மாற்றுத்திறனாளிகள்
இன்று ஒரு ஜோதிடத் தகவல்
மாற்றுத்திறனாளிகள்
லக்கினம் 5-9 மூன்றிலும் முதல் திரேகாணத்தில் சனி சந்திரன் , சூரியன் நிற்க இவர்களை இராகு அல்லது கேது பார்க்க சப்பாணியாகவும் , முடமாகவும் ஊர்ந்து செல்லும்படி மாற்றுத்திறனாளியாக ஜாதகர்/ஜாதகியர் பிறப்பார்கள்.
மீன லக்கினம் உதயமாகி முதல் திரேகாணமாகி அதில் சனி செவ்வாய் , சந்திரன் கூடி நிற்க ஜாதகர்/ஜாதகியர் மாற்றுத்திறனாளியாக பிறப்பார்கள் .
லக்கின முதல் திரேகாணத்தில் செவ்வாய் நிற்க இதை சனி , சந்திரன் சூரியன் பார்க்க இடதுகைத் தோள் பட்டை பாதிக்கப்படும் இதையே கேது பார்க்க வலது கை தோள் பட்டை பாதிக்கப்படும் .
9 - வது திரேகாணத்தில் சூரியனுடன் பாபிகள் கூடி நிற்க தலை பாதிக்கப்படும் அல்லது இரட்டை மண்டையாகும் .
முதல் திரேகாணத்தில் பாபிகள் நிற்க சனி , சந்திரன் , சூரியன் அந் பாபிகளைப் பார்க்க கால்கள் மட்டும் மாற்றுத்திறனாளியாக பிறப்பார்கள்.
இலக்கினத் திரேக்கா ணத்துக்
ஏழொன்பான் திரேக்கா ணத்தில்
சலத்துறு பாவர் நிற்கில்
தலைகைகால் குறையாய்த் தோன்றும் !
சொலப்படு மகரம் தன்னில்
சூரியன் சனியன் திங்கள் பெலத்துடன் உதய மாகப்
பிறந்தவன் குறளை யாவான் ! (இ-ள்) லக்கினம் எந்தத் திரேக்காணத்தில் அமைந்திருக்கிறதோ , அதிலிருந்து 7 , 9 ஆவது திரேக்காணங்களில் பாவக் கிரகங்கள் நின்றிருந்தால் அந்த ஜாதகன் , தலை , கை , கால் ஆகிய உறுப்புகளில் ஏதாவதொன்றில் ஊனமுடையவனாகப் பிறப்பான் .
மகரம் லக்கினமாக அமைய , அதில் சூரியன் , சனி , சந்திரன் ஆகிய மூவரும் அமர்ந்திருந்தால் , அந்த ஜாதகன் குள்ளமானவனாக இருப்பான் .
சித்துள ஏழில் சேயும்
இரண்டில் திகழ்பானு
பத்தினில் இந்து முற்றிடில்
அங்கம் பழுதாவன் !
ஒத்திடு கடக லக்கனம்
அமைய ஒருபத்தாய்
உற்றிடு மதியைச் சனிதான் பார்க்கில் உடல் ஊனம் !
(இ-ள்) 7 - ஆம் இடத்தில் செவ்வாய் , 2 - ஆம் வீட்டில் சூரியன் , 10 ஆம் வீட்டில் சந்திரன் என்று அமர்ந்திருந்தால் உடல் குறை உறுப்புக் உண்டாகும் .
கடகம் லக்கினமாக அமைந்து , 10 ஆம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்க , சந்திரனைச் சனி பார்வையிட்டால் உடல் ஊனம் உண்டாகும் .
ஜாதக #சிந்தாமணி
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment