சர ராசியில் செவ்வாய்

 இன்று ஒரு ஜோதிடத் தகவல்

சரத்தில் செவ்வாய் இருந்தால்

பலம் எனும் சரத்தினில் நிலமகன் நிற்கப்

பற்றியே பிறந்த சாதகன் தான்

குலமதில் சீலன் அரசனம் போலக்

கொள்கை காணி யோகவன் சத்துரு

கலகி காண் களத்திதேகம் நலியும்

கனமுடன் பொருள் உளன்என்க

விலகியே பூமி அன்னியதேசம்

ஏவுவன் சுகமுளன் இவனே

(இ-ள்) சரராசியில் செவ்வாய் இருக்க பிறந்தவர்கள் சிறந்த தலைமை பதவிகள், அதிகார தோற்றம் உள்ளவர்கள். பூமி லாபமுள்ளவர்கள்.எதிரிகள் பயப்படுவர்கள். மனைவியின் உடல் பலவீனமடையும்.பொருள் சேர்க்கை ஏற்படும். பிறந்த ஊரைவிட்டு வெளியூரில் சுகமுடன் வாழ்வர்கள்.

பன்னிரண்டு ராசிகளும் சர, ஸ்திர, உபய ராசிகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.

சர ராசிகள் - ♈மேஷம், ♋கடகம், ♎துலாம், ♑மகரம்

சரம் என்றால் அம்பு. வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் சரம் சரமாக, சச்சரவெனப் போய் கொண்டே இருக்கக் கூடிய ராசிகள் என பொருள் படும். துரிதமாக செயல்படுவார்கள். வேகம் கொண்டவர்கள்.

சூரியஜெயவேல் 9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்