ஜோதிடக் கலையும் ஆண் பெண் பாலுணர்வும்
ஜோதிடக் கலையும்
ஆண் பெண் பாலுணர்வும்
(அவசியம் அனைவரும் வசிக்கவும்)
ஆன் - - பெண் என்ற பாலுணர்ச்சி உலகில் உள்ள ஜீவராசிகளுக்கு மட்டும்தான் சொந்தம் என்று சொல்வதற்கில்லை . விண்ணுலகத்தில் உள்ள தேவாதி தேவர்களுக்கும் கூட இத்தகைய பிரிவுகள் உள்ளன
சிவன் – சக்தி, மகாவிஷ்ணு – மகாலட்சுமி , பிரம்மதேவன் - சரஸ்வதி என்ற ஆண் பெண் சக்திகள் இடம் பெற்று இருக்கின்றன . தேவாதி தேவர்களுக்குத் தலைவர் களான மூவர்களுக்கு மட்டும் இந்த இனப் பிரிவு உண்டு என்பதில்லை . இவர்களால் நியமனம் பெற்றுள்ள நவக்கிரகாதி தேவர்களுக்கும் , நவக்கிரக பரிபாலனத்திற்கும்கூட இத்தகைய பால் உணர்வு உண்டு என்று சொல்லப்படுகிறது .
ஆகவே , நவக்கிரகாதி தேவதைகளைப் பற்றி ஆராய்ந்தறித்து பலன் காண முற்படுவோம் .
நவக்கிரக பரிபாலனத்தில் , 1 பன்னிரெண்டு இராசி வீடுகள் , 2 இருபத்தேழு நட்சத்திர மண்டலங்கள், 3 – ஒன்பது கிரகங்கள் என்ற மூவகை அங்கங்களே இடம் பெறுகின்றன . இம்மூன்றும் ஒன்று மற்றொன்றுடன் இயங்குகின்றது நிகழ்ச்சிகளே " ஜோதிடக் கலை " யை உருவாக்கக் கூடிய சாதனமாகும் .
இம்மூன்றில் இராசி இல்லங்களும் , நட்சத்திர மண்டலங்களும் இடம் விட்டு இடம் மாறாமலும் , அசையாமலும் இருக்கின்றன என்று அறிதல் வேண்டும் . ஆனால் நவ நாயகர்கள் என்று சொல்லக்கூடிய நவக்கிரகங்கள் மட்டும் , ஒரு விநாடி கூட ஸ்தம்பித்து நிற்காமல் , சதா வலம் வந்த வண்ணமாகவே இருக்கின்றன . இவைகளில் சூரியன் மூலக் கிரகம் என்பதால் , அது இடம் விட்டு இடம் பெயராமல் இருக்கிறது என்றாலும் , அச்சூரியன் தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது என்பது விஞ்ஞான உண்மையாகும்
இப்போது ராசி இல்லங்கள் , நட்சத்திர மண்டலங்கள் , கிரகங்கள் என்ற மூன்று அங்கங்களுக்கும் கூட , ஆண் - பெண் என்ற இன அமைப்புகள் இருக்கின்றன என்பதைப் பற்றி விரிவாக ஆராய முற்படுவோம் .
ராசி இல்லங்கள், நட்சத்திர மண்டலங்கள், கிரகங்கள் என்ற மூன்று அங்கங்களுக்கும் கூட, ஆண் – பெண் என்ற இன அமைப்புகள் இருக்கின்றன என்பதைப் பற்றி விரிவாக ஆராய முற்படுவோம்.
ஆண் ராசி - பெண் ராசி ராசி பன்னிரெண்டில் , ஓஜை பாசிகள் என்று சொல்லப்படுகின்ற மேஷம் , மிதுனம் , சிம்மம் , துலாம் , தனுசு , கும்பம் ஆகிய ஆறு ராசிகளாகும் ஆண் ராசிகளாகும் . யுக்ம ராசிகள் என்று சோல்லப்படுகின்ற ரிஷபம், கடகம்,கன்னி விருச்சிகம்,மகரம் , மீனம் ஆகிய ஆறு ராசிகளும் பெண் ராசிகளாகும்.
சர ராசிகள் நான்கில் , இரண்டு ஆண் ராசிகள் இரண்டு பெண் ராசிகள் என்றும் ஸ்திர ராசிகள் நான்கில் இரண்டு ஆண் ராசிகள் இரண்டு பெண் ராசிகள் என்றும் , உபய ராசிகள் நான்கில் இரண்டு ஆண் ராசிகள் , இரண்டு பெண் ராசிகள் என்றும் , ஆண் - பெண் என்ற ஸ்தான பலம் அமைகின்றன .
ஆண் - பெண் - அலி நட்சத்திர மண்டலங்கள் , நட்சத்திர மண்டலங்களிலும் கூட , ஆண் - பெண் அலி என்ற மூன்று வகையான பிரிவுகள் உள்ளன என்று அறிதல் வேண்டும் . ஆண் நட்சத்திரங்கள் 8 என்றும் , பெண் நட்சத்திரங்கள் 16 என்றும் , அலி நட்சத்திரங்கள் 3 என்றும் தெரிய வருகின்றன . இவைகளில் பெண் நட்சத்திரங்கள் , நட்சத்திரங்களைவிட இரட்டிப்பாக இருக்கின்றன என்று அறிகிறோம் . அவைகளைப் பற்றி விரிவாகக் கீழே காணலாம் .
ஆண் நட்சத்திரங்கள் – 8
1 -அசுவனி 2. புனர்பூசம் 3 - பூசம் 4.அஸ்தம் 5. அனுஷம் 6. திருவோணம் 7 – பூட்டாதி 8. உத்திரட்டாதி
பெண் நட்சத்திரங்கள் – 16
1 பரணி , 2 கார்த்திகை, 3. ரோகினி , 4. திருவாதிரை 5 ஆயில்யம், 6 மகம், 7 பூரம் 8 உத்திரம் 9 சித்திரை, 10 சுவாதி, 11 விசாகம், 12 கேட்டை, 13 பூராடம், 14 உத்திராடம், 15 அவிட்டம், 16 ரேவதி
அலி நட்சத்திரங்கள் 1 மிருகசீரிஷம், 2 மூலம், 3 சதையம் .
ஆண்-பெண்-அலி கிரகங்கள்
கிரகங்கள் ஒன்பதில் 3 ஆண் கிரகங்களும், 3 பெண் கிரகங்களும், இடம் பெற்றுள்ளன அவைகளைக் காண்போம்.
ஆண் கிரகங்கள் 1 சூரியன், 2 குரு, 3 அங்காரகன் ( செவ்வாய் )
பெண் கிரகங்கள் 1 சந்திரன், 2 சுக்கிரன், 3 ராகு
அலி கிரகங்கள் 1 புதன், 2 சனி , 3 கேது
இது வரையில் ராசி இல்லங்கள் , நட்சத்திர மண்டலங்கள் , கிரகங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்தோம் . இப்போது அன்றாடம் நடப்பிலுள்ள காலச் சக்கரத்திலும் கூட , ஆண் காலம் - பெண் காலம் என்ற இருவேறு கால சுழற்சிகள் இடம் பெற்று இருக்கின்றன என்ற அறிதல் வேண்டும்.
ஆண் காலம் – பெண் காலம் அன்றாடம் ஆங்கில , தமிழ் தேதி என்று என்னவாக இருந்தாலும் ஆண் காலம் - பெண் காலம் என்னவாக இருந்தாலும் பிரதி ஞாயிறு முதல் சூரிய உதயம் ஆனது முதற்கொண்டு , அடுத்து முடியல் கூடிய ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை , ஆண் - பெண் என்ற குழந்தைகள் மாறி மாறி பிறந்து கொண்டே இருக்கும் . இது ஒரு ஜோதிட சாஸ்திர தத்துவமாகும் . இத்தகைய கால வரம்பை , " புருஷ காலம் " என்றும் , " ஸ்த்ரீ காலம் " என்றும் பெயரிட் டழைக்கின்றனர் . இத்தகைய பட்டியல் ஒன்றை மறு பக்கத்தில் காண்போம் .
காலை 6 மணியில் ஆரம்பித்து மாலை 6 மணியில் முடிவடையும் ஆண் பெண் ஜெனன ஜாதக கால கட்டம் , இரவு 6 மணியில் ஆரம்பித்து விடியற்காலை 6 மணியில் முடிவடையும் கால கட்டத்திற்கும் பலன் தரக் கூடியதாகும் .
இது வரையில் ஆண் - பெண் ஆகிய இரு வேறு இனப் பிரிவுகளின் இலக்கணத்தைப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்தோம் . இனி பெண்களும் கான யோக - அவயோக ஜாதகப் பலன்கள் எப்படி? என்பன போன்ற ஆய்வுகளில் இறங்குவோம்.
பெண்களுக்கான பிறப்பு ரகசியம்
பிறப்பு , புவி உதயம் என்பது ஆண் - பெண் ஆகிய இரு வேறு இனப் பிரிவுகளுக்கும் பொது என்ற போதிலும் , பெண் ஜெனனத்திற்கான சில சிறப்பு விதிகள் உண்டு . எது எப்படி இருந்த போதிலும் ஒரு குடும்பத்தில் முதன் முதலாகப் பிறக்கக்கூடிய குழந்தை . அதாவது சீமந்தம் செய்து பிறக்கள் கூடியதாகக் கருதப்படுகின்ற குழந்தை , பெண் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்பது நமது நாட்டுப் பண்பாடு , ஒரு குடும்பத்தில் தலைப் பிரசவத்தில் பிறக்கக்கூடிய குழந்தை பெண் குழந்தையாக இருந்தால்தான் அக்குழந்தை வளர வளர அக்குடும்பம் ஆல்போல் தழைத்து வளரும் என்பது தம் நாட்டுப் பாரம்பரியமாகக் கருதப்பட்டு வருகிறது . இவ்விதம் இன்றி ஒரு குடும்பத்தில் ஜேஷ்ட ஜெனனம் , புத்திர ஜெனனமாக இருந்து விட்டால் அது அவ்வளவு யோகம் அல்ல என்றே சொல்ல வேண்டும் ,
ஒரு குடும்பத்தில் முதன் முதலாகப் பிறக்கக் கூடியது ஆனா ? அல்லது பெண் என்று எப்படி பாவிப்பது ? இதற்கு பல்வேறு ஆய்வுகள் : என்றாலும் , அக்குழந்தையின் தந்தை ஜாதகத்தைக் கொண்டு , பிரதம புத்திர ஜெனனம் ஆணா ? அல்லது பெண்ணா ? என்று தீர்க்கமாக எடுத்துச் சொல்லி விடலாம் . அது எப்படி?
ஒரு ஆணின் ஜாதகத்தில் , புத்திர ஸ்தானமான 5 - ம் இல்லத்தில் சந்திரன் , சுக்கிரன் , ராகு ஆகிய பெண் கிரகங்கள் இடம் பெற்று இருந்தாலும் , அல்லது பார்த்தாலும் , அந்த ஜாதகருக்கு அநேகமாக பிரதம புத்திர அமைப்பு பெண் குழந்தையாகவே இருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை .
இப்படிப்பட்ட ஜாதகருக்குப் பிரதம ஜெனனம் பெண் குழந்தையாகப் பிறப்பது மட்டும் அல்லாமல் , அவருடைய வாழ்நாளில் பிறக்கக் கூடிய மொத்த புத்திர பாக்கிய அமைப்பில் , பெரும்பாலும் பெண் அதிகமாக இருக்கும் என்று சொல்லலாம் . இந்நிலை எங்கோ ஒரு சிலருக்கு மாறியும் ஏற்பட்டு விடுவது உண்டு . இதற்குக் காரணம் , அந்த ஜாதகருடைய மனைவியின் ஜாதகம் நேர் எதிர் மறையான பலன் தரக்கூடியதாக அமைந் திருக்கும் என்று சொல்லலாம் .
இனி கர்ப்பவாசம் எப்படி ? என்ற ஆய்வில் இறங்குவோம் .
பொதுவாக ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு மாதா மாதம் சிரமமாக ஏற்படுகிறது என்று எடுத்துக் கொண்டால் குறைந்தது ருது ஏற்பட்டது முதல் மூன்று நாட்கள் வரையில் மாத விலக்கிற்கான ருது ஒழுக்கு ஏற்படக்கூடிய காலமாகும் .
அதன்பிறகு , 4 ம் நாள் முதல் 9 ம் நாள் வரையில் 5 நாட்களில் கணவனும் மனைவியும் தகுதிக்கு ஏற்ப கூடுகின்ற காலமாக அமையும் மனைவியும். இக்காலத்தில் கூடிய மட்டும் கரு தரிப்பது கிடையாது .
அதை அடுத்து 10 ம் நாள் முதல் 20 ம் நாள் வரையில் உள்ள 11 நாட்களில் கணவனும் மனைவியும் கூடினால் , அப்போது தகுதிக்கு ஏற்ப கருத்தரித்து ஆண் அல்லது பெண் குழந்தைப் பிறப்பதற்கான வாய்ப்பு உண்டாகும் எனலாம் .
பிறகு 21 ம் நாள் முதல் 28 , 29 , 30 , 31 என்ற அவரவர் தகுதிக்கு ஏற்ப முடியும் நாள் வரையில் கருத்தரிக்கக்கூடிய தகுதியின்றி , மீண்டும் " மாத விலக்கு " என்று சொல்லக்கூடிய 10 நாள் முதல் , 20 ம் நாள் வரைக்கான கால வரையறையில் கவனம் செலுத்துவோம் .
இந்த 11 நாட்களில் , ஒற்றைப் படையாக அமையக்கூடிய 11 , 13 , 15 , 17 , 19 ஆம் நாட்களில் கணவனும் மனைவியும் முறைப்படி உடலுறவில் ஈடுபாடு கொண்டு , அக்காலத்தில் கருத்தரித்துப் பிறக்கக்கூடிய குழந்தை உண்மையில் ஆண் குழந்தையாகப் பிறக்கக்கூடும். .
இதைப்போலவே , ருது ஏற்படும் காலங்களில் 10 , 12,14 , 16 , 18 , 20 ஆகிய இரட்டைப்படை நாட்களில் கணவனும் மனைவியும் முறைப்படி உடலுறவில் ஈடுபாடு கொண்டு , அக்காலத்தில் கருதரித்துக் குழந்தைப் பிறந்தால் , அது உண்மையில் பெண் குழந்தையாகப் பிறக்கக்கூடும் .
இது தவிர , ஒரு ஜாதகருடைய புத்திர ஸ்தானத்திலோ அல்லது புத்திர ஸ்தானாதிபதி நின்ற ஸ்தானத்திலோ , சூரியன் சஞ்சரிக்கும் மாதங்களில் அந்த ஜாதகருக்கு சினை முட்டைகள் அதிகப்படியாக உற்பத்தியாகும் . ஆகவே இக்காலத்தில் உடலுறவில் ஈடுபாடு கொண்டால் , அந்த ஜாதகருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும் . இவ்வித அமைப்பு ஆண் ஜாதகத்தில் அமைந்திருந்தால் அப்போது ஆண் குழந்தைப் பிறக்கக்கூடும் . பெண் ஜாதகத்தில் அமைந்திருந்தால் அப்போது பெண் குழந்தைப் பிறக்கக்கூடும் . இத்தகைய கரு உற்பத்தி குறிப்பிட்ட அந்த மாதத்திற்கு ஒரு மாதம் முன் அல்லது ஒரு மாதம் பின் என்ற அமைப்பிலும் ஏற்படுவது உண்டு .
இதுவரையில் ஏற்படுவதற்கான சூழ்நிலைகளைப் பற்றி தீர்க்கமாக அறிந்தோம் . இனி கரு வளர்ச்சிக்கான அமைப்புகளைப் பற்றி விரிவாக அறிய முற்படுவோம் .
ஆண் - பெண் கூடி கருத்தரிக்க முதல் மாதம் ஆணின் சுக்கிலமும் , பெண்ணின் சுரோணிதமும் இரண்டறக் கலக்கும் . இம்மாதத்தில் காமக்காரகனான சுக்கிரன் அதிபதியாகிறார் .
இரண்டாம் மாதம் கரு பிண்டம் இளகி சிக்கென்று பாகு போல கூடிவரும். இப்போது மூளைக்காரகனான அங்காரகன் அதிபதியாகிறார் .
மூன்றாம் மாதம் கரு பிண்டத்திற்கு உருகொடுத்து கை , கால் , அங்குசம் என்ற உடல் அங்கங்கள் வளர்ச்சி பெறுவதற்கு புத்திரக்காரகனான குரு திபதியாகிறார்.
நான்காம் மாதம் உடல் அங்கங்களுக்கு உறுதியைத் தரக்கூடிய எலும்பும் , நரம்பும் உண்டாகும் வகையில் , இப்போது ஆத்ம காரகனான சூரியன் அதிபதியாகிறார்
ஐந்தாம் மாதம் தசை மாமிச பிண்டம் ஆகியவைகளை மூடி மறைத்து , உடலுக்கு உரு கொடுக்கும் வகையில் இப்போது உடல் காரகனான சந்திரன் அதிபதியாகிறார் .
ஆறாம் மாதம் ரோமம் , நகம் , அங்குலி போன்ற உடல் அங்கங்களின் உப உறுப்புகள் உண்டாகும் . இப்போது ஆயுள்காரகனான சனி அதிபதியாகயாகிறார்.
ஏழாம் மாதம் கருவாய் உருவாய் வந்த குழந்தைக்கு ஜீவன் ஊட்டும் வகையில் , பிராணன் உண்டாகும் . இப்போது வித்தியாபதி புதன் அதிபதியாகிறார் .
எட்டாம் மாதம் ஜீவனோடு கூடி கர்ப்ப வாசத்தில் உருப்பெற்று எழுகின்ற சிசு , இப்போது முதல் பூரண ' வளர்ச்சி பெற ஆரம்பிக்கும் . அக்குழந்தைக்கு லக்கினாதிபர் எவராக அமைவாரோ அவரே இப்போது அதிபதியாக அமைவார் .
ஒன்பதாம் மாதம் கருவில் உருவாகி வயதளவிலே வளர்ந்து வரும் அச்சிசுவுக்கு , தேகம் மேலும் வலுவடையச் செய்யும் . இக்காலத்தில் உடற் காரகனான சந்திரனே மீண்டும் அதிபதியாகிறார் .
பத்தாம் மாதம் கர்ப்பவாசத்தில் முழு பிம்பம் பெற்ற சிசுவுக்குப் பூரண வளர்ச்சி ஏற்பட்டு புவி உதயமாகப் போகின்ற இக்காலத்தில் ஆத்மக் கார்கனான சூரியனே மீண்டும் அதிபதியாகிறார் .
கருவில் உருவாகி
சூரியனும் , சந்திரனும் இருமுறை அதிபதியாக அமைவதால் , சூரியனைப் பிதுர்க்காரகன் என்று சொல்லி தந்தைக்கு ஒப்பாகவும் , சந்திரனை மாதுர்க் என்று சொல்லி தாய்க்கு ஒப்பாகவும் ஜோதிடக் கலை எடுத்துச் சொல்கிறது .
மேற்கண்ட வகையில் , கர்ப்பவாசத்தின் மூலம் , பிறக்கும் குழந்தை ஆண் ஆயின் அதற்கு ஒரு விதத்திலும் , பெண் ஆயின் அதற்கு ஒரு விதத்திலும் முதலுதவி செய்கின்றனர் . அது எப்படி ?
பெண் குழந்தை தாயின் வயிற்றிலிருந்து பிறந்த உடன் பெருஞ் சத்தம் போட்டு அழ ஆரம்பிக்கும். ஆண் குழந்தையாயின் பல நிமிஷங்கள் கழித்து இலெசாகச் சத்தம் போட்டு அழ ஆரம்பிக்கும்.
பிறந்த ஏழாம் நாள் , அல்லது சில நாட்கள் கழித்து , பிறந்த குழந்தைக்குத் தினம் தண்ணீர் ஊற்றும் சமயத்தில் , ஆண் குழந்தைகளின் ஸ்தனத்தை தினம் ஒட்டப்பிழிந்து அதிலுள்ள இளம் பாலை அப்புறப்படுத்தி விடுவார்கள் . பெண் குழந்தைகளுக்கு அமமாதிரி செய்வதில்லை .
இதற்குக் காரணம் , எதிர்காலத்தில் பெண் குழந்தை வளர்ந்து பருவமடையும் சமயத்தில் அக்குழந்தைக்குப் பருத்து உருண்டு திரண்ட ஸ்தனம் அமைய வேண்டும் என்பதால் பெண் குழந்தைக்கு இளம் பால் எடுப்பதில்லை .ஆண் குழந்தைக்குச் சரி வர ஸ்தனத்தைப் பிழிந்து இளம் பால் எடுக்கா விட்டால், ஆணாயினும் அவர்களுக்கு ஸ்தனம் எடுப்பாக அமைந்து விடுகிறது. இத்தகைய அமைப்பு எங்கோ ஓரிரு இடத்தில் கண்கூடாகக் காண்கிறோம்.ஆனால் இத்தகைய செயல் பெண் குழந்தைகளுக்கு மட்டும் அவசியமாகக் கருதப்படுகிறது.
எந்த ஒரு பெண்ணும் எடுப்பான ஸ்தனத்தைப் பெற்றிருந்தால் தான் அவளுக்கு நல்ல வரவேற்பு ஏற்படுகிறது . உண்மையில் பெண்களுக்கு இயற்கை அழகை ஏற்படுத்துவது ஸ்தன சம்பத்தேயாகும். இதன் காரணமாகத்தான் பண்டையக் காலத்தில் ஏற்றம் போட்டு , சால் பிடித்து , வயல் வெளிகளுக்குத் தண்ணீர் இரைக்கும் காலங்களில் பாடி வந்த ஏற்றப் பட்டிலும் கூட
குலையழகே தேங்காய் !
---------யழகே பெண்கள் ! " என்ற வசனம் இடம் பெற்று இருந்தது .
ஆகவே பெண்களுடைய பிறப்பு ரகசியத்தில் இத்தகைய அரிய சாதனம் ஒன்று இறைவன் கொடுத்த வரமாக இயற்கையாக அமைந் திருக்க வேண்டும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது . இக் கருத்தை விளக்கும் வகையில் அமைந்துள்ள சில ஜோதிட ரகசியங்களைக் கீழே காணலாம் .
அழகு - செல்வம் - ஆணவம்
உலகில் மங்கையராகப் பிறப்பவர்கள் எல்லோருமே அழகாகவும் , ஆடையாபரண செல்வச் சேர்க்கை உடையராகவும் , ஆணவச் செருக்கு உள்ளவராகவும் இருப்பதில்லை . இதற்குக் காரணம் குடும்ப சூழ்நிலை , பழக்க வழக்க தோஷம் என்று சொல்வதற்கில்லை . மூல காரணம் , “கிரக சித்திரங்களே " என்று சொல்வதுதான் சாலர் சிறந்ததாகும் . அது எப்படி ?
ஜெனன லக்கினம் , சந்திர லக்கினம் ஆகிய இரண்டும் பெண் ராசிகள் என்று சொல்லப்படுகின்ற யுக்ம ராசிகளில் இடம் பெற்று இருந்தால் , அந்த ஜாதகி மயிலைப் போன்ற சாயலை உடையவளாக இருப்பாள் என்றும் , அவ்விரு லக்கினங்களையும் சுபர் பார்த்தால் , அவள் மிகுந்த அழகுள்ளவளாகவும் , அணிகலன்களின் சேர்க்கை உள்ளவளாகவும் இருப்பாள் என்றும் சொல்லப் படுகிறது . இப்படிப்பட்ட பெண்களுக்கு இயற்கை கொள்ளையோ கொள்ளை “அழகு”அமைந்திருக்கும் .
அவ்விதமின்றி ஜெனன லக்கினமும் , ஜெனன ராசியும் , ஆண் ராசியும் என்று சொல்லப்படுகின்ற ஓஜை ராசிகளில் இடம் பெற்றிருந்தால் , அந்த ஜதகி ஆண் சொரூபம் உடையவளாக இருப்பாள் என்றும் , இப்படி அமையும் ஸ்தானங்களை சுபர் பார்த்தால் , அப்பெண்ணுக்கு நற்குண அமைப்பும் , செல்வச் சேர்க்கையும் , ஓரளவு அழகு வாய்ந்தவளாகவும் இருப்பாள் .
மேற்கண்ட ராசியும் , லக்கினமும் கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்று இருந்தால் , அந்த ஜாதகி பாபச் செயல்கள் அனைத்தையும் செய்யக்கூடியவளாக இருப்பாள் என்றும் , இத்தகைய பெண்களுக்கு ஆடையாபரண அணிகலன்களை நிறைய வாங்கிக் கொடுத்தாலும் , அவைகள் அனைத்தும் அவளிடத்தில் நிலைத்து நிற்காது. அந்த அவிற்கு அவள் பூர்வ ஜென்மத்தில் பாபம் செய்தவளாகக் கருதப்படுவாள் என்பது ஜோதிட சாஸ்திரப்படி பொது விதியாக அமைகிறது .
இதன்படி ஆராய்ந்தால் எந்த ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஜெனன லக்கினமும், ஜெனன ராசியும் ஆண் ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவைகளில் இடம் பெற்றிருக்கக் கூடாது என்று ஏற்படுகிறது. ஒரு வேளை ஆண் ராசியில் ஒன்று பெண் ராசியில் ஒன்றும் இடம் பெற்றிருந்தால் ஒரளவு பரவாயில்லை என்று சொல்லலாம். இத்தகைய கருத்து கொண்ட ஜாதகலங்காரப் பாடலொன்றறைக் காண்போம்.
“உள்ள பிறை லக்கினமுஞ் ஜென்ம லக்கினமும்
உறுமி இரட்டையாகில் வடிவுடைய மயிலாகும்
தெள்ளிய அம்மனை இரண்டும் நல்லோர்கள் காணில்
திரளாகப் பணி அவணிவள் ஜெகத்தில் ரூபியாம்
கொள்ளு மிருமனை ஒற்றையாகில் ஆண்சொரூபி
கூறு நல்லோர் கண்டிடில் நற்குலம் செல்வம் குலவும்
கள்ள முறும் பாவாந்த ராசி யிரண்டினிலே
கலந்த துதிக்கிற் கண்டிடிற் பொல்லாப் பாவக் கன்னி “
அழகுள்ள கணவன் அமைப்பு
ஒரு பெண்ணின் ஜாதகத்தைக் கொண்டு அவளுக்கு வரப் போகும் கணவன் அழகுள்ளவனா? அல்லது அரூபியா ? என்று நிர்ணயம் செய்யலாம் அது எப்படி ?
ஒரு பெண்ணின் ஜெனன லக்கினமும் ஜெனன லக்கினமும் ஜெனன ராசியும் ஆக இரண்டும் ஏதாவது ஒரு ஆண் ராசியாகிய ஓஜை ராசியில் இடம் பெற்றிருந்தால அவள் ஆண்தன்மையுடயவளாக இருப்பாள் என்பது மேலே உள்ள பாடலின்கருத்தாகும் . இதே அமைப்பில் உள்ள பெண் ஜாதகத்தில் ஜெனன லக்கினமும் , ஜெனன ராசியும் ஒன்றாக அமைந்துள்ள அந்த ஆண் ராசியை , ஆண் கிரகங்களாகிய குரு , சூரியன் , அங்காரகன் ஆகியவை பார்த்தால் , அவளுக்கு வாய்க்கும் உள்ளபடியே மிகவும் அழகுள்ளவனாக இருப்பான் என்று கீழுள்ள ஜாதகலங்காரப் பாடல் இனிது விளக்குகிறது
“வல்ல மதியம் இவள் சன்மம் ஸ்திரீகள் மனையாயின்
நல்ல சுபரு நோக்கமுற நாடும் வடிவு மாபரணம்
சொல்லு மிவ் வீடிரண்டொற்றை தோன்றப் புருடக் கிரகமிதை
ஒல்கிப் பார்க்கப் புருட வடிவுற்றே யிருக்குமிவள் தனக்கே ' '
மேற்கண்ட பாடல்களில் இருந்து நாம் அறிவது என்னவென்றால் பெண்களுக்கு பெண் ராசிகள் ஜெனன லக்கினமாகவும் , ஜெனன ராசியாகவும் அமைவதுதான் நன்று என்றும் , ஆண்களுக்கு ஆண் ராசிகள் ஜெனன லக்கினம் - ஜென்ம ராசி என்று அமைவதுதான் நன்று என்றும் தெரிய வருகிறது
இவைகளே ஆண் - பெண் ஆகிய இரு வேறு இனப் பிரிவுகளுக்கான ரகசியமாகும் .ஜோதிடக் கலையும் ஆண் பெண் பாலுணர்வும்
ஆன் - - பெண் என்ற பாலுணர்ச்சி உலகில் உள்ள ஜீவராசிகளுக்கு மட்டும்தான் சொந்தம் என்று சொல்வதற்கில்லை . விண்ணுலகத்தில் உள்ள தேவாதி தேவர்களுக்கும் கூட இத்தகைய பிரிவுகள் உள்ளன
சிவன் – சக்தி, மகாவிஷ்ணு – மகாலட்சுமி , பிரம்மதேவன் - சரஸ்வதி என்ற ஆண் பெண் சக்திகள் இடம் பெற்று இருக்கின்றன . தேவாதி தேவர்களுக்குத் தலைவர் களான மூவர்களுக்கு மட்டும் இந்த இனப் பிரிவு உண்டு என்பதில்லை . இவர்களால் நியமனம் பெற்றுள்ள நவக்கிரகாதி தேவர்களுக்கும் , நவக்கிரக பரிபாலனத்திற்கும்கூட இத்தகைய பால் உணர்வு உண்டு என்று சொல்லப்படுகிறது .
ஆகவே , நவக்கிரகாதி தேவதைகளைப் பற்றி ஆராய்ந்தறித்து பலன் காண முற்படுவோம் .
நவக்கிரக பரிபாலனத்தில் , 1 பன்னிரெண்டு இராசி வீடுகள் , 2 இருபத்தேழு நட்சத்திர மண்டலங்கள், 3 – ஒன்பது கிரகங்கள் என்ற மூவகை அங்கங்களே இடம் பெறுகின்றன . இம்மூன்றும் ஒன்று மற்றொன்றுடன் இயங்குகின்றது நிகழ்ச்சிகளே " ஜோதிடக் கலை " யை உருவாக்கக் கூடிய சாதனமாகும் .
இம்மூன்றில் இராசி இல்லங்களும் , நட்சத்திர மண்டலங்களும் இடம் விட்டு இடம் மாறாமலும் , அசையாமலும் இருக்கின்றன என்று அறிதல் வேண்டும் . ஆனால் நவ நாயகர்கள் என்று சொல்லக்கூடிய நவக்கிரகங்கள் மட்டும் , ஒரு விநாடி கூட ஸ்தம்பித்து நிற்காமல் , சதா வலம் வந்த வண்ணமாகவே இருக்கின்றன . இவைகளில் சூரியன் மூலக் கிரகம் என்பதால் , அது இடம் விட்டு இடம் பெயராமல் இருக்கிறது என்றாலும் , அச்சூரியன் தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது என்பது விஞ்ஞான உண்மையாகும்
இப்போது ராசி இல்லங்கள் , நட்சத்திர மண்டலங்கள் , கிரகங்கள் என்ற மூன்று அங்கங்களுக்கும் கூட , ஆண் - பெண் என்ற இன அமைப்புகள் இருக்கின்றன என்பதைப் பற்றி விரிவாக ஆராய முற்படுவோம் .
ராசி இல்லங்கள், நட்சத்திர மண்டலங்கள், கிரகங்கள் என்ற மூன்று அங்கங்களுக்கும் கூட, ஆண் – பெண் என்ற இன அமைப்புகள் இருக்கின்றன என்பதைப் பற்றி விரிவாக ஆராய முற்படுவோம்.
ஆண் ராசி - பெண் ராசி ராசி பன்னிரெண்டில் , ஓஜை பாசிகள் என்று சொல்லப்படுகின்ற மேஷம் , மிதுனம் , சிம்மம் , துலாம் , தனுசு , கும்பம் ஆகிய ஆறு ராசிகளாகும் ஆண் ராசிகளாகும் . யுக்ம ராசிகள் என்று சோல்லப்படுகின்ற ரிஷபம், கடகம்,கன்னி விருச்சிகம்,மகரம் , மீனம் ஆகிய ஆறு ராசிகளும் பெண் ராசிகளாகும்.
சர ராசிகள் நான்கில் , இரண்டு ஆண் ராசிகள் இரண்டு பெண் ராசிகள் என்றும் ஸ்திர ராசிகள் நான்கில் இரண்டு ஆண் ராசிகள் இரண்டு பெண் ராசிகள் என்றும் , உபய ராசிகள் நான்கில் இரண்டு ஆண் ராசிகள் , இரண்டு பெண் ராசிகள் என்றும் , ஆண் - பெண் என்ற ஸ்தான பலம் அமைகின்றன .
ஆண் - பெண் - அலி நட்சத்திர மண்டலங்கள் , நட்சத்திர மண்டலங்களிலும் கூட , ஆண் - பெண் அலி என்ற மூன்று வகையான பிரிவுகள் உள்ளன என்று அறிதல் வேண்டும் . ஆண் நட்சத்திரங்கள் 8 என்றும் , பெண் நட்சத்திரங்கள் 16 என்றும் , அலி நட்சத்திரங்கள் 3 என்றும் தெரிய வருகின்றன . இவைகளில் பெண் நட்சத்திரங்கள் , நட்சத்திரங்களைவிட இரட்டிப்பாக இருக்கின்றன என்று அறிகிறோம் . அவைகளைப் பற்றி விரிவாகக் கீழே காணலாம் .
ஆண் நட்சத்திரங்கள் – 8
1 -அசுவனி 2. புனர்பூசம் 3 - பூசம் 4.அஸ்தம் 5. அனுஷம் 6. திருவோணம் 7 – பூட்டாதி 8. உத்திரட்டாதி
பெண் நட்சத்திரங்கள் – 16
1 பரணி , 2 கார்த்திகை, 3. ரோகினி , 4. திருவாதிரை 5 ஆயில்யம், 6 மகம், 7 பூரம் 8 உத்திரம் 9 சித்திரை, 10 சுவாதி, 11 விசாகம், 12 கேட்டை, 13 பூராடம், 14 உத்திராடம், 15 அவிட்டம், 16 ரேவதி
அலி நட்சத்திரங்கள் 1 மிருகசீரிஷம், 2 மூலம், 3 சதையம்
ஆண்-பெண்-அலி கிரகங்கள்
கிரகங்கள் ஒன்பதில் 3 ஆண் கிரகங்களும், 3 பெண் கிரகங்களும், இடம் பெற்றுள்ளன அவைகளைக் காண்போம்.
ஆண் கிரகங்கள் 1 சூரியன், 2 செவ்வாய், 3 அங்காரகன் ( செவ்வாய் )
பெண் கிரகங்கள் 1 சந்திரன், 2 சுக்கிரன், 3 ராகு
அலி கிரகங்கள் 1 புதன், 2 சனி , 3 கேது
இது வரையில் ராசி இல்லங்கள் , நட்சத்திர மண்டலங்கள் , கிரகங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்தோம் . இப்போது அன்றாடம் நடப்பிலுள்ள காலச் சக்கரத்திலும் கூட , ஆண் காலம் - பெண் காலம் என்ற இருவேறு கால சுழற்சிகள் இடம் பெற்று இருக்கின்றன என்ற அறிதல் வேண்டும்.
ஆண் காலம் – பெண் காலம் அன்றாடம் ஆங்கில , தமிழ் தேதி என்று என்னவாக இருந்தாலும் ஆண் காலம் - பெண் காலம் என்னவாக இருந்தாலும் பிரதி ஞாயிறு முதல் சூரிய உதயம் ஆனது முதற்கொண்டு , அடுத்து முடியல் கூடிய ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை , ஆண் - பெண் என்ற குழந்தைகள் மாறி மாறி பிறந்து கொண்டே இருக்கும் . இது ஒரு ஜோதிட சாஸ்திர தத்துவமாகும் . இத்தகைய கால வரம்பை , " புருஷ காலம் " என்றும் , " ஸ்த்ரீ காலம் " என்றும் பெயரிட் டழைக்கின்றனர் . இத்தகைய பட்டியல் ஒன்றை மறு பக்கத்தில் காண்போம் .
காலை 6 மணியில் ஆரம்பித்து மாலை 6 மணியில் முடிவடையும் ஆண் பெண் ஜெனன ஜாதக கால கட்டம் , இரவு 6 மணியில் ஆரம்பித்து விடியற்காலை 6 மணியில் முடிவடையும் கால கட்டத்திற்கும் பலன் தரக் கூடியதாகும் .
இது வரையில் ஆண் - பெண் ஆகிய இரு வேறு இனப் பிரிவுகளின் இலக்கணத்தைப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்தோம் . இனி பெண்களும் கான யோக - அவயோக ஜாதகப் பலன்கள் எப்படி? என்பன போன்ற ஆய்வுகளில் இறங்குவோம்.
பெண்களுக்கான பிறப்பு ரகசியம்
பிறப்பு , புவி உதயம் என்பது ஆண் - பெண் ஆகிய இரு வேறு இனப் பிரிவுகளுக்கும் பொது என்ற போதிலும் , பெண் ஜெனனத்திற்கான சில சிறப்பு விதிகள் உண்டு . எது எப்படி இருந்த போதிலும் ஒரு குடும்பத்தில் முதன் முதலாகப் பிறக்கக்கூடிய குழந்தை . அதாவது சீமந்தம் செய்து பிறக்கள் கூடியதாகக் கருதப்படுகின்ற குழந்தை , பெண் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்பது நமது நாட்டுப் பண்பாடு , ஒரு குடும்பத்தில் தலைப் பிரசவத்தில் பிறக்கக்கூடிய குழந்தை பெண் குழந்தையாக இருந்தால்தான் அக்குழந்தை வளர வளர அக்குடும்பம் ஆல்போல் தழைத்து வளரும் என்பது தம் நாட்டுப் பாரம்பரியமாகக் கருதப்பட்டு வருகிறது . இவ்விதம் இன்றி ஒரு குடும்பத்தில் ஜேஷ்ட ஜெனனம் , புத்திர ஜெனனமாக இருந்து விட்டால் அது அவ்வளவு யோகம் அல்ல என்றே சொல்ல வேண்டும் ,
ஒரு குடும்பத்தில் முதன் முதலாகப் பிறக்கக் கூடியது ஆனா ? அல்லது பெண் என்று எப்படி பாவிப்பது ? இதற்கு பல்வேறு ஆய்வுகள் : என்றாலும் , அக்குழந்தையின் தந்தை ஜாதகத்தைக் கொண்டு , பிரதம புத்திர ஜெனனம் ஆணா ? அல்லது பெண்ணா ? என்று தீர்க்கமாக எடுத்துச் சொல்லி விடலாம் . அது எப்படி?
ஒரு ஆணின் ஜாதகத்தில் , புத்திர ஸ்தானமான 5 - ம் இல்லத்தில் சந்திரன் , சுக்கிரன் , ராகு ஆகிய பெண் கிரகங்கள் இடம் பெற்று இருந்தாலும் , அல்லது பார்த்தாலும் , அந்த ஜாதகருக்கு அநேகமாக பிரதம புத்திர அமைப்பு பெண் குழந்தையாகவே இருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை .
இப்படிப்பட்ட ஜாதகருக்குப் பிரதம ஜெனனம் பெண் குழந்தையாகப் பிறப்பது மட்டும் அல்லாமல் , அவருடைய வாழ்நாளில் பிறக்கக் கூடிய மொத்த புத்திர பாக்கிய அமைப்பில் , பெரும்பாலும் பெண் அதிகமாக இருக்கும் என்று சொல்லலாம் . இந்நிலை எங்கோ ஒரு சிலருக்கு மாறியும் ஏற்பட்டு விடுவது உண்டு . இதற்குக் காரணம் , அந்த ஜாதகருடைய மனைவியின் ஜாதகம் நேர் எதிர் மறையான பலன் தரக்கூடியதாக அமைந் திருக்கும் என்று சொல்லலாம் .
இனி கர்ப்பவாசம் எப்படி ? என்ற ஆய்வில் இறங்குவோம் .
பொதுவாக ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு மாதா மாதம் சிரமமாக ஏற்படுகிறது என்று எடுத்துக் கொண்டால் குறைந்தது ருது ஏற்பட்டது முதல் மூன்று நாட்கள் வரையில் மாத விலக்கிற்கான ருது ஒழுக்கு ஏற்படக்கூடிய காலமாகும் .
அதன்பிறகு , 4 ம் நாள் முதல் 9 ம் நாள் வரையில் 5 நாட்களில் கணவனும் மனைவியும் தகுதிக்கு ஏற்ப கூடுகின்ற காலமாக அமையும் மனைவியும். இக்காலத்தில் கூடிய மட்டும் கரு தரிப்பது கிடையாது .
அதை அடுத்து 10 ம் நாள் முதல் 20 ம் நாள் வரையில் உள்ள 11 நாட்களில் கணவனும் மனைவியும் கூடினால் , அப்போது தகுதிக்கு ஏற்ப கருத்தரித்து ஆண் அல்லது பெண் குழந்தைப் பிறப்பதற்கான வாய்ப்பு உண்டாகும் எனலாம் .
பிறகு 21 ம் நாள் முதல் 28 , 29 , 30 , 31 என்ற அவரவர் தகுதிக்கு ஏற்ப முடியும் நாள் வரையில் கருத்தரிக்கக்கூடிய தகுதியின்றி , மீண்டும் " மாத விலக்கு " என்று சொல்லக்கூடிய 10 நாள் முதல் , 20 ம் நாள் வரைக்கான கால வரையறையில் கவனம் செலுத்துவோம் .
இந்த 11 நாட்களில் , ஒற்றைப் படையாக அமையக்கூடிய 11 , 13 , 15 , 17 , 19 ஆம் நாட்களில் கணவனும் மனைவியும் முறைப்படி உடலுறவில் ஈடுபாடு கொண்டு , அக்காலத்தில் கருத்தரித்துப் பிறக்கக்கூடிய குழந்தை உண்மையில் ஆண் குழந்தையாகப் பிறக்கக்கூடும். .
இதைப்போலவே , ருது ஏற்படும் காலங்களில் 10 , 12,14 , 16 , 18 , 20 ஆகிய இரட்டைப்படை நாட்களில் கணவனும் மனைவியும் முறைப்படி உடலுறவில் ஈடுபாடு கொண்டு , அக்காலத்தில் கருதரித்துக் குழந்தைப் பிறந்தால் , அது உண்மையில் பெண் குழந்தையாகப் பிறக்கக்கூடும் .
இது தவிர , ஒரு ஜாதகருடைய புத்திர ஸ்தானத்திலோ அல்லது புத்திர ஸ்தானாதிபதி நின்ற ஸ்தானத்திலோ , சூரியன் சஞ்சரிக்கும் மாதங்களில் அந்த ஜாதகருக்கு சினை முட்டைகள் அதிகப்படியாக உற்பத்தியாகும் . ஆகவே இக்காலத்தில் உடலுறவில் ஈடுபாடு கொண்டால் , அந்த ஜாதகருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும் . இவ்வித அமைப்பு ஆண் ஜாதகத்தில் அமைந்திருந்தால் அப்போது ஆண் குழந்தைப் பிறக்கக்கூடும் . பெண் ஜாதகத்தில் அமைந்திருந்தால் அப்போது பெண் குழந்தைப் பிறக்கக்கூடும் . இத்தகைய கரு உற்பத்தி குறிப்பிட்ட அந்த மாதத்திற்கு ஒரு மாதம் முன் அல்லது ஒரு மாதம் பின் என்ற அமைப்பிலும் ஏற்படுவது உண்டு .
இதுவரையில் ஏற்படுவதற்கான சூழ்நிலைகளைப் பற்றி தீர்க்கமாக அறிந்தோம் . இனி கரு வளர்ச்சிக்கான அமைப்புகளைப் பற்றி விரிவாக அறிய முற்படுவோம் .
ஆண் - பெண் கூடி கருத்தரிக்க முதல் மாதம் ஆணின் சுக்கிலமும் , பெண்ணின் சுரோணிதமும் இரண்டறக் கலக்கும் . இம்மாதத்தில் காமக்காரகனான சுக்கிரன் அதிபதியாகிறார் .
இரண்டாம் மாதம் கரு பிண்டம் இளகி சிக்கென்று பாகு போல கூடிவரும். இப்போது மூளைக்காரகனான அங்காரகன் அதிபதியாகிறார் .
மூன்றாம் மாதம் கரு பிண்டத்திற்கு உருகொடுத்து கை , கால் , அங்குசம் என்ற உடல் அங்கங்கள் வளர்ச்சி பெறுவதற்கு புத்திரக்காரகனான குரு திபதியாகிறார்.
நான்காம் மாதம் உடல் அங்கங்களுக்கு உறுதியைத் தரக்கூடிய எலும்பும் , நரம்பும் உண்டாகும் வகையில் , இப்போது ஆத்ம காரகனான சூரியன் அதிபதியாகிறார்
ஐந்தாம் மாதம் தசை மாமிச பிண்டம் ஆகியவைகளை மூடி மறைத்து , உடலுக்கு உரு கொடுக்கும் வகையில் இப்போது உடல் காரகனான சந்திரன் அதிபதியாகிறார் .
ஆறாம் மாதம் ரோமம் , நகம் , அங்குலி போன்ற உடல் அங்கங்களின் உப உறுப்புகள் உண்டாகும் . இப்போது ஆயுள்காரகனான சனி அதிபதியாகயாகிறார்.
ஏழாம் மாதம் கருவாய் உருவாய் வந்த குழந்தைக்கு ஜீவன் ஊட்டும் வகையில் , பிராணன் உண்டாகும் . இப்போது வித்தியாபதி புதன் அதிபதியாகிறார் .
எட்டாம் மாதம் ஜீவனோடு கூடி கர்ப்ப வாசத்தில் உருப்பெற்று எழுகின்ற சிசு , இப்போது முதல் பூரண ' வளர்ச்சி பெற ஆரம்பிக்கும் . அக்குழந்தைக்கு லக்கினாதிபர் எவராக அமைவாரோ அவரே இப்போது அதிபதியாக அமைவார் .
ஒன்பதாம் மாதம் கருவில் உருவாகி வயதளவிலே வளர்ந்து வரும் அச்சிசுவுக்கு , தேகம் மேலும் வலுவடையச் செய்யும் . இக்காலத்தில் உடற் காரகனான சந்திரனே மீண்டும் அதிபதியாகிறார் .
பத்தாம் மாதம் கர்ப்பவாசத்தில் முழு பிம்பம் பெற்ற சிசுவுக்குப் பூரண வளர்ச்சி ஏற்பட்டு புவி உதயமாகப் போகின்ற இக்காலத்தில் ஆத்மக் கார்கனான சூரியனே மீண்டும் அதிபதியாகிறார் .
கருவில் உருவாகி
சூரியனும் , சந்திரனும் இருமுறை அதிபதியாக அமைவதால் , சூரியனைப் பிதுர்க்காரகன் என்று சொல்லி தந்தைக்கு ஒப்பாகவும் , சந்திரனை மாதுர்க் என்று சொல்லி தாய்க்கு ஒப்பாகவும் ஜோதிடக் கலை எடுத்துச் சொல்கிறது .
மேற்கண்ட வகையில் , கர்ப்பவாசத்தின் மூலம் , பிறக்கும் குழந்தை ஆண் ஆயின் அதற்கு ஒரு விதத்திலும் , பெண் ஆயின் அதற்கு ஒரு விதத்திலும் முதலுதவி செய்கின்றனர் . அது எப்படி ?
பெண் குழந்தை தாயின் வயிற்றிலிருந்து பிறந்த உடன் பெருஞ் சத்தம் போட்டு அழ ஆரம்பிக்கும். ஆண் குழந்தையாயின் பல நிமிஷங்கள் கழித்து இலெசாகச் சத்தம் போட்டு அழ ஆரம்பிக்கும்.
பிறந்த ஏழாம் நாள் , அல்லது சில நாட்கள் கழித்து , பிறந்த குழந்தைக்குத் தினம் தண்ணீர் ஊற்றும் சமயத்தில் , ஆண் குழந்தைகளின் ஸ்தனத்தை தினம் ஒட்டப்பிழிந்து அதிலுள்ள இளம் பாலை அப்புறப்படுத்தி விடுவார்கள் . பெண் குழந்தைகளுக்கு அமமாதிரி செய்வதில்லை .
இதற்குக் காரணம் , எதிர்காலத்தில் பெண் குழந்தை வளர்ந்து பருவமடையும் சமயத்தில் அக்குழந்தைக்குப் பருத்து உருண்டு திரண்ட ஸ்தனம் அமைய வேண்டும் என்பதால் பெண் குழந்தைக்கு இளம் பால் எடுப்பதில்லை .ஆண் குழந்தைக்குச் சரி வர ஸ்தனத்தைப் பிழிந்து இளம் பால் எடுக்கா விட்டால், ஆணாயினும் அவர்களுக்கு ஸ்தனம் எடுப்பாக அமைந்து விடுகிறது. இத்தகைய அமைப்பு எங்கோ ஓரிரு இடத்தில் கண்கூடாகக் காண்கிறோம்.ஆனால் இத்தகைய செயல் பெண் குழந்தைகளுக்கு மட்டும் அவசியமாகக் கருதப்படுகிறது.
எந்த ஒரு பெண்ணும் எடுப்பான ஸ்தனத்தைப் பெற்றிருந்தால் தான் அவளுக்கு நல்ல வரவேற்பு ஏற்படுகிறது . உண்மையில் பெண்களுக்கு இயற்கை அழகை ஏற்படுத்துவது ஸ்தன சம்பத்தேயாகும். இதன் காரணமாகத்தான் பண்டையக் காலத்தில் ஏற்றம் போட்டு , சால் பிடித்து , வயல் வெளிகளுக்குத் தண்ணீர் இரைக்கும் காலங்களில் பாடி வந்த ஏற்றப் பட்டிலும் கூட
குலையழகே தேங்காய் ! முலையழகே பெண்கள் ! " என்ற வசனம் இடம் பெற்று இருந்தது .
ஆகவே பெண்களுடைய பிறப்பு ரகசியத்தில் இத்தகைய அரிய சாதனம் ஒன்று இறைவன் கொடுத்த வரமாக இயற்கையாக அமைந் திருக்க வேண்டும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது . இக் கருத்தை விளக்கும் வகையில் அமைந்துள்ள சில ஜோதிட ரகசியங்களைக் கீழே காணலாம் .
அழகு - செல்வம் - ஆணவம்
உலகில் மங்கையராகப் பிறப்பவர்கள் எல்லோருமே அழகாகவும் , ஆடையாபரண செல்வச் சேர்க்கை உடையராகவும் , ஆணவச் செருக்கு உள்ளவராகவும் இருப்பதில்லை . இதற்குக் காரணம் குடும்ப சூழ்நிலை , பழக்க வழக்க தோஷம் என்று சொல்வதற்கில்லை . மூல காரணம் , “கிரக சித்திரங்களே " என்று சொல்வதுதான் சாலர் சிறந்ததாகும் . அது எப்படி ?
ஜெனன லக்கினம் , சந்திர லக்கினம் ஆகிய இரண்டும் பெண் ராசிகள் என்று சொல்லப்படுகின்ற யுக்ம ராசிகளில் இடம் பெற்று இருந்தால் , அந்த ஜாதகி மயிலைப் போன்ற சாயலை உடையவளாக இருப்பாள் என்றும் , அவ்விரு லக்கினங்களையும் சுபர் பார்த்தால் , அவள் மிகுந்த அழகுள்ளவளாகவும் , அணிகலன்களின் சேர்க்கை உள்ளவளாகவும் இருப்பாள் என்றும் சொல்லப் படுகிறது . இப்படிப்பட்ட பெண்களுக்கு இயற்கை கொள்ளையோ கொள்ளை “அழகு”அமைந்திருக்கும் .
அவ்விதமின்றி ஜெனன லக்கினமும் , ஜெனன ராசியும் , ஆண் ராசியும் என்று சொல்லப்படுகின்ற ஓஜை ராசிகளில் இடம் பெற்றிருந்தால் , அந்த ஜதகி ஆண் சொரூபம் உடையவளாக இருப்பாள் என்றும் , இப்படி அமையும் ஸ்தானங்களை சுபர் பார்த்தால் , அப்பெண்ணுக்கு நற்குண அமைப்பும் , செல்வச் சேர்க்கையும் , ஓரளவு அழகு வாய்ந்தவளாகவும் இருப்பாள் .
மேற்கண்ட ராசியும் , லக்கினமும் கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்று இருந்தால் , அந்த ஜாதகி பாபச் செயல்கள் அனைத்தையும் செய்யக்கூடியவளாக இருப்பாள் என்றும் , இத்தகைய பெண்களுக்கு ஆடையாபரண அணிகலன்களை நிறைய வாங்கிக் கொடுத்தாலும் , அவைகள் அனைத்தும் அவளிடத்தில் நிலைத்து நிற்காது. அந்த அவிற்கு அவள் பூர்வ ஜென்மத்தில் பாபம் செய்தவளாகக் கருதப்படுவாள் என்பது ஜோதிட சாஸ்திரப்படி பொது விதியாக அமைகிறது .
இதன்படி ஆராய்ந்தால் எந்த ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஜெனன லக்கினமும், ஜெனன ராசியும் ஆண் ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவைகளில் இடம் பெற்றிருக்கக் கூடாது என்று ஏற்படுகிறது. ஒரு வேளை ஆண் ராசியில் ஒன்று பெண் ராசியில் ஒன்றும் இடம் பெற்றிருந்தால் ஒரளவு பரவாயில்லை என்று சொல்லலாம். இத்தகைய கருத்து கொண்ட ஜாதகலங்காரப் பாடலொன்றறைக் காண்போம்.
“உள்ள பிறை லக்கினமுஞ் ஜென்ம லக்கினமும்
உறுமி இரட்டையாகில் வடிவுடைய மயிலாகும்
தெள்ளிய அம்மனை இரண்டும் நல்லோர்கள் காணில்
திரளாகப் பணி அவணிவள் ஜெகத்தில் ரூபியாம்
கொள்ளு மிருமனை ஒற்றையாகில் ஆண்சொரூபி
கூறு நல்லோர் கண்டிடில் நற்குலம் செல்வம் குலவும்
கள்ள முறும் பாவாந்த ராசி யிரண்டினிலே
கலந்த துதிக்கிற் கண்டிடிற் பொல்லாப் பாவக் கன்னி “
அழகுள்ள கணவன் அமைப்பு
ஒரு பெண்ணின் ஜாதகத்தைக் கொண்டு அவளுக்கு வரப் போகும் கணவன் அழகுள்ளவனா? அல்லது அரூபியா ? என்று நிர்ணயம் செய்யலாம் அது எப்படி ?
ஒரு பெண்ணின் ஜெனன லக்கினமும் ஜெனன லக்கினமும் ஜெனன ராசியும் ஆக இரண்டும் ஏதாவது ஒரு ஆண் ராசியாகிய ஓஜை ராசியில் இடம் பெற்றிருந்தால அவள் ஆண்தன்மையுடயவளாக இருப்பாள் என்பது மேலே உள்ள பாடலின்கருத்தாகும் . இதே அமைப்பில் உள்ள பெண் ஜாதகத்தில் ஜெனன லக்கினமும் , ஜெனன ராசியும் ஒன்றாக அமைந்துள்ள அந்த ஆண் ராசியை , ஆண் கிரகங்களாகிய குரு , சூரியன் , அங்காரகன் ஆகியவை பார்த்தால் , அவளுக்கு வாய்க்கும் உள்ளபடியே மிகவும் அழகுள்ளவனாக இருப்பான் என்று கீழுள்ள ஜாதகலங்காரப் பாடல் இனிது விளக்குகிறது
“வல்ல மதியம் இவள் சன்மம் ஸ்திரீகள் மனையாயின்
நல்ல சுபரு நோக்கமுற நாடும் வடிவு மாபரணம்
சொல்லு மிவ் வீடிரண்டொற்றை தோன்றப் புருடக் கிரகமிதை
ஒல்கிப் பார்க்கப் புருட வடிவுற்றே யிருக்குமிவள் தனக்கே ' '
மேற்கண்ட பாடல்களில் இருந்து நாம் அறிவது என்னவென்றால் பெண்களுக்கு பெண் ராசிகள் ஜெனன லக்கினமாகவும் , ஜெனன ராசியாகவும் அமைவதுதான் நன்று என்றும் , ஆண்களுக்கு ஆண் ராசிகள் ஜெனன லக்கினம் - ஜென்ம ராசி என்று அமைவதுதான் நன்று என்றும் தெரிய வருகிறது
இவைகளே ஆண் - பெண் ஆகிய இரு வேறு இனப் பிரிவுகளுக்கான ரகசியமாகும் .
நன்றி ; -திரு மயிலை பூபதி ராஜன் (A M பிள்ளை )
பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வசித்தேன் நேற்று அடிப்படை ஞானமில்லாதவர்கள் பலன் கூறுவதில் தேற்றுவிடுவர்கள்
Comments
Post a Comment