திருமணவாழ்வு

 திருமணவாழ்வு

"இல்லதென இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை "

ஒருவனுக்கு வாய்க்கும் மனைவியானவள் நல்ல குண நலன்களை பெற்றிருந்தால் அவனிடம் இல்லாத பொருளே கிடையாது.ஆனால் மனைவி நல்ல குணமற்றவளாக இருந்தால் அவனிடம் என்ன இருந்தாலும் சீக்கிரத்தில் இல்லாதவனாக மாறிவிடுவான்.

மனிதனுக்கு அழகன கூட்டனி

இந்திய மனைவி

பிரிட்டிஸ் வீடு

சீன உணவு

அமேரிக்கா சாம்பளம்

மேசமன கூட்டணி

அமேரிக்கா மனைவி

சீன வீடு

பிரிட்டிஸ் உணவு

இந்திய சாம்பளம்

விவாஹஸ் ச விவாதஸ்ச

சமயோரேவ சோபதே „

திருமணமும்,விவாதமும் ஒரே சமானவர்களிடையே நடந்தால் மட்டுமே சிறப்பு அடைய முடியும்.

மனிதர்களின் ஜாதகங்களிலே மிக முக்கியமானது

களத்திர ஸ்தானம் ஆகும். இருவரின் ஜாதகத்தில் ஏழாவது பாவத்தைக் குறிக்கும். களத்திர ஸ்தானத் தின் மூலம்.மணமகனின் ஜாதகத்திலிருந்து வரப் போகும் மனைவியின் நேர்மை, பண்பாடு,குடும்பப் பாங்கு சமூகத்தில் அவளது அந்தஸ்து, நற்பெயர் ஆகியவற்றை அறிய முடியும்.

பெண்ணின் ஜாதகத்தில் தனக்கு வரப்போகும்

மணமகனைப் பற்றிய விபரங்கள் அனைத்தையும் அறிய முடியும்.கணவனின் நேர்மை, தொழில் நிலை. குடுபம் பின்னானி, நற்பெயர் ஆகியவற்றை அறியமுடியும்.

ஏழாம் பாவத்தின் நிலை,பாவாதிபனின் நிலை, காரகனின் நிலை,மற்ற கிரகச் சேர்க்கையால் ஏற்படும் மாறுதல்கள் என்பவைகளை நன்கு ஆராய்ந்து பார்த்து பலன் சொல்லவேண்டும்.

ஆணின்,பெண்ணின் ஜாதகத்திலோ1-2-4-7-8-12-ல்

பாவக்கிரகங்கள் இருப்பதே அல்லது பார்ப்பதோ தோஷமாகும். பெண்கள் ஜாதகத்தில் 8-ல் பாவிகள் இருப்பின் மாங்கல்ய தோஷம். இவர்களை குரு பார்த்தால் தோஷம் நிவர்த்தியாகும்.

ஆண் ஜாதகர்களுக்கு ஆண் ராசிகளிலோயே லக்னம் , லகினாதிபதி அமைந்து. சூரியன்,குரு பார்த்தால் ஜாதகர்க்கு உயர்வான வாழ்வு அமையும். பெண் ஜாதகங்களில் பெண் ராசி லக்னம், லக்னா திபதியாக அமைந்து குரு, சந்திரன்,சுக்கிரன் தொடர்பு இருந்தால் பதிவிரதையாக வாழ்வர்கள்.

லக்கினத்திற்கு ஏழாம் அதிபதி மகரம்,கும்பத்தில் இருந்தால் ஜாதகர்/ஜாதகியின் திருமண வாழ்வில் நிம்மதியிராது.எந்த விதமன சிறப்பு இருக்காது. அவமனம் தலைகுனிவும் ஏற்படும்.

ஏழாம் அதிபதி முதலாம் இடம் என்னும் லக்னத் திலேயே இருந்தால்.சிரிது ஒழுக்கம் குறைவு இருக்க்கும். இவர்கள் தனது கணவன், மனைவியை தேர்ந்தெடுப்பர்கள்.ஆனால் பெற்றோர்கள் சம்மதத்துடன் தன் நடக்கும்.தெரிந்த குடும்பத்தில் திருமணம் அமைமையும்.உறவியிலேயே அமையக் கூடும். அல்லது உறவிராக இல்லாமல் இருக்கலம்.மணவாழ்கை நன்றாக அமையும். மனைவி,கணவன் மிகவும் அன்புடன் இருப்பார்கள் மாமனார் மூலம் உதவி கிடைக்கும். பிறறை கவரும் தன்மையுள்ளவர்கள்.மனைவி சொல்லே மந்திரம் என இருப்பார்கள்.

ஏழாம் அதிபதி இரண்டில் இருந்தால் இன்பம் தர இயலாத துணைவகள் அமைவர்கள் , காதல் திருமணமாக அமையும். சட்ட திட்டங்களையும், சாஸ்திர சம்பிரதாயங்களையும் மீறிய திருமணமாக அமையும்.திருமணம் நடக்கும்.பலதாரம் ஏற்படும். ஆனால் மாரகத்தின் நிலைகளை பெறுவதால் இவர்களின் தசா புக்திகளில் மாரகத்தை தரும். நிலை ஏற்படும்.

வாழ்க்கை சந்தோஷமாக அமைந்தாலும் பணக் கஷ்டங்கள் ஏற்படும். காமம் அதிகம், புலன் இன்பத்தில் ஈடுபாடு உடையவர் சம்பாதிப்பவர்ளகா இருப்பார்கள். வெளிநாடு தொடர்பு ஏற்படும். இரண்டாம் திருமணம் ஏற்படும்.இருவரில் ஓருவர்க்கு கண்டம் ஏற்படலாம்.

ஏழாம் அதிபதி மூன்றில் இருந்தால் உடன் பிறந்தவர்கள் போலே உள்ளன்புடன் இருப்பர்கள் உடலுறவில் சில பிச்சினைகள் வரும் .களத்திர தோஷம் உள்ளவர் வசதி படைத்தர்கள் ஆண்மைக் குறைவு ஏற்படும் உறவில் கணவன் மனைவி அமை யும் (அ ) நெருங்கிய நண்பர்களின் குடும்பத்தில் திருமணம் அமையும் .மகிழ்ச்சியாக அமையும். ஆனால் சிலருக்கு ஒழுக்கக்குறைவை தரும். பெண்களுக்கு அவ்வளவாக பாதிப்புகள் ஏற்படது.

ஏழாம் அதிபதி நான்கில் இருந்தால் நிச்சயிக்கப் பட்ட திருமணம் அமையும்.அழகான மனைவி ,அதிர்ஷ்டமான மனைவி /கணவன் அமைவர்கள் மணவாழ்வு மகிழ்சியாக அமையும். பொறுப்புள்ளவ@ர்கள்,அதிகம் சம்பாதிப்பார் பெண்கள் வலிய வந்து சுகம் தருவார்கள். எல்லோ ரையும் திருப்திப்படுத்துவார்.

ஏழாம் அதிபதி ஐந்தில் இருந்தால் மக்களை போல துணைவரை பதுகப்பர்கள் ஆனால் தொழிலில் பல இடைஞ்சல்கள் தருவர்கள் இவர்கள் தங்களே தேர்ந்து எடுப்பார்கள். துணைவரை தேடினாலும் பெற்றோர்களின் அனுமதியுடன் திருமணம் அமையும். பிரிவினையும், கருத்து வேறு பாடுகள்.,விவாகரத்து ஏற்படும். 7-ஆம் அதிபதி 5-ல் இருப்பது தோஷசம் தரும்.இரண்டு திருமணம் அமையும்.பிறர் தொடர்பு ஏற்படும்.

ஏழாம் அதிபதி ஆறில் இருந்தால் துணைவர் எதிரியயின் நிலையில் தொல்லைதருவர்கள் பகையாளி அல்லது விரோதி வீட்டிலிருந்து திருமணம் அமையும் இரண்டு திருமணம் அமையும் மதாம் மறி திருமணம் அமையும்.மகிழ்சியுடன் அமையாது ,ஆரோக்கியம் நிலையாக இருக்காது. மனைவியால் இன்பமான வாழ்வை தர முடியாது. கேர்ட்,கேஸ் விவகாரங்கள் நடைபெறலாம்.

ஏழாம் அதிபதி ஏழில் இருந்தால் காதல் திருமணம் அமையும்.துணைவர் புகழ் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வசதியானவர்.அயல் நாட்டு தொடர்பு ஏற்படும்.மகிழ்வுடன் அமையும். உறவுமுறையில் திருமணம் அமையும்.

ஏழாம் அதிபதி எட்டில் இருந்தால் பிரிவு,இருதார தோஷம் மீகவும் மோசமான,பயங்கரமான நிலைமை ஏற்படும். மணமகனும்,மணமகளும் கதால் என்று ஏமாந்து,உடல் மயக்கத்தில் முட்டாள் தனமாக மணம் புறிந்து வாழ்வில் சொல்லொணத் துயரத்தையும்.அல்லல்களையும் அனுபவிப்பார்கள்.

துணைவர்களாலும் கௌரவக் குறைவு ஏற்படும். திருமண முறிவு ஏற்படும்.சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

ஏழாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் பெற்றோர்கள் பார்த்து முடிக்கும் திருமணமகும். தெரிந்த குடும்பத்தில், உறவில் அமையும் சிலருக்கு மணவாழ்வு சிறப்புடன் மகிழ்சியுடன் அமையும். முன்னோற்றம் ஏற்படும். வெளிநாட்டில் சுக பாக்கியங்கள் ஏற்படும்.ஆச்சாரம் உள்ளர்கள். மாமனார் உதவி கிட்டும் .மனைவியை நேசிப்பார் .

ஏழாம் அதிபதி பத்தில் சிறப்பன துணைவர்கள். வேலையில் உள்ளவர்கள். தொழில் செய்யும் மனைவி அமையும். தன்னுடன் வேலை செய்பவரையோ திருமணம் செய்யும் நிலை ஏற்படும்.ஆனால் கணவனை நம்பமாட்டாள். அந்தஸ்தையும்.கௌரவத்தையும் அதிர்ஷ்டத்தை யும் தருவர்கள்.

ஏழாம் அதிபதி லாபத்தில் இருந்தால் குழந்தைகள் மீது அன்புடன் இருப்பார்கள் துணைவர்களுக்கு நன்மை புறிவர்கள் ஆனால் துணைவரின் தாயாரை கவணிக்க மாட்டார்கள்.பெற்றோர்கள் முடித்து வைக்கும் திருமணமகும். துணைவரால் ஆதாயம் கிடைக்கும்.நல்ல குணம் அழகும் உள்ளவர் கள் திருமண வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்சியான வாழ்வு அமையும்.

ஏழாம் அதிபதி விரையாத்தில் இருந்தால் கொடுக்கும் இன்பத்தில் கொண்டவர்களை நஞ்சாக் கிடுவர்கள் கடனாளியாக் குவர்கள் குழந்தைகளை கவணிக்க மாட்டர்கள்ள். சட்டதிட் டங்கள், சாஸ்திரத்திற்கு புறம்பன திருமணம் அமையும் வின் விரையங்கள் ஏற்படும்.வாழ்கை போரட்டமுன் அமையும்.பிற தொடர்புகள் ஏற்ப்படும். வெளிநாட்டுத் தொடர்பு ஏற்படும்.மகிழ்வு இருக்கது.

ஏழாம் அதிபதியின் நிலையை ஆராய்ந்து பலன் கூறவேண்டும். சுபர் பார்வை இருப்பின் சுப பலன் பாவிகள் தொடர்பு பார்வை இருந்தால் தீய பலனும் . அமையும்.

மோகமாமேழில்பாவர் மொய்த்திடப்பாபர்நோக்கில்

போகமேசெய்யவேண்டாள் புருடனையிகழ்ச்சியாக

மேகநீர்நிதம்பத்தில்லாள் விறுவிறுப்புடையார் பேரில்

தாகமாயிச்சையாவன் தருபலனெல்லாஞ்சாற்றே

ஏழில் பாவிகள் இருந்தாலும்,பாவர்கள் பார்தாலும் ஜாதகருடைய மனைவிக்கு காம சுகம் அனுபவிக்க எண்ணமில்லாதவள்.கணவனை மதிக்க மாட்டாள் இதனால் பெண்குறியை சுவைப்பவனாக இருப்பன்

இங்கு கூறப்படும் நிளைகலை கவணமுடன் ஆராய்நந்து கூற வேண்டும். ஜாதகத்தை மேலோட்டமாக பலன் கூறக் கூடாது.

ஏழாம் அதிபதி சுக்கிரன் 6-8-12-ல் இருந்தால் (அ) பகைப் பெற்றிருந்தாலும் நீசம் அடைந்தாலும் மனைவியால் துண்பம் கண்டம் ஏற்படும்.

ஏழில் லக்னாதிபதி இருந்தால் திருமணம் இளமை யில் நடக்கும். சகோதரியின் மகளை மணப்பார்.மனைவி மூலம் மாமனாரின் சொத்து கிடைக்கும். அதிக காமம் உடையவர் .குடும்பத்தில் அவ்வளவாக பற்று இருக்காது .லக்கினாதிபதியால் அல்லது சந்திரன் பார்வை 7-ஆம் வீட்டைபார்த்தால் காதல் திருமணம் நடக்க வாய்புள்ளது. வசதி படைத்த மனைவி அமைவாள். பிறறை கவரும் வசீகரம் உள்ளவார்கள்

2-ஆம் அதிபதி ஏழில் இருந்தால் செல்வம். சந்தோ ஷம் நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். 2-7-ஆம் வீட்டோடு தொடர்புள்ள தசாபுத்திகளில் திருமணம் நடக்கும்.துணைவர் சம்பாதிக்ககூடியவர்கள். மனைவி மூலம் வருவாய் கிடைக்கும். திருமணத்திற் குப்பின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக் கும். மனைவியின் அணுசரனை இருக்காது. காமம் அதிகம் உள்ளவர், பிறர் தொடர்பு ஏற்ப்படும்.

3-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் எப்போதும் போகத் தில் நாட்டம் குறையுள்ளவர்.சுகமே பெரிது என

நினைப்பவர். தைரியம், சாயன சுகம் கிட்டும். மறு மணம்ஏற்ப வாய்புள்ளளது. துணைவரால் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.பெண் குழந்தை பிறக்கும்.சொந்தமாகத் தொழில் அமையும்.

4-ம் அதிபதி 7-ல் இருந்தால் நல்ல திறமைசாலியாக இருப்பார்.கேந்திராதிபத்ய தோஷத்தால் வீடு,வாகனம்,கல்வி,இல்லறம் சுகம் தனம் ஆகியவை தடைபடும்.தாய் வழியில் மனைவி அமைவாள்.4-7-ஆம் அதிபதி பலமுடன் இருந்தால் சுகமுடன் வாழ்வு அமையும்.வாகன யோகம் கிடைக் கும் .மனைவியின் நடத்தையில் சுகமில்லை.

5-ஆம் அதிபதி 7-ல் இருப்பதை அனைத்து ஆசான்

களும் வரவேற்பதில்லை. மனைவி பிரிவினை. புத்திரபாக்கியம் தடை ஏற்படும்.கட்டாயத் திருமணம்

நல்ல மனைவி அமையும்.காதல் திருமணம் ஏற்படும் திருமணம் தாமதமாகக் கூடும்.

6-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் மனைவியால் கலகம் விரோதம் ஏற்படும்.துணைவரின் உடல் நலம் அடிக் கடி பதிக்கப்படும்.மனைவி வீட்டாருடன் உறவு நலமுன் இருக்காது .திருமண வாழ்கை சுகமுடன் அமையாது.துணைவரால் கடன்பட நேரும். ரத்த தொடர்புடைய நோய்கள் ஏற்படும். அத்தை, மாம னின் வீட்டில் திருமணம் அமையும்.

7-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் வீட்டோடு மாப்பிள்ளை ஆவார்கள்.மனைவிக்கு அடிபனிவார் கள். மனைவி வசதியுள்ளவார். சுபக் கிரகமாக இருந்தால் வாழ்வில் நலம் உண்டகும்.பாவியனால் அடிமை வாழ்கை தான்அமையும்.வாத நோய் வரும்,

8-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் திருமண வாழ்வில் குழப்பங்களும், விவாகரத்தும்,துணைவரால் நலம் இருக்காது.இருமணம் ஏற்படலாம்.துணைவரின் ஆயுள் பதிக்கும்.துணைவராலும் பிற பெண்களா லும் கௌரவக் குறைவு ஏற்படு. வசதியுள்ளவர்கள்.

9-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் செல்வம்,அலகு,அன்பு டைய மனைவி அமைவாள்,அயல் நாடு தொடர்பு ஏற்படும்.பிற தொடர்பு ஏற்படும்.சதா பெண்களின் சிந்தனை இருக்கும்.இளமையில் திருணம் நடக்கும். கட்டுபடையா மனைவி அமைவாள்.வசதியுள்ளவார் ஒற்றுமையுடன் வாழ்வர்கள்.திருமணத்திற்கு பின் வளமன வாழ்வு அமையும்.மாமனார் அந்தஸ்துள்ளவார்.

10-ஆம் அதிபதி 7-ல்இருந்தால் உத்தியோகத்தில் இருப்பவார்.நல்ல மனமும் குணமும் உள்ளவார்கள் ஆனால் சந்தேகப்படுவர்கள்.நடத்தையில் சந்தேகம் இருக்கும்.சுபக்கிரகமனால் பிரச்சினையில்லை.

11-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் ஆசைகள் அனைத்தும் பூர்த்தி அடையும். சிற்றின்பத்தில் ஈடுபாடு அதிகம் இருக்கும். மனைவியால் அனுகூலம் உண்டு.நல்ல குகுணம் உள்ளவார் வசதியுள்ளவார்.காதல் திருமணம் அமையும்.திருமணத்திற்கு பின் வாழ்வு சிறப்பு அடையும். புத்திர தோஷம் ஏற்படும்.பெண் குழந்தை அதிகம் பிறக்கும் வாய்புள்ளது.ஆதாயம் கிட்டும் வெளி நாட்டு தொடர்பால் ஆதாயம் கிடைக்கும்

12-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் துணைவாரல் நலம் இல்லை.அதனால் பிறர் தொடர்பு ஏற்படுத்திகொள் வார்கள் பொருள் இழப்பு ஏற்படும்,கடன் வாங்கி செலவு செய்வான் வெளியுரில் வசிக்கும் நிலை ஏற்படும்.

7-ல் பல கிரகங்கள் இருப்பின் அவைகளின் பலம் ஏற்ப பலர் தொடர்பு ஏற்படும்.

7-ல் சுபர்,பாவர் இணைந்திருப்பின் மறுமணம் ஏற்படும்.

லக்கினத்தை விட 7-ஆம் வீடு பலம் பெற்றால் கணவன்,மனைவி முலம் வருவாய் கிடைக்கும்.

7-ஆம் அதிபதி இரட்டை ராசியில் இருந்தால் பலருடன் தொடபிருக்கும்.

7-ஆம் அதிபதி சூரியனானால் கடின மனம் உடையவர்களாக இருப்பர்கள்.

7-ஆம் அதிபதி சந்திரனானால் அன்புடையவர்கள்

7-ஆம் அதிபதி செவ்வாயானால் நாணமில்லாதவர்கள்.

7-ஆம் அதிபதி புதனானால் அதிக காமம் உள்ளவர்கள்.

7-ஆம் அதிபதி குருவானால் குழந்தை பெற்று இளைப்பளாகவும்.

7-ஆம் அதிபதி சுக்கிரனானால் கணவனைத் தன் வசப்படுத்துபவளாகவும்.

7-ஆம் அதிபதி சனியானால் களவு/வம்பு செய்பவளாகவும்.

7-ஆம் அதிபதி நின்ற நட்சத்திர அதிபதி ராகுவனால் அவமானம் உடையவளாகவும்.

7-ஆம் அதிபதி நின்ற நட்சத்திர அதிபதி கேதுவனால் தரித்திரம் உடையவர்களாக இருப்பர்.

சூரியஜெயவேல் 9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்