கால நிர்ணயம்

 கால நிர்ணயம்

மனிதன் 21,600 முறை சுவாசம் விடும் காலம் 1 நாள்

சூரியன் 21,600 கலையை சுற்றி வரும் காலம் 1 வருடம்

அதாவது 360 நாட்களை நாழிகை 60 - ல் பெருக்கினால் 21.600

குரு 21,600 பாகையை சுற்றி வரும் காலம் 60 வருடம் ஒரு பரிவிருத்தி

அதாவது 360 நாட்களை 60 ( வருடங்களால் ) பெருக்கினால் 21.600

ஒரு வருடம் என்பது நிதிகளின் அடிப்படையில் 360 நாள்களுக்கு மேல் இல்லை என்பது தான் ஆதிகால கணக்கு

தமிழ் , ஆங்கில மாதங்களின் நாட்கள் 365 1/4 தினங்கள் என்பது பிற்காலத்தில் ஏற்பட்ட வழக்கு !

விதியை அனுசரித்ததுதான் இஸ்லாமிய வருடக்கணக்கு ஆதிகாலம் முதல் 360 நாட்களுக்குள்தான் இருக்கிறது

மனிதனுடைய ஒரு நாள் சுவாசம் 21,600 . இதை சதுரக் கூறாக்கினால் 80 சதுரங்கள் வரும் .

21,600 தொகையை 80 சதுரக் கூறால் பெருக்கினால் 17.28,000 வருடங்கள் கொண்டது கிரேதாயுகம் தரும தேவதை மண்ணில் நான்கு கால்களுடன் நிற்கும் காலம் .

21,600 தொகையை 60 சதுரக் கூறால் ( முக்கால் பங்கு பெருக்கினால் 12,96,000 வருடங்கள் கொண்டது திரேதாயுகம் , தரும் தேவதை மண்ணில் மூன்று கால்களுடன் நிற்கும் காலம்

216000 தொகையை 40 சதுரக் கூறால் ( அரை பங்கு பெருக்கினால் 8.64,000 வருடங்கள்கொண்டது துவாபரயுகம் , தரும தேவதை மண்ணில் இரண்டு கால்களுடன் நின்ற காலம்.

21.600 தொகையை 20 சதுரக் கூறால் ( கால் பங்கு ) பெருக்கினால் 4,32,000 வருடங்கள் கொண்டது கலியுகம் தரும் தேவதை மண்ணில் ஒரு காலுடன் நிற்கும் காலம்

சதுரக் கூறின் வித்தியாசங்களுக்கு உட்பட்டு முழுபங்கு , முக்கால் பங்கு , அரை பங்கு , கால் பங்கு என்ற விகிதத்தில் மனிதர்களுடைய தருமமும் , ஆயுளும் குறையும் என்பது வேதத்தின் நிர்ணயம் !

ஆங்கில வருட தொகையை நான்கு கூறாக்கினால் மீதமில்லாமல் இருந்தால் அது லீப் வருடமாகும் . அந்த வருடம் பிப்ரவரி மாதம் 29 தேதிகள் வரும் மற்ற வருடங்களில் பிப்ரவரி மாதம் 28 தேதிகள்.

ஜனவரி , மார்ச்சு , மே , ஜூலை , ஆகஸ்ட் , அக்டோபர் , டிசம்பர் ஆகிய ஏழு மாதங்களுக்கு 31 தேதிகளும் ,

ஏப்ரல் , ஜூன் , செப்டம்பர் , நவம்பர் ஆகிய நான்கு மாதங்களுக்கு 30 தேதிகளும் வருகிறது

சூரியஜெயவேல் 9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்