ரஜினி அரசியலுக்கு வருவாரா ❓

 சூரியஜெயவேல்

ரஜினி அரசியலுக்கு வருவாரா ❓

August 05, 2020

ஜோதிட முரசு ஜீன் 2003 இதழில் வெளியிடப்பட கட்டுரையின் விரிவாக்கம்

தமிழக அரசியலில் எப்போது ரஜினியின் பிரவேசம் ஏற்படும் என்று தமிழகத்தின் பிரதான ரசிகர்கள் அரசியில் கட்சிகளின் பிரமுகர்கள் கடந்த 30 - ஆண்டுகள் எதிர் பார்த்துக் கொண்டிருக் கிறார்க் கிறார்கள் .ரஜியும் பிரவேசம் செய்யாலாமா ? வேண்டாமா ? என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்.

ரஜினி அவார்களின் அரசியல் பிரவேசம் ஏற்படுமா ? என்று ஜோதிட அறிவியல் மூலமாக ஆராய்வோம் இங்கு கூறப்படும் பலன்கள் அவரது ஜாதகத்தின் அடிப்படையில் தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

12/12/1950 11-49 இரவு

திருவேணம் நட்சத்திரம்

சந்திரன் திசை இருப்பு 7 வருடம் ,1 மாதம், 19நாள்

சிம்ம லக்கினத்தில் ஸ்திரமன கொள்கையுடையவர்கள் .திடமான செயல்கழும் எதிர்கால நோக்குடன் பலமானன திடமுடன் செயல்புரிவர்கள்.

திருவோணம் நட்சத்திர பலன்கள்

தக்கதோர் கல்விமான் ஒரு போக்கியன்

சற்றினில் கோபம் ஆறிடுவான்

பக்கமும் முன்பின் பார்த்துமே நடப்பன்

பதிஉளங் காலுயந் திருக்கும்

மைக்கணார்க்கு இனியன் பரிமளப் பிரியன்

மயிர்முடி அழகன் உற் சாகன்

சிக்கன வானாம் ஏற்பவர்க்கு ஈயவான்

திகழ்திரு வோண நானே

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தகுதியான தொழிலில் திறமையுள்ளவர்கள் . நிலையான செயலுடையவர்கள் , பெண்களுக்கு விருப்பமானவன் , வாசனை திரவியாங்கள் பயண்படுத்து வார்கள்.கேட்பவருக்கு மனமுவந்து உதவிகள் செய்வார்கள்.

முதலில் நடிகராக யோகங்களை பார்ப்போம்

கலைக்கிரகமான சுக்கிரன் , புதனும் இணைந்து பூர்வ புண்ணிய ஐந்தாவது வீட்டில் அமர்ந்து திரிகோணம் பலம் பெற்றிருப்பதால்தான் கலைத்துறையில் இவர் தனக்கென அனிப்பாதையையும் கொள்கையையும் அமைத்துக் கொண்டு வெற்றிகள் அடைவர்கள்.

அசுரனுக்கு நாலைந்து ஒன்பது பத்தினில்

அரசன் மந்தன் ஞானி இருந்திடில்

கலைஞானி சிறப்புறும் கூத்தாடி வெகுதனவான்

போகமுடன் வெகுபூமி வாகனங்கள் பகன்றிடலாமே

சுக்கிரனுக்கு 4-5-9-10-ல் குரு , சனி , கேது இருந்தால் நடிப்புத்துறையில் சிறப்படைவர்கள் . செல்வ வளமும் கிட்டும் .பூமி, மனை ,வாகனங்கள் கிடைக்கும் .

ஒன்மதிக் கிரண்டு ளோனும்

உதயத்துக் கிரண்டு ளானும்

தன்மையாம் ஏழில் நிற்கில்

சங்கீத வித்தை யோடே

வண்மையாம் பலவே டங்கள்

மருவுநாட்டியமும் கற்பன்

பெண்மயில் எழுதொண் ணாத

பிறைநுதற் றடங்கண்மாதே

லக்கினத்திற்க்கு இரண்டாம் அதிபதியும் , ஜென்ம ராசிக்கு இரண்டாம் அதிபதியும் பலமுடன் ஏழில் இருந்தால் சங்கீதம் ,பல வேடங்களில் ஆடும் நடிகராவர்கள்.

ரஜினியின் ஜாதகத்தில் லக்கினத்திற்குக ஃஇரண்டுக்குடையவர் புதன் , குரு வீட்டில் ராசிக்கு இரண்டுக்குடையவர் சனி புதன் வீட்டில் குரு ராசிக்கு இரண்டில் உள்ளார்.

4-ல் சூரியன்

வல்லாரும் நாலதிலே ரவியிருக்க

வழுத்தினேன் கிரமதல இல்லம் சித்தி

சல்லாபன் மனைவிசொல் மிடுக்கானென்றேன்

தாஷ்ணின் வெளியோர்க்கு நல்லோனாகும்

அல்லெனும் கவலையுள்ளோன் ஆயுள்மட்டும்

அன்புள்ள பத்தியது உள்ளுக்குள்ளே

பொல்லாப்பு வாராமல் நடக்குந்தீரன்

பெய்யிலா அதிவிஞ்சை உடையோன் மன்னா

நாலில் சூரியன் (லக்கினாதிபதி) இருந்தால் நல்ல வீடுகள் அமையும் , அதிக சொத்து சோர்க்கை கிட்டும் .அதிகம் பேசமாட்டார்கள்,வெளியூரில் தொழில் செய்வார்கள்,உறவினர்களிடம் பாசம் இருக்காது . தாயரால் மகிழ்ச்சி குறைவு , பலருக்கு உதவிகள் செய்வார்.மனதில் கவலைகள் இருக்கும் ,

செல்லிய மூன்று நான்கில் சூரியன் நன்றானாகில்

வல்லமை யதிகமுண்டாம்

தூயசுப இலக்கினத்துக்கு அதிபரே நாலில்

துலங்கி நிற்கின் வெகுபாக்யம் தனலாபம் கீர்த்தி

நேயருக கெம்பீரம் வஸ்திரா பரணம்

நிகரான ாளடிமை காலிகன்று பலித

தாயகமா கியசவுக்யம் சயசுகம் புத்தி

சார்மகிழ்ச்சி ராசவெகு மானமொடு லாம்

ஏய குணன் தாட்சனிகன் பரிமளகந் தாதி

இலங்குசுக போசனமும் எய்துவன் பாரே

லக்கினாதிபதி 4-ல் இருந்தால் ஜாதகர் ஏராளமான நற்பேறுகள் கிடைக்கும் . பொன் , பொருள் வரவும் ,புகழும் கிட்டும் . மரியதைக்குரிய தோற்றம் பெற்றிருப்பார்கள்.ஆடை ஆபாரணங்கள் கிட்டும். தனக்கு கீழ்ப் பணியாளர்கள் பலர் இருப்பர்கள். அந்தஸ்துடையவர்கள். சுக வாழ்வு அடைவான் .படுக்கைச் சுகம் கிடைக்கும் .அறிவு சார்ந்த மன மகிழ்ச்சி கிடைக்கும் .அரசு வகையில் பாட்டும் புகழும் வரவும் கிட்டும் .நற்பண்பாளன் அனைவருக்கும் உதவி செய்வார்கள் பல வாசனை திரவியங்கள் பயன் படுத்துவர்கள். நல்ல சிறப்பன உணவு உண்டு சுக போகமுடன் வாழ்வர்கள்.

சந்திரன் ஆறில் (பனிரண்டாம் அதிபதி)

சோமனுமாறில் சொந்தமாய் வாழ்ந்தால் தோற்பது பிடித்திடாதளாம்

மாண்மை பாவர் கூடிலோர்தன்னில் அதிகமாம் பணங்களுமுண்டு

மாமறையோரை வணங்கியேவாழ்வான் மனமதில் கிலேசமுமில்லான்

தாமதம் செய்வான் தர்மவான் தயவன் தாலெவனென்றவருபாலா

ஆறில் சந்திரன் இருந்தால் அடிக்கடி நோய்கள் தோன்றி மறயம்.பாவிகள் கூடினால் அதிக பணத்தை சம்பாதிப்பர்கள்.சித்தர்களை வணங்கி வாழ்வர்கள் .மனதில் சலனமில்லாதவர்கள்.சுறுசுறுப்பு இருக்காது அனைவருக்கும் உதவிகளள் செய்வார்.

பனிரண்டாம் அதிபதி சந்திரன் ஆறில் இருப்பது வாழ்வில் என்றறம் உயர்வு பெறும் வாய்பை தரும் .

ஆறில் செவ்வாய் :-சிம்ம லக்கினயோகதிபதி செவ்வாய் உச்ச பலம் பெற்று ஆறில் அமர்ந்திருப்பதால் தான் அளவற்ற செல்வம் இவரை நாடி வந்து.

அவமாம் தவறிடதாறில் இருந்திடச் செவ்வாய்

தானியவிருத்தியாம் சத்ரு

அவருமே நாசம் பலர்பூமிலாபம் பழுதிலா

பாக்கியமுண்டாமே

செவ்வாய் ஆறில் இருந்தால் செல்வ வளமும் பூமிலாபம் தானியங்கள் விளைச்சால் அதிகமகும் .எதிரிகள் அனைவரும் நாசமாவர்கள்.

கேளப்பா செவ்வாயும் ஒன்றுபத்து

கனமுள்ள தனலாபம் ஆறில் நிற்க

ஆளப்பா அகம்பொரும் நிலமும் செம்பொன்

அப்பனே கிட்டுமடா தொழிலுமுள்ளோன்

சூளப் பாகுடித் தலைவன் சத்ருபங்கன்

கொற்றவனே வகையாய் பகர்ந்து சொல்ல

நல்லமதிசேயுங்கூட இருவர்

நல்லகிரியி லமர் ந்திருந்திருந்தாலும்

நல்லகுல மனேதிடமும் - சென்மன்

நன்னாட்டில் பாக்கியவானென்று - சங்கர

சந்திரன் , செவ்வாய் கூடி பலமுடன் இருந்தால் நல்ல குணமும் மனேபலமும் உள்ளவர்கள் ,பல செல்வமும் பாக்கியங்களும் கிடைக்கும்.

தோரண செவ்வாய்க்கு வியமாரெட்டில்

திடமுள்ள சுக்கிரனு மதனில்மேவ

பாரன பண்டு பொருள் மனை பால்வாதம்

பகர்கின்ற பங்காளி துணைவனாலும்

கூறான குழவிகே யெதியாலே

கொற்றவனே அதிகாரியாலும் வெற்றி

செவ்வாய் நின்ற இடத்திற்கு பன்னிரண்டில் சுக்கிரன் இருந்தால் எத்தனை எதிரிகள் எதிர்த்தாலும் வெற்றி கொள்வார்.அதிகாரிகளையும் , வழக்குகோர்ட் என எதிலும் வெற்றி கிட்டும்.

ஐந்தில் புதன் :- கலைஞானமிக்கவர், காட்சி வருணனை, களவருவருணனை , ஆகிய திறமைகள் பலரால் பாரட்டுகளும் ,புகழம்கிட்டும் . மெய்ப் பொருளுணர்ந்த வாழ்வு அமையும் ,மனித நேயம் அமையும் மனித நேயம் அமையும் அதிக பணம் சம்பாதிப்பார் குழந்தைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் பெருமிதள்ள வாழ்வு அமையும் அதிகம் பெண்குழந்தை அமையும் .

உள்ளானாம் பஞ்சமத்தில் புதனிருக்க

மாநிதி உடையோனாகும் செல்வ மிஞ்சி

கூறினேன் இருபிடத்தை விட்டு மாறி

புகழ் திட வாழ்வே வாழ்வான்

புராணகதை கேள்வி மான்ஞானி யாவன்

சிந்தை மகிழ் பிரதாபி சம்பத்து கீத்தி

இனமொத்துத் தனாதி பதிதான் கேந்திர

இணையிலாத் திரிகோண மேவினாலும்

சினத்திடுவேல் மன்னவனே சாதகன்றான்

சிறப்புடனே சீமானாய் என்றும் வாழ்வான்

ஐந்தில் சுக்கிரன் :-

அஞ்சிலே சுங்கனிருந்திடு லவர்க்கு

ஆணில்லை பெண்ணுண்டு அஸ்வம்

மிஞ்சியேவரும் தாயுடன் தாய்க்குப்

பின்னவன் தாய்க்குப் அறிஷ்டம்

விளம் புவேன் அறிவு கல்வி உள்ளல் ஞானம்

சாந்தமுள்ளான் தாசண்யன் பலருக்குகன்பன்

சதிவார்த்தை தள்ளிடான் புத்திர விருத்தியுள்ளான்

பந்தமுடன் ஆளடுமை அரசர்நேயம்

மனைவி சொல் கேட்டால்

விவேகம்,சாஸ்திர ஞானம்,தத்துவ ஞானம் உள்ளவவர்கள்,நம்பிக்கையுன் செயல் படுவர்கள் சமூகத்தில் மிகவும் முக்கியமான பொறுப்புக்கள் கிடைக்கும் .ஆளுமைத்திரன் பலம் தேஜஸ் இவரது செயல்கலில் வெற்றியும்,இறைவனின் அருளால் கிடைக்கும்.

வெள்ளியும் புந்தியைச்சேர - சென்மன்

வினோத வனாம் பாடகன் நேசன்

வெள்ளிரச பாத்திரங்கொள் வன்

வினோதங்கள் செய்ய யூகஞ் செய்வான்டி

சுக்கிரனும் புதனும் கூடியிருக்க வினோதமாக பல காரியங்கள் செய்வர்கள்.கதைகள் , பாடல்கள் அன்புடன் இருப்பார்கள.வெள்ளி பத்திரத்தில் உணவு உண்பர்கள்

ஏழில் குரு :-

சத்தமாம் குருவு நிற்க்கச் சாற்றுவீர் பலனை யென்றார்

சித்தமாய் விரோதம் சேரில் சிதறிடு மடனேதானும்

நித்தமும் யோகமுண்டு பூமியில் நேர்த்தி கொள்வன்

சத்தமா யறுபான்முன்றும் துலங்கிடு மரசுதானே

ஏழில் குரு இருந்தால் எந்தவிதமான விரோதம் ஏற்ப்பட்டாலும் உடனே விலகிவிடும் . தினமும் யோக பலபலன்ககள் கிட்டும் .உலகில் சுகமுடையவார்கள். 63- வயது வரையில் யோகம் விருத்தியாகும்.

பொன்னவன் ஏழில் பொருந்தியே யிருந்தால்

புகலவே வாழ்ந்திடும் பெரியோர்

உன்னிதமாகி உயர்ந்திடும் புத்தி

உதாரணன் கன்னிகா தானன்

யெண்ணிய தெல்லாம் முடிப்பவானாகும்

யேற்றதோர் வித்தியே யெடுப்பன்

தென்னவனலன் திடசித்த னென்பார்

தீர்கமாம் ஆயுசு தானே

குலுஏழில் குருஇருக்க மோககளத் திரமாம்

கூறாடை ஆபரணம் அலங்காரச் சுகமாம்

ஏழில் குரு இருந்தால் ஆசைக்கேற்ற மனைவி அமைவாள்.ஆடை அணிகலன்கள் அலங்கார இன்பங்களை அனுபவிப்பார்.துணிச்சல் உள்ளவர் தந்தைக்கும் , ஆசிரியருக்கும் ஆகாதவன் அரசு பெண்களால் லாபம் , பூகழ் கிடைக்கும். சமுகத்தில் செல்வாக்கும் பெற்றிருப்பர்.அடிக்கடி தீர்த்த யாத்திரை செல்வார் வாகன யோகம் கிட்டும் .வெளிதேசப் பயணம் அமையும்.

இவருக்கு குரு மகா தசையில் மிகப் பெரிய வெற்றிகள் அடைந்தார் . தனக்கெனத் தனித்தன்மையை உருவாக்கி கொண்டார்.

எட்டில் ராகு இருப்பது நன்மையில்லை.

ராகுவுக்கு கேந்திரத்தில் கிரகங்கள் ஏழில் சனி,கேது,

பத்தில் சுக்கிரன் ,புதன் இருப்பதால் சிறப்பான யோகத்தை தரும்.

தீர்க்காயுள் உண்டு கால்களை உடையவர்.வாய்வு தொடர்புடைய நோய்களால் பாதிப்பு உடல் மழுவதும் வலி வேதனை இருக்கும் .உணவில் கட்டுபாடு வேண்டும் .மந்திர உச்சாடனங்களால் நன்மை கிட்டும்

இரண்டில் கேது

நீங்காத வாக்கதனில் கேதுவந்துற் றிருக்கில்

நிகரில்வித்தை கலையாந் தொழிலாலும் லாபம்

இரண்டில் கேது இருந்தால் ஒப்பற்ற வித்தை கற்பர்கள் கலைத்துரையில் தொழிலால் ஆதாயம்.

மன்னனே இரண்டதிலே கேதுநிற்க

மகத்தான தனம்தேடி செலவழிப்பான்

வின்னமில்லா வாக்குமெத்தப் பேசவல்லான்ண

விளம்பினேன் அணிபணியும் விசேஷமுள்ளான்

கெண்ணியமாய் நேத்திரத்தில் மத்திஊனம் கிளத்தினேன் தவறாது உத்திமைநதா

புண்ணியங்கள் வேணதாய்ச்செய்யவல்லான்

பூதலத்தில் வேணபொருள் தேடவல்லான்

கால சர்ப்பம் தந்த யோகங்கள் !

ராகு / கேது இந்த இரண்டு கிரங்களின் பிடிக்குள் எல்லா கிரங்களும் அமைந்து இருந்தால் கால சர்ப்ப யேகம் ஆகும் .இவருடைய ஜாதகத்தில் அனைத்துக் கிரகங்களும் ராகு கேதுவுக்குள் உள்ளார்கள்.

ராகுவை நோக்கி எல்லா கிரகங்களும் செல்லும் அமைப்பில் உள்ளது .இவரது ஜாதகத்தில் .இளமைில் மிகவும் கஷ்டப்பட்டு வறுமையில் முப்பது வயது வரை அனுபவித்து இருந்தார்.முப்பது வயது வரை போராடி

அனுபவித்தார்.

இராகுவுக்கு 12-ல் குரு உள்ளாதால் ராகு தசையில் சிறப்பன யோகத்தை தந்து . எட்டில் ராகு இருந்தால் 40- வயதிற்க்கு மேல் சிறப்பன யோகத்தை தரும் .

அரசியலும் திரு ரஜினி அவர்களும்

9-ஆம் அதிபதி செவ்வாய் 6-ல் இருப்பதால் அரசியல்

தொடர்பைத் தராது .

சனி மகா தசையில் அரசியல் தொடர்பைத் தராது

இரண்டில் சனி, கேது இணைந்து இவரும் உள்ளாகள் அரசியல் இடுபட்டை தராமால் ஆண்மீக ஈடுபட்டை தரும்.

சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 5-ஆம் அதிபதி குரு பலமாக இருக்கவேண்டும் .குரு சனி வீட்டில் உள்ளார் குரு/ சனி 6/7 நிலையில்உள்ளார்கள்

2-11 -9-ஆம் அதிபதிகள் சந்திரனுக்கு 4-7-10- ஆம் அதிபதிகள் பதன் / செவ்வாய் இல்லை.

கற்றறி புலிஉ திப்பக் கடிசேய் உறைய வேந்தன்

உற்றிடப் பார்க்கின் மன்னன்

சிம்மம் லக்கினமாக அமைந்து லக்கினத்தில் செவ்வாய் இருந்து செவ்வாயுடன் குரு கூடின்லும் பார்த்தாலும் அரசனாவார்கள்.

யோகனமாம் அரியில் பாவர் உதயமாய்ச் சுபரே பார்க்கில் வாகைமன் னவார்ச மானன்

சிம்மம் லக்கினமாகி லக்கினத்தில் பாவிகள் இருக்க சுபர்கள் பார்த்தால் அரச வாழ்வு அமையும்.

உதயத்தோன் ஒன்றிரண்டில் இலாபம்

குளகமுற்றுக் கூடலா பேசன்உச்ச மாகிக்

குறிப்பாக வேபார்க்கில் கோமான்என் றுரையே

லக்கினாதிபதி 1-2-11-ல் ஏதாவது ஒன்றில் பலம் பெற்றிருக்க 11-ஆம் அதிபதி உச்சம் பெற்று லக்கினாதிபதியை பார்த்தால் மன்னனாவான்.

திரு ரஜினியின் ஜாதகத்தில் குரு செவ்வாய்க்கும் தொடர்பு இல்லை 2/12 நிலலையில் உள்ளார்கள்.

2-11-ஆம் அதிபத புதன் லக்கினாதிபதி சூரியன் 2/12-ஆம் நிலையில் உள்ளார்கள்.

5-ஆம் பாவ உ . பாவதிபதியான குரு 5-8-பாவாதிபதியாகி 7-ல் ராகுவின் சாரத்தில் உள்ளார்.

ராகுவின் தசையின் கடைசியில் நடக்கும்போது கலை உலகில் நுழைந்தார் சிறப்பு பெற்றார்.

குரு 5-7-11-1- பாவங்களுக்கு உபாதிபதியாக வாருவதால் குரு ராகுவின் சாரத்தில் ,ராகு 8-ல் உள்ளார்.

அரசியல் கிரகமான சூரியன் 5- க்கு 12-ல் பதன் சாரத்தில் உள்ளார் .எனவே அரசியல் பிரவேசம் என்பது குழப்பமான நிலையைத் தரும் எனவே ரஜினிகாந்த் அவர்கள் அரசியலில் ஈடுபடுவது கடினம். வருவதற்கு வாய்ப்பில்லை.

சூரியஜெயவேல் 9600607603

Comments

ஜீ.குமாரவேலு வேலூர்29 December 2020 at 08:35

அருமையான விளக்கம் நன்றி

சூரியஜெயவேல்

ASTRO SURYAJEYAVAL

9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்