❤குண்டலினி யோகம் ❤

 குண்டலினி யோகம் ❤

வேத பாரம்பரியத்தில் விவரிக்கப்பட்டுள்ள முக்கியமான யோகா அமைப்பின் பாதை நீண்டது மற்றும் கடுமையானது. இந்த அமைப்பு அஷ்டாங்க யோகா அல்லது எட்டு மடங்கு யோகா அமைப்பு என்று அழைக்கப்படுகிறது, மேலும் பண்டைய முனிவரான பதஞ்சலியால் உருவாக்கப்பட்டது.

நினைவை படிப்படியாக உயர்நிலை அடிப்பகுதியில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் முதன்மை ஆற்றல் வடிவத்தைக் குறிக்கிறது .இந்த ஆற்றலை எழுப்பி, உடலில் உள்ள சக்கரங்கள் (ஆற்றல் மையங்கள்) மூலம் அனுப்பலாம்.

குண்டலினி பாரம்பரியத்தில், முதுகெலும்புடன் ஏழு முக்கிய சக்கரங்கள் அல்லது ஆற்றல் மையங்கள் உள்ளன. இந்த சக்கரங்கள் உடலின் உடல், உணர்ச்சி மற்றும் ஆன்மீக அம்சங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இதை தகுந்த ஆசிரியரிடம் பயிற்சி பெறாமல் செய்யக்கூடாது.

முதலில் மூலபந்த நிலையில் உட்கார வேண்டும். (மல உறுப்பைச் சுருக்குதல்)

அந்த நிலையிலேயே சுவாசத்தைக் கவனிக்க வேண்டும்.

பின்னர் சுவாதிசுடானம், மனிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை ஆகிய ஒவ்வொரு சக்கரங்களிலும் எண்ணத்தை நிறுத்தி சுவாசத்தைக் கவனிக்க வேண்டும்.

கடைசியாக துரியத்தில் எண்ணத்தை நிலைபெறச் செய்ய வேண்டும்.

உயிர் சக்தியைத் துரியம் அல்லது ஆக்கினையில் நிலைபெறச் செய்வதே குண்டலினி யோகம் எனப்படும்.

குண்டலினி:

முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் அமைந்துள்ள முதன்மையான ஆற்றலின் ஒரு வடிவம் என நம்பப்படுகிறது. தியானம், பிராணயாமம் (மூச்சு கட்டுப்பாடு) மற்றும் யோகா போன்ற பயிற்சிகள் மூலம் விழித்திருக்கும் போது, ​​இந்த ஆற்றல் சக்கரங்கள் வழியாக மேல்நோக்கி பயணிக்கிறது, ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் அறிவொளிக்கு வழிவகுக்கிறது.

🌟சக்கரங்கள் 🌟

சக்கரங்கள் உடலில் உள்ள ஆற்றல் மையங்கள், ஒவ்வொன்றும் வெவ்வேறு உடல், உணர்ச்சி மற்றும் ஆன்மீக அம்சங்களுடன் தொடர்புடையவை. முதுகெலும்புடன் ஏழு முக்கிய சக்கரங்கள் உள்ளன.

முதலில் மூலபந்த நிலையில் உட்கார வேண்டும். (மல உறுப்பைச் சுருக்குதல்) அந்த நிலையிலேயே சுவாசத்தைக் கவனிக்க வேண்டும்.

பின்னர் சுவாதிசுடானம், மனிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை ஆகிய ஒவ்வொரு சக்கரங்களிலும் எண்ணத்தை நிறுத்தி சுவாசத்தைக் கவனிக்க வேண்டும். கடைசியாக துரியத்தில் எண்ணத்தை நிலைபெறச் செய்ய வேண்டும். உயிர் சக்தியைத் துரியம் அல்லது ஆக்கினையில் நிலைபெறச் செய்வதே குண்டலினி யோகம் எனப்படும்.

1. Muladhara chakra : மூலாதாரம் : நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பைக் குறிக்கிறது.

முதலாவது சக்கரம். (ந – மண்)

முதுகெலும்பின் அடிப்பாகத்தில் மல (ஆசன) வாய்க்கும் கரு (குறி) வாய்க்கும் மத்தியில் அமைந்துள்ளது. இச் சக்கரமே உடல் சக்தியின் இருப்பிடமாகும். இங்குதான் “குண்டலினி” சக்தி அமைந்துள்ளது. அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது. நான்கு இதழ் தாமரை என்பது இச்சக்கரத்தில் இருந்து நான்கு நாடிகள் இத்தூல உடலுடன் தொடர்பு கொள்வதனைக் குறிக்கும். இந்தச் சக்கரத்திற்கான மந்திரம் “லம்” எனப்படுவதாகும். உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூலகாரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது. சிறுநீரகங்கள், முள்ளந்தண்டு ஆகியவற்ரின் இயக்கத்தினை மூலாதாரச் சக்கரமே கட்டுப்படுத்துகிறது. இதன் முக்கிய செயல்பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும். மூலாதாரச் சக்கரமே மனிதனின் வளர்ச்சிக்கு அடிப்படையான முக்கிய தூண்டுசக்தி ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங்களில் நிலத் தத்துவத்துடன் ஒப்பிடப்படுகிறது.

2. Svadhishthana chakra : சுவாதிஷ்டானம் : படைப்பாற்றல் மற்றும் பாலுணர்வைக் கட்டுப்படுத்துகிறது.

இரண்டாவது சக்கரம் (ம – நீர்)

மூலாதாரத்துக்கு இரண்டு அங்குலம் அளவுக்கு மேலாக ஆண், பெண் குறிப்பகுதிக்கு சற்று மேலாக தொப்புளுக்குக் கீழே ஆறு இதழ் தாமரை வடிவில் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது. ஆறு இதழ் தாமரை என்பது இச் சக்கரத்தில் இருந்து ஆறு நாடிகள் இத்தூல உடலுடன் தொடர்பு கொள்வதனைக் குறிக்கும். இச் சக்கரத்திற்கான மந்திரம் “வம்” எனப்படுவதாகும். பாலியல்சக்தி இதில்த்தான் மையம் கொண்டிருக்கிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க நாட்டம் உள்ளவனாக இருப்பான். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங்களில் நீர்த்தத்துவத்துடன் ஒப்பிடப்படுகிறது.

3. Manipur chakra : மணிபூரகம் : தனிப்பட்ட சக்தி மற்றும் நம்பிக்கையுடன் தொடர்புடையது.

மூன்றாவது சக்கரம். (சி நெருப்பு)

நாபி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளிற்குக் கீழ் உள்ள பகுதியாகும். பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. பத்து இதழ் தாமரை என்பது இச்சக்கரத்தில் இருந்து பத்து நாடிகள் இத்தூல உடலுடன் தொடர்பு கொள்வதனைக் குறிக்கும். “ரம்” என்பது இதன் மந்திர ஒலியாகும். இச் சக்கரத்தில் இருந்து உடல் இயக்கத்திற்குத் தேவையான பிராணசக்தி கிடைக்கிறது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும். இச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதிபலிக்கிறது.

4. Anahata chakra : அனாகதம் : அன்பையும் இரக்கத்தையும் குறிக்கிறது.

நான்காவது சக்கரம். (வ – வாயு)

இதற்கு “இருதயச் சக்கரம்” என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில் இருதயம் உள்ள பகுதியில் பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் அமைந்துள்ளது. பன்னிரண்டு இதழ் தாமரை என்பது இச் சக்கரத்தில் இருந்து பன்னிரண்டு நாடிகள் இத்தூல உடலுடன் தொடர்பு கொள்வதனைக் குறிக்கும். “யம்” என்பது இச் சக்கரத்தின் மந்திரமாகும். அன்பு, பாசம், இரக்கம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும். இச் சக்கரம் காற்றுத் தத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.

5. Vishuddhi chakra : விசுத்தி : தொடர்பு மற்றும் வெளிப்பாட்டை நிர்வகிக்கிறது.

ஐந்தாவது சக்கரம். (ய – ஆகாயம்)

இதற்கு “குரல்வளைச் சக்கரம்” என்றொரு பெயரும் உண்டு. இது கழுத்தில் குரல்வளைப் பகுதியில் அமைந்துள்ளது. பதினாறு இதழ்கள் கொண்ட தாமரை அமைப்பில் நீல நிறத்தில் அமைந்துள்ளது. பதினாறு இதழ் தாமரை என்பது இச் சக்கரத்தில் இருந்து பதினாறு நாடிகள் இத்தூல உடலுடன் தொடர்பு கொள்வதனைக் குறிக்கும். உணர்ச்சி, சிந்தனை ஆகியவை இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டவை. தைராய்டு சுரப்பி, குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும்.

6. Ajna chakra : ஆக்ஞை : உள்ளுணர்வு மற்றும் நுண்ணறிவுடன் தொடர்புடையது.

ஆறாவது சக்கரம்.

இதை “நெற்றிக்கண் சக்கரம்” என்றும் அழைக்கப்படுகிறது. புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக (மூன்றாவது கண்) கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை வடிவில் அமைந்திருக்கிறது. இரண்டு இதழ் தாமரை என்பது இச் சக்கரத்தில் இருந்து இரண்டு நாடிகள் இத்தூல உடலுடன் தொடர்பு கொள்வதனைக் குறிக்கும். “ஓம்” என்பது இச் சக்கரத்தின் மந்திரமாகும். ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்படக் காரணமாக அமைவது இச்சக்கரமாகும்.

7. Sahasrara chakra : துரியம் : ஆன்மீக தொடர்பு மற்றும் அறிவொளியைக் குறிக்கிறது.

ஏழாவது சக்கரம்.

இதற்கு “சகஸ்ராரம்” மற்றும் “தாமரைச் சக்கரம்” என்ற பெயர்களும் உண்டு. இச் சக்கரமானது உச்சந்தலைப் பகுதியில் (மூளையின் மேல்ப் பகுதியில்) ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கிறது. ஆயிரம் இதழ் தாமரை என்பது இச் சக்கரத்தில் இருந்து ஆயிரம் நாடிகள் இத்தூல உடலுடன் தொடர்பு கொள்வதனைக் குறிக்கும். ஆன்மாவிற்கும் பிரபஞ்சத்துக்கும், தொடர்பினை ஏற்படுத்தி ஞானம் அடைய இச்சக்கரமே வழிவகுக்கும்.

இந்த சக்கரங்கள் மூலம் குண்டலினி ஆற்றல் உயரும் போது, தடைகளை நீக்கி ஆற்றல்களை சமநிலைப்படுத்துகிறது, உடல், உணர்ச்சி மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

நன்றி சூரியஜெயவேல் 9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்