ஸ்திர ராசியில் செவ்வாய்
ஸ்திரத்தில் செவ்வாய்
வக்கிரன் திரத்தில் நின்றிடில் பூமி
வலுவொடு சுயார்ச்சிதம் மேன்மை
தக்கவன் செல்வன் யோகவான் தாரம்
தரணியில் பகையுளான் ஆகும்
பக்குவமுடன் அன்னியர் தமக்குப்
பல விதத்திலும் மிகு நட்பாம்
மிக்க பேதகன் அன்னிய தேடம்
மேவியே இருப்பன் என்றுரையே
ஸ்திரராசியில் செவ்வாய் இருந்தால் சொத்து, பூமி லாபம், சுய சம்பாத்தியம் சிறப்புடன் அமையும்.செல்வ வளம், யோகம் கிட்டும். உலகில் மனைவியுட பகையுணர்வு உள்ளவர்கள். பிறறுடன் நட்புறவுடன் இருப்பர்கள்.
ஸ்திர ராசிஎதிலும் உறுதியாகவும், எடுத்த முடிவில் நிலையான எண்ணத்தைக் கொண்டவர்கள் ஸ்திர ராசியினர். ஸ்திரம் என்றால் உறுதி. ♉ரிஷபம், ♌சிம்மம், ♏விருச்சிகம், ♒கும்பம் ஆகிய ராசியினர் ஸ்திர ராசியில் அடக்கம்
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment