ஜோதிட வர்க்க விளக்கம்

 ஜோதிட வர்க்க விளக்கம்

வான் வெளி என்பது நமது பூமியைச் சுற்றியுள்ள ஒரு மாபெரும் வட்டம் ஆகும் . 360 பாகைகள் கொண்ட அந்த வட்டத்தை 12 பிரிவாக பிரித்து ஒரு 30 பாகைகள் கொண்ட ராசிகளாக வகுத்துள்ளது ஜோதிட சாஸ்திரம் .

நமது பாரமபரிய ஜோதிடத்தில் கிரகங்களின் பலத்தைக் கணிக்க பலவகையான கணிதங்கள் உள்ளது இவ்வளவு பலம்களையும் கணித்துப் பலன் சொல்ல வேண்டுமென்று சொல்கிறது நமது ஜோதிட சாஸ்த்திரம் . அதேபோல் ராசி , நவாம்ச சக்கிரத்தைத் தவிர பின்வரும் சக்கிரங்களையும் கணிக்க வேண்டும் .

" ஷட்பலம் " என்ற முறையைக் கையாளுகின்றனர் . துல்லியமான கணிதத்தைக் கொண்டது. என்னவென்று தெரிந்து கொள்வோம் . ஷட்பலமானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1. ஸ்தான பலம்

2. கால பலம்

3. அயன பலம்

4. நைசிர்கிக பலம்

5. திக்குப் பலம்

6. சேஷ்டாபலம் .

ஸ்தான பலம் என்பது பலவிதமான பலங்கள் உள்ளடங்கியது . அதேபோல் ஒவ்வொரு பலமும் ஒவ்வொரு விதமான பலங்களை உள்ளடக்கியது ஆகும் . அவற்றைக் கீழே பார்ப்போம் .

1.ஸ்தான பலம் :

A . உச்ச பலம் .

B கேந்திராதி பலம்

C. திரேஷ்காண பலம் .

D . யுக்மா , யுக்ம பலம் .

E . சப்த வர்க்கஜ பலம் இந்த சப்த வர்கஜ பலம் மேலும்பலவித பலங்களை உள்ளடக்கியது .

1. இராசி வர்க்க பலம் 2. நவாம்சை வர்க்க பலம் 3. திரேஷ்காண வர்க்க பலம் 4. துவாதசாம்ச வர்க்க பலம் 5. சப்தாம்ச வர்க்க பலம் 6. ஒரா வர்க்க பலம் 7. திரிசாம்ச வர்க்க பலம்

தவர்க்கங்கள்

ராசி என்பது பாகை 30" - 00" - 00" = 1 பங்கு

2- ஹோரா என்பது 15" - 00" - 00" = 1/2 பங்கு

3. திரேக்காணம் என்பது 10" - 00" = 1/3 பங்கு

4. நவாம்சம் என்பது 3" - 20" - 00 " = 1/9 பங்கு

5. துவாதசாம்சம் என்பது 2" - 30" - 00" = 1/12 பங்கு

6. திரிம்சாம்சம் என்பது 10" - 00" - 00" = 1/10 பங்கு

7. சப்தாம்சம் என்பது 4" - 17" - 8.5" = 1/7 பங்கு

8. தசாம்சம் என்பது 3" - 00" - 00" = 1/10 பங்கு

9. ஷேடாசாம்சம் ( or ) கலாம்சம் என்பது 1" - 52" - 30" =1/16 பங்கு

10. சஷ்டியம்சம் என்பது O" - 30" - 00" = 1/60 பங்கு

இதில் 1 முதல் 6 வரை உள்ளது சட்வர்க்கம் என்றும் .

1 முதல் 7 வரை உள்ளதை சப்தவர்க்கம் என்றும் .

1 முதல் 10 வரை உள்ளதை தசவர்க்கம் என்றும் கூறுவர் .

திரியோதச வர்க்கங்கள்

1. லக்கனம் 2. ஓரை

3 , திரேக்காணம்

4. சப்தாம்சம் 5. நவாம்சம்

6. துவாதசாம்சம்

7. திரிம்சாம்சம்

8. அதிமித்ராம்சம்

9. மூல திரிகோணம்

10. உச்சம்

11. ஸ்வஷேத்திரம் (ஆட்சி)

12 கேந்திரம்

13 சஷ்டியாம்சம் . இவ்வாறு கிரக பல நிர்ணயத்தில் வர்க்க பலன் 13 வகையிலும் அமைவது வைசேஷிகாம்சம் என்று பெயர் .

2 வாக்கங்கள் கூடினால் பாரிஜாதாம்சம் .

3 வர்க்கங்கள் கூடினால் உத்தமாம்சம் .

4 வர்க்கங்கள் கூடினால் கோபுராம்சம் .

5 வர்க்கங்கள் கூடினால் சிம்மாசனாம்சம்

6 வர்க்கங்கள் கூடினால் பர்வதாம்சம்.

7 வர்க்கங்கள் கூடினால் தேவலோகாம்சம்.

8 வர்க்கங்கள் கூடினால் குங்குமாம்சம் .

9 வர்க்கங்கள் கூடினால் ஐராவதாம்சம் .

10 வர்க்கங்கள் கூடினால் வைஷ்ணவாம்சம் .

11 வர்க்கங்கள் கூடினால் சைவாம்சம்.

12 வர்க்கங்கள் கூடினால் பாஸ்வதாம்சம் .

13 வர்க்கங்கள் கூடினால் வைசேஷிகாம்சம் .

கிரகங்கள் பரஸ்பர நட்புக் கிரகங்களாக இருப்பின் அதிமித்திரர்கள் . இத்தகைய அதிமித்திர கிரகத்தின் நவாம்சத்தில் அதிமித்ரகிரகம் அமைந்திருப்பின் அந்தக் கிரகம் அதிமித்ராம்சத்தில் இருப்பதாகக் கொள்ள வேண்டும் . இது தான் மேலே குறிப்பிட்ட 8 வது பிரிவாகும் .

லக்கனமும் நவாம்சமும் ஒரே ராசியாக அமைந்தாலும் ஒரு கிரகம் ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியிலமைந்தாலும் வர்க்கோத்தமம் . இவ்வாறு இல்லாமல் மற்ற இரு அம்சங்கள் கூடினால் தான் பாரிஜாதாம்சம் என்று பெயர் பொருந்தும் . சாதாரணமாக எல்லா வர்க்கங்களும் ஒன்று கூடுவது அரிது . எல்லாக் கிரகங்களும் அஸ்தம் . நீசம் , பகை ராசிகளிலிருப்பின் ப்ரதாம்ச யோகம் . இது அபயம் , கஷ்டம் , மரணம் , சம்பவிக்கச் செய்யும் தன்மை உடையதாகும் .

கால பலம் : இது பல பலங்களை உள்ளடக்கியது :

1. நத உன்னத பலம்

2. தின ராத்திரி திரிபாக பலன்

3. தின பலம்

4. மாத பலம்

5. வருஷபலம்

6. ஒரா பலம்

7. பட்ச பலம்

1. பாவம்

2. திரேக்காணம்

3. துவாதசாமச சக்கிரம்

4. ஓரை

5. திரிசாம்சம்

6. சப்தாம்சம் இவ்வளவு சக்கரங்களையும் கணித்துப் பலன் சொல்ல வேண்டும் . இவைகளெல்லாம் அனுபவரீதியாகப் பார்க்கும்போது புரிந்து கொள்ள முடியும்.

சூரியஜெயவேல் 9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்