யோகமும் யோகபங்கமும்

 யோகமும் யோகபங்கமும்

யோகம் என்பது வடசெல் இதற்கு சேர்க்கை என்று பொருள் இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட கிரகங்களின் இணைவிற்கு யோகம் என்று பெயர் ஜோதிடத்தில் யோகம் என்பது முக்கியமான அங்கமாகும் இந்த யோகம் எப்படிசெயல் படுகின்றது என காண்போம்.

காலத்தின் படியும் இடத்திற்கு ஏற்றது போல வயது பூர்வீக அடிப்படையில்தான் செயல்படுகிறது அதற்கு நம் முன்னோர்கள் நமக்கு பலவிதி முறைகளை அளித்துள்ளார்கள்.

லஷ்மீ ஸதாநந்த்ரி கோணம்ஸ்யாத்

விஷ்ணு தானஞ்ச கேநந்ரகம்யோ

ஸமபந்த பாத்ரேன ராஜ யோகாதி சம்பவேத்

( இ-ள்) 1 - 5 - 9 ஆம் வீடுகள் லச்சுமிஸ்தானம் - 1 - 4 - 7 - 10 ஆம் விஷ்ணுஸ்தானம் எனப்படும். 1 - 5 - 9 / 4 - 7 - 10 - ஆம் ஒருவருக்கு ஒருவர் சேர்க்கை பெற்றிருந்தால் யோகத்தை தருவார்கள்.

சுப அசுப இரு பிரிவுகள் உள்ளது சுப யோகத்தில் யோக பலனும். அசுப யோகத்தில் தீய பலனும் நடைபெறும்.

சுப யோகங்கள் எப்போதும் யோகத்தை தருவார்கள். ஆட்சி, உச்சம், நட்பு, மூலத்திரிகோணம், 1 - 5 - 9 - சுபர்களின் தொடர்பு பெற்றிருக்க வேண்டும்.

கேந்திர கோணங்களதில் கேடில்லாக் கோள் கூடி

ஆர்ந்திருக்க அன்னிய கோணத்தின் போந்தமலர்

கண்ணாலே பார்த்திடினுங் கூடக்கலந்திடினும்

நண்ணு மன்னர் யோகநல்கு நாடு (சந்திரகாவியம்)

(இ-ள்) 1 - 5 - 9 / 4 - 7 - 10 - என்னும் கேந்திர கோணங்களில் குறிப்பிட்ட லக்கினத்திற்கு தீமைதராத சுபக்கிரகங்கள் கூடியிருந்தாலும் (அ) மற்றொரு கோணத்திலிருந்து பார்த்தாலும் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் ராஜயோகம் அடைவார்கள்.

பாபகிரகம் எப்போது யோகம் தருவார்கள் 1 - 4 - 7 - 10 - ல் ஆட்சி, உச்சம், மூலத்திரி கோணத்தில் இருந்தால் சுப பலனைத்தருவார்கள்.

கொடி யோர்கள் கேந்திராதிபதிகளானால்

கொடார்கள் கொடிய பலன்

(இ-ள்) சுபர்கள் எப்போது யோகம் தரமாட்டர்கள் 6 - 8 - 12 ன் தொடர்பு நீச்சம் 4 - 7 - 10 - ஆம் ஆதிபத்தியம் பெறும் போது பாவிகள் இணைந்தால் யோகத்தை தரமாட்டார்கள்.

சுபர்கள் கேந்திராதிபதிகளானால்

கொடுப் பார்கள் கொடியபலன்

(இ-ள்) பாவிகள் எப்போதும் யோகத்தை தரமாட்டார்கள் அதிக பலம் இழந்து இருந்தாலும் யோகத்தை தரமாட்டார்கள். சந்திரன், செவ்வாய், சனி இரவில் பலமுடையவார்கள்.

சூரியன், குரு, சுக்கிரன் பகலில் பலமுடையவர்கள் புதன் பகலிலும் இரவிலும் பலமுடையவர்.

சுபக்கிரகம் ;- குரு, சுக்கிரன், சந்திரன் பாவியுடன் கூடாத புதன்

பாவிகள் ;- சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது, தேய்பிறை சந்திரன், பாவிகளுடன் கூடிய புதன்.

கிரகத்தின் இணைவுகளில் யோகங்கள் ;- சிறப்பு விதிகள்

சூரியனுடன் ;- புதன், குரு, செவ்வாய்

சந்திரனுடன் ;- செவ்வாய், சுக்கிரன்

செவ்வாயுடன் ;- குரு, சூரியன், சந்திரன்

புதனுடன் ;- செவ்வாய், சுக்கிரன், சனி

குருவுடன் ;- செவ்வாய், சூரியன், கேது, சனி

சுக்கிரனுடன் ;- சனி, புதன், குரு

சனியுடன் ;- சுக்கிரன், புதன், குரு

ராகு & கேது இணைவுகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.

1 - 5 - 9 - ஆம் அதிபதிகள் 4 - 7 - 10 - ல் இருந்தாலும், 4 - 7 - 10 -ஆம் அதிபதிகள் 1 - 5 - 9 - ல் இருந்தாலும் யோகம் கிட்டும். ஆனால் 1 - 5 - 9 - ஆம் அதிபதிகள் தசாபுத்தி காலங்களில் அதிக யோகத்தை செய்வார்கள்.

கிரி நாலுக்குடை யோனைப் பாரு - அவர்

கிரி நாலில் திரிகோணம் கிரியிலேற

பெருங் கல்வி கன்று காலி - சென்மன்

பிரபலமாகவே வாழ்வாண்டி தோழி - சங்கர

(இ-ள்) லக்கினத்திற்கு 4 - ஆம் ஆதிபதி 4 - ல் அல்லது 1 - 5 - 9 - ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தால் சிறந்த கல்வியும், செல்வமும், கன்று, வாகனமும் பெற்று பிரபலமாகவே வாழ்வார்கள்.

( பிரபல சாமியார் ஒருவருக்கு உள்ளது )

செவ்வாய், சூரியன், சனி 1 - 4 - 7 - 10 - ல் இருந்தாலும் அதிபதிகளனாலும் யோகத்தை செய்வார்கள்.

சூரியன், சந்திரன் கூடி 2 - 9 - 10 - ல் இருந்தால்

சூரியன் குரு 1 - 11 -ல் கூடியிருந்தாலும்

சூரியன் சுக்கிரன் 8 - 9 + 10 - ல் கூடியிருந்தாலும்

இவர்கள் லக்கினத்தில் இருந்தால் யோகத்தை தருவார்கள்.

இனி கிரகத்திற்கு கிரக நிலைகளைப் பற்றி ஆராய்வேம்.

சூரியனுக்கு ;- 4 - 5 - 9 - ஆம் வீடுகளில் குரு, சந்திரன், செவ்வாய் ஜாதகர் யோகத்தை அனுபவிப்பார்கள்.

சந்திரனுக்கு ;- 4 - 5 - 9 - 10 - ஆம் வீடுகளில் குரு, சுக்கிரன், சனி இருந்தால் யோகத்தை தருவார்கள்.

செவ்வாய்க்கு ;- 4 - 5 - 9 - 10 - ஆம் வீடுகளில் குரு, புதன், ராகு இருந்தால் யோகத்தை தருவார்கள்.

புதனுக்கு ;- 4 - 5 - 9 - 10 - ஆம் வீடுகளில் சனி, குரு , கேது இருந்தால் யோகத்தை தருவார்கள்.

குருவுக்கு ;- 4 - 5 - 9 - 10 - ஆம் வீடுகளில் செவ்வாய், சுக்கிரன், சனி இருந்தால் யோகத்தை தருவார்கள்.

சுக்கிரனுக்கு ;- 4 - 5 - 9 - 10 - ஆம் வீடுகளில் குரு, சனி, கேது இருந்தால் யோகத்தை தருவார்கள்.

சனிக்கு ;- 4 -5 - 9 - 10 - ஆம் வீடுகளில் புதன், சுக்கிரன், கேது இருந்தால் யோகத்தை தருவார்கள்.

ராகு & கேது 3 - 5 - 9 - ஆம் வீடுகளில் சூரியன், சுக்கிரன், சனி இருந்தால் யோகத்தை தருவார்கள்.

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் இந்த ராசியில் கிரகங்கள் இருந்தாலும் யோகத்தை தருவார்கள்.

1. லக்னம் , லக்னாதிபதி பலம் இழந்திருந்தால் யோகமில்லை

2.) சூரியனுடன் 5 பாகை அளவில் கிரகங்கள் சக்தி இழந்தால் யோகமில்லை .

3) உச்சம் பெறும் கிரகம் வக்ரம் பெறின் யோகமில்லை .

4 ) பகை கிரகங்கள் 5 பாகைக்குள் கிரக யுத்தம் செய்தால் யோகமில்லை .

உதாரணம் ;- குரு , சுக்கிரன் ,

புதன் - செவ்வாய் , சனி - செவ்வாய் , சந்திரன் - புதன் , சூரியன் - ராகு ,

சந்திரன் - கேது , குரு - புதன் .

5) செவ்வாயின் பார்வையும் , சனியின் பார்வையும் எங்கு சேர்ந்தாற்போல் விழுகின்றதோ அந்த இடம் அங்குள்ள கிரகத்தால் யோகமில்லை .

6 ) பரிவர்த்தனை யோகம் சஷ்ட அஷ்டகம் ( 6-8 ) பெற்றாலோ அல்லது மறைவு வீடுகள் ஆனாலோ , பாதக வீட்டில் இடம் பெற்றாலோ யோகமில்லை .

7 ) செவ்வாய்க்கு 6 , 7 ல் சூரியன் நிற்பின் யோகமில்லை .

8) சந்திரனுக்கு 12 ல் குரு தான் கொடுத்த பலனை தானே பறிக்கிறார்- தனது தசையின் பின் பகுதியில் .

9) சூரியன் நின்ற வீட்டிற்கு 8 ஆம் அதிபதியின் சேர்க்கை சூரியனுக்கு ஆகாது .( மற்ற கிரகங்களுக்கும் இவ்விதி ஓரளவு பொருந்தி வரும் ).

10). எந்த ஜாதகத்திலும் 1 , 5 , 9 ஆம் பாவங்களோ அல்லது அதன் அதிபதிகளோ கெட்டால் யோகத்தை தடைசெய்யும்.

11). பெண் ஜாதகத்தில் 9 ல் சுபர் நிற்காவிடில் தோஷத் தடை ஏற்படும் . யோகம் தடைப்படும் .

12) ராகுவுக்கு 8 - ல் சந்திரன் - சந்திரனின் காரகத்துவம் கெடும் .

13) லக்னாதிபதி சுக்கிரனாகி குருவுக்கு 8 - ல் நிற்பின் பலன்கள் தடைப்படும் .

14). நிரந்தர பகைக் கிரகங்கள் நேருக்கு நேர் இருந்தால் யோகமில்லை .

15) சார பலம் பெறாவிடினும் யோகமில்லை .

16) சூரியன் & சந்திரன் இருவரும் பலம் இழந்திருந்தால் யோகமில்லை.

சூரியஜெயவேல் 9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்