சகட யோகம்

 சகட யோகம்

சகடை யோகம் என்றால் அனைவரும் சகடையா? வண்டிச் சக்கரம் போல் வாழ்கை அமைந்து விடும். என்பர்கள்.

குரு நின்ற வீட்டிற்கு 6-8-ல் சந்திரன் இருந்தால் சகட யோகம் ஏற்படும்.சகட யோகம் என்றால் வண்டிச்சக்கரம். சக்கரம் போல வாழ்வில் ஏற்றம் இறக்கம் ஜாதகருக்கு பலன் ஏற்படும்.

யரசரனின்றவதற்கிள மதியெட்டாகில் வஞ்சியே

செல்வங்குன்றி வகுத்த மந்தயோகந்தப்பும்

குருவுக்கு எட்டில் சந்திரன் இருப்பின் ஜாதகருக்கு பலவித துண்பங்கள் ஏற்படும்.

………பொன்னுமம் புலிக்காறெட்டாகில்

எந்த நாளாகி லுந்தானிவனுக்கே யோக மில்லை

அகடி மன்னனுக் காறெட்டொடு

விதிகடிலாமதி எய்தியிருந்திடின்

சகடயோகமிதிற் தார்க்கெலாம்

விகட துன்பம் விறையு மரிட்டமே !

சீரே நீ குருவுக்கு வியமாரெட்டில்

செழு மதியுமதிலிருக்க சகட யோகம்

ஆரே நீ அமடு பயம் பொருளும் நஷ்டம்

குருவுக்கு 6-8-12-ல் சந்திரன் இருந்தால் சகட யோகம் பயம், பொருள் சேதம், நஷ்டம் ஏற்படும்.

யாரடா தம்பி கோளய் ஆரானுக்கு கீரார் எட்டில்

பாரடா நிலவு நிற்க பயனிலா சகடயோகம்

கூறடா அழியும் செல்வம் குலப்புகழ் உற்றார் பெற்றொர் வேறடா வெறுப்பர் துண்பம் வேரூன்றும் வாழ் நாளெல்லாம் கதித்ததோர் ஆறெட்டாகில் கடினமாய் பலன் அற்பம்

குருவுக்கு 6-8-ல் சந்திரன் இருந்தால் சகட யோகமகும்.செல்வம், புகழ், குலப்புகழ், உற்றார், உறவினர்கள், பெற்றோர், அனைவரும் வெறுப்பர்

வாழ்நாளில் துண்பத்தை அனுபவிப்பார்கள். லக்கினத்திற்கு 6-8 ல் அதிக துண்பம் தரும்.

( சந்திரனுக்கு 12-ல் குரு இருப்பின் அனபா யோகம். குருவுக்கு 12-ல் சந்திரன் இருந்தால் சுனபா யோகம்)

குரு துர்ஸ்தானம் பெற்றாலும் சந்திரன் பெறக்கூடாது . என்பதை நாம் நன்குணர வேண்டும்.

லக்கினத்திற்கு 7-8-ல் இருந்து. இருந்து.இருவருகு 6-8ஆகா இருந்தால் சகட யோகம் அதிக பதிக்கும்.

"மதியுயார் மறையாதக மதி தனக்கீராரெட்டில்

அதிபெரு குரு வேயெய் தாலவர் சுபர் வீடானாலும்

துதி பெரு பகை நீசத்திற்றோன்றிடவு பயக்கோலின்

விதி பெரு சுபராய்ச் சென்றவிடம் பகையுனுமால் செப்பே

சந்திரன் லக்கினத்திற்கு மறையாமலிருந்து. சந்திரனுக்கு 8-12-ல் குரு இருக்க. சுபர் வீடானாலும், பகை நீசமாக இருந்தாலும் .ஜாதகர் /ஜாதகிக்கு சென்றவிவிடங்களில் பகை ஏற்படும்.

சகட யோக பங்கம்

"பூரண மதியானாலும் புதன் புகர் கூடினாலும்

காரண எருது கும்பம் கன்னி யாழ் மீனம்

நன்புத் தாரணி சுபாங்கிசத்தில் சந்திரனிருந்திட்டாலும்

பாரினில் சகட யோகம் பாழ்படும் என்று சொல்வீர்

சகட யோகம் அமைந்தவர்களுக்கு வளர்பிறைச் சந்திரன், புதன், சுக்கிரன் கூடியிருந்தாலும், ரிசபம், கும்பம், கன்னி, மிதுனம், மீனம், கடகத்தில் சுப அம்சத்தில் சந்திரனிருந்தால் சகட யோகம் பாங்கமாகும்.

"மதியுயார் மறையாதக மதி தனக்கீராரெட்டில்

அதிபெரு குரு வேயெய் தாலவர் சுபர் வீடானாலும்

துதி பெரு பகை நீசத்திற்றோன்றிடவு பயக்கோலின்

விதி பெரு சுபராய்ச் சென்றவிடம் பகையுனுமால் செப்பே

சந்திரன் லக்கினத்திற்கு மறையாமலிருந்து. சந்திரனுக்கு 8-12-ல் குரு இருக்க. சுபர் வீடானாலும், பகை நீசமாக இருந்தாலும் .ஜாதகர் /ஜாதகிக்கு சென்றவிவிடங்களில் பகை ஏற்படும்.

திரு. பண்டித ஜவஹர்லால் நேரு அவரது ஜாதகத்தில் குருவுக்கு எட்டில் சந்திரன்.லக்கின கேந்திரத்தில் ஆட்சியுடன் சந்திரன். ஆறில் குருவும் ஆட்சி பெற்று இருக்கிறார். இதனால் சகட யோகம் பங்கம் ஆகி விட்டது. இதனால் புகழ் பெற்ற பாரதப் பிரதமரானார்.

தங்களுடைய ஜாதகம் தொடர்பான ஆலோசனைக்கு

சூரியஜெயவேல்9600607603

💢 மூல நூல்களை குப்பை என்று கூறுபவர்கள் வாசித்துப் பார்க்க வேண்டும் 💢

Comments

  1. ஐயா மூலநூல் பெயர் கூறவும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்