அரசியலும் பதவியும்
அரசியலும் பதவியும்
#சோதிட ஒயில் கும்மி
மையினிற் சேயும் மதியுங் கடகத்தில்
வாங்குஞ் சிலையாற்பொன் னெறிடவும் வண்ணமுடற் பொன்நிறமா மின்னுசுதன் நன்னிலமாள்
மன்னவ னான்று வாய்மலர்வாய் 26-பாடல்
(இ-ள்) மேசம் லக்கினமாகி செவ்வாய் இருக்க , கடகத்தில் சந்திரன் இருக்க், தனுசில் குரு இருக்க பிறந்த ஜாதகர் பொன் நிறமுடையவன் .பூமி முழுவதும் அளும் அரசனாவான்.
மாசறு லக்கின மேடம தாய்நண்டில்
மந்திரியு மகரச் சேய்மருவ
மறைநூல்களி னுறைபல்வகை
புரிகேள்வியன் உருமன்மதன்
மண்ணுல காளர சண்ணலென்பாய 27
(இ-ள்) மேசம் லக்கினம் பலமுடன் அமைந்து . கடகத்தில் குரு இருக்க ,மகரத்தில் செவ்வாய் இருக்க வேதசாஸ்திரங்களைக் கற்றறிந்தவனும் மன்மதனை போன்ற அழகனவர் அரச வாழ்வு அமையும் .
மேடத்தில் பாவ ரிருக்கவி ரண்டினில்
வெய்யோ ருடன்சனி நின்றிடினும்
மெய்யிற்பிணி கையிற்புணும் நையத்தரும் வையத்தினில்
மேவுளர் வாய்விக்கில் வேந்தனென்பாய் 32
(இ-ள்) மேசம் லக்கினமாக அதில் பாவிகள் இருக்க , இரண்டில் சூரியன்,சனி இருக்க பிறந்தவர்கள் தீரத நோயும் ,கைகளில் புன்களும் துண்பம் தரும்.தனது பேச்சில் அரசனைப்போல் இருப்பார்கள்.
மாடுதிக்க வதில் மந்திரி யுஞ்சசி
மன்னிடப பாக்கியஞ் சுங்கனேற
மதிவல்வ னிதிவில்லியன் விதிநல்லவன்ப தியாளொரு
மன்னனொப் பாடுமன வாழ்வனாம் 33
(இ-ள்) ரிசபம் லக்கினமாகி குரு , சந்திரனும் கூடியிருக்க ,மகரத்தில் சுக்கிரனிருக்கப் பிறந்தவர்கள் சிறந்த மதியூகி,பலசாலியும், தர்மவானும் அரசனுக்கு ஒப்பன வாழ்வமையும் .
கள்வ னுதிக்க மறையவன் பார்க்கவுங்
கலைமதி கேந்திரந் தானிருக்கக்
கழலுஞ்சுபர் விழிசெய்திட எழிலம்புவி முழுதும்புரி
காவலற் கொப்பெனக் கண்டுரைப்பாய் 41-பாடல்
(இ-ள்) கடகம் லக்கினமாகி குரு பார்க்க , சந்திரன் 4-7-10-ல் ஏதாவது ஒரு ராசியில் இருக்க இவர்களை சுப கிரகங்கள் பார்த்தால் ஜாதகர் உலகம் முழுவதும் ஆளக்கூடிய அரசனாவான் .
சிங்க முதித்திற் றீய ரிருக்கவுந்
திவ்ய சபர்கள்கண் பார்த்திடவும்
செல்வத்திரு வல்வித்தகன் கல்வித்திரு மல்கத்தருஞ்
செகமன்னர்க் கொப்பெனச் செப்பிடுவாய்
(இ-ள்) சிம்ம லக்கினத்தில் பாவாக்கிரகங்கள் இருக்க லக்கினத்தை சுப கிரகங்கள் பார்த்தால் ஜாதகர் தனவான்,வித்வான், சிறந்த கல்விமான்,சுக போகமுடன் அரசனுக்கு இணையாக வாழ்வர்கள்.
சுந்தரி யாங்கன்னி தோன்றிடக் கேந்திர
கோணத்தி லேசுபர்பார்த் திருக்கச்
சொல்லால்வெகு பொல்லாரையும் வெல்லுந்தொழில் வல்லானிவன்
தொல்லுல காள்மன்னரீக் கொப்புரைபாய்
47-பாடல்
(இ-ள்) கன்னி லக்கினமாகி கேந்திர 4-7-10-ல் அல்லது கோணங்களில் 1-5-9-ல் சுப கிரகங்கள் இருந்து.லக்கினத்தை சுப கிரகங்கள் பார்த்தால் ஜாதகர் தனது சிறந்த பேச்சாளனாவான் ,எதிரிகளையும் வெற்றி கொள்வார்கள் அரசன் போல வாழவா்கள்.
சூாியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment