உபயராசியில் குரு

 இன்று ஒரு ஜோதிடத்தகவல்

உபயராசியில் Aksh

மந்திரி உபயம் தன்னிலே இருக்க

வந்த ஜாதகர்க்(கு) இனிய பலன்கேள்

தந்திர மனத்தன் பெண்களால் தனமும்

தரணியில் இனியனாய் இருப்பன்

முந்திய பூர்வ பூமியால் வழக்கு

முற்றிலும் வியாச்சிய மில்லை

சந்ததி விருத்தி தருமத்தில் புத்தி

சர்ந்திடும் தாட்சன்யம் உளனே

குரு உபய ராசியில் இருந்தால் சுப பலனைக் கேளுங்கள் .தந்திரமுடன் இருப்பார்கள். பெண்களால் செல்வம் கிட்டும். உலகில் அனைவருக்கும் அன்புடன் இருப்பார்கள்.பூர்வீக சொத்து வழக்கு, இழப்பு ஏற்படும். குழந்தைச் செல்வம் கிட்டும். தர்மசிந்தனை உள்ளவர்கள்

♊மிதுனம் - ♍கன்னி - ♐தனுசு - ♓மீனம் ஆகிய ராசிகள் உபய ராசிகளாகும். இந்த ராசிகளில் பிறந்தவர்கள் தான் மட்டும் வாழாமல் பிறரையும் வாழவைக்கும் எண்ணம் கொண்டவர்கள்.

சூரியஜெயவேல் 9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்