சர ராசியில் புதன்
இன்று ஒரு ஜோதிடத்தகவல்
சர ராசியில் புதன்
புந்தியே சரத்தின் நின்றிடப் பிறந்தோர்
புந்தியும் பெண்சுகம் உடையார்
வந்திடும் அரசர் பேட்டியா (ல்) மகிழ்ச்சி
மன்னவர் உறவு எனல் ஆகும்
சந்ததி பேதம் பெண்ணுளது அன்னியம்
சார்ந்திடும் காலத்தில் புத்திரன்
விந்தையாம் பூமி சுயார்ச்சிதம் நிலைமை
மிக்க செல்வங்கள் என்று ஓதே
(இ-ள்) சரராசியில் புதன் இருக்க பிறந்தவர்கள். நற்சிந்தனையும், பெண்களால் நன்மையும். பேட்டியால் லாபம், பொரியோர்களின் உ றவும் ஆதாரவும் கிட்டும். பெண்குழந்தை கிட்டும். அன்னியத்தில் வாழ்வு அமையும். சரியன காலங்களில் புத்திர பாக்கியம் அமையும். சுயமாக சம்பாதிப்பார்கள், பூமி, சொத்து,செல்வங்கள் அமையும
♈மேஷம், ♋கடகம், ♎துலாம், ♑மகரம் ஆகியவை சர ராசிகளாகும்.
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment