அஸ்தங்கம்

 அஸ்தங்கம்

ஒரு கிரகம் சூரியனுக்கு அருகில் இருந்தால் அதன் திறனை இழக்கும்போது அஸ்தங்கம் என்றும் அழைக்கப்படும்.

சூரியனிடம் பஞ்ச பூத கிரகங்கள் என்னும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய 5 கிரகங்கள் அஸ்தமனம் அல்லது அஸ்தங்கம் (combust) ஒரு குறிப்பிட்ட பாகை இடைவெளியில் சூரியனுக்கு முன் அல்லது பின் இருப்பின் அடைகிறது. அஸ்தங்கம் அடைந்த கிரகம் சூரியனிடம் தனது வலிமையை இழந்து பாவத்துவம் அடைகிறது.

சூரியன் கிரகங்களின் ராஜாவாகவும், பிரகாசமானவராகவும், ஆன்மாவைக் குறிக்கிறது. பிறப்பு ஜாதகத்தில் 'அ' எனக் குறிக்கப்பட்டுள்ளது.

சூரியன் மிக ஒளிபொருந்திய கிரகம். இதற்கு மிக அருகில் செல்லும் கிரகங்கள் சில குறிப்பிட்ட இடைவெளியில் (டிகிரியில்) தன்னுடைய சுய ஒளியை இழந்து அஸ்தங்கம் அடைகின்றன. தன்னுடைய சுய பலத்தன்மையை இழக்கிறது. அப்படி பலத்தை இழக்கும் கிரகங்கள் அதாவது சுய ஒளியை இழக்கும் கிரகங்கள் தன் ஆதிபத்திய பலத்தையும், காரக பலத்தையும் இழக்கும். அஸ்தங்க கிரகங்கள் கோட்சாரங்களிலும், ஜனன ஜாதகங்களிலும் நன்மைகளை தருவதில்லை. அஸ்தமனம் அடையும் கிரகங்களின் பலாபலன்களை சூரியன் தன்திசையில் தானே தருவார்.

அஸ்தங்கம் அளவுகள்:

சந்திரன் சூரியனுக்கு 12 டிகிரி இடைவெளியில் அஸ்தங்கம் அடைகிறது.

செவ்வாய் சூரியனுக்கு 17 டிகிரி முன் பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைகிறது.

குரு 11 டிகிரி இடைவெளியில் சூரியனுக்கு முன் பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைகிறது.

சனி 15 டிகிரியில் சூரியனுக்கு முன்பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைகிறது.

புதன் நேர்கதியில் 14 டிகிரி வித்தியாசத்திலும்,வக்ர கதியில் 12 டிகிரி வித்தியாசத்திலும் சூரியனுக்கு முன்பின் ராசிகளில் அஸ்தங்கம் அடைவார்.

சுக்கிரன் நேர்கதியில் 10 டிகிரி முன்பின்னும், வக்கிர கதியில் 8 டிகிரியில் சூரியனுக்கு முன்பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைவார்.

ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள் அஸ்தங்கம் அடைவதில்லை. மாறாக, அவை சூரியனுக்கு மிக அருகில் வரும்போது கிரகணங்களை ஏற்படுத்துகின்றன.

குறிப்பு : புதன் சூரியனுடன் எப்போதும் சில வேறுபாடுகளுடன் பயணிப்பதால் அஸ்தங்கம் பாதிப்பைத் ஏற்படாது என்று சிலர் வாதிடுகின்றனர்.

அஸ்தங்கம் பெற்ற அனைத்து கிரகங்களும் பாதிப்பை தருவதில்லை . உதாரணமாக, சுக்கிரன் சூரியனுடன் அஸ்தங்க நிலையில், சூரியன் சுக்கிரனின் பலன்களை சூரியன் மகாதசாவில் சூரியன் + சுக்கிரன் பலன்களைத் தருகிறது. தோஷமாக இருந்தாலும், சுக்கிரனுடன் சூரியன் இருப்பது நன்மையான பலன்களைத் தருகிறது. இருப்பினும், தீய சக்திகளுடன் நீச்சம் பெற்ற சூரியன் பாததிப்பைத் தரும்.

வலுவான யோகம் பெற்ற கிரகங்கள் அஸ்தங்கம் அடையும் போது யோகங்கள் நசிந்து விடுகின்றன. ஜாதகங்களை பரிசீலிக்கும் போது அஸ்தமனங்களையும் வக்கிரங்களையும் கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும்.

சூரியஜெயவேல் 9600603607

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்