சந்திரனால் அமையும் யோகங்கள்

 சந்திரனால் அமையும் யோகங்கள்

சந்திரனால் பலவிதமன யோகங்கள் ஏற்படும்.

1) சுனபயோகம்,2)அனப யோகம், 3) துருதரா யோகம் 4)சந்திரஅதியோகம், 5)அமலா யோகம்,6) வசுமதி யோகம், 7)-சசிமங்கள யோகம்,8-சந்திரிகா யோகம் 9)கல்யாண சகட யோகம், 10)ராஜலட்ச யோகாம், 11)கஜகேசரி யோகம் தருவர்கள். இந்த யோகங்கள் சுப பலன்களை தருபவைகள் .

1)சகட யோகம், 2)கேமத்துரும யோகம், 3)சந்திர சண்டாள யோகம், 4)மாதுர்நாச யோகம் .தீய பலன் தரும்.

சந்திரனை அடிப்படையில் கணக்கிடப் படுககின்ற சிறப்பு வாய்ந்த யோகங்களாகும்.

சுனப யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டில் சூரியன், ராகு, கேதுவைத் தவிர பஞ்சமவர்கள் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி தனித்தனியே த்தித்இருந்தாலும், இணைந்திருந்தலும் சுனப யோகம் அமையும்.

ஜாதகர் /ஜாதகி உழைப்பினாலும் முயற்ச்சியினாலும் பணத்தை சம்பாதிப்பார்கள், பூமி, சொத்துக்கள், அரச வாழ்வு, பூகழ், புத்திசாதுர்யம் உள்ளவராகவும், செலல்வந்தராகவும் இருப்பார்கள்.

சந்திரனை சனி, சுக்கிரன் பார்வை, இணைவு இல்லமால் இருக்க வேண்டும்.

சந்திரனுக்கு சூரியன், ராகு, கேது இவர்களின் தொடர்பு இல்லமால் இருக்க வேண்டும்.

வளர் சந்திரனக இருப்பது சிறப்பன யோகம் தரும்.

இந்துவுக்கு இரண்டாம் வீட்டில் இனிய கோளிருந்த காலை

முந்திய சுனப யோகமிதன் பலன் மொழியுங் காலை

சந்தந் தனவான் ராஜன் மன்னன் புத்தியுள்ளான்

சுந்தரப்புவி களெங்குத்து தித்திடுங் கீர்த்திமானாம்

சந்திரனுக்கு இரண்டில் சுப கிரகங்கள் இருந்தால் சுனப யோகமகும் .ஜாதகர் /ஜாதகி அழகனவர், செல்வந்தர், மந்திரி, ராஜ போகவாழ்வும், அரசு உயர் உத்தியோகம், புத்தி சதுர்யம், உள்ளவர்கள், வாகனதி வசதியும் பூகழ் கீர்த்தி அடைவர்கள்.

சோமனார் தனக்கிரண்டில் சனி சுனப யோகம்

தாமிதமாமுன் தந்தை யிசித்து தனங்களில்லைத்

காமுறு சிறுவன் தானு ங்காசினித் ரசானாகித்

தாமிகு தனங்கள் தேடித்தகுதி பெற்றிடுவான்றானே

சந்திரனுக்கு இரண்டில் சனியிருந்தால் சுனப யோகம்.ஜாதகர் /ஜாதகியின் தந்தைக்கு யோகமில்லை பிறந்த முதல் தந்தை யாசித்து செல்வங்கள் இல்லதவர்கள் கஷ்டங்களும் அனுபவிப்பார்கள். ஜாதகர் /ஜாதகிக்கு உயர்பதவி, அந்தஸ்தும், அதிக செல்வம் பெற்று சுகபோக வாழ்வு அமையும்.

பாரப்பா இன்னு மொன்று பகரக் கேளு

பானுமைந்தன் பால் மதிக்கு வாக்கில் வந்தால்

கீரப்பா மேம் பாடு சவுக்கியம் செம் பொன்

சிவ சிவா கிட்டுமடா வேட்டல் கூடு

கூறப்பா கோதையினால் பொருளுஞ் சேரும்

கொற்றவனே குடி நாதன் வலுவைபாரு

ஆரப்பா போகருட கடாசத்தாலே

அப்பனே புலிப்பாணி அரைந்திட்டேனே

சூரியனின் மகனான சனி சந்திரனுக்கு இரண்டில் வந்தால் அல்லது இருந்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம்,சௌபாக்கியம், செம்போன்னும்

சிவ பரம் பொருளின் அருளானையால் யோகம் கிடைக்கும். நல்ல மனைவி அமைவாள். மனைவியால் தனலாபம் கிட்டும். சனி இருந்த வீட்டின் அதிபதியின், லக்கினாதிபதி பலத்தையும் ஆராய்ந்து அறிந்து கூறவேண்டும்.போகரது அருளால் புலிப்பாணி கூறினேன்.

சந்திரனுக்கு இரண்டில் செவ்வாவ் ஜாதகர் /ஜாதகி திறமை சாலிகள், தொழில் திறமை உயர்வு தீய சொல்லுடையவர்கள், தலைமை பொறுப்பும், தீய எண்ணணம், கர்வமுள்ளவர்கள், விரோத எண்ணம் உள்ளவர்கள்.

சந்திரனுக்கு இரண்டில் புதன் வேத சாஸ்திரங்களில் தேர்ச்சியும், சாமர்த்தியசாலி, கதை, காவியம், கட்டுரைகள் இயற்றுவர்கள். அனைவர்க்கும் பியமுள்ளவர்கள் நல்ல எண்ணம் உடையவர்கள்.

சந்திரனுக்கு இரண்டில் குரு பலதொழில்கள் புரிவர்கள், புகழ், அரசு மரியதை, நல்ல குடும்பம், உள்ளவர்கள். சிறப்பன சம்பத்துடையவர்கள்.

சந்திரனுக்கு இரண்டில் சுக்கிரன் காம சுகம், விவசாயம், பூமி லாபம், கால் நடை, வாகன யொகம் பல கலைகள் அறிந்தவர்கள், சுகமுடன் வாழ்வு அமையும்.

சந்திரனுக்கு இரண்டில் சனி ஆராய்ச்சி மனம், மக்கள் மத்தியில் புகழ் ஏற்படும், அதிக தனச் சோர்க்கையுள்ளவர்கள் .மறைமுக காரியங்களில் ஆதாயம் அனைத்திலும் வெற்றி பெறுவர்கள்.

அனபயோகம்

சந்திரனை அடிப்படையாக கொண்டு கணக்கிடப் படும் சிறப்பன யோகங்களில் ஒன்று அனபயோகம்.

சந்திரனுக்கு பன்னிரண்டில் புதன், குரு, சுக்கிரன் செவ்வாய், சனி யாராவது இருப்பார்களானால் இந்த யோகம் ஏற்படுகிறது.

இந்த யோகத்தில் பிறந்த. ஜாதகர் /ஜாதகிக்கு அழகான உடைகளை உடுத்துவர்கள், கம்பீரமான தோற்றம், நோயற்றவர்கள். நல்லாழுக்கம், பதவி உயர்வு, மன கட்டுபடுள்ளவர்கள், மக்ககள் மத்தியில் புகழ் அடைவர்கள். சின்றின்ப பிரியர்கள்ள்.

மதிக்கு முன்னே சுபர் நிற்கிற்றனனாப யோகம்

மந்திரி வல்லமைக் கல்வி மாதர்கள் சொற்கேட்பன்

அதிகத்த யிரிய மொழுக்க மலிமானன் குணவான்

சந்திரனுக்கு முன்னே பன்னிரண்டில் சுபர்கள் இருந்தால் அனப யோகம் அமையும். ஜாதகர் மந்திரி அரசு உயர்பதவி, பலம் பெற்றவன், கல்வியில் தேர்ச்சி பெற்றவான், பெண்கள் சொல்படி நடப்பன் .ஒழுக்கம் உள்ளவர்.அனைவரிடமும் அன்புடன் இருப்பார்கள்.

சந்திரனுக்கு பன்னிரண்டில் செவ்வாய் இருந்தால் சண்ட்டையில் பிரியமுள்வர்கள் .முன் கோபமுடையவர்கள், தீய எண்ணம், சமுகத்தில் தலைமை பொறுப்பும், கர்வம் உள்ளவர்கள்.

சந்திரனுக்கு புதன் சங்கீத சாஸ்திரத்தில் ஆர்வம், எழுத்து திறமைசாலிகள் அரசு மரியாதையும்,

சாமர்த்தியம் உள்ளவர்கள், உயர் பதவியும் பலசதனைகள் புரிவர்கள் .

சந்திரனுக்கு பன்னிரண்டில் குரு அரசு மரியாதையும், நல்ல புத்திரரும் சுபசெலவும், அரசியல், தொடர்பும், ஆராய்ச்சி மனப் பான்மை, உயர் கல்வி, புகழ் அன்புடையவர்,( இது சகடையோகம்)

சந்திரனுக்கு பன்னிரண்டில் சுக்கிரன் சுகமானவாழ்வும், பெண்களுக்கு பிரியமுள்ளவனாகவும், அரசு மரியாதை, நாற்கால் பிரணியும். வாகனயோகம் அமையும்.

சந்திரனுக்கு பன்னிரண்டில் சனி தலைமைப் பொறுப்பு, மக்கள் போற்றும், புகழ் பெறுவர்கள், பசுக்கள் உடையவர்கள் .பெண்களிடத்தில் தொடர்புள்ளவார்கள், பிடிவாத குணம். திருமண வாழ்வில் சில குழப்பம் எற்படும்.பிறரின் செல்வங்களை அனுவிப்பார்கள்.

சுனப யோகம்

அனபயோகம் இரு யோகங்களும்.

சுனப யோகங்கள் : - 31

அனபயோகங்கள் : - 31

5-கிரகங்களும் ஒவ்வென்றாய் சந்திரனுக்கு 2- ல்

5- கிரகங்களும் இரண்டிரண்டாய் சந்திரனுக்கு 2-ல்

5- கிரகங்கள் மூன்று மூன்றாய் சந்திரனுக்கு 2-ல்

5- கிரகங்கள் நான்கு நான்காய் சந்திரனுக்கு 2-ல்

5- கிரகங்கள் ஐய்தும் சந்திரனுக்கு 2-ல்

5+10+10+5+1 = 31+31=62 மொத்தம்.

துரு துரா யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டு

சூரியன், ராகு, கேது தவிற குஜாதி

ஐவர் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி இருந்தால் துரு துரா யோகம் அமையும்.

சந்திரனுக்கு சூரியன், ராகு, கேது இவர்களின் தொடர்பிருந்தால் யோகம் பங்கம் அடையும்.

ஜாதகர் /ஜாதகிக்கு நிறைந்த செல்வம், வகனம், மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடிப்பார்கள். ஆண்மீக ஈடுபாடு உள்ளவர், உயர் குடும்பம், பொன் பொருள் சோர்க்கையும், அரசு வகையில் ஆதாயமும் உயர்ந்த பதவியும் சகல சுக போகங்கள் கிடைக்கும்.

அன்புலி இரு மருங்கில் ஆதவன் நீங்மற்ற

ஐம்பொரும் கோள்களுள்ளே

ஆருயிர் நண்பர்வாழ பண்பினைக் காக்கும் உற்ற பால்வளம் ஓங்கும்

வேண்டும் பொன் பொருள் யோகம் கிட்டும் பொறுப் பொருகடமை ஆற்றும்

சந்திரனுக்கு இரண்டில், பன்னிரண்டில் சூரியனைத் தவிர பஞ்சமதி ஐய்வர்கள் இருந்தால் நண்பர்க்கு உதவி நல்ல பழக்க வழக்கம். சகல வசதிகளும், பசு, பால்வளம், பொன்பொருள் புகழ் ஜாதகருக்கு அமையும்.

உத்பந்த போக சுகபுக்தத நவாஹ நாட்ய

ஸத்யா காந்விதோ துருதுரா பவர் சுபருத்ய.!

துருதூர யோகத்தில் பிறந்தவர்கள் சகல சுகங்களையும் அனுபவிப்பார்கள். பிறருக்கு கொடுத்து உதவி செய்வார்கள். நல்ல நண்பர்கள் உடையவர்கள்.

துரையாஞ் சனிக்குச் சுக்கிரர்க்கு நடுவே சோமன் தனிருந்தால்

உறையாயனபாயோ மிதில் பலன் கணீதியுளன் போகி

உதையான் மன்னர் கைப் பொருளைத்தான் கைக் கொள்வன் குலசிரேட்டன்

புரையாசார பாவன் தனியவான் புறக்கிராகமணியாமே

சனிக்கும் சுக்கிரனுக்கு மத்தயில் சந்திரன் இருந்தால் ஜாதகர்கு நீதி தவரதவனும், பெண்கள் சுகம் விரும்பியும், கிராமங்களை அரசாளும் பதவியில் இருப்பார்கள். அரசங்க பொருள்களை அனுபவிப்பார்கள். உயர் குலத்தில் பிறந்தவர்கள். தர்மசிந்தனைகள் உள்ளவர்கள்.

(அனப யோகம் என்று கூறுகிறர்கள்)

சந்திரற்கிரண் டீராறில் தங்கு வோரிரு பேர் மூவர்

வந்தவர் பலனறிந்து வருவாங் கிசையும் நீசம்

அந்த கோள் பகைக்கண்டே யதன் வலிதறிந்து கொண்டும்

சொந்தமாயு ரைப்பதென்றுசொல்லினர் கணித வல்லோர்

சந்திரனுக்கு இரண்டு, பன்னிரேண்டில் இரண்டு, அல்லது மூன்று கிரகங்கள் இருந்தால் அவர்களின் பலம் அறிந்து பலன் கூற வேண்டும். நவாங்கிசாதிபதியின் பலம், பகை, நீசம் நிலைகலை ஆராய்து பலன்கலை கூற வேண்டும்.

துருதுரா யோகதின் பலன் :-

1) செவ்வாய் - புதன் சந்திரனுக்கு 2-12 ல் இருந்தால்

ஜாதகர் /ஜாதகி பொய்யன், புத்திசாலி, பேராசைக்காரன், பிறரிடம் குற்றங்குறைகள் காண்பான், காமமிக்கவன், வயதில் மூத்தவர்களின் தொடர்புள்ளவர்கள்.

2) செவ்வாய் - குரு சந்திரனுக்கு 2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி புகழ் உடையாவர்கள், குணசீலர், விரேதிள் உள்ளவர்கள், சுய முயற்சியால் முன்னேறுவர்கள்.

3) செவ்வாய் -சுக்கிரன் சந்திரனுக்கு 2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி திட பலம் உள்ளவர்கள். அழகன், செல்வந்தர்கள்,சுக போகவாழ்வும், நற்குணமுள்ளவர்கள்,சபல எண்ணமுடையவர்கள்.

4) செவ்வாய் -சனி சந்திரனுக்கு 2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி செல்வளம் குறையும், முன்கோபம், எதிரிகளுடன் போராடுவர்கள். தீய நடத்தை சிந்தணையுள்ளவர்கள்.தீயர் தொடர்புள்ளவர்கள்.

5) புதன் -குரு சந்திரனுக்கு 2-12 ல் இருந்தால் ஜாதகி / ஜாதகர் கல்வி,கேள்வியில் வெற்றியும், பத்திமான் புகழ் பெற்றவர்கள், நல்லவர்கள், நட்புடையோன், சாமர்த்தியமாய்ப் பேசுவதில் வல்லவர்கள் சுக போக வாழ்வு அமையும்.

6) புதன் -சுக்கிரன் சந்திரனுக்கு 2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி இசை, சங்கீதம், ஆடல் பாடல்களில ஈடுபாவர்கள், இனிய பேச்சும், மிகுந்த புத்திசாலிகள் தைதையசாலிகள், அழகுடையவர், அஎல்லோருடைய அன்பிற்கும் பாரட்டிற்கும் உரியவர்கள்.

7) புதன் -சனி சந்திரனுக்கு 2-12 ல் இருந்தால் ஜாதகி /ஜாதகர் சராசரியான கல்வி செல்வம் உள்ளவர்கள், பந்துக்களுடன் சேராதவர்கள், சுற்றியலைபவன், அந்தஸ்துள்ளவர்கள்.சோம்பேறி.

8) குரு -சுக்கிரன் சந்திரனுக்கு 2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி செல்வ வளம், கலைத்திறன், சாமர்த்தியசாலி, புகழ்பெற்றவர்கள், தர்மசிந்தனை, அமைதியனவர்கள்.

9) குரு -சனி சந்திரனுக்கு 2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி நிறைந்த செல்வம், கல்விமான், ஞானவன், மரியாதை உள்ளவர்கள், சுக வாசியாகவும், சுகபோக வாழ்வு அமையும்.

10) சுக்கிரன் -சனி சந்திரனுக்கு 2-12 ல இருந்தால் ஜாதகர் /ஜாதகி நிறைந்த செல்வ வளம், அரசு மூலமாக நன்மைகள் கிடைக்கும். முதன்மை தலைவராகவும் இருப்பர்கள். பெண்களால் தொல்லை ஏற்ப்படும்.

தருதுரா யோகங்கள் கீழ் கண்ட விதத்தில் அமையும்

1) 2-ல் ஒருவர் 12-ல் ஒருவர் இருப்பதனால் 20 - வகை

2) 2-ல் ஒருவர் 12-ல் இருவர் இருப்பதனால் 30 - வகை

12-ல் ஒருவர் 2-ல் இருவர் இருப்பதனால் 30 - வகை

3) 2-ல் ஒருவர் 12-ல் மூவர் இருப்பதனால் 20- வகை

12-ல் ஒருவர் 2-ல் மூவர் இருப்பதனால் 20 -வகை

4) 2-ல் ஒருவர் 12-ல் நால்வர் இருப்பதனால் 5- வகை

12-ல் ஒருவர் 2-ல் நால்வர் இருப்பதனால் 5- வகை

5) 2-ல் இருவர் 12-ல் இருவர் இருப்பதனால் 15-வகை

12-ல்இருவர் 2-ல் இருவர் இருப்பதனால் 15-வகை

6) 2-ல் இருவர் 12-ல் மூவர் இருப்பதனால் 10-வகை

12-ல் இருவர் 2-ல் மூவர் இருப்பதனால் 10- வகை

மொத்தம் = 180 வகைள்

மேற்படி யோகங்களைத் தரக்கூடிய கிரங்கள் ஆட்சி, உச்ச ராசியிலும். நட்பு வீடுகளிலும் இருந்தால் சுப பலனைத்தரும் ஜாதகர் /ஜாதகி சுப பலன் அமையும்.

சந்திரனுடன் ராகு, கேது இணைந்திருந்தாலும், சந்திரனுக்கு 11-ல் ராகு, கேது இருந்தாலும் நீச்சம், பகைவர்கள் தொடர்பிருந்தால் பலன் பதிக்கபடும்.

கேமத்துரும யோகம்

சந்திரனுக்கு இரண்டு பன்னிரண்டில் எந்த கிரகங்களும் இல்லாவிட்டால் கேமத்துரும யோகம் ஏற்படும். தீய பலனைத்தரும்.

இந்த யோக பங்காத்திற்கு பல விதிகள் உள்ளாது.

பலன்கள் :- ஜாதகர் /ஜாதகி பெரும் செல்வந்தனாக இருந்தாலும் துண்பத்தையும் துயரங்களையும் அனுபவிப்பார்கள். தன் குடும்பத்திற்கு ஒவ்வாத செயல்களைச் செய்வர்கள்.அடிமைத் தொழில் புரிவர்கள். உறவினர்களை மதிக்க மாட்டார்கள்.தன் நிலைகலைப்பற்றி கவலைப்படமாட்டார்கள்.வின் வர்த்தை பேசுவார்கள்.

வளந்த கேமத்துமத்தில் மன்னர் அயிடினும் மலிதுன்பன்

விளிந்த நீச நிகிபனும் மிகுந்த கலாபி பிரேசியனே

கேமத்துரும யோகத்தில் பிறந்தவர்கள் உயந்த அந்தஸ்த்ததில் இருந்தாலும் காலப் பேக்கில் அனைத்தும் இழந்து விடுவர்கள்.பாவி பரதேசி வாழ்க்கை வாழ்வார்கள்.

கேமேத்ருமே மலி ந துக்கி நநீச நிஸ்ஸ்வா

ப்ரேஷ்யா :கலாச்சந்ரு பதேர் அபிவும் சஜாதா !

கேமத்துரும யோகத்தில் பிறந்தவர்களுக்கு அனைத்தும் இழந்தூ வவிடுவார்கள்.

கேமத்துரும யோகபங்கம்

…………………………………………………

சந்திரனுக்கு 3-6-10-11-ல் புதன், குரு, சுக்கிரன் இருந்தாலும், 4-7-10-ல் குரு இருந்தாலும் தீய பலன் குறையும். நற்பலன்கள் கிடைக்கும்.

சந்திரனுக்கு சுபர்களின் பார்வை இணைவு இருந்தால் கேமத்துரும யோகம் பங்கமாகிவிடும்

சந்திரனுக்கு லக்கினத்திற்கு கேந்திர /கோணங்களில் இருந்தாலும் யோகம் பங்கமாகிவிடும்

சூரியஜெயவேல் 9600607603 & 9488792603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்