கொடிமாலை சுற்றி பிறப்பு

 இன்று ஒரு ஜோதிடத் தகவல்

கொடிமாலை சுற்றி பிறப்பு !!

மேஷம் , சிம்மம் , ரிஷபம் லக்கினமாகில் இதை சனி , செவ்வாய் பார்த்தால் செங்கொடி , கருங்கொடி இரண்டும் சுற்றி பிறக்கும். செவ்வாய் மட்டும் பார்த்தால் செங்கொடியும் , சனி மட்டும் பார்த்தால் கருங்கொடியும் சுற்றி ஜெனிக்கும் . சூரியன் பாம்புடன் கூடி நிற்க தலையில் கொடி சுற்றி பிறக்கும் .

மேலே கூறிய லக்கினங்களில் சனியும் செவ்வாயும் , இருந்து விட்டால் தொப்புள் கொடி சுற்றிப் பிறக்கும் .

சூரியன் , குரு , பாம்பு கூடி குரு வீட்டில இருக்க மாலை போட்டு பிறக்கும் .

சனி அல்லது செவ்வாய் வீட்டில மூன்றாவது திரேகாண லக்கினமாகில் சர்ப்பம் தலையில் சுற்றிப்பிறக்கும் .

சிந்தைகூ ரிடப மேடம் சிங்கமே

உதய மாகப்

புந்தியும் சனியும் கூடப்

பொருந்திடும் மகவே தோன்றில் கொந்தவிழ் உடலில் பின்னிக்

கொடிசுற்றிப் பிறக்கும் என்பார் அந்தர மின்னைப் போலும்

அழகிய இடையி னாளே .

(இ-ள் ) ஆகாயத்தில் உள்ள மின்னலைப் போல் மெல்லிய அழகிய இடையையுடைய பெண்னே !

ரிஷபம் , மேஷம் , சிம்மம் ஆகியவற்றுள் ஒன்று லக்கினமாக அமைய , அந்த லக்கினத்தில் புதனும் சனியும் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகன் உடம்பில் கொடி சுற்றிப் பிறந்திருப்பான் .

விரவிலக் கினத்தில் பாவர்

மேவிடக் கொடியோர் பார்க்கக் கரியராக் கேது கூடிக் கடியகோள்

வீடு தானே

பரவுலக் கினம தாகில் பண்புறு

தேகம் மீதில்

தரணியில் மாலை யிட்டுத்

தான்கொடி சுற்றும் தானே .

(இ-ள் )பாவர்களின் வீடுகளில் ஒன்று லக்கினமாக அமைந்து , அதில் ராகு அல்லது கேது பாவர்களின் சேர்க்கையுடனும் பார்வையுடனும் அமர்ந்திருந்தால் , அந்த ஜாதகன் மாலை சுற்றியும் கொடி சுற்றியும் பிறப்பான் .

நடக்கும்லக் கனம்தீக் கோட்கு

நடுவாகப் பாம்பு நிற்கத் தொடுத்தலக் கினத்தைச் செவ்வாய் சூரியன் பார்க்கில்

தானும்

வடுத்தவிர் உதயம் தன்னை

மந்தன்சேய் பார்க்கு மேனும் தடுத்திடாக் கொடியே சுற்றித்

தரணியில் பிறப்பன் மாதே ! (இ-ள்) பாவக்கிரகங்களுக்கு மத்தியில் லக்கினம் அமைந்திருக்க , அதில் ராகுவோ கேதுவோ அமர்ந்திருந்து , லக்கினத்தைச் செவ்வாயும் சூரியனும் பார்த்திருந்தாலும் அல்லது சனியும் செவ்வாயும் பார்த்திருந்தாலும் ஜாதகன் கொடி சுற்றிப் பிறந்திருப்பார்கள்

சாதக #சிந்தாமணி

செப்புவதாம் ஆடுவிடை அரிஉதய மாகி

குருப்படச்சேய் இருகதிரும் அரவுசனி நோக்கில்

கொடிசூடும் படிமிசையில் குழவிபிறந் திடுமே .

(இ-ள்) ரிஷபம் , சிம்மம் ஆகியவற்றில் ஒன்று ஜென்ம லக்கினமாக இருக்க , சூரியன் , செவ்வாய் , சந்திரன் , சனி ,ராகு ஆகியோர் லக்கினத்தைப் பார்த்தால் அந்தக் குழந்தை கொடி சுற்றி பிறக்கும்.

சூரியஜெயவேல் 9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்