உயிர் இயக்கம் ORIGIN OF LIFE
உயிர் இயக்கம் ORIGIN OF LIFE
பூமியிலுள்ள தனிமங்களே (மூலகங்களே) வெப்ப நிலைக்குத் தகுந்தாற்போல தாம் நிலைமாறிக் கொண்டிருக்கின்றனவென்று அறிவோம். இங்கு பூமியின் மேற்பரப்பில் காணப்படும் மூலகங்களின் கூட்டு நிலைகள், அதாவது நீர், தாவரங்கள், மிருகங்கள், மனிதன் போன்ற கூட்டுப்பொருட்கள் சூரிய வெப்பத்தால் உருவானவையேயன்றி எதுவும் தான் தோன்றித் தனமாக உண்டாகவுமில்லை; எங்கிருந்தும் வரவுமில்லை. இவ்வாறாக மூலகங்களின் அணுக்கள் இரசாயனக் கூட்டு சேர்ந்து மூலக் கூறுகளாகிப் பின் மூலக்கூறுகள் இணைந்து முதன் முதலில் 'செல்' எனப்படும் (CELL) உயிரினம் தோன்றியது.
ஒரு செல் வந்து விட்டாலே. ஒரு பெரிய மரம் வந்ததற்கும். ஒரு முழு மனிதன் வந்ததற்கும் சமம்
ஏனென்றால்.
A single cell = Whole body
அதாவது. ஒரு செல் = முழு உடம்பு ஆகும்.
Definition: An organism is the temporary state of union of com - pound molecules by the heat energy of the sun.
அதாவது. சாதாரண தனிப் பொருட்களாகிய மூலக்கூறுகள் வெப்ப இயக்கத்தினால் இணைந்து கூட்டுப் பொருளாகிய உயிர்ப் பொருளாக உருவாகின்றது.
உயிர்ப்பொருள் என்பது சாதாரண இயக்கங்களைக் கொண்ட தனித் தனி மூலப்பொருட்கள். வெப்ப இயக்கத்தினால் ஒன்றாக இணைந்து உருவான. கூட்டு இயக்கத்தைக் கொண்ட கூட்டுப் பொருளேயாகும்.
வளர்சிதைமாற்றம், இனப்பெருக்கம் ஆகிய இரு இயக்கங்களைச் செய்கின்ற அல்லது செய்யத் திறனுள்ள எந்தப் பொருளுமே உயிர்ப் பொருளே. உதாரணம் ; விதை, முட்டை
Biological Life : is the matter, which can produce energy for its metabolic and reproductive activity என்று விஞ்ஞானம் கூறுவதை நாம் கூறிய கோட்பாட்டுடன் பொருத்திப் பார்க்கவும்.
பூமியின் மேற்பரப்பில் வெப்ப நிலை 30°C ஆக உள்ளது. அந்த வெப்ப நிலையில்தான் கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற மூலக்கூறுகள் இரசாயன சேர்க்கையால் ஒன்றாக இணைந்து உயிர்ப் பொருளாகத் தன்மாற்றமடைந்து வருவதை ஏற்கெனவே அறிந்தோம். மற்ற கோள்களில், இந்த மூலகங்கள், பயன்படுத்தக் கூடிய நிலையில் இல்லாமலிருப்பதும், ஒரே சீரான வெப்ப நிலை இல்லாததுவுமே, மற்றக் கோள்களில் உயிரினங்கள் இல்லாமலிருப்பதற்குக் காரணம். அதுவும் தற்சமயத்தில்தான் இல்லை. இயற்கையின் மாறுதல்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கிடையில் நடக்குமென்பது குறிப்பிடத் தக்கது
ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் ஆக்ஸிஜனும், ஹைட்ரஜனும் இணைந்து நீராக மாறுகிறது
அதேபோன்று ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் சோடியமும் குளோரினும் இணைந்து சோடியம் குளோரைடு, அதாவது உப்பு என்று புதுப்பொருளாக தன்மாத்திரையடைந்து வருகிறது.
இதில் ஹைட்ரஜன் என்கிற வாயு நிலையிலிருந்த பொருளும், ஆக்ஸிஜன் என்கிற வாயுநிலையிலிருந்த பொருளும் இரசாயனச் சேர்க்கையால் இணைந்து நீர் என்கிற புதுப்பொருளாக வந்துள்ளது. அப்படி வந்துள்ள புது திரவப் பொருளுக்கு, முன்னர் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் இவைகளுக்கு இருந்த பண்புகளும் இயக்கங்களும் மறைந்துபோய் புதுப் பண்பும் இயக்கமும் கொண்ட நீர்ப்பொருளாக வந்துள்ளது. அதாவது பொருள் மாறும்பொழுது அதன் இயக்கமும் மாறிவிடுகிறது. அதேபோன்று சோடியமும் குளோரிலும் இணைந்து சோடியம் குளோரைடு என்கின்ற புதுத் திடப்பொருள் அதாவது உப்பு வந்துள்ளது இந்தப் புதுப்பொருள் உப்புக்கு இருக்கும் பண்புகளும் இயக்கங்களும் முன்னர் இருந்திடவில்லை சோடியத்திற்கும் குளோரினுக்கும் என்பது தெரிந்ததே. அதாவது பொருள் மாறும்பொழுது இயக்கமும் மாறுகிறது
இதேபோன்றுதான் 30°C வெப்ப நிலையிலிருக்கும் பூமியின் மேற்பரப்பில், கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், நீர், மூலக்கூறு இவைகளுக்குள் இணைப்பு ஏற்பட்டு ஒரு புதிய பொருளாக 'செல்' (Plant or Animal Cell) வருகிறது. அந்த புதிய பொருளுக்கு வளர்சிதைமாற்றம், இனப்பெருக்கம் ஆகிய புதிய கூட்டு இயக்கங்கள் வருகின்றன. அதைத்தான் உயிர் இயக்கம் என்று நாம் அழைக்கிறோம்.
"Chemical union takes place among elements and molecules to form a new product called CELL by the heat energy of the Sun, which acquires a new function called LIFE".
ஆகவே உயிர் என்பது வினை அல்லது இயக்கமேயன்றி பொருள் அல்ல உயிர் என்பது, தாவரம், மிருகம், மனிதன் போன்ற கூட்டுப்பொருட்களிலுள்ள கூட்டு இயக்கமேயாகும்.
குறிப்பு : உண்மையில் செல் Cell என்பது இன்னும் சில மூலகங்களைக் கொண்டதே. இங்கு முக்கியமான மூலகங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
பூமியில் இந்த மூலகங்களின் அணுக்கள் தனித்தனியாக இருக்கும்பொழுது அவை அசேதன நிலையில்தான் (Inorganic state) இருக்கின்றன. அவை இணைந்து செல் எனப்படும் புதுப்பொருளாகத் தன்மாத்திரையடைந்து வரும்பொழுது சேதன நிலைக்கு (Organic state) வந்து விடுகிறது பின்னர் தாவரத்தின் செல் (Organic state l ) மிருகத்தின் செல்லாக (Organic state II) மாறுகிறது.
பரிணாம வளர்ச்சி - Evolution
(அசேதன நிலை) மூலகங்கள் (Elements)
( C, H 2., N2, O2. )
(சேதன நிலை 1) தாவரம் Plant Cell
சேதன நிலை 2 ) மிருகம், மனிதன் Animal Cell
உயிர் உண்டாவது அல்லது உருவாவது எப்படி என்பதை அறிந்தோம். இப்பொழுது உயிர் என்கிற வார்த்தையைச் சற்று ஆராய்வோம். உயிர் என்பது பொருள் அல்ல: அது இயக்கமே! ஆனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே, அதாவது விஞ்ஞானமோ உண்மையோ தெரிவதற்கு முன்னால், அதாவது அறிதலின் அளவு மிகக் குறைந்திருந்த காலத்திலேயே இந்த 'உயிர்' என்கின்ற பெயர் வைக்கப்பட்டு விட்டது.
மனிதன் இறக்கும்பொழுது. இறப்பதற்கு முன் மனிதனிடத்திலிருந்து ஏதோ ஒன்று, நம் உடலை விட்டுப் பிரிந்து, நீங்கி, வெளியில் செல்கிறது என்று நம்பி, அதைப் பொருளாக. நினைத்து அதற்கு உயிர் என்று பெயர் வைத்தனர். உண்மையில் உயிர் என்பது உடலிலிருந்துப் பிரிந்து சென்று வேறு எங்காவது ஓர் இடத்தில் அமரக்கூடிய ஒரு பொருள் அல்ல; அது ஒரு இயக்கமே பொருளைத்தான் எண்ண முடியுமேயல்லாமல் இயக்கத்தை யாரும் எண்ண முடியாது. ஒரு இயக்கம். இரண்டு இயக்கம், பத்து இயக்கம் என்று எண்ண முடியாது! இயக்கம் இருக்கிறது அல்லது இல்லை; அதாவது இயங்கிக் கொண்டிருக்கிறது அல்லது இயங்கவில்லை என்றுதான் கூற வேண்டும் அதனால் எண்ண முடியாத ஒன்றுக்கு. ஒரு உயிர். இரண்டு உயிர், பத்து உயிர் அல்லது என்னுடைய உயிர், உன்னுடைய உயிர் அவனுடைய உயிர் என்று எப்படிக் கூற முடியும்? அதனால் எத்தனை உயிர்ப்பொருட்கள் உலகத்தில் இருத்தாலும் அத்தனை உயிர்கள் என்று எண்ணிக்கையில் கூறுவது மிகச் சரியானதாகாது. பொருட்களை வேண்டுமானால் எண்ணலாமே யொழிய இயக்கத்தை எப்படி எண்ணுவது?
என்னுடைய உயிர், உன்னுடைய உயிர் என்று கூறாமல். என் உடலிலும் உயிர் இருக்கிறது. உன் உடலிலும் உயிர் இருக்கிறது என்று மட்டுமே கூறுவது சரியானதாகும். உண்மையில் ஒவ்வொரு தனித்தனிச் செல்லும் (CELL) உயிருடன் இருந்து கொண்டிருப்பதை நாம் அறிலோம். அவை நாம் இறக்கும் பொழுது அனைத்தும் ஒரே சமயத்தில் இறப்பதுவுமில்லை. உதாரணத்துக்கு மூளைச் செல்கள் ஒரே நிமிடத்தில் இறந்து விடுகின்றன. கல்லீரல் செல்கள் சில நிமிடங்களிலும், தசை செல்கள் சில மணி நேரத்துக்குப் பிறகும் இறக்கின்றன.
நாம் இறந்து விட்டால் கூட, நமது உடல் என்கிற கூட்டுப்பொருள் சிதைந்து, மீண்டும் தனித்தனி மூலக்கூறுகளாகப் பிரிந்து சாதாரண இயக்கத்துடன் கூடிய சாதாரண அணுக்களாகவும், மூலக்கூறுகளாகவும் பிரிந்து அவை பூமிக்கும், நீருக்கும். காற்றுக்குமாகப் போய்ச்சேர்ந்து விடுகின்றன. அதாவது எங்கிருந்து வந்தனவோ அங்கேயே மீண்டும் போய்ச் சேர்ந்து விடுகிறது கூட்டுப் பொருள் சிதைந்து சாதாரணப் பொருட்களாக பூமியில் சேர்ந்து விடுகின்றன. ஆதலால் ஏற்கெனவே பூமியிலிருக்கும் நிலம், நீர், காற்று இவைகள்தான் நிலைமாறி, தாவரம். மிருகம். மனிதன் போன்ற நிலைகளை அடைந்து பிறகு மீண்டும் பூமிக்கே சென்று விடுகின்றன வேற்றுப்பொருள் பூமிக்கோ. பிரபஞ்சத்துக்கோ வரவுமில்லை: அல்லது பூமியிலிருந்தோ. பிரபஞ்சத்திலிருந்தோ பொருள், வேறு எங்கோ செல்வதுமில்லை: அழிவதுமில்லை; பொருள் எப்பொழுதும் நிரந்தரமாக இருந்து கொண்டேயிருக்கிறது. பொருளின் நிலை மாற்றத்தை நிர்ணயிப்பது வெப்ப இயக்கமே வெப்பநிலை மாறினால் இதர சூழ்நிலைகள் (Whole Environment) தாமாகவே மாறிவிடும். தாவரம், மிருகம், மனிதன் போன்ற கூட்டுப்பொருட்கள் மூலக்கூறுகள் இணைந்த ஒரு தற்காலிக நிலையே. இந்த இணைப்பு நிரந்தரமில்லை. நிரந்தர இணைப்பில் இருந்து இயக்க சூழ்நிலை (Environment) விடுவதில்லை அதனால்தான் மரணம் நேரிடுகிறது ஆகவே மரணம் என்பது மூலக்கூறுகளும் அணுக்களும் பிரியும் நிலையே நாம் காணுகின்றவைகளெல்லாம் பொருளின் நிலையே ஆகவே பொருள், தன் நிலையை மாற்றிக் கொண்டிருப்பது மட்டுமே நிரந்தரம், (Change alone is permanent - Heraclitus) பொருளின் எந்த நிலையும் நிரந்தரமல்ல.
இந்த இடத்தில் உருவம் என்கின்ற சொல்லைத் தவிர்க்க வேண்டும். உருவம் என்றால் அது உயிருள்ள பொருட்கள், ஆடு மாடு, மனிதன், குரங்கு போன்றவைகளையே நினைவுபடுத்தும். உண்மையில் பொருள் என்பது நட்சத்திரம், பூமி, கல், மண், நீர், காற்று, தாவரம், மனிதன் போன்ற அனைத்தும் உருவாகத் தேவைப்படும் பொருட்கள்.
இயற்கையில் பொருள் தன் நிலையைக் கூடுமான வரையிலும் தக்கவைத்துக் கொள்ள,சமம் - சமமின்மை (Balance & Imbalance) முறைகளைக் கையாளுகிறது. இந்த சமம் சமமின்மை தத்துவத்தில்தான் பிரபஞ்சத்தில் அனைத்து இயக்கங்களும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
உதாரணங்கள்
(i) அசேதனப்பொருள்:
காற்று மண்டலத்தில் நீராவி எப்பொழுதும் 1%க்குக் குறையாமல் கலந்திருக்கிறது. சூரியனின் வெப்பத்தால் கடல் நீர் ஆவியாகி. காற்றுடன் கலந்து, காற்றின் வேகத்தில் நீராவி இடம் விட்டு இடம் மாறுகிறது. நீராவியின் அளவு காற்றில் 16க்கும் அதிகமாகும் பொழுது காற்று சமநிலையை இழந்து மேகங்கள் உருவாகி குளிர்ந்து பின் மழையாக நிலத்தில் பெய்கிறது. மீண்டும் நீராவியின் அளவு சூரிய வெப்பத்தால் அதிகமடைந்து காற்றில் குறைவாக ஆவ நீராவியின் அளவு சரிக்கட்டப்படுகிறது. ஆகவே, நீராவியின் அளவு காற்றில் எப்பொழுதும் 14 இருந்து கொண்டே சம நிலையில் இருப்பதால்தான் நிலத்துக்கு எப்பொழுதும் நீர் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சமநிலை (Balance) மட்டும் இல்லாமற் போகுமானால் நிலத்தில் நீரும். அதனால் நிலத்தில் உயிரினமும இருக்காது என்பதை அறியவும்.
(i) சேதனப் பொருள்:
நம் உடலின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 120 mg அதாவது 100 மில்லி இரத்தில் 120 mg சர்க்கரை (குளுகோஸ்) இருந்து கொண்டிருக்கிறது. நாம் வேலை செய்யும் போதும், உணவு உட்கொண்டு நேரமாகி விட்டாலும் சர்க்கரையின் அளவு mg%க்கும் குறைந்து 120 சமமின்மை ஏற்படுகிறது. அப்பொழுது மூளையின் பாகங்களில் (Pituitary & Hypothalamus) இருக்கும் செல்கள் இதை உணர்ந்து நாளமில்லாச் சுரப்பிகளின் வழியாக ஹார்மோன்களையும், என்ஸைம்களையும் சுரந்து, வயிற்றின் இரைப்பையிலும் குடலிலும் பசியை ஏற்படுத்துகிறது. உடனே நாம் உணவு உட்கொண்டு, மீண்டும் இரத்தத்தில் 120 mg% சர்க்கரை உண்டாகச் செய்து, சர்க்கரையின் சமநிலையை நமது உடலே ஏற்படுத்திக் கொண்டு, தான் உயிர் வாழ வழிசெய்து கொள்கிறது.
நன்றி ;
தொகுப்பு சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment