கிரகங்களின் உறவு ❗

 கிரகங்களின் உறவு ❗

பிரம்மன் தனது சிருஷ்டித் தொழிலுக்கு உறுதுணையாக இருக்க ரிஷி கணங்கள், பிரம்ம ரிசிகளைத் தனதுமானசீக புத்திரர்களாகத் தோற்றுவித்தார் அவர்களுள் ஏழு பேர் முக்கியமானவகள்.

மாரிச மகரிஷி முதலாமவர் இவருடைய புத்திரர் காசியப்பர். இவருக்குப் பதின்மூன்று மனைவிகள்.

முதல் மனைவிக்கு பிறந்தவர் சூரியன்.

ஆங்கீரச மகரிஷியின் மகன் பிரகஸ்பதி என்கிற குரு அல்லது வியாழன்.

அத்திரி மகரிஷியின் மகன் சந்திரன்.

சந்திரனின் மகன் புதன்.

வசிஷ்டமகரிஷியின் வழியில் சுமார் பத்து தலைமுறைக்குப் பின் பிறந்தவர் பரத்துவாசிகர் இவரது மகன்தான் செவ்வாய்.

ஒன்பது கிரகங்களின் வம்சாவழிப் பட்டியல் ❗

சப்தரிஷிகளின் நேர்வழி வந்த கிரகங்கள் - 3

1-சந்திரன்

2- குரு

3-சுக்கிரன்

இரண்டாம் தலைமுறையில் வந்த கிரகங்கள் - 2

1- சூரியன்

2- புதன்

மூன்றாம் தலைமுறையில் வந்த கிரகங்கள் - 3

1- சனி

2- ராகு

3- கேது

பத்து தலைமுறைக்குப் வந்த கிரகம் செவ்வாய்

☀சூரியன் :- தந்தை, மூத்த மகன், திருமணத்திற்குபின் மாமனார், ஊரின் பெரிய மனிதர்கள்.

🌙சந்திரன் :- தாயர், மாமியார், வயதானபெண்கள்,

🔥செவ்வாய் :- இருபாலினத்திற்கும் சகோதரன், பெண்ணுக்கு கணவன், மைத்துனன்,

புதன் :- மாமா, இளைய சகோதரி, காதலி /காதலன்

குரு :- முப்பாட்டனார், குழந்தைகள் ஆசிரியார்

சுக்கிரன் :- மனைவி, அத்தை, மூத்த சகோதரி, பெண்கள் தொடர்புடைய உறவுகள்.

சனி :- மகன், சித்தப்பா, வேலையாட்கள், ஆச்சாரக் குறைவானவர்கள்.

ராகு :- இருவகைத் தாத்தா - கேது :-இருவகை பாட்டி

அப்பா மகன் அறிவுறை கூறுபவர்களை யாரும் விரும்புவதில்லை சூரியன் சனி பகை

மாமியார் மருமகள் வயதனவர்களை இளமையில் உள்ளவர்கள் விரும்புவதில்லை. சந்திரன் சுக்கிரன்

மேலாதிகாரி வேலையாள் அதிகாரம் செய்பவர்களை யாரும் விரும்பு வதில்லை செவ்வாய் சனி பகை

சூரியனை ஆதாரமாக வைத்துத்தான் மற்ற நட்சத்திரகள் சுழன்று வருகின்றன வான மண்டலத்தில் இந்நிகழ்வு நிகழ்ந்து கொண்டேயிருப்பதை அறிவியலர் அறிவதற்கு முன்னதாகவே மகரிஷிகள் தோன்றி அறிந்துவிட்டனர். இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளும் வேறுபாடுகளையும் கண்டறிந்து ஜோதிஷ சாஸ்திரம் ஆக்கினார்கள்.

கிரகங்களின் உறவு நிலையில் உள்ள தன்மைகளளுக்கு ஏற்ப்ப பலன்களைத்தரும்.

சூரியன் :-

சூரியன் சனி தந்தை மகன்

சூரியன் ரஜோகுணம் சனி தமோகுணம்

ஒளி, வேகம் மந்தன், இருட்டு

அரசன், அதிகாரம் சோம்பேறி

அறிவுத்திரன் வேலைக்காரன்

எனவே தந்தை - மகன் ஆனாலும் இவை இரண்டும் தங்கள் எதிர்மறைக் குண இயல்பிற்கு ஏற்ப பகைமை அடைகின்றனர்.

சுக்கிரன் :- ஆடம்பரம், பெண் ஆசைகள், கர்வம், கவர்ச்சியானவர் .

ஆசைகள் இல்லாத ஆத்ம காரகனான சூரியனுக்கு ஆர்வமின்மையால் சுக்கிரன் சூரியன் பகைவர்கள்.

ராகு :- தாத்த, இருட்டைக் குறிப்பவர், ராஷசன், இதனால் இருவரும் பகைவர்கள்.

மேற்கூறிய விளக்கங்களால் சூரியனுக்கு சனி, சுக்கிரன், ராகு பகையாகின்றன.

புதன் :- புத்தி, நண்பர்கள், உதவியாளர்

செவ்வாய் :- அதிகாரி, சக்தி, கர்வம், காவலர்

குரு :- வழி காட்டி, ஜீவகாரகன், மரியாதை, வெற்றி

கேது :- மோஷம், முனிவர், இதனால் இவர்களுடன் நட்பு கொள்கிறார்.

சந்திரன் :-மனம், தாய், மாமியார், செலவு,வயதனவர் செலவையும்

சுக்கிரன் :- மருகள், மனைவி, கார்வம், அழகிய தேற்றம் செல்வத்தையும் இதனால் இருவரும் பகைவர்கள்.

ராகு :- இருட்டையும், மேகத்தைக் குறிக்கும் சந்திரனின் ஒளியை மங்கச் செய்வதால், மாயா காரகனாகி மனதில் தவறான தோற்றங்களை ஏற்படுத்தி தீய எண்ணத்தை தருவதால் பகையாகிறது.

செவ்வாய் :- ரஜோகுணம் தன் முனைப்பு மற்றும் அகந்தைக்கு, மேல் அதிகாரி காரத்துவம் பெறுகிறது.

சனி வேலைக்காரன்,கர்வம் உள்ள வேலைக்காரன் தனது எஜமானனின் வெறுப்பைச் சம்பாதிக்கிறான் மேலும் மேலதிகாரிகள் தனக்குக்கீழ் பணியாற்று வோரின் வெறுப்பை சம்பாதிக்கின்றனர். மேலதிகாரின் வெறுப்பைத் தூண்டிவிட்டு பகையைச் சம்பாதித்துக் கொள்வதால் சனியும் செவ்வாயும் தங்களுக்குள் பகை பெறுகின்றன.

ராகு தமோகுணம் பெற்று சோம்பேறித்தனம் உடையவராகிறார் ஆனால் செவ்வாய் சக்தியையும் வேகத்தையும் குறிக்கிறது எனவே செவ்வாயும் ராகுவும் தங்களுக்குள் பகை பெறுகின்றனர்.

புதன் புத்திசாலித்தனத்தைக் குறிக்கிறது பொதுவாக உடல் சக்தியும் மூலைபலமும் ஒத்துப் போவதில்லை உடல் பலமுள்ளவர் முதலில் பாதிக்கப்பட்டு பின்னர் சிந்திக்கின்றனர் எனவே புதன் செவ்வாய் தங்களுக்குள் பகை பெறுகின்றன.

செவ்வாய் சுக்கிரன் நட்பு ஏனென்றால் சுக்கிரன் பெண்ணை,மனைவியை ,ஆடம்பரத்தைக் செல்வத்தை குறிக்கிறது .செவ்வாய் கணவனையும் எனவே இருவரும் நட்பு அடைகின்றனர்.

குரு வழிகாட்டி அல்லது ஆசிரியர், ராஜகுரு செவ்வாயுடன் நட்புடன் உள்ளர்.

சூரியன் ரஜோகுணம் அரசன், செவ்வாயும் ரஜோகுணம் தளபதி இருவரும் நட்புடன் உள்ளர்.

புதன் :-

புத்திசாலி, ஆத்மகாரகன் சூரியனை விரும்பும் புத்திசாலித்தனம் வேலையை அதாவது சனியை விரும்புகிறார் புதன்.

புதன் ராகுவிடம் பாசமுள்ளது. புதன் விஷ்ணு அமிர்தம் வழங்கியதால் அமரத்துவமான ராகு புதனுடன் நட்பு.

புதன் (விஷ்ணு) சில சமயங்களில் பெண் ஆனபடியால் சுக்கிரனுக்கு நட்பு (புதன் எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசிநாதனின் பால் இயல்புத் ஆண் /பெண் தன்மையை அடைவர்)

புத்திசாலியான புதன் கர்வி செவ்வாயையும், மோட்ச கேதவையையும் தன் குணத்திற்கு ஒத்துவராதபடியால் விரும்புவதில்லை. கர்வமும் அறிவும் ஒன்றாக இணைவதில்லை, மோஷம் பெற விரும்புவதில்லை இதனால் புதனுக்கு செவ்வாய் கேது பகைவர்கள்.

சூரியன்- புதன் விஸ்தாரமான புத்தி

சந்திரன் -புதன் கற்பனை, அருள்

செவ்வாய் -புதன் வெட்டி பேசுதல் தர்க்கம், வாக்குவாதம்.

குரு -புதன் எல்லா முடிவிலும் மனிதாபிமானம் இருக்கும்.

சுக்கிரன் -புதன் நளினமான, உணர்ச்சி பூர்வம், சமுக சேவை

சனி -புதன் தீவிர சிந்தனை கருத்தாழம், வேதாந்தப்பிரியம்.

குரு :-

சரியாகச் சொன்னால் குருவுக்கு பகைவர்கள் இல்லை குரு ஆசிரியர், புதன் மாணவர், ஒரு ஆசிரியர் ஒரு மானவரை கடிந்து கொள்ளலாம் ஆனால் அதற்காக அவருக்கு மாணவர் பகைவரல்ல குரு புதன் இணைவு புத்திசாலித்தனத்தைக் கொடுக்கிறது.ஏனெனில் குரு புத்தி விறைப்பானது.

ஆனால் சலனமுள்ள சந்திரனை குரு விரும்புவதில்லை, தொழில் குருவால் வழிகாட்டப்படுவதால் குருவுக்கு சனியைப் பிடிக்கும் குருவுக்கு சக்தி வேண்டும் எனவே செவ்வாயுடன் நட்பாகிறது, சூரியன் அரசனையும் ஆத்மாவையும் செல்வாக்குள்ள மனிதனையும் குறிப்பதால் குரு சூரியன் நட்பு அவர்கள்.

சுக்கிரன் :-

சுக்கிரனின் சில உறவுகள் மேலே விளக்கப்பட்டுள்ளன. சுக்கிரன் சனி வேலையைப் பிடிக்கும் செல்வம் வேண்டும். உழைப்பிருந்தால் தன் செல்வம் கிட்டும் இதனால் இருவரும் நட்பு

செவ்வாய் சக்தி தேவை இதனால் இருவரும் நட்பு

புதன் புத்திசாலி இதனால் இருவரும் நட்பு

ராகுவும் நட்பு, கேது மோஷம் பிரிவினை தருவதால் இருவரும் பகைவர்கள்.

சனி :-மேலே விளக்கப்பட்டுள்ளன சூரியன், சந்திரன் கேது பகைவர்கள் மற்றவர்கள் நட்பு.

ராகு :- சூரியன், சந்திரன், செவ்வாய் பகைவர்கள்

கேது :- பிரிவினையை தருபவர் இதனால் யாரும் இவரை விரும்புவதில்லை.

ஒவ்வொரு கிரகத்தின் உணர்வு அடிப்படையில் நட்பு, பகையை வகுத்துள்ளார்கள் நமது முன்னோர்கள். இவர்களின் தோற்றுவிக்கும் காந்த அலைகள் தான் நமக்குப் பாதிப்பைத் தருகின்றது.

சூரியஜெயவேல்9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்