ஆணும் & பெண்ணும்
ஆணும் & பெண்ணும் மனித இத்தைப் பொறுத்தவரை ஆண்கள் யாரும் முழுமையான ஆண்களும் இல்லை. பெண்கள் யாரும் முழுமையான பெண்களும் இல்லை . எல்லோரும் ஆண்தன்மை பெண்தன்மையின் வேறுபாடான கலப்பில் திகழ்பவர்களே குரோமோசோம் கலப்பில் பெண்மைக்குரிய சதவிதம் அதிகமானால் பெண்ணின் தோற்றத்துடன் பிறக்கிறார்கள் . ஆண்களுக்குரிய சதவிதம் அதிகமானால் ஆணின் தோற்றத்துடன் பிறக்கிறார்கள் . இரண்டு தன்மையும் ஏறத்தாழச் சமமாய் அமைந்துவிட்டால் அலிகளாய்த் தோற்றமளிக்கிறார்கள் இதுபற்றி வள்ளல் பெருந்தகை குறிப்பிடும் போது , " பெண்ணினுள் ஆணும் ஆணினுன் பெண்ணும் ஆண்ணுற வகுத்த அருட்பெருஞ்சோதி , "பெண்ணியல் ஆணும் ஆணியல் பெண்ணும் அண்ணுற அமைத்த அருட்பெருஞ்சோதி , " பெண்திறல் புறத்தும் ஆண்திறல் அகத்தும் அண்டுற வகுந்த அருட்பெருஞ்சோதி . " பெண்ணியல் மனமும் ஆணியல் அறிவும் அண்ணுற வகுந்த அருட்பெருஞ்சோதி என்று விரிவாய்ப் பாடுவார் நன்றி சூரியஜெயவேல் 9600607603