்பாதிப்பார்கள். உயர்நிலையில் உள்ளவர்கள் நட்பும் உறவு கிட்டும்.பல தொழில்கள் செய்வர்கள். சகோதரர்க்கு பதிப்புகள் ஏற்படும். வெளியூரில் சிறப்புடன் இருப்பார்கள்.
ஸ்திர ராசிஎதிலும் உறுதியாகவும், எடுத்த முடிவில் நிலையான எண்ணத்தைக் கொண்டவர்கள் ஸ்திர ராசியினர். ஸ்திரம் என்றால் உறுதி. ♉ரிஷபம், ♌சிம்மம், ♏விருச்சிகம், ♒கும்பம் ஆகிய ராசியினர் ஸ்திர ராசியில் அடக்கம்
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment