உபய ராசிகளில் சந்திரன்
இன்று ஒரு ஜோதிடத்தகவல்
உபய ராசியில் சந்திரன் நின்ற பலன்
சிறந்த வளர்மதி உபயராசி தன்னில்
சிறந்து நிற்கில் செல்வீகன் பெண்பால் தன்னால்
பிறந்த மனைபாழகும் மூன்றாம் பூமி
பலன்என்பர் இருபாகம் பூமி ஏகன்
வரம்தனிலும் தத்து புத்திரன் ஆகும்செல்வன்
வாலிபத்தில் சுகம்முடித்தம் மனையில் கூடி
இருந்தவர்க் (கு) அன்னிய கர்மம் செய்வன் அன்றி
ஏழில் அரசர்மெச்சும் வித்தை இனிது உள்ளோன்
வளர்பிறை சந்திரன் உபயராசியில் ♊மிதுனம், ♍கன்னி, ♐தனுசு, ♓மீனம் இவைகளில் இருந்தால் பெண்களால் பிறந்தவீடு பாழகும்.பிறருடைய சொத்தை அனுபவிப்பார்கள். இரண்டு பிரிவு இருக்கும். வரத்தில் பிறந்தவர்கள். சிலர் தத்து புத்திரர்கள் ஆவர்கள்.இளமையில் திருமணம் ஆகும்.அன்னியர்க்கு கர்மம் செய்ய சூல்நிலை ஏற்படும். பலர் பாராட்டும்படியான தொழில்நுட்பம் உள்ளவர்கள்.
கொண்ட உபயந்தனில் தேய்மதியே நிற்க
குறித்த ஜாதகரின் பலனைக்கேள்
கண்டிடுவய்யோக முளான் கன்னியரின் பகைவன்
கருத்துடையர்தமைக்கூடி கனமாக வாழ்வன்
உண்டாகும் மன்னவராற் செல்வீகன் தான்
யோகியர் கடமைக்கூடு உண்மையாளன்
தொண்டர்களை அஞ்ஞாறும் சேர்ந்துநட்பாய்
சூழ்ந்திருப்பன் யோகியெனச் சொல்லதாமே
உபயராசியில் ♊மிதுனம், ♍கன்னி, ♐தனுசு, ♓மீனம் இவைளில் தேய்பிறை சந்திரன் இருந்தால் பெண்களால் நன்மையில்லை, தலைசிறந்த அறிவுடைய பொறியோர்களிடம் தொடர்புடையவர்கள். உயர் அந்தஸ்தை பெறுவன். ஞானிகளுக்கு பணிவிடை செய்வர்கள். எப்போதும் இவர்களை சுற்றி பலர் இருப்பர்கள். ஞான மார்க்கத்தை அடைவர்கள்.
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment