சர ராசியில் சந்திரன்
இன்று ஒரு ஜோதிடத்தகவல்
உங்களுடைய சந்திரன் சர ராசியில் இருந்தால் ❓
கடகம் அதில் வளர் மதியே நின்றிடிலோ நன்மை
கலை துலையாம் கடனலே நீற்கத் தீதாம்
திடமில்லை அன்னைக்கு நலிவாகும் தேகம்
சிறப்பில்லை பூர்வம் விட்டுபிரிதால் காட்டும்
விலைமாதர் தமைக்கூடி வேதனைகள் படுவன்
மேதினில் தேய்மதிக்கு செல்வம் மிக உளனாம்
உடை ஆடை அணியவலன் உண்மை உடையன் காண்
உற்ற மனையாள் வழியில் செல்வம் உளன் அல்லால்
உங்களுடைய 🌙சந்திரன் உங்கள் ஜாதகத்தில் வளர்பிறை 🌙சந்திரன் ♋கடகத்தில் சிறப்பான வாழ்வு அமையும் .
♈மேஷம், ♎துலாம், ♑மகரம் இவைகளில் இருந்தால் நன்மை தருவதில்லை அன்னைக்கு உடல் பலவீனம் அடிக்கடி நோய் ஏற்படும்.நீங்கள் பிறந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் வாழ்வீர்கள். பிறர் தொடர்பு ஏற்பட்டு வாழ்வில் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள்.
♈மேஷம், ♎துலாம், ♑மகரம் தேய்பிறைச் சந்திரன் இருந்தால் செல்வ வளமை கிட்டும்.சிறப்பன ஆடைகளை அணிவர்கள்.நேர்மையுடன் இருப்பார்கள். மனைவி /கணவன் வாழியில் செல்வம் கிடைக்கும்.
குறிப்பு ;-
இவை போதுவனவை மற்ற கிரகங்களின் இணைவுகளுக்கு ஏற்ப பலன் மறுபடும்.
பன்னிரண்டு ராசிகளும் சர, ஸ்திர, உபய ராசிகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.
♈மேஷம், ♋கடகம், ♎துலாம், ♑மகரம் ஆகியவை சர ராசிகளாகும்.
♉ரிஷபம், ♌சிம்மம், ♏விருச்சிகம், ♒கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும்.
♊மிதுனம், ♍கன்னி, ♐தனுசு, ♓மீனம் ஆகியவை உபய ராசிகளாகும்.
சர ராசிகள் - ♈மேஷம், ♋கடகம், ♎துலாம், ♑மகரம்
சரம் என்றால் அம்பு. வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் சரம் சரமாக, சச்சரவெனப் போய் கொண்டே இருக்கக் கூடிய ராசிகள் என பொருள் படும். அவ்வளவு வேகம் கொண்டவர்கள்.
♈மேஷம் ♋கடகம் ♎துலாம் ♑மகரம் ராசிகளில் ராசியாக அமையப் பெறுவது சர ராசியாகும்.
சர ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்❓
🌟 எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.
🌟 மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கக்கூடியவர்கள்.
🌟 எதிலும் துரிதமாக செயல்படக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment