சரம் ஸ்திரம் உபயத்தில் சூரியன்
இன்று ஒரு ஜோதிடத்தகவல்
சரம் ஸ்திரம் உபயத்தில் சூரியன்
கன்னியாழ் சிலைமீனத்திற் கதிர் நிற்க ஜனித்தபேர்க்கு
வினன்மாநேத்திரதோடம் மிக்ககல்வியனாஞ்செல்வன்
மன்னனேமறியுநண்டு மகரமான் துலையி நிற்க
உன்னியதருமங்கீர்த்தி யுற்றிடுமியோகவானே
(இ-ள்) உபய ராசிகளான ♊மிதுனம், ♍கன்னி, ♐தனுசு, ♓மீனம் இராசிகளில் ☀சூரியன் இருந்தால் கண்களில் பாதிப்பும், சிறந்த கல்வி ஞானமும் , செல்வ வளமை உள்ளவர்கள்.
சர ராசிகளான ♈மேஷம், ♋கடகம், ♎துலாம், ♑மகரம் இராசிகளில் ☀சூரியன் இருந்தால் தானம் தர்மகாரியங்களில் இடுபடுவர்கள், புகழும் கிட்டும், யோகங்களை அனுபவிப்பர்கள்..
யோகவானுபயந்ன்னி லுற்றவெய்யவனே நிற்க
பாகமாமனையைவிட்டுப் பகரன்யமனையிருப்பன்
வேகமே நடையில்வல்லான் மிக்கவேதியர் கணட்பன்
தோகையர் மிகவுஞ் சூழச்சுகமனுபவிப்பனாமே
(இ-ள்) உபய ராசிகளான ♊மிதுனம், ♍கன்னி, ♐தனுசு, ♓மீனம் ராசிகளில் ☀சூரியன் இருந்தால் பிறந்த இடத்தை விட்டு விட்டு வேறிடத்தில் வாழ்வர்கள், வேகமாக நடப்பர்கள்,வேதநூல் அறிந்தவர்களிடம் மரியாதையுடன் இருப்பர்கள், பெண்கள் அதிகம் சூழ்ந்திருக்க சுக போகமுடன் வாழ்வர்கள்.
அரிதேளாங் குடமிடப மிரவி நிற்கிலாயுளது தீர்க்கமுள னறிவுமேன்மை
தெரியவல னன்னியார் பொருளுங்கூடுஞ் சிறப்புடையன் பூமியினாற் செல்வமுள்ளான்
உரியாமன் னவர்நேயன் யோகவானா முண்மைவித்தை யுடையவனா மெனக்கண்டோது
பிரியமுடன் தெய்வபத்தி மேன்மையுள்ளான் பிரபலனாஞ் சௌக்கியங்காண் பெருமை யோனே
(இ-ள்) ஸ்திர இராசிகளான ♉ரிஷபம், ♌சிம்மம், ♏விருச்சிகம், ♒கும்பம் ராசியில் சூரியன் இருந்தால் தீர்க்காயுள், சிறந் அறிவுத்திரன் இருக்கும். அன்னியரின் சொத்தும் பொருளும் கிட்டும், சிறப்புடன் வாழ்வர்கள்.செல்வ வளமுடையவர்ள்.அரசு வகையில் ஆதாயம் கிட்டும். கலைகள் கற்பர்கள் ,இறைவனின் மீது பற்றுடையவர்கள் பிரபலங்கள், புகளும் கிட்டும்.
சரத்தினிற் பருதியாகில் தந்தை தான் பிரவூர்வாசம்
திரத்தினிற் பகலவனாகில் சேய்தந்தை கிட்டிருப்பன்
பெருவெளி தன்னில் வெய்யோன் பேசிய உபயமாகில்
உரைத்தனர் பெரியோரெல்லாம் உண்மையாய் உலகில்தானே
((இ-ள்) ஒரு குழந்தை பிறக்கும் நேரங்களில் தந்தையின் நிலை குழந்தையின் ஜாதகத்தில் ☀சூரியன் சர ராசியில் இருந்தால் தந்தை வெளியூரரில் இருப்பர்கள்.
☀சூரியன் ஸ்திர ராசிகளில் இருந்தால் தந்தை அருகில் இருப்பார் .
☀சூரியன் உபய ராசிகளில் இருந்தால் வெளிநாடுகளில் இருப்பார்.
வன்மையா யாறாம் ராசி சரமாய் ரவியிருந்தால்
மைந்தன் பிறக்கும் போது தந்தை மறைந்திருப்பான்
நன்மையாய் ஸ்திரத்தில் ரவியிருந்தால் தந்தை
நல முடனே தன் தேசந்தனிலிருப்பான்
(இ-ள்) ஜாதகர் பிறக்கும் போது சர ராசியில் சூரியன் பலம் குறைந்திருந்தால் தந்தை மறைந்திருப்பார்.
பலமுடன் சூரியன் ஸ்திர ராசியில் இருந்தால் தந்தை நலமுடன் இருப்பார்.
நீள் உபயத்தில் பானு நீசர்கள் நிற்க பாவர் தாளுறப்
பார்க்கக் கூடத் தண்ணீரில் வீழ்ந்து சாவன்
(இ-ள் ) உபய ராசிகளிலொன்றில் சூரியன் நீசம் பெற்ற கிரகத்துடன் சேர்ந்திருக்க பாவ கிரகங்கள் பார்த்தால் ஜாதகர் /ஜாதகியர் தண்ணீரில் வீழ்ந்து மரணம் அடைவர்கள்.
உபய ராசிகள் ♊மிதுனம், ♍கன்னி, ♐தனுசு, ♓மீனம் ஆகும். கன்னியில் சுக்கிரனும், ♓மீனத்தில் புதனும் நீச்சசம் அடைவர்கள்.
பெண் ராசியில் சூரியன் இருந்தால் உஷ்ணாதிக்கம் குறையும், மெல்லிய சரீரம், அழகு குறைவுடன் இருப்பர்கள்.
ஆண் / பெண் ஜாதகத்தில் ஆண் ராசியில் சூரியன் இருந்தால் தலைமுடி அடர்த்தியாக இருக்கும்.இதுவே லக்கினமாக இருந்தால் நாளடைவில் முடி உதிர்ந்து விடும்.
சூரியன் / சந்திரன் இணைந்து சரம் & உபய ராசியில் இருந்தால் மனோதிடமும்,ஆத்ம பலம் குறைந்தவர்கள். லக்கினாதிபதி பலமுடன் இருந்தால் நலமுடன் அமையும்.
சூரிய சந்திரன் சேர்க்கை உபய ராசியில் இருந்தால் தந்தைக்கு இருவித கண்டம் ஏற்படுத்தும்.
நவசம்சத்தில் ♉ரிஷபம் ♌சிம்மம் , ♏விருச்சிகம் , ♒கும்பம் ராசிகளின் சூரியன் இருந்தால் 36 வயதில் மரணம் . மேற்படி அம்சத்தில் ♊மிதுனம் , ♍கன்னி ♐தனுசு , ♓மீனம் ராசிகளில் சூரியன் இருந்தால் அந்திம வயதில் பிதா மரணம் உண்டாம் .
குறிப்பு : இது பொது பலன் ஒன்பதாம் ஆதிபதியின் நிலைகளுக்கு ஏற்றவாறு பலன்கள் அமையும் ❗
♈மேடம் ♐தனுசு ♓மீனத்தில் ☀வெய்யோன் இருக்கில் கீர்த்தியுள்ளன் !
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment