ஸ்திர ராசியில் புதன்
இன்று ஒரு ஜோதிடத்தகவல்
ஸ்திர ராசியில் புதன்
திரமது தன்னில் மாலுமே நிற்க
ஜனித்த ஜாதர்க்கு இனியபலன் கேள்
உர மெனும் வித்தை திரவியலாபம்
உண்மையாம் அரசன் மகிழ்ச்சி
பரவிய பூமி புத்திரலாபம் பலதொழில்
தன்னினும் முயற்சி
கரமது தன்னில் தழுப்பது விண்ணம்
கருதுவர் நிலைமை இவ்விதமே
(இ-ள்) ஸ்திர ராசியில் புதன் இருக்க பிறந்தவர்கள் தொழில் வளம், செல்வ வளம், பல பூமி லாபம், பல தொழில் செய்வார்கள், அரசு வகையில் நன்மைகள் , சுய முயற்சியால் பலம் பெருவார்கள். கையில் உணம் இருக்கும்.
ஸ்திர ராசிஎதிலும் உறுதியாகவும், எடுத்த முடிவில் நிலையான எண்ணத்தைக் கொண்டவர்கள் ஸ்திர ராசியினர். ஸ்திரம் என்றால் உறுதி. ♉ரிஷபம், ♌சிம்மம், ♏விருச்சிகம், ♒கும்பம் ஆகிய ராசியினர் ஸ்திர ராசியில் அடக்கம்
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment