உபய ராசியில் புதன்
இன்று ஒரு ஜோதிடத்தகவல்
உபய ராசியில் புதன் நின்ற பலன்
உருதியாம் உபயராசியில் புந்தி
உற்ற ஜாதகர்க்கு இனிய பலன்கேள்
கருதிய மெய்யன் யோகியர் நட்பன்
கவிதைகள் கணித நூல் கற்பன்
இருநிலை உடையவன் இனிய தர்மங்கள்
இடரில்லாத இயற்றி ஞானியர் பால்
பெருகிய நட்பன் அன்னியர் நேயன்
பந்துடன் பகை உளனாமே
(இ-ள்) உபய ராசியில் புதன் இருக்க பிறந்தவர்கள்
( ♊மிதுனம் ♍கன்னி ♐தனுசு ♓மீனம் இராசிகளில் இருந்தால்)
உண்மையானவர்கள், நல்லோர்களிடம் உறவு உள்ளவர்கள். கவிஞர்கள், கணிதநூல் வல்லுநர். இருவித செயல்பாடுள்வர்கள். பிறக்கு உதவிகள் செய்வர்கள். தடையில்லாமல் ஞானியர்க்கு பணிவிடை செய்வர்கள். உறவினர் பகைமையுள்ளவர்கள். அன்னியரிடம் உறவுள்ளவர்கள்.
♊மிதுனம் - ♍கன்னி - ♐தனுசு - ♓மீனம் ஆகிய ராசிகள் உபய ராசிகளாகும். இந்த ராசிகளில் பிறந்தவர்கள் தான் மட்டும் வாழாமல் பிறரையும் வாழவைக்கும் எண்ணம் கொண்டவர்கள்.
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment