ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம்
ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம்
. பாவியாஞ் சனியே ழாதிப னாகிப்
பன்னிரண் டாறிரு நான்கில்
மேவிடில் விதவை நாரியைச் சேர்வன்
மிக்கவே ழாமிடத் ததிபன்
நாவிரண் டான பாம் பொடுங் கூடி
நாடியெட் டாறினில் வியத்தில்
தாவியே யிருக்கி லீனமாங் குலத்துத்
தையலைச் சேர்வனென் றுரைக்கும்.
சாதக அலங்காரம் 662
(இ-ள்) இயற்கை பாவர்களில் ஒருவனான சனி ஏழாம் அதிபதியாகி ஜெனன லக்கினத்திற்கு 6 - 8 - 12 ஆம் வீடுகளில் ஒன்றில் இருக்க சனி இருந்தால், ஜாதகர் விதவை பெண்களிடம் சிற்றின்ப சுகத்தை அனுபவிப்பார்கள்.
7- ஆம் ராசியதிபதி இரண்டு இரண்டு நாக்குடைய பாம்புடன் சேர்ந்திருக்க 6 - 8 -12 ஆம் இவ்விடங்களிலிருக்க இழிகுலத்துப் பெண்களிடம் சிற்றின்ப சுகத்தை அடைவார்கள். பல பெண்களிடம் சிற்றின்ப சுகத்தை அடைவார்கள்.
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜாதகம் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். பெண்கள் பிரச்சனையில் பெரும் சர்ச்சை உருவாக்கியவர்.
இரண்டாவது எனது உறவினரின் ஜாதகம் பல பெண்களிடம் பழக்கம் உள்ளவர்.
சூரியஜெயவேல்9600607603
Comments
Post a Comment